Wednesday, November 11, 2009

மூக்குத்தி எதுக்கு..

அந்தகாலத்துல பலரும் தவறாம மூக்கு காதுன்னு குத்திக்குவாங்களே..
மூக்கு குத்திக்கிறது எதுக்குயா..?


(ஏதோ படத்துல / பல படங்கள்ல நடிகர் திலகம் சிவாஜி அவர்கள்கூட, பெருசா கொண்டை எல்லாம் போட்டுக்கிட்டு மூக்கு குத்தி, காதுல கடுக்கன் எல்லாம் போட்டு நடிச்சிருந்தாமாதிரி நியாபகம்..

சில படங்கள்ல மூக்கு குத்தி இருந்தாலும், பழைய படங்கள் பலதுலையும் பலரும் கடுக்கனோட நடிச்சிருக்காங்கள்ள..)

ஆனா இந்த காலத்துல நிறைய பேர் மூக்கு குத்திக்கிறதும் இல்லை,
ரெண்டாவது.., மூக்கு குத்திக்கிறதுக்கு பதிலா ஆர்டிஃபிசியலா 'டப்ஸ்' விக்கிறாங்க.. அத வாங்கி மாட்டிகிட்டா என்னனு நிறையப்பேர் நினைக்கிறாங்க..

ஏற்கனவே வாழை இலைக்கு பதிலா பிளாஸ்டிக் வாழை இலை, குங்குமத்துக்கு பதிலா ஸ்டிக்கர் பொட்டு, மாவிலை தோரணம்கூட பிளாஸ்டிக்ல வந்தாச்சு..

நல்லவேளையா விபூதி, திருமண்ணெல்லாம் இன்னும் பிளாஸ்டிக்ல வரல.. சரி, இப்போ இந்த மூக்குத்தி மேட்டருக்கு வருவோம்..

பெண்கள் மூக்கு குத்திக்கிரதுக்கு காரணங்களா நண்பர்கள் சிலர் அவர்களோட கருத்துக்களை சொன்னாங்க..

அதில் ஒருத்தர் அது அவசரத்துக்கு அடமானம் வைக்கரதுக்குனும், இன்னொருத்தர் அழகுக்காகவும்னும், இன்னொருத்தர் திருமணமானவர்கள் அணியும் பழக்கம் இருக்கும்னும், இன்னொருத்தர் அது ஒரு வித அக்குபங்சர் வைத்தியமுறை போன்றதும்னும் சொன்னாங்க.

கருத்துக்களுக்கு நன்றி நண்பர்களே..

இனி மூக்கு, காது குத்திக்கொள்வது தொடர்பாக நான் இணையத்தில் படித்த தகவல்கள்..

பெண்களோட மூச்சு காத்துக்கு ஆண்களோட மூச்சுகாத்த விட பவர் அதிகம். சக்தி அதாவது ஸ்டேமினா அதிகம். அந்த மூச்சு காத்து முழுசா எதிர்ல இருக்குரவங்கமேல படக்கூடாது..

அதுனால மூக்குத்திங்கரத போட்டு, அதை கண்ட்ரோல்பண்ணி வெக்கிறாங்க.. அப்படி மூக்குத்திய ஒரிஜினலா தங்கத்துலையே போட்டுகிட்டதால ஆரோக்கியமா இருந்தாங்களாம்..
(தங்கத்துல வாங்க காசு இல்லாதவங்கள்ளாம் என்ன பண்ணனுஎல்லாம் விவகாரமா கேக்கப்பிடாதாக்கும்..)

இன்னைக்கு அதுக்கு பதிலா செயற்கை டப்ஸ் வந்திடுச்சு.. இந்த செயற்கை நகை மூக்குலையோ காதுலையோ போளிணிப்புடிச்சுகிட்டு(??) இருக்குமே தவிர, ஒரிஜினலோட பவர் இதுக்கு கிடையாது.. அதுமட்டுமில்லாம இந்த டூப்ளிகேட் நகை மூக்குலியோ, காதுலியோ நச்சுனு புடிச்சுகிட்டு இருக்குறதால, அங்க இரத்தஓட்டமும் தடைபட வாய்ப்பு இருக்கும்ல'னு கேட்டிருந்தாங்க..
(யாருக்காவது இந்தமாதிரி தொல்லைங்க இருக்காப்பா..)

அதெல்லாம் சரிதான்.. ஆரோக்கியம்ன்றது எல்லாருக்கும் பொதுதானே.. அப்ப ஏன் ஆம்பளைங்களும் காது குத்திக்கிறது இல்லை'னு சந்தேகம் கேட்டிருந்தாங்க..

ஆம்பளைங்களும் காது குத்திக்கிட்டுதான் இருந்தாங்க.. இந்ததலைமுறையிலும், நாமும் சின்ன கொழந்தைங்களா இருக்கும்போது, கோவிலுக்கு கூட்டிட்டு போய் மொட்டை அடிச்சு காது குத்திருப்பாங்களே.. நெனப்புல இருக்கா..

அதுக்கு அப்புறம்தான் அத்த கலட்டி போட்டுடுறோம்..

காது குத்துறது, மூக்கு குத்துரதெல்லாம் அந்த காலத்துலயே நம்ம பாட்டன் பூட்டனெல்லாம் அனுபவபூர்வமாவே சொன்ன அக்குபிரஷர் வைத்தியமாமா..

(நான் அக்கு பங்சர் தான் கேள்வி பட்டிருக்கேன்.. இதென்னையா அக்குபிரஷர்..)

இத 15 வருசங்களுக்கு முன்னால முரளிதர்'ங்கற ஈரோடு டாக்டர் அனுபவபூர்வமாவே சொல்லிருக்காராமா..
அவர்கிட்ட வைத்தியத்துக்கு கூட்டிட்டு வரப்பட்ட சின்ன புள்ளைங்க பலருக்கும் இருந்த ஒரே ஒரு பிராப்ளம் அடிக்கடி ஜன்னி வருதுங்கறதுதான்..

அனுபவசாலியான அந்த டாக்டர், அத்தனை குழந்தைகளுக்கும் முறைப்படி காது குத்தவெச்சாராமா..

அப்டிகுத்தவெச்சு, பின், அந்த குழந்தைங்கள அவரின் நேரடிப்பார்வையிலேயே வெச்சு சோதனையும் செஞ்சிருக்கார்..

ரிசல்ட் என்னாச்சு தெரியுமா..
அந்த குழந்தைகளுக்கு அதுக்கு அப்புறம் ஜன்னியே வரலையாம்..
போயே போச்.. இட்ஸ் கான்..!

இதனால்தான் காது, மூக்கஎல்லாம் குத்திக்கிராங்கலாமா..
(வேணும்னா கீழ இருக்குராமாதிரி ட்ரை பண்ணிபாருங்க.. ஏதாவது பலன் கிடைக்குதான்னு பாக்கலாம்..)

அதனால.., பழையன புகுதலும், புதியன கழிதலும் இந்த மூக்குத்தி மேட்டருக்கு நல்லதுனுதோனுது..
நீங்க என்ன நெனைக்குரிங்க..ம்ம்..

அப்புறம்.. இன்னொன்ன விட்டுட்டனே..

இந்த காது, மூக்கு எல்லாம் சரி.. நம்ம சினிமா ஹீரோக்கள் விளையாடின "அந்த" இடத்துல இப்போவெல்லாம் பலர் குத்திக்கிராங்களே, அது எதுக்கா இருக்கும்..
(கீழ இருக்குறா மாதிரி பயன்படுமோ..)39 comments:

cheena (சீனா) said...

ஹேய் சுரேஷ் - நாட்டுக்கு தேவையான ஆராய்ச்சி - கடின உழைப்பு - நல்ல இடுகை - நல்வாழ்த்துகள்

நீ எங்கெல்லாம் குத்திக்கிட்டு இருக்கே

"அந்த" இடம் - ஒப்பனாவே போட வேண்டியது தானே - நெரெய பேரு ஏற்கனவே குத்தி இருக்காங்க -

ம்ம்ம்ம் - நல்லாருப்பா

S.A. நவாஸுதீன் said...

பயங்கரமா ஆராய்ச்சி பண்ணி இருக்கீங்க போல. படமும் அதைத்தான் சொல்லுது.

கல்யாணி சுரேஷ் said...

கலக்கிட்டீங்க. //அது ஒரு வித அக்குபங்சர் வைத்தியமுறை போன்றதும்னும் சொன்னாங்க.// இதை நானும் கேள்விப்பட்டிருக்கேன்.

வால்பையன் said...

இது ஒரு கலாச்சார அடையாளமாக தொடங்கப் பட்டிருக்கலாம்!

Anonymous said...

ஆஹா என்னே ஒரு பதிவு..
எப்படிங்க இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க இங்க கமெண்ட் போடறதை விட அடுத்த வாரம் நேரில் காம்பிளிமெண்ட் தரேனே...

கார்ல்ஸ்பெர்க் said...

Suresh,

Waaw!!! What a coincidence?? Naan kooda indha vaaram kaadhu kutthikkalaam nu irukken..

Arun Karthik

ரோஸ்விக் said...

எனக்குத் தெரிந்தவர்களும் இதே காரணங்களைத் தான் சொல்லியிருந்தார்கள்.

அப்புறம் எதுக்குண்ணே, எதாவது பாய் சொன்னா, எனக்கெல்லாம் முன்னாடியே காத்து குத்தியாச்சு....யாருகிட்ட காத்து குத்துறே-னு கேக்குறாய்ங்க??

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

ஓ மை காட்..

தம்பியோட ஆராய்ச்சி இந்த லெவலோட நின்னுச்சுன்னா ரொம்ப நல்லது..!

ஊடகன் said...

நல்ல ஆராய்ச்சி நண்பரே...........

வாழ்த்துக்கள்..........

ரொம்ப நல்லா இருந்தது .......

RAMYA said...

சுரேஷ், பதிவு புதுமையான ஆராய்ச்சியில் இறங்கி மெதுவா வலம் வந்து அங்கே இங்கே கேள்வி கேட்டு உயிரை எடுத்து, அப்புறம் கூகிள் ஆண்டவர்கிட்டே சரண் அடைஞ்சு, பிச்சி பீராஞ்சி படங்கள் எடுத்து ரொம்ப வெவரமா ஒரு இடுகை.

எங்கேப்பா இவ்வளவு மூளையை ஒளிச்சி வச்சிருந்தே இவ்வளவு நாளா??

அது சரி சில படங்கள் கண்களை திறந்து பார்க்கலாம்:)

சில படங்கள் ஹையோ! ஹையோ! அவ்வளவு குத்தி இருக்காங்களே! வலிக்காது ரொம்ப பயமாவும் இருக்கு.

எப்பா கண்ணா ஆராயிச்சி திலகமே, நடிகர்திலகம் பத்தி எல்லாம் எழுதி இருக்கீங்க எனக்கு இதெல்லாம் ஒண்ணுமே தெரியாதேப்பா :))

ஆனாலும் கடைசியிலே விஜயகாந்தை சண்டைக்கு இழுத்திருக்கீங்க போல :))

மொத்தத்திலே ரூம்போட்டு உக்காந்து நல்லா யோசிச்சு எழுதி இருக்கேப்பா :)

உன்னோட உழைப்பு நல்லாவே தெரியுது!

வாழ்த்துக்கள்!! இதே போல எனக்கு தெரியாத விஷயங்கள் நிறைய எழுத நான் வாழ்த்துக்கிறேன்.

என்ன செய்ய தம்பி எழுதிட்டா படிச்சித்தானே ஆகணும்..... படிக்குறேன் :))

ஷ‌ஃபிக்ஸ்/Suffix said...

இது தான் உள் குத்து, வெளி குத்து இல்லாத பதிவுன்னு சொல்றது, இம்பூட்டு மேட்டரு இருக்கா சுரேஷ்!!

இராகவன் நைஜிரியா said...

தாங்க முடியலடா சாமி...

நல்ல பெரிய மூக்குத்தி குத்தின பெண்ணா பார்த்து கல்யாணம் பண்ணி வச்சுடலாம்.

இராகவன் நைஜிரியா said...

என்னாச்சு... கமெண்ட் மாடரேஷன் போட்டுட்டீங்க...

க.பாலாசி said...

மூக்குத்தி மேட்டர் நல்லாருக்கு நண்பா... கிராமத்துல மூக்கு குத்தாம கல்யாணமே பண்ணமாட்டாங்க. நகரத்துல எப்டின்னு தெரியல.

நல்ல இடுகை....

கிறுக்கல் கிறுக்கன் said...

நல்லாவே குத்தியிருக்க தம்பி

Anonymous said...

hello... hapi blogging... have a nice day! just visiting here....

கண்மணி said...

பதிவு சூப்பர்.அதைவிட படங்களையெல்லாம் எங்கே புடிச்சீங்க:))

सुREஷ் कुMAர் said...

//
ஹேய் சுரேஷ் - நாட்டுக்கு தேவையான ஆராய்ச்சி - கடின உழைப்பு - நல்ல இடுகை - நல்வாழ்த்துகள்
//
:-) நெம்ப புகழாதீங்க ஐயா..

सुREஷ் कुMAர் said...

//
S.A. நவாஸுதீன் said...

பயங்கரமா ஆராய்ச்சி பண்ணி இருக்கீங்க போல. படமும் அதைத்தான் சொல்லுது.
//
ஹீ.. ஹீ..
நன்றி S.A. நவாஸுதீன்..

सुREஷ் कुMAர் said...

//
கல்யாணி சுரேஷ் said...

கலக்கிட்டீங்க. //அது ஒரு வித அக்குபங்சர் வைத்தியமுறை போன்றதும்னும் சொன்னாங்க.// இதை நானும் கேள்விப்பட்டிருக்கேன்.
//
ம்ம்.. கலக்குங்க..
நன்றி கல்யாணி சுரேஷ்..

सुREஷ் कुMAர் said...

//
வால்பையன் said...

இது ஒரு கலாச்சார அடையாளமாக தொடங்கப் பட்டிருக்கலாம்!
//
வாலுசொன்னா சர்த்தான்யா..

सुREஷ் कुMAர் said...

//
தமிழரசி said...

ஆஹா என்னே ஒரு பதிவு..
எப்படிங்க இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க இங்க கமெண்ட் போடறதை விட அடுத்த வாரம் நேரில் காம்பிளிமெண்ட் தரேனே...
//
நல்லா கொடுத்திங்க காம்பிளிமெண்ட்..

கொண்டாரதாசொன்ன ஊறுகா எங்க..

सुREஷ் कुMAர் said...

//
கார்ல்ஸ்பெர்க் said...

Suresh,

Waaw!!! What a coincidence?? Naan kooda indha vaaram kaadhu kutthikkalaam nu irukken..

Arun Karthik
//
குடுத்து மச்சி குத்தி..

सुREஷ் कुMAர் said...

//
ரோஸ்விக் said...

எனக்குத் தெரிந்தவர்களும் இதே காரணங்களைத் தான் சொல்லியிருந்தார்கள்.
//
வருகைக்கு நன்றி ரோஸ்விக்..

//
அப்புறம் எதுக்குண்ணே, எதாவது பாய் சொன்னா, எனக்கெல்லாம் முன்னாடியே காத்து குத்தியாச்சு....யாருகிட்ட காத்து குத்துறே-னு கேக்குறாய்ங்க??
//
காத்த ஏன்பா குத்துரிங்க..

सुREஷ் कुMAர் said...

//
ஓ மை காட்..

தம்பியோட ஆராய்ச்சி இந்த லெவலோட நின்னுச்சுன்னா ரொம்ப நல்லது..!
//
அண்ணாச்சி சொன்னப்புறம் அப்பீல் ஏது.. நிப்பாட்டியாச்சு..

सुREஷ் कुMAர் said...

//
ஊடகன் said...

நல்ல ஆராய்ச்சி நண்பரே...........

வாழ்த்துக்கள்..........

ரொம்ப நல்லா இருந்தது .......
//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஊடகன்..

सुREஷ் कुMAர் said...

//
RAMYA said...
::::::::::::
::::::::::::
::::::::::::
//
நிறைய சொல்லிருக்கிங்க..
பாராட்டுராமாதிரி திட்டிருக்கிங்களா.. திட்டுராமாதிரி பாராட்டி இருக்கிங்களா..

सुREஷ் कुMAர் said...

//
ஷ‌ஃபிக்ஸ்/Suffix said...

இது தான் உள் குத்து, வெளி குத்து இல்லாத பதிவுன்னு சொல்றது, இம்பூட்டு மேட்டரு இருக்கா சுரேஷ்!!
//
அக்காங் ஷ‌ஃபிக்ஸ்..

सुREஷ் कुMAர் said...

//
இராகவன் நைஜிரியா said...

தாங்க முடியலடா சாமி...

நல்ல பெரிய மூக்குத்தி குத்தின பெண்ணா பார்த்து கல்யாணம் பண்ணி வச்சுடலாம்.
//
:-)

सुREஷ் कुMAர் said...

//
இராகவன் நைஜிரியா said...

என்னாச்சு... கமெண்ட் மாடரேஷன் போட்டுட்டீங்க...
//
ஒவ்வொரு போஸ்டுக்கும் போஸ்ட் போட்ட நாலு நாளைக்கு அப்புறம் வர்ற கமெண்ட்ஸ்கு மட்டும்தான் கமெண்ட்ஸ் மாடரேஷன் போட்டிருக்கேன்..

सुREஷ் कुMAர் said...

//
க.பாலாசி said...

மூக்குத்தி மேட்டர் நல்லாருக்கு நண்பா... கிராமத்துல மூக்கு குத்தாம கல்யாணமே பண்ணமாட்டாங்க. நகரத்துல எப்டின்னு தெரியல.

நல்ல இடுகை....
//
கருத்துக்கு நன்றி நண்பா..

सुREஷ் कुMAர் said...

//
கிறுக்கல் கிறுக்கன் said...

நல்லாவே குத்தியிருக்க தம்பி
//
:-) ம்ம்.. இருக்கட்டும் அண்ணே..

सुREஷ் कुMAர் said...

//
கண்மணி said...

பதிவு சூப்பர்.அதைவிட படங்களையெல்லாம் எங்கே புடிச்சீங்க:))
//
நன்றி கண்மணி.. :-)

Bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

Anonymous said...

hi.. just dropping by here... have a nice day! http://kantahanan.blogspot.com/

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

JanuskieZ said...

Hi... Looking ways to market your blog? try this: http://bit.ly/instantvisitors

venkat said...

மூக்குத்தி - இத்தனை விசயங்களா !!!