Wednesday, November 11, 2009

மூக்குத்தி எதுக்கு..

அந்தகாலத்துல பலரும் தவறாம மூக்கு காதுன்னு குத்திக்குவாங்களே..
மூக்கு குத்திக்கிறது எதுக்குயா..?


(ஏதோ படத்துல / பல படங்கள்ல நடிகர் திலகம் சிவாஜி அவர்கள்கூட, பெருசா கொண்டை எல்லாம் போட்டுக்கிட்டு மூக்கு குத்தி, காதுல கடுக்கன் எல்லாம் போட்டு நடிச்சிருந்தாமாதிரி நியாபகம்..

சில படங்கள்ல மூக்கு குத்தி இருந்தாலும், பழைய படங்கள் பலதுலையும் பலரும் கடுக்கனோட நடிச்சிருக்காங்கள்ள..)

ஆனா இந்த காலத்துல நிறைய பேர் மூக்கு குத்திக்கிறதும் இல்லை,
ரெண்டாவது.., மூக்கு குத்திக்கிறதுக்கு பதிலா ஆர்டிஃபிசியலா 'டப்ஸ்' விக்கிறாங்க.. அத வாங்கி மாட்டிகிட்டா என்னனு நிறையப்பேர் நினைக்கிறாங்க..

ஏற்கனவே வாழை இலைக்கு பதிலா பிளாஸ்டிக் வாழை இலை, குங்குமத்துக்கு பதிலா ஸ்டிக்கர் பொட்டு, மாவிலை தோரணம்கூட பிளாஸ்டிக்ல வந்தாச்சு..

நல்லவேளையா விபூதி, திருமண்ணெல்லாம் இன்னும் பிளாஸ்டிக்ல வரல.. சரி, இப்போ இந்த மூக்குத்தி மேட்டருக்கு வருவோம்..

பெண்கள் மூக்கு குத்திக்கிரதுக்கு காரணங்களா நண்பர்கள் சிலர் அவர்களோட கருத்துக்களை சொன்னாங்க..

அதில் ஒருத்தர் அது அவசரத்துக்கு அடமானம் வைக்கரதுக்குனும், இன்னொருத்தர் அழகுக்காகவும்னும், இன்னொருத்தர் திருமணமானவர்கள் அணியும் பழக்கம் இருக்கும்னும், இன்னொருத்தர் அது ஒரு வித அக்குபங்சர் வைத்தியமுறை போன்றதும்னும் சொன்னாங்க.

கருத்துக்களுக்கு நன்றி நண்பர்களே..

இனி மூக்கு, காது குத்திக்கொள்வது தொடர்பாக நான் இணையத்தில் படித்த தகவல்கள்..

பெண்களோட மூச்சு காத்துக்கு ஆண்களோட மூச்சுகாத்த விட பவர் அதிகம். சக்தி அதாவது ஸ்டேமினா அதிகம். அந்த மூச்சு காத்து முழுசா எதிர்ல இருக்குரவங்கமேல படக்கூடாது..

அதுனால மூக்குத்திங்கரத போட்டு, அதை கண்ட்ரோல்பண்ணி வெக்கிறாங்க.. அப்படி மூக்குத்திய ஒரிஜினலா தங்கத்துலையே போட்டுகிட்டதால ஆரோக்கியமா இருந்தாங்களாம்..
(தங்கத்துல வாங்க காசு இல்லாதவங்கள்ளாம் என்ன பண்ணனுஎல்லாம் விவகாரமா கேக்கப்பிடாதாக்கும்..)

இன்னைக்கு அதுக்கு பதிலா செயற்கை டப்ஸ் வந்திடுச்சு.. இந்த செயற்கை நகை மூக்குலையோ காதுலையோ போளிணிப்புடிச்சுகிட்டு(??) இருக்குமே தவிர, ஒரிஜினலோட பவர் இதுக்கு கிடையாது.. அதுமட்டுமில்லாம இந்த டூப்ளிகேட் நகை மூக்குலியோ, காதுலியோ நச்சுனு புடிச்சுகிட்டு இருக்குறதால, அங்க இரத்தஓட்டமும் தடைபட வாய்ப்பு இருக்கும்ல'னு கேட்டிருந்தாங்க..
(யாருக்காவது இந்தமாதிரி தொல்லைங்க இருக்காப்பா..)

அதெல்லாம் சரிதான்.. ஆரோக்கியம்ன்றது எல்லாருக்கும் பொதுதானே.. அப்ப ஏன் ஆம்பளைங்களும் காது குத்திக்கிறது இல்லை'னு சந்தேகம் கேட்டிருந்தாங்க..

ஆம்பளைங்களும் காது குத்திக்கிட்டுதான் இருந்தாங்க.. இந்ததலைமுறையிலும், நாமும் சின்ன கொழந்தைங்களா இருக்கும்போது, கோவிலுக்கு கூட்டிட்டு போய் மொட்டை அடிச்சு காது குத்திருப்பாங்களே.. நெனப்புல இருக்கா..

அதுக்கு அப்புறம்தான் அத்த கலட்டி போட்டுடுறோம்..

காது குத்துறது, மூக்கு குத்துரதெல்லாம் அந்த காலத்துலயே நம்ம பாட்டன் பூட்டனெல்லாம் அனுபவபூர்வமாவே சொன்ன அக்குபிரஷர் வைத்தியமாமா..

(நான் அக்கு பங்சர் தான் கேள்வி பட்டிருக்கேன்.. இதென்னையா அக்குபிரஷர்..)

இத 15 வருசங்களுக்கு முன்னால முரளிதர்'ங்கற ஈரோடு டாக்டர் அனுபவபூர்வமாவே சொல்லிருக்காராமா..
அவர்கிட்ட வைத்தியத்துக்கு கூட்டிட்டு வரப்பட்ட சின்ன புள்ளைங்க பலருக்கும் இருந்த ஒரே ஒரு பிராப்ளம் அடிக்கடி ஜன்னி வருதுங்கறதுதான்..

அனுபவசாலியான அந்த டாக்டர், அத்தனை குழந்தைகளுக்கும் முறைப்படி காது குத்தவெச்சாராமா..

அப்டிகுத்தவெச்சு, பின், அந்த குழந்தைங்கள அவரின் நேரடிப்பார்வையிலேயே வெச்சு சோதனையும் செஞ்சிருக்கார்..

ரிசல்ட் என்னாச்சு தெரியுமா..
அந்த குழந்தைகளுக்கு அதுக்கு அப்புறம் ஜன்னியே வரலையாம்..
போயே போச்.. இட்ஸ் கான்..!

இதனால்தான் காது, மூக்கஎல்லாம் குத்திக்கிராங்கலாமா..
(வேணும்னா கீழ இருக்குராமாதிரி ட்ரை பண்ணிபாருங்க.. ஏதாவது பலன் கிடைக்குதான்னு பாக்கலாம்..)

அதனால.., பழையன புகுதலும், புதியன கழிதலும் இந்த மூக்குத்தி மேட்டருக்கு நல்லதுனுதோனுது..
நீங்க என்ன நெனைக்குரிங்க..ம்ம்..

அப்புறம்.. இன்னொன்ன விட்டுட்டனே..

இந்த காது, மூக்கு எல்லாம் சரி.. நம்ம சினிமா ஹீரோக்கள் விளையாடின "அந்த" இடத்துல இப்போவெல்லாம் பலர் குத்திக்கிராங்களே, அது எதுக்கா இருக்கும்..
(கீழ இருக்குறா மாதிரி பயன்படுமோ..)Wednesday, September 30, 2009

என்ன ஊருடா சாமீய்ய்ய் 5..

போன இடுகையில் கொஞ்சம் வித்தியாசமான காதல் கதைகளபத்தி சொன்னேன்..
அடுத்து, காதல் திருமணம் பற்றியது இல்லை..

மறுமணம் பற்றியது..

இதுல(யும்)ஆணுக்கும் பெண்ணுக்குமான சட்டங்கள் எங்கள் ஊரில் / ஜாதியில் முற்றிலும் மாறுபட்டவையாக இருக்கின்றன..

ஒரு ஆண், தன் மனைவி இறந்துவிட்டால், அவன் வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொள்வதை எங்கள் ஜாதி சட்டதிட்டங்கள் தடுப்பதில்லை..

எனக்கு மாமன் முறைவேண்டிய ஒருவர், சில வருடங்களுக்கு முன்பு ஏதோ கோபத்தில் அவரின் மனைவியை உயிருடன் கொளுத்திவிட்டார்..

கோர்ட்டு கேசுன்னு ஏழெட்டு வருடங்கள் அலைந்து இறுதியில் குற்றம் நிரூபிக்கப்பட்டு ஆறுவருடங்கள் சிறைத்தண்டனை பெற்றார்..

ஏற்கனவே கேஸ் நடக்கும்போது ஏழெட்டு வருடங்கள் சிறைவாசம் இருந்ததால், சீக்கிரம் விடுவிக்கப்பட்டும்விட்டார்.. வெளியில் வந்து ஒருவருடத்துக்குள்ளாகவே சமீபத்தில் +12 முடித்த ஒரு உறவினர் பெண்ணை திருமணம் செய்துகொண்டார்..

இந்த மறுமணத்தை எதிர்க்காத ஜாதி, அடுத்து சொல்லப்போகும் மருமணத்தை எதிர்ப்பதைதான் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை..

அப்படி அவர்கள் எதிர்த்த மறுமணம், எங்க ஊர் பூசாரி ஒருவரின் மகளான, கணவனை இழந்த இளம் பெண் ஒருத்திக்கு நிகழ்ந்தது..

அந்த பெண்ணுக்கு மறுமண ஏற்பாடு முடிந்ததும் ஊர்க்கூட்டம் போட்டு எடுத்த முதல் முடிவு, அவ்வாறு அப்பெண்ணுக்கு மறுமணம் செய்துவைக்கும்பட்சத்தில் இவர் தொடர்ந்து கோவில் பூசாரியாக இருக்க அனுமதிக்கமுடியாது.. உடனடியாக பூசாரி பொறுப்பிலிருந்து நீக்கப்படுவார் என்பதுதான் அவர்களின் முடிவு..

இவருக்கு பூசாரி பொறுப்பைவிட தன் மகளின் எதிர்கால வாழ்க்கையே முக்கியம் என்பதால் பூசாரி பொறுப்பைவிடுத்து மகளுக்கு மறுமணம் முடித்தார்..

பூசாரி பொறுப்பு போனால் என்ன என்றுதானே நினைக்குரிங்க..
அது அவர்களின் பரம்பரை உரிமை அதுஇதுன்னு ஒரு ட்ராக்..

அதுவும் இல்லாம.. இப்டி ஜாதியைவிட்டு தள்ளி வைக்கப்பட்டவர்களின் எந்த விசேசத்துக்கும் ஊர் / ஜாதி நாட்டாண்மைகள் செல்லமாட்டார்கள்..

எங்கள் ஜாதியில் ஒருவரின் திருமணத்திற்கு மாப்பிள்ளை / பெண் கொடுப்பதெனில், அக்குடும்பத்தாரின் திருமணத்திற்கு அவர்கள் ஊரின் ஜாதி நாட்டாண்மை(கள்) வந்து சம்மதம் தெரிவிக்கவேண்டும்.. அப்படி அந்த நாட்டாண்மை வர மறுக்கும் குடும்பத்துக்கு வேறு எவரும் மாப்பிள்ளை / பெண் கொடுக்கமாட்டார்கள்..

இதனாலேயே எந்த ஒரு தலைமுறையிலும் ஜாதிவிட்டு ஜாதி திருமணமோ, பெண்ணுக்கு மறுமணமோ செய்ய ஊர் / ஜாதிமக்கள் தயங்குகிறார்கள்..
அப்படி செய்யும் பட்சத்தில், அக்குடும்பத்தின் வேறு எவருக்கும் எக்காலகட்டத்திலும் எங்கள் ஜாதியில் இருந்து எவரும் பெண் / மாப்பிளை எடுக்கவோ கொடுக்கவோ முன்வரமாட்டார்கள்..

ஜாதியில் இருந்து ஒதுக்கியபின் ஊருக்குள்வாழ்வது மிக மிக கடினம்.. காரணம் அது கிராமம்.. அடித்தாலும் பிடித்தாலும் நாளை அவர்களின் முகத்தில்தான் விழித்தாகவேண்டும்..

இந்த சட்டதிட்டங்கள் / வழக்கம் பரம்பரை பரம்பரையா அவர்களின் இரத்தத்தில் ஊறியும்விட்டதால், இவை அவர்களுக்கு பெரியவிசையமாய் தெரியவும் இல்லை..

ஆனாலும் சென்ற இடுகையில் குறிப்பிட்டுள்ளது போன்ற மக்களின் சில தவறான நடவடிக்கைகளை தடுக்க இவர்களின் ஜாதிகட்டுப்பாட்டின் சில சட்டதிட்டங்கள் நல்லதுசெய்வனவாகத்தான் இருக்கிறதோவென்றும் நினைக்கத்தோன்றுகிறது..

காரணம் ஜாதிக்கட்டுப்பாட்டுக்கு பயந்தாவது தவறான பாதையில்செல்ல மக்கள் பயப்பட்டு தவறுகள்குறையுமோஎன்று தோன்றுகிறது..

எதிலும் நல்லது கெட்டது உள்ளதுபோல், எங்கள் ஜாதி கட்டுப்பாடுகளிலும், சட்டதிட்டங்களிலும் சில நல்லவையும் பல கெட்டவையும் இருப்பதாகவே கருதுகிறேன்..

சரி.. இந்தளவுக்கு எங்க ஊற டேமேஜ் பண்ணினதுபோதும்னு நினைக்கிறேன்..

அடுத்தமுறை வேறுவிதமான இடுகையுடம் சந்திக்கிறேன்..