Thursday, April 30, 2009

என்னோட பதிவு யூத் ஃபுல் விகடனில்..

அன்புள்ள யூத் ஃபுல் விகடனார் அவர்களுக்கு..

என் "49-O'வும்..!! கிராமங்களில் 49-O'வும்..!!" என்ற இடுகையை விகடன் குட் ப்ளாக் லிஸ்ட்டில் பிரசுரத்துள்ளமைக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்..யூத் ஃபுல் விகடன் பக்கம் எட்டிப்பார்க்க.. இங்கே "க்ளிக்"கவும்..

மிக குறுகிய காலத்தில் எனக்கு இப்படி ஒரு அங்கீகாரம் கொடுத்து, என்னை ஊக்குவிக்கும் உங்களுக்கு நன்றிகள் பல..

மிகுந்த மகிழ்ச்சியில் வார்த்தைகள் திக்குமுக்காடுகின்றன..
உங்களின் இந்த அங்கீகாரத்திற்கு மீண்டும் (பல முறை) என் நன்றிகளை கூறிக்கொள்கிறேன்.

அதேசமயம்.. என்னை தொடர்ந்து எழுத உற்சாகமூட்டுகின்ற என் அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் நன்றிகள் பலவற்றை கூறிக்கொள்வதில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன்..

நன்றிகளுடனும்,
சுரேஷ்.


Saturday, April 25, 2009

49-O'வும்..!! கிராமங்களில் 49-O'வும்..!!

Rule 49-O is a rule in The Conduct of Elections Rules, 1961 of India, which governselections in the country. It describes the procedure to be followed when a valid voter decides not to cast his vote, and decides to record this fact. The apparent purpose of this section is to prevent the election fraud or the misuse of votes.

------------------------------------------------------------------------------------
(டிஸ்கி 1: இத ஆளாளுக்கு அவங்க ஸ்டைல்ல அலசி ஆராய்ந்து இருந்தாலும்.. நானும் கொஞ்சம் என் கிராமத்தான் பார்வையில் அலச விரும்புகிறேன்.. படிக்காமல் டிமிக்கி கொடுப்போருக்கு என் 49-O தான் கிடைக்கும்..

டிஸ்கி 2: இது நான், 49-O பட்டன் மின்னணு வாக்கு இயந்திரத்தில் இல்லையென wikipedia'il படித்தமையினால் சொல்லுகின்ற கருத்துக்கள். ஒருவேளை, அது பழைய அப்டேட் செய்யப்படாத தகவலாக இருந்து, இப்போது உண்மையாகவே 49-O பட்டனை மின்னணு வாக்கு இயந்திரத்தில் சேர்த்திருப்பின் இந்த பதிவிற்கு நிர்வாகம் பொறுப்பாகாது..

டிஸ்கி 3: பதிவில் ஏதேனும் செய்திகள் தவறாக சொல்லப்பட்டிருப்பின் மன்னித்து முடிந்தால் சுட்டிகாடிடுங்க..)
------------------------------------------------------------------------------------


“49-O”..!!,
வாக்காளர் தனது ஓட்டினை எந்த வேற்பாளருக்கும் போட விருப்பமில்லாமையை தெரிவிப்பதற்கான ஒரு ஏற்பாடே இந்த "49-O"..

வாக்காளர் தனது வாக்கினை 49-O'ஆகா பதிவதற்கு, முந்தய முறைப்படியிலான வாக்கு சீட்டிலும், இப்போதைய மின்னணு வாக்கு இயந்திரத்திலும் வசதிகள் இல்லை (எதற்கும் டிஸ்கி 1ஐ துணைக்கு அழைக்கிறேன்..).. இவற்றில் வேட்பாளர்களின் பட்டியல் மட்டுமே இருக்கும். வாக்காளர் தனது வாக்கை 49-o’ஆக பதிய Form-17A’ ஐ உரிய தேர்தல் அதிகாரியிடம் இருந்து கேட்டு பெற்று பூர்த்தி செய்து தனது கையெழுத்தையோ அல்லது கைகட்டை விரல் ரேகையையோ பதிய வேண்டும். இது sub-rule (1) of rule 49L’இன்படி கட்டாயமான ஒன்று. இதனை அந்த தேர்தல் பூத்திற்க்கான அதிகாரி சரிபார்த்து ஒப்புதல் அளித்ததும், உங்கள் பொன்னான வாக்கு 49-o’வாக வீரநடை போடும்..
---------------------------------------------------------------------------------------
நான் ஏன் என் வோட்டை செல்லாத வோட்டாக போடாமல் 49-o’ஆக பதிவு செய்ய வேண்டும்..?


ஏனெனில்..,
நீங்கள் யாருக்கும் வோட்டுபோட விரும்பவில்லை எனில், பொதுவாக நடைமுறையில் உள்ள ஒன்றான செல்லா வாக்காக பதியலாம்.. இப்படி பதிய, ஒன்றுக்கு மேற்பட்ட வேற்பாளர்களுக்கு உங்களின் வோட்டை பதிவதின் மூலம் அது செல்லா வோட்டாக பதியப்படும்..


இப்போ, தேர்தல்ல வெற்றி பெற்றவங்களோட வாக்கு எண்ணிக்கைல இந்த செல்லாத வோட்டுகல கௌன்ட் பண்றது இல்லைனாலும், அந்த செல்லா வோட்டுகலால எந்த பயனும் இல்லை..(but, எவ்ளோ செல்லா வோட்டுகள் இருக்குன்னு Ele. Com. கிட்ட information இருக்கும்). செல்லா வோட்டின் மூலம் நமது எதிர்ப்பை காட்டினாலும் அதனால் யாருக்கும் பயனும் இல்லை, இவற்றால் அவர்களுக்கு எந்த பின்விளைவும், பயமும் இருக்கபோவதில்லை..


அதனால் தான் நமது எதிர்ப்பை, நமது செல்லா வோட்டை பயனுள்ள, அரசியல் கட்சிகளுக்கு பயத்தினை உணர்த்தும் வகையில் பயன்படுத்த தான் இந்த 49-O அமல்படுத்தப்பட்டுள்ளது..

இதன் பயனை அறிய சின்ன உதாரணம்..
ஒரு குறிப்பிட்ட வார்டில்(ward) ஒரு வேட்பாளர் உதாரணமாக 143 வாக்குகளில் (நல்ல நம்பர்ல..!!) வெற்றிபெற்று இருந்து, அந்த வார்டில்(ward) பதிவு செய்யப்பட 49-O வோட்டுகளின் எண்ணிக்கை 143’க்குமேல் எனில் அந்த வார்டுக்கான தேர்தல் கேன்சல் செய்யப்பட்டு மறு தேர்தல் நடத்தப்படும். (apdi thaane..?)


அது மட்டுமின்றி, அந்த கேன்சல் செய்யப்பட்ட தேர்தலில் நின்ற வேற்பாளர்கள் எவரும் இந்த மறு தேர்தலில் போட்டியிட அனுமதி மறுக்கப்பட்டு, வேறு புதிய வேற்பாளர்கள் மட்டுமே போட்டியிட வகை செய்கிறது. ஏன்எனில் அந்த பழைய வேற்பாளர்களின் மேல் உள்ள தங்களின் கருத்துக்களை தான் முந்தய கேன்சல் செய்யப்பட தேர்தலில் 49-O’வாக மக்கள் பதிவு செய்து தங்களின் எதிர்ப்பை காட்டிஉள்ளனரே..? ஆகவே தான் இந்த புது வேற்பாளர்கள்.. இது கட்சிகளினிடையே பயத்தை உண்டு பண்ணி, ஒரு நல்ல வேற்பாளரை நிறுத்துவதற்கான சாத்தியங்களுக்காக.. இது நிச்சயம் நமது political system’il நல்ல மாறுதல்களை நிகழ்த்தும் என்று நம்பப்படுகிறது.. பொறுத்திருந்து பார்ப்போம்..


--------------------------------------------------------------------------------
சரி மக்கா.. அதிகாரிகளையும் அவங்களோட இந்த சட்டங்களையும் விடுங்க..
நம்ம பிரச்சனைக்கு வருவோம்..

கிராமத்தானோ, நகர்புறத்தானோ.. யாரா இருந்தாலும் இந்த 49-o’வ யூஸ் பண்ண முடியும்னாலும், அதுல சில நடைமுறை சிக்கல்கள் இருக்கு.. என்ன பண்ணலாம்..?


கிராமபுறத்துல இருக்கரவங்களுக்கான சில சிக்கல்கள இங்க சொல்லுறேன்..

1. இங்க என் அங்கிள் ஒருத்தர்க்கு 4 பசங்க.. அங்கிள் தீவிர கம்யூனிஸ்ட், அவரோட மூத்த பைய்யன் BJP, இன்னொரு பைய்யன் DMK, அவரோட பேரன் ஒருத்தன் இப்போ தே.மு.தி.க’ல சேந்திருக்கான். அவரோட மீதி ரெண்டு பசங்களும் வேற ஏதோ கட்சியில இருகாங்க..

தேர்தல் அன்னைக்கு நான் வோட்டு போட போகும்போது இவங்க தான் அங்க பூத் ஏஜென்ட்டா ஒக்காந்துட்டு இருப்பாங்க..


எல்லா மாமன்களும், முந்தின நாள் தான் அவங்க கட்சிக்கு வோட்டு போட சொல்லி நல்லா கவனிச்சு இருப்பாங்க..


இந்த சமயத்துல, நான் போயி தேர்தல் அதிகாரிகிட்ட, சார், எனக்கு இந்த வேட்டபாளர்கள் யாருக்கும் வோட்டு போட இஷ்டம் இல்ல, என்னோட வோட்ட 49-O வோட்டா பதிவு செய்ய "Form-17A" வேணும்னு கேட்டா, நாளைக்கு நான் எப்படி மாமன் வீட்டுக்கு போறது.. மொத்தமா 5 மாமன்களும் சேந்து கும்மிடுவாங்க..


2. அங்க இவங்க மட்டுமே பூத் ஏஜன்ட்டா இருக்க மாட்டாங்க..
என்னோட நண்பர்கள், அப்பாக்கு தெரிஞ்சவங்க இப்டின்னு நெறையபேரு இருப்பாங்க..


இவங்க எல்லார் முன்னாடியும், எனக்கு என்னோட வோட்டு உரிமை தான் முக்கியம். நண்பர்கள், உறவினர்கள், அவங்க இவங்க எல்லாம் அப்புறம் தான்னு சொல்லி 49-O’வ போட்டுட்டு வீட்டுக்கு போய்ட்டா.. அதுக்கு அப்புறம் நான் எவன் மூஞ்சில முழிப்பேன்..


3. என் அப்பாவும், அம்மாவும் (அப்பாவ விட அம்மா தான்) என்கிட்ட எதையும் மறைக்காம வெளிப்படையா பேசுவாங்க.. கல்லூரியில எதாச்சும் கசமுசா ஆகி, யாரையாச்சும் இழுத்துட்டு வந்தா என்ன பண்ணுவாங்கங்கறது உற்பட.. :)


25 வருஷ காலமா கூட இருக்கற அவங்க, இதுவரைக்கும் எந்த கட்சிக்கு வோட்டு போட்டுட்டு இருக்காங்கனு என்னால கண்டுபுடிக்க முடியலை..


பெரும்பாலும் எல்லா கட்சிகளிலும் அப்பாவுக்கு நண்பர்கள் இருகாங்க.. (பின்ன, மேல சொன்னா மாதிரி மாமா வீட்லயே 5 வேறுபட்ட கட்சி பிரமுகர்கள் இருகாங்க.. அப்புறம் என்னத்த பண்ண..)


நானா அவங்க கிட்ட எந்த கட்சிக்கு வோட்டு போட்டிங்கனு கேட்டா.. அதெல்லாம் உனக்கெதுக்கு.. உனக்கு எந்த கட்சிக்கு வோட்டு போடனும்னு தோணுதோ அந்த கட்சிக்கு வோட்டு போடு.. நாங்க எதுக்கு போட்டோம்னு சொல்ல மாட்டேனு சொல்லிடுவாங்க..


பெத்த புள்ளகிட்டயே எந்த கட்சிக்கு வோட்டு போட்டேன்னு சொல்லாதவங்க.. இப்டி பகிரங்கமா 49-O’கு வோட்டு போட form’a வாங்குவாங்கனு நெனைகிரின்களா..?


அப்டி அவங்க 49-O'கு வோட்டு போட்டா, அங்க பூத் ஏஜன்ட்டா இருக்கற என் நண்பனோ இல்லை மாமனோ, மச்சானோ என்னிடம் சொல்லும்போது, நான் பெருமையாக நினைத்தாலும், அவர்களின் சுதந்திரம் இங்கே பறிக்கபடுமல்லவா..?

இல்லை, அங்கு உள்ள என் உறவினர்களும், நண்பர்களுடனான உறவுதான் அதற்க்கு மேல் தொடருமா..?
உன்னோட சொந்தம், உன்னோட நண்பன் கட்சிக்கே வோட்டு போடாத உன்னை நான் வெறுக்கிறேனு ஆளாளுக்கு சொல்லிட்டா, அந்த சின்ன கிராமத்துல வேறு யாரையும் அறியாத அப்பாவி கிராமத்தான் அதன் பின்பு என்ன செய்வான்..?


சத்தமில்லாம 49-O’ல வோட்டு போட்டுட்டு வர, மின்னணு வாக்கு இயந்திரத்திலேயே ஒரு பட்டன்’a வெச்சுட்டா ஒருவேள எங்களுக்கு எல்லாம் சௌகரியமாக இருக்கும் என்று நம்ம்ம்பி இந்த பதிவை வெளியிடுகிறேன்..


(மீண்டும் டிஸ்கி பார் மை பாதுகாப்பு: இது நான் மேற்கூறியவாறு, 49-O பட்டன் மின்னணு வாக்கு இயந்திரத்தில் இல்லையென wikipedia'il படித்தமையினால் சொன்ன கருத்துக்கள். ஒருவேளை, அது பழைய அப்டேட் செய்யப்படாத தகவலாக இருந்து, இப்போது உண்மையாகவே 49-O பட்டனை மின்னணு வாக்கு இயந்திரத்தில் சேர்த்திருப்பின் இந்த பதிவிற்கு நிர்வாகம் பொறுப்பாகாது.. )

Friday, April 17, 2009

எனது ஓவியத்திறமைக்கு காரணமான தேர்வுகள்..


இந்த பதிவும் என் மற்றைய பதிவுகளை போல் தேர்வுகளையே மையமாககொண்டு அமைவதின் மூலம் என் வாழ்வில் ஏற்பட்ட வெகுசில இன்னல்களில் இந்த தேர்வுகளின் பெரும் பங்கினை வெகுவாக உணரலாம்..

பொதுவா எல்லாத்துக்கும் இந்த தேர்வுங்கறது, அந்த வகுப்புல படிச்சு கிழிச்சுட்டு அடுத்த வகுப்புக்கு போறதுக்கான தகுதி இருக்கானு கண்டுக்கறதுகாக வெக்கிறது..


ஆனா நாம தான் அப்டி இல்லையே.. படிச்சு கிழிக்க நேரமாகும்னு, கிழிச்சு எடுத்துட்டு போயி எக்ஸாம் எழுதறவிய ஆச்சே.. நம்ம தகுதிய இந்த எக்ஸாம எல்லாம் வெச்சு நிர்ணயிக்க முடியுமா என்ன..?

செகண்ட் இயர் படிக்கும் போது நாலாவது வருஷ கேள்வித்தாள் கொடுத்தாலும் அசராம எழுதிட்டு வந்திடுவோம்ல.. அந்த அளவுக்கு பெர்பெக்ட்டா பிட்டடிபோம்..
ஆமா.. இந்த பிட்டடிக்கற எக்ஸாம்கும், படம் வரையறதுக்கும் இன்னா கனெக்சன்னு யோசிக்கிரியலா..

நாங்க எப்படி செகண்ட் இயர் படிக்கும் போது நாலாவது வருஷ கேள்வித்தாள் கொடுத்தாலும் அசராம பிட்டடிச்சு எழுதிட்டு வர்ரோமோ, அதே மாதிரி தான் எந்த பொருள பாத்தாலும் அசராம அப்டியே பாத்து வரைஞ்சிடுவோம்.. என்ன அங்க பாத்து எழுதுறோம்.. இங்க பாத்து வரையுறோம்.. அங்க பிட்டடிக்கறது எழுத்துக்களை.. இங்க பிட்டடிக்கறது எடாகுடமா, கண்ணாபின்னானு திறிஞ்சுட்டு இருக்கற பலவகைபட்ட கோடுகளை.. அம்முட்டுதான்..

எழுத்தோ.. கோடுகளோ.. பிட்டடிக்கறதுனு வந்துட்டா, எங்களுக்கு எல்லாமே ஒன்னுதான்.. எதா இருந்தாலும் அச்சு பிசகாம அப்டியே அடிசுடுவோம்ல..


கீழே இணைக்கப்பட்டுள்ள படத்த பாருங்க.. வெகுசில கோடுகள் தான் அதுல இருக்கு.. ஆனா அந்த கோடுகளை சரியான இடத்துல அமைக்கும்போது என்னமா இருக்குன்னு..!
//
நான் முறையா ஓவிய பயிற்சி ஏதும் எடுக்காததாலயோ என்னவோ இதுகூட எனக்கு அழகா தெரியுது.. உங்களுக்கு எல்லாம் எப்டின்னு எனக்கு தெரியலை..
//

(பி.கு: இதுக்கு பிறகு உள்ளவை தலைப்புக்கு சம்மந்தப்படாதவை..)

ஆரம்ப காலங்களில் நான் வரைய பயன்படுத்தினது பென்சில்கள் தான்.. ஆனா அதுல வரையும்போது தப்பு எதாச்சும் ஆச்சுனா அழிச்சுட்டு வரைஞ்சிடலாம்.. இப்டி அழிச்சு அழிச்சு வரையறதுல கொஞ்சம் சலிப்பு ஏற்படவே, இப்படி அழிப்பதற்கான வாய்ப்பு இல்லாத வகையில வரைய பால்பாயிண்ட் பேனாவ பயன்படுத்த ஆரமிச்சேன்.. இதுல என்ன த்ரில்னா, படம் வரையும்போது எந்த எடத்துல தப்பா வரஞ்சிட்டாலும், அந்த படத்த திருப்பி மொதல்ல இருந்துதான் வரஞ்சு ஆகணும்..
வேணா நீங்களும் பென்சில்ல வரையரத விட்டுட்டு பேனால வரஞ்சு பாருங்க.. அந்த அனுபவமே அலாதியானது..

//
அப்படி நீங்க வரைய முயற்சி எடுக்கும் பட்சத்தில் சிறந்த பேனா ஓவியராக வாழ்த்துக்கள்.. (ஆனா.., நெறையபேரு ஏற்கனவே இந்த கலைல முனைவர்களா இருப்பாங்கனு நெனைக்கிறேன்.. அவர்களுக்கு இந்த பதிவு சம்மந்தம்அற்றது என்பதனை கூறிகொள்ள கடமைபடுகிறேன்..)
//
Tuesday, April 14, 2009

யார் தமிழன்..?

அனைவருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ளும் இந்த நன்னாளிலே எனக்கு இந்த வினோதமான சந்தேகம் ஏற்பட்டுள்ளது.. சந்தேகம் என்னவெனில்.., யார் தமிழன்..?? தமிழனாய் அறிவதற்கான அளவுகோல் ஏதும் உண்டா..?? இந்த சந்தேகம் வந்ததற்கான காரணிகள் நம் அரசியல்வாதிகளே.. அவர்களின் சமீபத்திய சில பேச்சுக்களே எனக்குள் இந்த கேள்வியை எழுப்பியுள்ளன..

மதரீதியாய் பார்ப்போமேயானால், இன்று இந்து மதத்தினனாய் உள்ள ஒருவர் சட்டரீதியாக இஸ்லாமியராகவோ, கிறித்துவராகவோ, அல்லது அவர் விரும்பும் வேறு மதத்திற்கோ மாற சட்டம் வகை செய்கிறது.. அதேசட்டம் ஒருமதத்தினுள், சாதி விட்டு சாதிமாற அனுமதிகின்றதா என்பது எனக்கு தெரியவில்லை.. ஏனெனில், அப்படி அனுமதிக்கும் பட்சத்தில், ஒரு குறிப்பிட்ட சாதியினர், அதிக சலுகைகள் கிடைக்கபெறக்கூடிய இன்னொரு சாதிக்கு மாற வாய்ப்புகள் அதிகம்..

யாரும் பொழுதுபோக்காக இப்படி செய்வார்கள் இல்லையெனினும், வாழ்வியல் காரணங்களுக்காக மற்றும் சில பொருளாதார பிரச்சினைகளை கருத்தில்கொண்டு இப்படி மாற சாத்தியகூறுகள் அதிகம் என்பதே என்கருத்து..

ஒருவேளை, மதம் மாறுவதைபோல் சாதிமாறுவதையும் நம் சட்டம் அனுமதிக்குமேயானால்.. எனது அடுத்த சந்தேகம்..

SC/ST பிரிவினரை தவிர்த்து வேறு எந்த பிரிவினரும் இந்த IAS,IPS போன்ற தேர்வுகளை ஒரு குறிப்பிட்ட முறைகள் மட்டுமே எழுத அனுமதிக்கபடுகிறார்கள்..
இந்த SC/ST பிரிவினர்கள் மட்டும் எவ்வளவு முறை வேண்டுமானாலும் இந்த தேர்வினை எழுதலாமென கேள்விபட்டிருக்கிறேன்.. (மேலும் இவர்களுக்கு இன்னபிற சலுகைகளும் அதிகம்..) எனில், இவ்வாறு IAS,IPS தேர்வு எழுத விரும்பும் SC/ST பிறிவினை சாறாத மாணவன், இந்த பிறிவுக்கு சாதி மாறிக்கொள்ளும் பட்சத்தில் அவன் சலுகை அடிப்படையில் பலமுறை தேர்வுஎழுத மற்றும் அந்த அதிகப்படியான சலுகைகளை பெற ஏதுவாகிவிடுமே.. இதற்க்கு சாத்தியங்கள் உண்டா என யாரேனும் அறிந்தால் சொல்லுங்கள்.. அறியவிழைகிறேன்..

(back to the thalaippu..)

உண்மையில் தமிழன் என்பவன் யார்..? தமிழகத்திலே பிறந்து இங்கேயே வாழும், மற்றும் தமிழகத்திற்கு வெளியே குடிபெயர்ந்த, தாய்மொழி தமிழாக கொண்டவர்களே தமிழர்களா..?? அப்படியெனில், காலம் காலமாக, பரம்பரை பரம்பரையாக தமிழ்நாட்டிலே பிறந்து தமிழ்வழி கல்விகற்று, வாழ்நாள் முழுவதும் தமிழ் மொழியை மட்டுமே செய்திதொடர்புக்கு பயன்படுத்திவரும் மக்களை தமிழர்கள் என்றுசொல்ல முடியுமா முடியாத..?

உதாரணமாத, இங்கு வாழும் ஒரு முதலியார் அல்லது ஒரு செட்டியார் சமூகத்தை சார்ந்த ஒருவனின் பரம்பை தமிழையே பயன்படுத்திவருவதால் அவர்கள் தமிழர்களாக ஏற்றுகொள்ளபடுவார்களா..? இல்லை, அவர்கள் தமிழை பயன்படுத்துவதால் மட்டும் தமிழர்கள்ஆக முடியாதுஎனில், மதம் மாறுவதைபோல், சாதி மாறுவதைபோல், முதலியார்/ செட்டியார் சமூகத்தில் இருந்து தமிழ் சமுதாய மக்களாக மாற சட்டம் வழிசெய்கிறதா..?

மிக சமீபத்தில், நமது பதிவுலகாதிலேயே, நட்சத்திர, பிறப்பால் கன்னடனான ஒரு தமிழ் நடிகனை, கன்னட *** , மற்றும் சில இனவெறி வார்த்தைகளால் வசை பாடிஇருந்தனர்.. அவர் பிறப்பால் கன்னடனாய் இருந்தாலும், இப்போது தமிழில், தமிழ்நாட்டில் வாழ்ந்தாலும் தமிழனாய் அங்கீகரிக்கப்படாமல் உள்ளார்.. இதே நிலை தான், நமது அம்மா அவர்களுக்கும்.. (சத்தியமாய் அரசியல் இல்லை சாமி.. சும்மா ஒரு உதாரணத்துக்கு தான்..)

ஆக, பிறப்பாலும், தாய்மொழியாழும்,வேறு சமுதாயத்தினனாய் உள்ள ஒருவன், அவன் மிகவும் நேசிக்கும் தமிழ்மொழியுடன், தமிழனாய் அங்கீகாரம் கிடைக்கபெறவே முடியாதா..? அப்படி இருப்பின் அந்த நட்சத்திர (பிறப்பால்)கன்னட (மொழியால் தமிழ்)நடிகரை, மற்றும் அம்மாவை தமிழர்களாக ஏற்றுகொள்ளமுடியுமா..? அப்படி ஏற்றுகொள்ளும் பட்சத்தில், பிழைப்புக்காக மாநிலம்விட்டு இங்குவந்து (வேறுவழியில்லாமல்) தமிழ் பேசும் அனைத்து மாநிலத்தவரையும் தமிழன் என்று சொல்லிவிட முடியுமா..?

ஆக.. தமிழன் என்பவனை அடையாளம் காண்பதற்கான அளவுகோல் தான் என்ன..?


யார் தமிழன்..?


இணைப்பு:


இது போன பதிவில் ஜமால் அண்ணாச்சி விரும்பி கேட்டுகிட்டதுகாக..இப்போ சவுரியமா வந்து பதிவ படிச்சுட்டு போங்க ஜமால் அண்ணாத்த..

Tuesday, April 7, 2009

எனது பாணியில் IOB தேர்வு..

( நா எக்ஸாம் எழுத போனா எப்படி இருக்கும்னு சின்னதா ஒரு டிரைலெர் பாக்கணும்னா.. கீழ குடுத்திருக்கற ரெண்டு பதிவுகள படிச்சா கொஞ்சம் புரிஞ்சுபிங்க..
http://wettipedia.blogspot.com/2009/03/blog-post_24.html
http://wettipedia.blogspot.com/2009/03/blog-post_25.html )

இந்த IOB மேட்டர் என்னனா.ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..

போன மாதம் 26'ம் தேதி காலை 10.10 மணிக்கு office'ku உள்ள நுழையும் போதே நண்பனிடம் இருந்து அழைப்பு வந்தது.. ஏதோ IOB bank'la Probationary officer போஸ்ட்டுக்கு அடுத்த மாசம் எக்ஸாம் வெக்கிறாங்க, அப்பளை பண்ணுடான்னு சொன்னான்.. சரி, அடுத்த மாசம் தானே, யோசிச்சு பண்ணலாம்னா, அதுக்கு அப்பளை பண்ண இன்னைக்கு தாண்டா கடேசி நாள்னு சொன்னான்..
// இன்னைக்கு தான் கடேசி நாள்னா.., இந்த பதிவ எழுதுற இன்னைக்கு இல்லை.. இது அவன் போன் பண்ணின அன்னைக்கு தான் கடேசி நாள்..
ஹி ஹி.. தெளிவா புரிஞ்சுதா..?
//
சரி'னு ஆபீஸ்'கு ரெண்டு மணிநேரம் OP அடிச்சுட்டு பேங்க்'கு போயி அப்ளை பண்ணிட்டு வந்து, அன்னைக்கு மாலை நேரத்துல அந்த தேர்வ யாரெல்லாம் எழுதலாம், அது எந்த வகையான தேர்வுன்னு net'la தேடிபாத்தா.. அந்த தேர்வுக்கு arts குரூப் மாணவர்கள் குறைந்தது 60% மதிப்பெண்ணும், BE முடித்தவர்கள் குறைந்தபட்சமாக 65% மதிப்பெண்ணும் பெற்றிருக்க வேண்டும்னு போட்டிருந்துச்சு..

நாங்க நடுத்தர வர்க்க குடும்பம்.. அதாவது வறுமை கோட்டுக்கு சற்று மேலே'னு சொல்லிகிடலாம்.. அதனால என்னோட மார்க்கும் என் குடும்ப பொருளாதாரம் மாதிரி வறுமை கோட்டுக்கு சற்று மேல தான் இருந்துச்சு.. அதாவது, BE'la எனது மதிப்பெண் சதவிகிதம் 60%..

சரி.., எப்டியோ 400 ரூபா கட்டி பதிவு பண்ணியாச்சு.. கட்டுன காசுக்கு தேர்வ எழுதலாம்னு முடிவுபண்ணிட்டு அன்னைக்கு புடுங்க வேண்டிய ஆணிய புடுங்க போய்ட்டேன்.. தேர்வுக்கு மூணு வாரம் முன்னாடி அம்மா போன் பண்ணி, எக்ஸாம்கு ஹால் டிக்கெட் வந்திருச்சு'னு சொன்னாங்க.. எழுதபோகத எக்ஸாம்கு இந்த ஹல்டிக்கெட் வந்தாஎன்ன வராட்டி என்னனு விட்டுட்டேன்..

அப்புறம், தேர்வுக்கு முந்தின வாரம் வீட்டுக்கு போனப்ப, அம்மா கட்டாயப்படுத்தி அத என் பேக்ல தினுச்சு அனுப்பிட்டாங்க.. சரினு நானும் அத கொண்டாந்து ரூம்ல போட்டு வெச்சுட்டேன்.. தேர்வுக்கு முந்தின நாள் இரவு அம்மா போன் பண்ணி தேர்வுக்கு prepare பண்ணிட்டியனு கேக்கவும் தான், அடுத்த நாள் இந்த எக்ஸாம் இருக்கறதே நெனப்பு வந்துச்சு.. சரி, அப்டி தேர்வு எழுத, அவனுக ஹால் டிக்கெட்ல என்னென்ன instructions போட்டிருகாங்கனு படிச்சு பாத்தா.. ஆ..ஆ..ஆ.. ஆ.. ஆ..

1st rule : ஹால் டிக்கெட்ல என்னோட பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஒட்டி இருக்கனுமாம்..
அடங்கொய்யால.. ஏன்டா.., இத இப்போ வந்து சொன்னா, இந்த ராத்திரி 9.30 மணிக்கு மேல எவண்டா போட்டோ எடுக்க ஒக்காந்துட்டு இருப்பான்.. நாளைக்கு காலைல எடுக்கலாம்னா, இவனுங்க 10 மணிக்கு மேல தான் கடைய தொறப்பனுங்க..
என்னடா இது சோதனைன்னு நெனச்சுட்டு இருக்கும்போது தான் திடீர்னு அது நியாபகம் வந்திச்சு..

என்னனா, நான் பெங்களூர்'ல இருந்தப்போ பேக்ல போட்டு வெச்சிருந்த ID Card ஒன்னு இன்னும் என் பேக்ல கடந்துச்சு.. அதுல இருந்த போட்டோவ கிழிச்சு ஒட்டலாம்னு எடுத்தப்ப அதனோட கவர்ல இருந்து ஒரு அழகான பைய்யனோட போட்டோ ஒன்னு கீழ விழுந்துச்சு.. யாருடா இது இவ்ளோ அழகா இருக்கானேனு எடுத்து பாத்தா.. அது வேறயாரும் இல்ல மகா ஜனங்களே.. அது நான் தான்.. சும்மா சொல்லக்கூடாது, (அப்டினா காசு குடுத்து சொல்லலாமான்னு எல்லாம் கேக்க கூடாது..) நெஜமாவே அப்டி ஒரு அழகு. சரி.., போட்டோ கெடச்சாச்சு.. ரெண்டாவது rule என்னாங்கடனு படிச்சு பாத்தா.. ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..

2nd rule.. தேர்வுக்கு பதிவு செய்ய கட்டணம் கட்டியதற்கான ரசீதை கொண்டுவரவேண்டும்.. டேய்.. ஏண்டா சாவடிக்கிரிங்க.. ஒன்ற மாசத்துக்கு முன்னாடி கட்டுன பணத்துக்கான தம்மா துண்டு ரசீத எங்கேனு போயி தேட..
சரி, அன்னைக்கு ஊர்ல இருந்து வரும்போதுதான் பணம் கட்டினது.. So, அப்போ கொண்டு வந்த பேக்ல தேடி பாக்கலாம்னு இருபது நிமிஷம் செலவழிச்சு தேடுனதுல அதுவும் கெடச்சிடுச்சு.. சரி. இப்போ 3rd rule என்னாங்கடானு படிச்சு பாத்தா..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..

இது தான் தேர்வுக்கான எனது கொள்கைக்கு விரோதம்னா விரோதம், அப்டியொரு விரோதமானது.. அப்டி என்ன rule'na.., தேர்வுக்கு வரும்போது கண்டிப்பா ரெண்டு HB பென்சில்கள், ஒரு இரப்பர், ஒரு பேனா இதையல்லாம் அவசியம் கொண்டுவரணும்னு போட்டிருந்துச்சு.. நீங்களே சொல்லுங்க.. இப்டி ஒரு மாணவன் கிட்ட தேர்வுக்கு பேனா எல்லாம் கொண்டு வர சொன்னா அவன் மனசு எவ்ளோ கஷ்ட்டப்படும்.. ஆனா என்ன பண்ண..? நம்ம விதி இப்டிதானு எழுதி இருந்தா யாரால மாத்த முடியும்..


சரினு ஒரு முடிவெடுத்தேன்.. இதுக்காக எல்லாம் மனச தளர விடாத.. அங்க எக்ஸாம் ஹால்'ல எவனாச்சும்கிட்ட இருந்து புடிங்கி எழுதிக்கலாம்னு முடிவு பண்ணிட்டு, நாளைக்கு காலை 9.30'ku எக்ஸாம் ஹால்ல இருக்கணும். So, 7.30'ku எழுந்து ரெடி ஆனா தான் கரெக்ட் டைம்'கு போக முடியும்னு நெனச்சு, 7.30 கு அலாரம் வெச்சுட்டு தூங்கிட்டேன்.. காலைல ரொம்ப நேரம் ஆகியும் அலாரம் அடிக்கவே இல்லையேனு மணிய பாத்தா..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..


மணி 8.30 ஆகிருந்துச்சு.. அட கொடுமையே.. நம்ம கொள்கைய மீறி இந்த ஒரு எக்ஸாம்காச்சும் கரெக்ட் டைம்'கு போலாம்னு பாத்தா.. கொள்கை நம்மள விடமாட்டின்குதெனு நொந்துட்டு, அவசர அவசரமா குளிச்சு ரெடி ஆகி மணிய பாத்தா, 8.50 ஆகிடுச்சு.. ஆனா, இந்த அவசரத்துலயும் ஒரு நல்லது நடந்துச்சு.. அதுவும் என் room mate மூலியமா.. ஏனா அவன் ஒரு mechanical Engg. மாணவன்.. So, தேர்வுக்கு வேண்டிய பென்சில், இரப்பர் எல்லாம் இவன்கிட்டயே கெடச்சிடுச்சு.. இப்டி தேவையானது எல்லாம் எதிர்பாக்காம கெடச்சப்போ.. என்கிட்ட இருந்த, கண்டிப்பா மறக்காம எடுத்துட்டு போகனும்னு நெனச்சுட்டு இருந்த ரெண்டு பொருள மறந்துட்டு போய்ட்டேன்.. அது என்னனா.. ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..


ஒன்னு, என்னோட பேனா.. நான் நண்பன் கிட்ட இருந்து பென்சில், இரப்பர் மட்டும் தானே வாங்கி இருந்தேன்.. என்னோட பேனாவ எடுத்துக்க மறந்துட்டேன்..

ரெண்டாவது, டவுன் பஸ்சில் பயணம் செய்வதற்கான கட்டணத்திற்கு தேவையான ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் நாணயங்கள்.. இது இல்லன அவ்ளோ தான்.. நடத்துனர் நம்மள நாறடிசுடுவான்..

என்கிட்ட இருந்தது 10 மற்றும் 100 ரூபாய் நோட்டுகள்.. ஆனா நான் எதிர்பாத்தா மாதிரி அப்டி ஒன்னும் அவர் நாறடிக்கவில்லை.. எனது பத்து ரூபாயை வாங்கிக்கொண்டு, இரண்டு ரூபாயை குடுத்துட்டு இத வாங்கிக்கோன்னு சொல்லிட்டு போய்ட்டாரு.. நானும், சரி யாராச்சம் ரெண்டு பேருகிட்ட சில்லறைய வாங்கிட்டு, நம்ம பத்துரூபாயில அவங்களுக்கு டிக்கெட் வாங்கி குடுத்துடலாம்னு ரெண்டு பேத்தபுடிச்சு, அவங்க கிட்ட இருந்து சில்லறையையும் வாங்கிட்டேன்.. ஆனா.. அதுல என்ன கொடுமைனா.. ஆ.. ஆ.. ஆ.. ஆ.. ஆ..
நான் சில்லற வாங்குனதுல ஒருத்தர் குடுத்த ரெண்டு ரூபாய் சில்லறை எதுக்குனா, நடத்துனர் அவருக்கு மூணு ரூபா தரணுமாம்.. அதுக்கு இவரு இன்னும் ரெண்டு ரூபாய குடுத்து மொத்தமா 5 ரூபாயா வாங்குறதுக்காக குடுத்தது.. நா, அவர் டிக்கெட் தான் வாங்குராருனு நெனச்சுட்டு, என்னோட பத்து ரூபால அவுருக்கு ஒரு ரெண்டு ரூபா டிக்கெட் கொடுத்துடுங்க.. நான் அவரு கிட்ட இருந்து காசு வாங்கிட்டேன்னு சொல்லி நல்ல பெருசா ஒரு பல்ப வாங்கிகிட்டேன்..
(எதாச்சும் புரிஞ்சுதா மக்களே.. ???? புரியாட்டியும் பரவால, தொடர்ந்து படிங்க..)
சரி, இவுரு தான் இப்டி பல்பு குடுத்துட்டாரு.. நம்ம இன்னொருத்தர் கிட்ட காசு வாங்குனமே, அவுரு என்ன பண்ணுராருனு பாத்தா, பரவால.. நாம நெனச்சா மாதிரி, ரெண்டு ரூபாய என்கிட்ட குடுத்துட்டு என்னோட பத்து ரூபால இருந்து அவுருக்கு தேவையான ரெண்டு ரூபாய்க்கு டிக்கெட் வாங்கிகிட்டாறு.. இப்போ, அவுருக்கும் எனக்கும் சேத்தி என் பத்து ரூபால நாலு ரூபாய்க்கு டிக்கெட் எடுத்தாச்சு.. இப்போ நடத்துனர் என்கிட்ட ஆறு ரூபா சில்லற குடுத்தாரு.. எப்டியோ நடத்துனர் கிட்ட இருந்து ஒரு ஆறு ரூபா, நம்மாளுகிட்ட இருந்து ரெண்டு ரூபா மொத்தம் என்னோட டிக்கெட் செலவு போக எட்டு ரூபா சில்லறை கெடச்சிடுச்சுனு பாக்கெட்ட பாத்தா..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..

நம்மாளு கிட்ட இருந்து வாங்கின ரெண்டு ரூபாய காணோம்.. என்னடான்னு யோசிச்சு பாத்தப்போதான் தெரிஞ்சுது.. மொதல்ல பல்பு வாங்குன குசியில இவரோட ரெண்டு ரூபாயையும் நடத்துனர் கிட்டயே குடுத்துட்டேனு.. அப்புறம் என்ன, ரெண்டு ரூபா டிக்கேட்க்கு நாலு ரூபாயா போனது தான் மிச்சம்.. சரி ரெண்டு ரூபா தானே, தொலஞ்சு போகட்டும்னு விட்டுட்டேன்.. எக்ஸாம்'கு இன்னும் 15 நிமிஷம் தான் இருக்கு என்ன பண்ணலாம்னு யோசிச்சுட்டே காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட்'ல இருந்து அண்ணா சிலை stop'ku பஸ் ஏறலாம்னு, ஒரு பஸ்ஸோட நடத்துனர் கிட்ட கேட்டதுக்கு, ஒரு மாதிரியா முழிச்சுட்டு, ஆமா இது அந்த வழியா தான் போகுது. ஏறுங்கன்னு ஏத்திக்கிட்டான்.. அவன் எறக்கி விட்ட stopla கேட்டப்போதான் தெரிஞ்சுது இது நான் போகவேண்டிய stop'ku பக்கத்து road'nu.. இதுவே வேற வேலையா, வெட்டியா சுத்திட்டு இருக்கறப்போனா, அப்டியே ஜாலியா நடந்து போலாம்.. ஆனா இன்னும் 5 நிமிசத்துல நான் எக்ஸாம் எழுதவேண்டிய காலேஜ்ச தேடிபுடிச்சு போயாகனும்.. சரி.. அங்க இருந்த ஆட்டோ driver'a விசாரிச்சப்போ, அந்த காலேஜ் போக இன்னும் ஒரு கிலோமீட்டர் தூரம் போகனும்னு சொன்னான்.. எப்டியோ தட்டு தடுமாறி போயி சேரும்போது மணி 9.43 ஆகிடுச்சு.. அங்கன போயி பாத்தா சின்ன ஆச்சர்யம்..

என்னனா.., எக்ஸாம்'கு வந்ததுல பசங்கள விட குஜால்ஸ் தான் அதிகம்.. இப்போதான் மனசுக்கு கொஞ்சம் நிம்மதி.. இவ்ளோ கஷ்ட்டப்பட்டு எக்ஸாம் எழுத வந்ததுக்கு இப்டி ஒரு குஜாலஸ் கூட்டத்தயாசும் பாக்க அனுப்புனியே ஆண்டவான்னு எக்ஸாம் ஹால தேடி போயி பாத்தா.. அங்கயும் இதே கதை தான்.. எங்க ஹால்ல பொண்ணுங்கள விட பசங்க ரொம்ப கம்மி.. இத இப்டியும் சொல்லலாம்... பசங்கள விட பொண்ணுங்க அதிகம்னு..

மனசுல பட்டாம்பூச்சி சிறகடிக்க.. என்னோட இறந்தகால கல்லூரி நியாபகத்தோட தேர்வு எழுத உக்கந்தபோது தான் நியாபகம் வந்துச்சு, இன்னும் யாரு கிட்ட இருந்தும் பேனா வாங்கவே இல்லன்னு..

நா அப்டி தேர்வு எழுத யாரு கிட்ட பேனா வாங்கி இருப்பேன்னு நெனைக்கிறிங்க.. ஹி..ஹி.. அதும் ஒரு குஜிலி தான்..

அப்டி பேனா வாங்கி தேர்வுல என்னத்தாதான் எழுதினேங்கர கதைய அடுத்த பதிவுல சொல்லறேன்..

Friday, April 3, 2009

மதம் மாறுவதால் யாருக்கு லாபம்..?

இந்த பதிவின் நோக்கம், நீண்ட காலமாக நான் கிணற்று தவளையாய் என் Computer உடனும், கம்ப்யூட்டர் வீடியோ கேமிலும் மட்டுமே முழு சிந்தனையுடன் தவத்தில் இருந்தமையால், எனக்கு நம் சமூக கட்டமைப்புகளில் ஏற்பட்டுவிட்ட சில சிறுபிள்ளைதனமான சந்தேகங்களை தெளிவுபடுத்தி கொள்ளும் ஒரு சிறு முயற்சி..

ஒருவர், ஒரு மதத்தில் இருந்து இன்னொரு மதம் மாறுவதற்கு நம் சட்டம் அனுமதிக்கின்றது. இதன் மூலம் எனது அருகாமை வீட்டார் கூட இந்து மதத்தில் இருந்து, குடும்பத்தில் ஆள் ஒருவருக்கு ரூபாய்10,000 பெற்றுக்கொண்டு வேற்று மதத்திற்கு மாறியுள்ளனர்.. (அதற்காக அவர்கள் எங்கள் ஊர் நாட்டாண்மையால், சாதியில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டது தனி கதை..)

அவர்கள் மதம் மாறியதற்கு முக்கிய காரணம் பசி.. கணவன், மனைவி, மூன்று பெண் குழந்தைகள், வயதான தாய்.. இது தான் அவர்களின் குடும்பம்.. எனக்கு தெரிந்து பல மாதங்கள் அவர்களின் குடும்பம் பட்டினியில் கிடந்துள்ளன.. அப்போதெல்லாம் இந்த சாதியா வந்து அவர்களுக்கு சோறு போட்டது..?


எதற்கும் உதவாத சாதியை வைத்துக்கொண்டு,பசியை கண்டு பீதியில் சாவதை விட,தற்காளிகமகாவாவது பசியாற்றிக்கொள்ள அவர்கள் மதம் மாறியதில் குற்றம் இருப்பதாய் எனக்கு தெரியவில்லை.. மானத்தை விற்று வாழ்வது தான் பாவமே தவிர, மதம் மாறி வாழ்வதில் தவறேதும் இல்லை என்பது என் கருத்து.. ஏனெனில், மதத்தை காட்டிலும் உயிர் நமக்கு முக்கியம், அவசியம்.. உயிரே போன பிறகு மதம் எதற்கு..?

ஆனால்ல்ல்....., அவர்களுக்கு நான் விடுக்கும் ஒரே வேண்டுகோள்.. நீங்கள் எந்த மதத்திற்கும் மாறுங்கள்.. ஆனால்.., தாங்கள் தழுவுகின்ற (or) தழுவபோகின்ற மதத்தினை இயன்ற வரை முழுதாய் அறிந்து செயல்படுங்கள்.. உணவுக்காக மதம் மாறிய நீங்கள், எக்காரணத்தை கொண்டும் அதனை இழிவுபடுத்தும் விதத்தில் எதனையும் செய்துவிடாதிர்..

ஆனால் இவர்கள் சில மாதம் அந்த மதத்தில் இருந்து அதன் சம்பிரதாயப்படி வாழ்கை நடத்தினர் (என்று தான் நினைக்கிறேன்).. சில மாதங்களில் அவர்களின் தொழில் வளர்ச்சி பெற்றது.. வாழ்க்கை தரம் உயர்ந்தது.. அவ்வளவு தான்.., ஆபத்துக்கு உதவிய மதத்தினை தூக்கி எரிந்துவிட்டு மீண்டும் தன் பழைய மதத்திற்கே மாறி விட்டனர்.. இதை தான் என்னால் ஏற்கமுடியவில்லை..எனக்கு சட்டம் அவ்வளவாக தெரியாது.. இருப்பினும், எனது கருத்து, இப்படி மதம் மாறுவதை ஒன்று அல்லது இரண்டு முறைக்குமேல் அனுமதிக்காத வகையில் சட்டத்தை கடுமையாக்க வேண்டும்..

ஆனால் இவை அனைத்தும் அந்த பாமர மக்களின் வாழ்க்கை போராட்டம்..இன்னொரு கோணத்தில் பார்த்தால், இவர்களின் மீது பரிவு காட்டும் அந்த மதத்தினருக்கு இவர்களின் மேல் ஏன் இவ்வளவு பரிதாபம் என்று பார்த்தால் அது கொஞ்சம் கசப்பான உண்மை தான்.. அவர்களின் நோக்கம் இங்கு அவர்களின் மதம் சார்ந்தவர்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும்.. இங்கு அவர்களின் மதத்தினர் தான் அதிகம் என்று காட்டவேண்டும். இதற்காக அந்த மதத்திற்கான நிர்வாகிகளுக்கு அயல்நாட்டிலிருந்து கோடிகளில் பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது.. அவர்களின் சுயலாபத்திற்காக இந்தமாதிரி பாமர மக்களை விலை கொடுத்து வாங்கயுள்ளனர், வாங்குகின்றனர்.. (எனினும் வாழவும் வைத்துள்ளனர்..)
//uncle நீங்க நல்லவரா கெட்டவரா..?//

இதே கதை தான்.. ஒரு தாழ்த்தப்பட்ட பிரிவினர்க்கு நிகழ்ந்தது..
இதை நம்மில் பலரும் அறிந்திருக்க வாய்ப்பு உள்ளது.. அதாவது தாழ்த்தப்பட்ட மக்களை, பரவலாக, பல ஊர்களிலும் கோவில்களுக்குள் அனுமதிப்பது இல்லை (மற்ற இடங்களில் இப்போதும் அப்படியா என்று எனக்கு தெரியாது. இன்னும் எங்கள் ஊரில் அப்படி தான்)..

// சமீபத்தில் தமிழரசி (Minister for Adi-Dravidar Welfare) அவர்கள் தமிழகத்தில் ஒரு புகழ் பெற்ற கோவிலுக்கு சென்று வந்தவுடன், அந்த கோவில் தீட்சிதர்கள் கோவில் முழுவதையும் தண்ணீர் ஊற்றி கழுவியதை நாம் அறிவோம்..//

இப்படி எங்கள் ஊரில் இருந்த ஒரு பிரிவினரை அந்த குறிப்பிட்ட மதத்தினர் அவர்களின் இன்சொற்கள் மூலம் எளிதில் சாய்த்து விட்டனர்..இங்கு அவர்கள் பயன்படுத்திய ஆயுதம் பணம் மட்டுமல்ல, தீண்டாமை ஒழிப்பு என்ற போர்வையையும் போர்த்திவிட்டனர்.. எங்கள் மதத்திற்கு மாறினால், உங்களுக்கு நிறைய பணம் கிடைப்பதோடல்லாமல், நீங்கள் எங்கள் கோவிலுக்குள் எந்த நிபந்தனையும் இன்றி முழு சுதந்திரத்துடன் அனுமதிக்கபடுவீர்..நீங்கள், உங்கள் சமூகம், எங்களில் ஒருவராக கருத்தபடுவீர்.இதன் மூலம் நீங்கள் சமூகத்தில் உயர்ந்த பிரிவினர்களாக மதிக்கபடுவதொடல்லாமல், உங்கள் குழந்தைகளின் எதிர்காலம் நல்ல நிலயை அடையும். இது தான் அவர்கள் இந்த பிரிவினர்க்கு விரித்த வலை.. இந்த உத்தி நன்றாகவே பயனளித்தது.. என்ன செய்ய.. இந்த பாலாய் போன உலகத்தில் வாழ தேவை அங்கீகாரம் மட்டுமல்ல.. அதற்குமேல் தேவை காசு..!!!!!

ஆனால், ஆடு வளர்க்கபடுவது பிரியாணி ஆக்கபடுவதற்கே தவிர பச்சாதாபத்திற்காக அல்ல.. இங்கே இப்போது எங்கள் ஊரில் வளர்ந்து கொண்டிருக்கும் இந்த மனித ஆடுகளின் நிலை வரும் காலத்தில் என்னவாகும் என்று எனக்கு சத்தியமாக தெரியவில்லை.. பொறுத்திருந்து தான் காணவேண்டும்..

இப்போது தலைப்பிற்கான காரணம் புரியுமென நினைக்கிறேன்..அதாவது நான் அறிய விரும்புவது.. உணமையில் மதம் மாறியதால் பயன் யாருக்கு..? பசியில் வாடிக்கொண்டிருந்த அந்த ஏழை குடும்பம் மற்றும் பிறப்பால் தாள்தபட்டவராய் ஒதுக்கப்பட்டு, இப்போது திடீரென மேல் ஜாதிகாரனாய் மாறிப்போன அந்த வளர்ப்பு மனித ஆடுகளுக்கா இல்லை இவர்களை எல்லாம் காசுகொடுத்து வாங்கியுள்ள அந்த மதவாதிகளுக்கா..? யாருக்கு லாபம்..?

இவற்றையெல்லாம் மீறி எனக்குள் எழும் இன்னொரு கேள்வி, மதம் மாறுவது என்பது வெறும் லாப நோக்கத்திற்காக மட்டுமா..? இல்லை.. ஏனெனில்.. சிலர் அவர்கள் பின்பற்றும் மதம் சொல்லும் சில நெறிகளில் மாற்று கருத்து கொண்டு, வேறு மதத்தினை நாடுகின்றனர்.. எண்ணற்ற, இந்த பலதறபட்ட ஜாதிகளுக்கு இடையில் தாவுவதற்கு மனிதன் கொண்டுள்ள காரணங்கள் தான் பலபல..

எந்த காரணத்தை கொண்டு என்ன ஜாதியில் இருப்பினும் சரி, எப்போதும் நீ மனிதனாய் இரு. நிச்சயம் உன்னால் ஜாதிக்கு நன்மதிப்புடன் கூடிய லாபம் கிட்டும்.

// Subject கொஞ்சம் ரிஸ்க்கானதுதான்னாலும், என்னை சுற்றி நடந்துகொண்டிருக்கும் இதுபோன்றவற்றை என்னால் கேட்காமல் இருக்க முடியவில்லை. இருப்பினும் என்னால் முடிந்தவரை யாரையும் நோண்டிவிடாமல் மேலோட்டமாக எனது கருத்தினை பதிந்து இருக்கிறேன்.. ஏதேனும் தவறுதலாய் இருப்பின் பெரிய மனது வைத்து மன்னிக்கவும்..//