Thursday, July 23, 2009

என்ன ஊருடா சாமீய்ய்ய் 2..

இந்த தொடர் இடுகையின் முதல் பகுதிக்கு இங்கே செல்லவும்..

2. பெண்களுக்கான வினோத சட்டதிட்டங்கள்..

உலக வழக்கப்படி.. இங்கயும் பெண்களுக்கான சட்டங்கள் கொஞ்சம் மாதிரியானவைதான்.. என்னபண்ண, பொறந்த ஊராப்போச்சே.. சொல்லிதானே ஆகணும்..

எங்க ஊரு கட்டுப்பாட்டின்படி பெண்கள் மறுதிருமணம் / இரண்டாவது திருமணம் செய்துகொள்ளமுடியாது.. இளம் வயதிலேயே கணவன் இறந்துவிட்டாலும் அப்பெண் கடேசிவரைக்கும் விதவையாகத்தான் வாழ்ந்தாகவேண்டும்..

ஏன்.. கட்டுப்பாட்டைமீறி திருமணம் செய்துகொண்டால் என்னான்னு தானே கேக்குறிங்க.. அப்படிசெய்துகொண்டால் பெண்ணுடன் சேர்த்து மொத்த குடும்பமுமே ஊரைவிட்டு ஒதுக்கிவைக்கப்படுவர்..

எங்க ஊரில், கோவில் பூசாரி ஒருவரின் மகளுக்கு இப்படி மறுதிருமணம் முடித்தமையால், பூசாரிபதவி பறிக்கப்பட்டு சாதியில் இருந்து தள்ளிவைக்கப்பட்டனர் என்பது ஊரின் பொன்னான வரலாற்று செய்திகளில் ஒன்று..

ஏன்.. சாதியில் இருந்து, ஊரில் இருந்து தள்ளி வைத்து விட்டால் என்ன.. வாழமுடியாதானு கேக்குறிங்களா..?

கிராமங்களில், சொந்த பந்தங்கள் இல்லாமல் ஊருக்குள் தனிமையில் வாழ்வது மிகக்கடினம்..

அதேபோல்தான் சாதிவிட்டு வேறு சாதியில் மணமுடிக்கும் மணமக்களின் குடும்பங்களும் ஊரைவிட்டு ஒதுக்கிவைக்கப்படுவர்.. இதில் அப்பெண்ணின் குடும்பத்தார் பஞ்சாயத்தார் முன்னிலையில் தவறுக்கு மன்னிப்புகோரினால் அவர்கள் மன்னிக்கப்பட்டு, மணமகனுடன் சேர்த்து பெண் மட்டும் ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்படுவாள்..
(என்ன மக்கா எப்படி இருக்கு.. )

சில வருடங்களுக்கு முன், எங்கள் ஊரைச்சேர்ந்த ஒரு பெண் வேறு சாதியை சேர்ந்த பையனை திருமணம் செய்துகொண்டதால், (பெற்றோர் மன்னிப்பு கேட்டுக்கொண்டதால் அவர்களை தவிர்த்து) கணவனுடன் சேர்த்து பெண் மட்டும் ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட வரலாறும் எங்கள் ஊரில் உண்டு..

இத்தனைக்கும் அப்படி தள்ளிவைக்கப்பட்ட காலகட்டத்தில் அந்த பையன் அரசியல் கட்சியின் சார்பாக வெற்றிபெற்று "கவுன்சிலர்" பதவியில் இருந்த ஒருவர்.. இப்படி தங்கள் சாதி பெண்ணை திருமணம் செய்துகொண்டதால்வேறு சாதியை சேர்ந்த கவுன்சிலரையே ஊரைவிட்டு ஒதுக்கிவைக்கும் நாட்டாண்மைகளின் சட்டம் எவ்வளவு சூப்பரானது..

பெண்ணின் குடும்பத்தார் பஞ்சாயத்தில் மன்னிப்புகோறியமையால் அவர்கள் மன்னிக்கப்பட்டு மணமக்கள் மட்டும் தள்ளிவைக்கப்பட்டனர்..

இந்த சம்பவத்திற்குப்பின், கடேசியாக நடந்த "கவுன்சிலர்" தேர்தலில் இம்முறை அந்த பெண் அவரின் கணவன் சார்ந்துள்ள அந்த அரசியல் கட்சியின் சார்பாக கணவனின் துணையுடன் பங்கேற்று வெற்றியும் பெற்றுவிட்டார்

இப்போது சாதியில் இருந்து / ஊரைவிட்டு தள்ளிவைக்கப்பட்ட தங்கள் ஊரைச்சேர்ந்த பெண்ணே எங்கள் ஊருக்கு கவுன்சிலராக உள்ளார்.. (நல்லா இருக்குல்ல..)

பெண்களுக்கு உண்டான இந்த கட்டுபாடுகள் ஆண்களுக்கும் உண்டோ என்னவோ தெரியலை..

ஆண்களுக்கு எதிரானவை என்றாலே அச்சட்டங்கள் இருட்டினில் கண்ட கருப்புத்திரையாய் காணாமல் போய்விடுகின்றன..

எங்கள் ஊரில் பெண்களே இந்த கட்டுப்பாடுகளால் அதிகம் பாதிக்கப்படுவதாலே அவற்றை இங்கு கூறுகிறேன்..

அடுத்த இடுகையில், இப்படி சாதியை கொண்டாடும் எம்மக்கள் ஊரிலுள்ள இசுலாமிய மக்களுடன் கொண்டுள்ள சுமுகமான நட்பு.. மற்றும்

கடந்த ஆறு மாதங்களில் யெஸ்ஸான ஏழுக்கும் அதிகமான காதல் ஜோடிகளின் சாதனைகள்..

இவற்றில் சில, குழப்பமான உறவுமுறைகளுடன் கூடிய ஜோடிகள் என்பதாலும், சிலர் என்னுடைய பள்ளி தோழர்கள் என்பதாலும் சிறப்புபெறுகின்றனர்..


Saturday, July 18, 2009

சுவாரசிய வலைப்பதிவு விருது..



வலைப்பதிவு உலகை சுவாரஸ்ய படுத்தவும், பதிவர்களை உட்சாகப்படுத்தவும், பல அறிமுகமில்லாத பதிவர்களை பலரும் அறிந்துகொள்ளவும் திரு. செந்தழல் ரவி அவர்கள் ''சுவாரஸ்ய வலைப்பதிவு விருதினை'' அறிமுகப்படுத்தி, சுவாரசிய வலைப்பதிவர்கள் ஆறு பேருக்கு அந்த விருதினை வழங்கியும் இருக்கிறார்.. அவருக்கு என் மகிழ்ச்சியையும், வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்..

"மனவிலாசம் நவாஸுதீனிடம்" விருது பெற்ற நண்பர் "பிரியமுடன்.........வசந்த்" அவர்கள் எனக்கு இந்த விருதினை வழங்கி இருக்கிறார்..
அவருக்கு என் நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவித்து கொள்கிறேன்.

விருதினை பெற்றவர்கள் ஒவ்வொருவரும் ஆறு பேருக்கு விருதினை வழங்க வேண்டும். மேலும், இந்த விருதினை தங்கள் வலைதளத்தில் போட்டுக்கொண்டு, தங்களுக்கு விருது வழங்கியவரின் இணைப்பையும் கொடுக்கவேண்டும் (என்பது விதி)..


இப்படி ஒரு விருதினை ஆறுபேருக்குமட்டும் கொடுப்பதென்பது மிகக்கடினமான ஒன்று..

இப்பதிவுலகில் ஒவ்வொருவருமே ஏதாவது ஒருவகையில் (அவர்களைப்பொறுத்து) தங்களது பிளாக்கை சுவாரசியத்துடனேயே நடத்திக்கொண்டிருப்பர்..

யாரும் யாரையும் குறைத்துமதிப்பிடமுடியாது..

எனக்கு தெரிந்த அனைத்து பதிவர்களுக்கும் இவ்விருதினை வழங்க ஆவலாய் இருப்பினும், அப்படி நான் ஒருவனே அனைவருக்கும் இவ்விருதினை வழங்கிவிட்டால், என்னிடமிருந்து விருதுபெற்றவர்களிடமிருந்து விருதுபெற மிகச்சிலரைத்தவிர யாரும் இருக்கமாட்டார்கள் என்ற பொது சிந்தனையோடும், வசந்தின் விதி எண் "05772982044752304698"ன்படி நான் இந்த விருதினை ஆறுபேருக்குமேல் கொடுக்கமுடியாது என்பதாலும், கீழே குறிப்பிட்டுள்ள நண்பர்கள் ஆறுபேருக்கு இவ்விருதினை வழங்குகிறேன்..

(அதற்குமுன்பு உங்களின் அனுமதியின்றி உங்கள் புரோபைல் படங்களை டேமேஜியமைக்கு மன்னிக்கவும் நண்பர்களே..)




விருதினை பெறுபவர்கள்..

1. Will To Live RAMYA

2. சூரியன் தினேஷ்

3. நான் நானாக...... விக்னேஷ்வரி

4. வால்பையன் அருண்

5. ரசனைக்காரி... Rajeswari

6. அப்பாவி முரு

இவர்கள் ஆறுபேருமே இவ்விருதுக்கு மிகப்பொருத்தமானவர்கள் என்பதில் எனக்கு எவ்வகையிலும் சந்தேகமில்லை....

இவர்களில் பலர் எனக்கு வலைப்பதிவுலக சீனியர்களும்கூட..

அதிலும் "Will To Live" RAMYA அவர்கள் எனக்கு ஆரம்பகாலம் முதல் ஊக்கப்படுத்திவருபவர்..

இவ்விடத்தில் உண்மையில் அவருக்கு ஒரு பெரிய நன்றி சொல்லி இவ்விருதினை வழங்குவதில் நிறைய நிறைய நிறைய்ய்ய்ய்ய்ய பெருமைப்படுகிறேன்..
நன்றி ரம்யா அக்கா..

மற்ற அனைவரின் இடுகைகளையுமே ஓரளவிற்கு தவறாமல் படித்துவருகிறேன்..
சிலசமயம் வேலைப்பளுவின் காரணமாக பின்னூட்ட இயலாமல்போனாலும் குறைந்தபட்சம் அவர்களின் இடுகைகள் படிக்கப்பட்டுவிடும்..

இவர்கள் அனைவருக்கும் இந்த சுவாரசிய வலைப்பதிவு விருதினை வழங்கி பெருமைப்படுத்துவதோடு மிக்க மகிழ்ச்சியும் அடைகிறேன்..

நன்றியுடன் விருதுக்கு வாழ்த்துக்களும் நண்பர்களே.. ஜமாய்ங்க..


Wednesday, July 15, 2009

என்ன ஊருடா சாமீய்ய்ய்..

நான் அவதரிச்ச ஊரப்பத்தின வரலாற்று சிறப்புமிக்க செய்திகளை உலகத்துக்கு பறைசாற்றவே இந்த முயற்சி..

வரலாறு கொஞ்சம் பெருசுன்றதால மனசாட்சிக்கு விரோதமா தொடரிடுகையா போடலாம்னு ஒருமனதா தீர்மானம் நிறைவேற்றி இருக்கோம்.. பொறுமையா படிச்சு ஆதரவு தாங்கப்பூ..

மொதல்ல எடுத்தவொடனே தடாலடியா கெட்டதா பேசவேணாம்னு தோணுனதால எங்க மக்களுக்கு படியளக்கற தொழிலப்பத்தி ஆரமிக்கிறேன்..

1. தொழிலு..

எங்க ஊரின்.. அட ஊரின் என்னங்க ஊரின்.. எங்க சுத்துப்பட்டி 170 கிராமத்துக்குமே முக்கிய தொழில் (or) பரம்பரைதொழில் "நெசவு" தானுங்க..



உண்மையிலேயே எங்கயுமே பொழைக்கவழி இல்லைன்னு எங்க ஊருக்கு வந்தவங்க, செய்யஎந்த வேலையுமே இல்லைன்னு சொல்லி திரும்பிபோரதுக்கான வாய்ப்பே எங்க ஊரப்பொருத்தவரைக்கும் இல்லைங்க..

இங்க வந்துட்டு செய்யறதுக்கு வேலை இல்லைனுட்டு வெளியபோறவன் சத்தியமா எங்கயும்போயி பொழைக்கிறதும் நடக்காத காரியம்.. அவ்ளோ வேலைவாய்ப்பு கொட்டிகெடக்கு..பெரும்பாலும், அனைத்தும் நெசவு சார்ந்த தொழில்கள் தாம்..

எங்க ஊரை பொருத்தவரைக்கும் பிச்சைக்காரர்களுக்கு பிச்சைபோடுவதே பெரிய பாவம்னுதான் சொல்லணும்.. யாரும் உழைத்து வாழக்கூடிய அளவிற்கு அளவற்ற வேலைவாய்ப்பு நிறைந்த ஊர்.. (இப்படிப்பட்ட நிலையில் பிச்சையெடுக்க அவசியம் என்ன..?)

வேலைவாய்ப்பு உள்ள அளவிற்கு மனிதவளம் இல்லாததாலே பல நெசவுப்பட்டறைகள் விரிவுபடுத்தப்படாமல் நலிந்து வருகின்றன.. இப்படிப்பட்ட நிலையில் சாப்பாட்டுக்குவழி இல்லைன்னு ஒரு பிச்சைக்காரன் வந்தால் பார்ப்பவனுக்கு எப்படி இருக்கும்..

இங்கே மனிதவளமின்றி வேலைசெய்யவே ஆள் இல்லாமல் தட்டுப்பாட்டில் உள்ளோம்.. இப்படிப்பட்ட ஊரில், வேலையே செய்யாமல் பிச்சையெடுத்து வாழநினைப்பவனை கண்டால் எங்களுக்கு எப்படி இருக்கும்..

இப்படிஒருமுறை பிச்சைகேட்டு வந்தவனை எங்கள் பட்டறையில் வேலைசெய்து கிடைக்கும்சம்பளத்தில் வாழ்க்கையை நடத்துஎன்று கூறியதால் திரும்பிசென்ற அவன் அதன்பின்பு அந்த ஏரியாபக்கமே வந்ததில்லை.. இப்படியும் சில ஆசாமிகள்..
என்ன செய்ய..
(ஒடனே ஊருல இருக்கற பிச்சைக்காரர்களை எல்லாம் எங்க பட்டறைக்கு இழுத்துட்டு வந்துடாதிங்க..)

அவங்க இருக்கற அலைவரிசையில அவங்கள வேலைக்கு வெச்சா அவங்க எங்களை மாதிரியான உழைப்பாளிகள் வர்க்கத்துல சேருராங்களோ இல்லையோ, கண்டிப்பா நாங்க அவங்க வர்க்கத்துல சேர்ந்திடுவோம்.. அவங்களோடது அப்படி ஒரு அருமையான அலைவரிசை..

ஊரில் இருக்கும் மனித வளமும் பத்தாததற்கு முக்கிய காரணிகளில் ஒன்று,

ஊரைச்சுற்றி அதிகரித்து வரும் பனியன் தொழிற்சாலைகள்..
மற்றொன்று.. அருகில் அமைக்கப்பட்டுள்ள "சிப்காட்" என்று அழைக்கப்படும் தொழில்பேட்டை..

என்மக்கள் பரம்பரை பரம்பரையாக நெசவில் ஊறித்திளைத்தபடியால் மாற்றத்தை விரும்பி இந்த பனியன் நிறுவனங்களுக்கும், சிப்காட்'ன் பலதரப்பட்ட புதிய தொழிலுக்கும் செல்வதில் அதிக ஆர்வம்காட்ட தொடங்கிவிட்டனர்..

பழகப்பழக பாலும் புளிக்கும் பழமொழி எங்களின் வாழ்வாதாரத்தையே எடுத்துக்காட்டாய் எடுத்துக்கொண்டது..

நெசவுத்தொழில் காலம்பூராவும் பழகி ஒன்றி இருப்பதனால், இத்தொழிலே எம்மக்களுக்கு புளித்துவிட்டதுபோலும்..

எங்கள் ஊரில் கணக்கெடுப்பு நடத்தினால், மக்களைகாட்டிலும் இயந்திரங்களின் எண்ணிக்கை குறைந்தது ஏழு மடங்கு முதல் அதிகபட்சமாக பத்துமடங்குக்குமேலேயே இருக்கும்..

அந்த சிறிய கிராமங்களில் ஒவ்வொரு வீட்டிலும் அவ்வளவு இயந்திரங்கள்..

எங்கள்வீட்டில் இருப்பது நாங்கள் மூவர்.. எங்களின் வீட்டில் எங்களுடன் இயங்குவது 20 இயந்திரங்களுக்கும் மேல்..

இயந்திரங்கள் எனில் சாதாரணம் இல்லை.. அவற்றின் சத்தத்தில் நாம் பேசுவது நமக்கே முழுமையாய் கேட்காது.. அவ்வளவு சத்தம்..

சிறிய சத்தத்திற்கே தூங்கமுடியாமல் அவதியுறும் பலருக்கு மத்தியில் இந்த சத்தத்திலும் நாங்கள் சுகமாய் தூங்குவதுண்டு..

பூக்காரிக்கு பூக்களின் வாசமின்றி தூக்கம் வராதாம்..

கருவாட்டுக்காரிக்கு கருவாட்டின் வாசமின்றி தூக்கம் வராதாம்..

அதேபோல்தான் போலும்..
எம்மக்களுக்கு தறியின் சப்தமின்றி தூக்கவராதோ..


இங்கு ஒவ்வொருவரின் வீடும் வெறுமனே 75 to 125 ஆண்டுகளுக்கு முன்பு வேயப்பட்ட ஓடுகளைகொண்டு இங்கு என்ன இருக்கப்போகிறது என்று என்னும்வகையில் பார்ப்பதற்கு சப்பையாகத்தான் இருக்கும்..

ஆனால் இருப்பதிலேயே ஒரு சிறிய பட்டறையை சேதம் செய்தாலும் சேத மதிப்பு கண்டிப்பாக 7 to 10 லட்சத்திருக்கும் அதிகமாக இருக்கும்.. ஓசையின்றி ஒவ்வொரு பட்டறையும் சேர்த்து கிராமமே பலகோடி ரூபாய்களில் தினம்தோறும் புழங்கிக்கொண்டுள்ளது.. உண்மையில் கிராமத்திற்கு வரும், விஷயம் அறியாத யாரும், மேலோட்டமாய் காணும்போது இதனை நம்புவது கடினம்.. அவ்வளவு எளிமையாய் இருக்கும்..

இப்போதைய சூழ்நிலையில்.. வெளி ஊர்களில் இருந்து எங்கள் ஊருக்கு பிழைப்புதேடிவரும் மக்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகின்றது..

அதுவும்.. கடந்த பத்து பன்னிரண்டு வருடங்களில் வந்துசேர்ந்துள்ள மக்களின் எண்ணிக்கை எங்கள் ஊர்மக்களின் எண்ணிக்கயைவிடவும் மிக அதிகம்.

முன்பெல்லாம் ஒருவர் ஊருக்குள்சென்றாலே, முகஜாடையை வைத்து இவன் இன்னார் வீட்டுப்பிள்ளை என்று பெருசுகள் சொல்லிவிடும்..

ஆனால் இப்போது வெளிஊர்க்காரர்களின் அதிகபடியான வரவால் எவன் உள்ளூர்க்காரன் எவன் வெளியூர்க்காரன் என்று அறிவதிலேயே பெரும் குழப்பமாக உள்ளது..

அதிலும், இப்படி வந்த மக்களில் பெரும்பாலானோர் அந்தியூர் மலைப்பகுதியை சார்ந்தவர்கள்.. அவர்களின் வரலாறு பெரும் வரலாறு.. எல்லாத்தையும் பின்வரும் இடுகைகளில் காண்போம்..

என்ன.. எங்க ஊரின் முக்கிய தொழிலப்பத்தி தெரிஞ்சுகிட்டிங்களா..

சரி அடுத்த இடுகையில் "பெண்களுக்கு எதிரான எங்கள் கிராமத்தின் வினோத சட்டதிட்டங்கள்.." பற்றி காண்போம்..



Saturday, July 11, 2009

50000 மதிப்புள்ள ஸ்டாம்ப்பு..

மேட்டர் 1..


எப்படின்னு யோசிக்குரிங்களா..?

பதில் இடுகையின் கடேசியில்..

மேட்டர் 2..
(மேட்டர் 2 எங்கோ கேட்ட படித்த மேட்டர்.. கண்ணில் தென்பட்டதனை பகிர்கிறேன்..)

பல மொழிகள், ஒரே வார்த்தைக்கு இடத்திற்கேற்ப வெவ்வேறு அர்த்தங்களை தரும்..

கீழே உள்ள சில ஆங்கில சொற்களுக்கு நேரடியாக பொருள்பார்த்தால் தப்பாகிவிடும்..


1. First Footer - புத்தாண்டு பிறக்கும்போது வீட்டில் நுழையும் முதல் நபர்..
2. Second Banana - உதவும் நிலையில் உள்ள ஒருவர்..
3. Third Man - மத்தியஸ்த்தம் செய்பவர்..
4. Four Eyes - கண்ணாடி அணிந்தவர்..
5. Fifth Wheel - தேவையில்லாத சுமையாய் இருப்பவர்..
6. Ten Strike - பெரிய அதிஸ்டம்..
7. Eleventh hour - கடைசி நிமிடம்..
8. Million Dollar Question - மிகக்கடினமான கேள்வி.

மேட்டர் 3..

இதுவரை நான் பார்த்தறியாத, சமீபத்தில் காணக்கிடைத்த பல அறிய / வித்தியாசமான தபால்தலைகளில் சில..
(வழக்கம்போல் கிளிக்கி பெரிதுபடுத்திபார்த்துக்கொள்ளவும்..)


மேலே உள்ளது உண்மையில் கண்டது..

அடுத்து உள்ளது கற்பனையில் காண்பது..




மேட்டர் 1' க்கான பதில்..






ஒன்னும் பிரச்சனை இல்லை..
யாரும் டென்ஷனாகாம அப்டியே அமைதியா கலைஞ்சுபோய்டுங்க..


Tuesday, July 7, 2009

கோவையில் நைஜீரியப்புயல்..



நைஜீரியால இருந்துகெலம்பி சென்னை, மதுரைன்னு சுத்திட்டு 2/7/2009 வியாழக்கிழமை அன்னைக்கு நம்ம நைஜீரியப்புயல் கோவைல மையம் கொண்டது உலகறிந்த ரகசியம்..

ஆனால், இது வலையுலக, பதிவுலக நண்பர்களை சந்திப்பதின் முதல் அனுபவம்ன்றதால, எனக்கு கொஞ்சம் ஸ்பெசல் சந்திப்பு..

ஆறு மணிக்கு அண்ணன்மார்கள் எல்லாரும் வந்திடுவாங்கன்னு ராகவன் அண்ணா சொன்னத நம்ம்பி ஆறு மணிக்கு ஜீ'டாக்ள சாட்டி கேட்டா இன்னும் யாரும் வரலைனாறு..

சரின்னு அப்டியே மொள்ள கெளம்பி போயி 6.30'கு கதவ தட்டினா எல்லாரும் ஆஜராகி இருந்தாங்க.. வழக்கம்போல நம்மதான் லேட்..

முதல் சந்திப்புனாலும், பார்த்தவுடன் சஞ்சய் அண்ணா, அண்ணாச்சி, ராகவன் அண்ணா மூணு பேத்தையும் அடியாளம் கண்டுகிட்டேன்..

ஆனா செல்வேந்திரன் அண்ணாவமட்டும் ரெண்டுதபா பேற கேட்டுகிட்டும் மறந்துட்டேன்.. அப்பாலிக்கா நல்லா நியாபகம் வெச்சுகிட்டேன்..

போனவுடனே ஹாய் சொன்னதுசஞ்சய் அண்ணாக்கு தான்..
ஏனா.. அவரு தான் வாசல் பக்கத்துலையே மொதோ சேர்ல உக்காந்திருந்தார்..

அவருக்கும் சரி, அண்ணாச்சிக்கும் சரி, அறிமுகம் இல்லாத நான் சரியா அடையாலப்படுத்தி ஹாய் சொன்னது கொஞ்சம் ஆச்சரியமாத்தான் இருந்ததுன்னு நினைக்கிறேன்..

அண்ணாச்சி வெளிப்படுத்திக்கலைனாலும், இவ்ளோ கரீட்ட அடையாளம் கண்டுகினியே.. யாருப்பாநீ'னு சஞ்சய் அண்ணா வெளிப்படையாவே கேட்டாரு..

நம்ம யாருன்னு எவ்வளவோ பேருக்கு சொல்லிட்டோம்.. இவருக்கு சொள்ளமாட்டமானு நானும் சொல்ல ஆரமிக்கரதுக்குள்ள ராகவன் அண்ணாவே நம்ம புகழை பரப்பி அறிமுகப்படுத்தி வெச்சாரு..

ஆறுமணி நேரத்துக்கும்மேல நடந்த அந்த சந்திப்பபத்தி, அங்க சந்தித்தவர்களை பற்றி எழுதினா இன்னும் பலபாகங்கள் எழுதவேண்டி இருக்கும்..


அதனால சுருக்கமா கொஞ்சமா இங்க அவங்கள பத்தி அந்த கொஞ்சநேர சந்திப்பில் என்மனதில் தோன்றியவற்றை இங்கு பதிகிறேன்..

1. ராகவன் அண்ணா..




முதலிலேயே பலமுறை தொலைபேசியும், சாட்டியும், புகைப்படத்தை கண்டும்விட்டதால், பேச்சிலும், இயல்பிலும் எதிர்பார்க்காதமாதிரி இல்லாமல், எதிர்பார்த்தா மாதிரியே இருந்தார்..


ஆனால்.. நான்தான் அவர்கள் யாருமே எதிர்பார்த்திராத அளவுக்கு சிறுபிள்ளைதனமாக இருந்திருப்பேன் என்று நினைக்கிறேன்.. சாரி அண்ணாஸ்.. நான்எப்போமே அப்படித்தான்..


ஆனாலும் ராகவன் அண்ணா நல்ல உரிமையுடன், தோழமையுடன், இன்னபிற எல்லாமுடன் நல்லாவே பழகினார்..

(அந்த தம் அடிக்கறத மட்டும் கம்மிபண்ணிக்க சொல்லனும்னு நெனச்சுட்டு ஏனோ அத கடேசிவரைக்கும் சொல்லாமையே வந்துட்டேன்..
இங்கையாச்சும் சொல்லுறேன்..
அத தயவு செஞ்சு கம்மிபண்ணுங்க அண்ணா..)

2. சஞ்சய் அண்ணா..



இவர் ஒரு ரப்பர் மாதிரி.. (ஏதும் தப்பா நெனச்சுகாதிங்க..)

எல்லாத்துக்கும் வளைந்து கொடுக்கக்கூடியவர்னு சொன்னேன்..

அரவிந்த் குட்டிகிட்ட அவர் வயசுக்கு இறங்கிபேசும்போதும் சரி..
என்னைபோன்ற சின்னப்பையன் கிட்ட நம்மறேஞ்சுக்கு எறங்கி பேசும்போதும் சரி..
அண்ணாச்சி, செல்வேந்திரன் அண்ணா போன்றவர்கள் கிட்ட அவர்கள் ரேஞ்சுக்கு ஏரிப்பேசும்போதும் சரி.. அவங்கஅவங்க ரேஞ்சுக்கு வளைஞ்சு போய்டுறார்..

3. அண்ணாச்சி வடகரை வேலன் அவர்கள்..



இவரபத்தி கடேசிவரைக்கும் ஒருமுடிவுக்கே வரமுடியலை.. எல்லாருடனும் மையமா பதில்சொல்லி, பேசி, எல்லாரின் பேச்சையும் பொறுமையா உள்வாங்கிட்டே உக்காந்திருந்தார்..
நிறைய பேசவும் செய்தார்..


இவரபத்தி என்னதான் ஒரு தெளிவான முடிவுக்கு வர முடியலைனாலும்..
இவர ஒரு வடைச்சட்டினு சொல்லலாம்..

(அண்ணாச்சி இதுக்கும் என்னை கணக்கு வழக்கில்லாம மன்னிச்சுடுங்க..)

ஏன் இப்படி சொல்றேனா..

மேட்டர் அவருக்குள்ள போகாதவரைக்கும் அமைதியா இருக்கற அவரு, மேட்டர அவருக்குள்ள போட்டதும் சும்மா வடச்சட்டிகனக்கா பொரிஞ்சுதள்ளிடுராறு பா.. அதான் அப்டிசொன்னேன்..

(எனக்கு இவருடன் சுத்தமாக பழக்கம் இல்லாததால் கணிக்கமுடியவில்லையோ என்னவோ..)

4. செல்வேந்திரன் அண்ணா..

இவரின் வாய் ஒரு மம்மட்டி என்றால்.., இவரின் கண்கள் ஒரு கடப்பாரை.. (நீங்களும் மன்னிக்கவும் அண்ணா..)

ஏன் இப்படி சொன்னேன்னு முழுசா கேட்டுட்டு அப்புறமா அவர்கிட்ட போட்டுகொடுங்கப்பா..

அவர் அதிகம் இலக்கியம் படிப்பதாலோ என்னவோ, அவர் பேசும்போதுகூட இலக்கிய நடையிலேயே பேசிட்டு இருந்தார்..

எடுத்த எல்லா டாப்பிக்கையும் வெட்டி தூர்வாரி இலக்கிய நடையிலேயே கெழங்கெடுத்துட்டு இருந்ததாலதான் அவரின் வாயை மண்வெட்டினு சொன்னேன்..
(நமக்கு தெரிஞ்ச நல்ல வார்த்தை இதுதான்பா..)

அவரோட கண்களை கடப்பாரைன்னு சொல்லகாரணம்..

அவர் எப்படி வாயால, இலக்கிய நடையில் கிண்டி கெழங்கெடுக்கராரோ, அந்த அளவுக்கு பேசிட்டு இருக்கும்போதே எதிராளியின் கண்களை ஆழமா ஊடுருவி, குத்தி, கிழிச்சு, மனஓட்டத்தை ஆராஞ்சுடராமாதிரி தான் எனக்கு தோன்றியது..

அதனால் தான் அவரின் கண்களை கடப்பாரைன்னு சொன்னேன்..


5. அரவிந்த்..



தலை பயங்கர ஸ்மார்ட்..

அரசியல்.. வரலாறு.. புவியியல்.. கணிதம்.. விளையாட்டு.. சினிமா.. அது இது.. இது அது'னு எல்லாத்துலையும் பதினொன்னு போட்டு காட்டி லைசென்ஸ் வாங்கி வெச்சிருக்காரு..

உண்மையில் எனக்கு அவரின் அளவுக்குகூட மெச்சூரிட்டி இல்லைன்னு தான் சொல்லணும்.. (or) அவருக்கு என்னளவுக்கு / அதிக மெச்சூரிட்டி இருக்கு..

ஆனா என்ன.. ஒருநிமிஷம் தான் என்ன பாத்தாரு.. ஒடனே என்னைவிட அதிகமா தோசை சாப்டு காட்டுறேன்னு சவால் எல்லாம் விட்டுடாரு.. (எப்படி தான் கண்டுபுடிக்கராய்ங்களோ.. !)

சரி எதுக்கு வம்புனு தோசை ஆர்டர் பண்ணாம புல்சாவோ.. குல்சாவோ.. அத்த ஆர்டர் பண்ணி எவ்ளோ சாப்டேனே அவர்கிட்ட சொல்லாம எஸ்கேப் ஆகிட்டேன்..

முதல் நாள் சந்திப்பின் போது.., அரவிந்துக்கு மறுநாள் பிறந்தநாள் என்று சொன்னதால், மறுநாள் மாலை ஒரு கேக்குடன் சென்று அவரின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது..

6. அடுத்த நாள் வால்பையன் அண்ணா வந்திருந்தார்..



இவருடன் ஒரு 30 நிமிடங்கள் வரைக்கும் டைம்ஸ்பென்ட் பண்ணினேன்..

அதிலிருந்து, என்னைபொறுத்தவரை, அவரொரு கண்ணாடி'னு சொல்லலாம்..

சந்தித்தது வெறும் 30 க்கும் குறைவான நிமிடங்களே என்பதனாலாக இருக்கலாம்..

கேட்டதற்கு மட்டும் பளிச்சென்று விளக்கமளித்து விட்டு அமைதியாய் இருந்தார்..
நம்மின் வினாக்களுக்கு மட்டுமே (அளவாய்) பிரதிபளித்தமையாலே அவரை கண்ணாடி என்றேன்..

அந்த மிக சொற்பமான நிமிடங்களுக்குள் நிகழ்ந்த சந்திப்பில் அதற்குமேல் அவரை அறிந்துகொள்ள முடியவில்லை..


இதுவரைக்கும் அவர்களைப்பற்றி என் கருத்தோட்டத்தைதான் சொன்னேன்..
இனி அவர்களின் பேச்சைப்பற்றியும் சொல்லலாம் தான்..
அதை சொல்ல இன்னும் பல எபிசோடுகள் தேவைப்படும் என்பதால் இத்தோடு நிப்பாட்டிங்..


Wednesday, July 1, 2009

குப்புறபடுத்து விட்டத்தை வெறித்துக்கொண்டிருந்தபோது..

Photobucket


சமீபத்தில், படுக்கையில் குப்புற படுத்துட்டு விட்டத்தை வெறித்துக்கொண்டு (நீங்களும் ட்ரை பண்ணிபாருங்க) என்னைப்பற்றி யோசித்தபோது கிடைத்த சில அறிய, (இந்த தலைப்பை போன்று அல்லாத) முரண்பட்ட விஷயங்கள்..

(சிலபேரால மல்லாக்க படுத்துட்டே விட்டத்த பாக்கமுடியாது..
அவக எப்படி குப்புரபடுத்துட்டு விட்டத்த பாப்பாங்களோ..!)

1. சிலபேர் தூக்கம் வரலைனா, ஒழுங்கா, நிம்மதியா கவலை மறந்து தூங்குறதுக்கு தூக்கமாத்திரை சாப்பிடுவாங்க..
ஆனா எனக்கு இந்த தூக்க மாத்திரை சாப்பிட்டா, கொஞ்சம் சோம்பலா, டயர்டா இருந்தாகூட, ஃபிரெஸ் ஆகி ரொம்ப புத்துணர்ச்சியா ஃபீல் பண்ணுவேன்.. அப்புறம் அன்னைக்கு ராத்திரி ஃபுல்லா சிவராத்திரி தான்..

எப்போமே இப்படி தான் தூக்கமாத்திரை சாப்பிட்டா புத்துணர்ச்சியா ஃபீல் பண்ணுரனா, இல்லை நம்ம மனபிராந்தியானு செக்பண்ண, ஒடம்பு நல்லாஇருந்த, ஒரு காலேஜ் செமெஸ்டர் எக்ஸாம் அன்னைக்குகூட தூக்க மாத்திரை சாப்பிட்டு செக் பண்ணி பாத்தேன்..

நான் நெனச்சது சரி தான்.. முந்தைய பொழுதைவிட தூக்கமாத்திரை சாப்பிட்டபின் கொஞ்சம் ஃபிரஸ்ஸா ஃபீல் பண்ணினேன்.. (நல்ல வேலை, அந்த மாத்திரை எப்பெக்ட்ல தூங்கிருந்தாஆஆஆ.. பரீட்சை அவ்ளோ தான்..)

2. நீங்க நான்வெஜ் சாப்பிடுரவங்களா..?

அப்போ, உங்களுக்கு சளி பிடிச்சா, வீட்ல நாட்டுகோழி கொழம்பு அல்லது சூப்பு வெச்சு கொடுத்திருகாங்களா..?
அத, நல்லா காரசாரமா குடிச்சா,ஒடம்புக்கு நல்லா இருக்கும் / சளி நல்லா ஆகிடும்னு சொல்லுவாங்க..

ஆனா எனக்கு இந்த நாட்டுகோழி கொழம்ப இப்டி காரசாரமா குடிச்சா கண்டிப்பா சளிபுடிச்சுக்குது..
சரி.. சளி புடிச்சு இருக்கும்போது குடிச்சா நல்லா ஆகிடும்னு பாத்தா.. சளி அதிகமாகி காய்ச்சல் வந்திடுது.. என்ன கொடுமைங்க இது.

3. நீங்க என்ன சாம்பு போட்டு குளிக்கிறிங்க..?

சில பேர் பொடுகு தொல்லைய போக்க கிளினிக் ஆள் கிளியர் சாம்பு யூஸ் பண்ணுவாங்க..
அவங்களுக்கு பொடுகு போச்சோ இல்லையோ, இந்த சாம்புவ யூஸ் பண்ணினா எனக்கு பொடுகு வந்திடுது..

என் அறியாத வயசுல, பொடுகுனா என்னனே தெரியாத வயசுல (9th படிக்கும்போதுன்னு நியாபகம்), அவசரத்துக்கு கெடைச்ச இந்த சாம்புவ பயன்படுத்தினதின் பலனா எனக்கு இந்த பொடுகு அறிமுகமாச்சு..

அப்புறம் இந்த சாம்புவ தலை முளுகுனதுக்கு அப்புறம் பொடுகு போயேபோச்..
இப்போ என் தலை (வெளிய) ஆள் கிளியரா இருக்கு..

4. யாருமே பசியிலையோ, பசிமயக்கத்துலையோ இருக்கும்போது வயிறார சாப்பிட்டா, சாப்டதுக்கு அப்புறம் தெம்பா வேலை செய்வாய்ங்க..

ஆனா நான், எப்போ சாப்டாலும் ஒடனே டயர்ட் ஆகி தூங்கி வழிய ஆரமிச்சுடுவேன்..
(இப்டி சாப்டா தூங்குற சகாக்கள் என்னைபோலவே சேம் பிளட்டோட பலபேர் இருபிங்கனு நெனைக்கிறேன்..)

5. எல்லாரும் சளி பிடிச்சா, சளியிலிருந்து கொஞ்சம் ஆறுதல் தரும்னு விக்ஸ் போட்டுப்பாங்க..(நீங்க எப்புடி..?)

ஆனா எனக்கு.. இந்த விக்ஸ் போட்டா,சளி அதிகமாகி காய்ச்சல் வந்திடும்.. (நான் எப்புடி..?)

6. எனக்கு தெரிஞ்சு என் பிரண்ட்ஸ் எல்லாருக்குமே 'பீர் ஈஸ் பெட்டர் தேன் ஹாட்' தான்..
ஆனா, அது ஏனோ தெரியலை.. எனக்கு எப்போமே 'ஹாட் ஈஸ் பெட்டர் தேன் பீர் தான்'.. (ஹா..ஹா.. இது எப்புடி..?)


இது பொதுவானது..

இதை எல்லாம் மீறி நம்ம மக்களுக்கே உரிய வினோத பழக்கம் ஒன்னும் இருக்கு..
என்னான்னு கேக்குறீயளா..?

என்னனா.. இங்க எவ்ளோ தான் வெய்யில் பிச்சுகிட்டு அடிச்சாலும்..
இந்த அதிகப்படியான வெய்யில்ல எவ்ளோ தான் கெடந்து வெந்தாலும்..
வெய்யில் கொளுத்துற இந்த நண்பகல் நேரத்துலயும் 'சூடா கொதிக்க கொதிக்க டீ, காப்பி' குடிக்கற பழக்கம் நம்மகிட்டதான் இருக்கும்னு நெனைக்கிறேன்.. (கரீட்டா..?)

(டிஸ்கி:
ஆறாவது பாய்ண்ட படிச்சுட்டு நான் ஏதோ குடிகாரன்னு முடிவு பண்ணிடாதிங்க..
நான், நம்ம முன்னோர்கள் சொன்ன பழமொழிய காப்பாத்த தான் அவ்ளோ பாடுபட்டு முயற்சி பண்ணினேன்..

அப்புடி என்ன பழமொழின்னு கேக்குறீயளா..?
அதாங்க, "களவும் கற்றுமற.."

அதான் கத்துகிட்டேன்.. அடுத்த பாதிய மறந்துட்டேன்..

எப்பூடி..!