ஹாய் மக்கள்ஸ்..
எனது "காலங்கள் மாறினாலும்.." என்ற இடுகையில் அன்றைய கற்காலம் முதல் இன்றைய கம்பியூட்டர் காலம் வரையிலான ஆறு வகை காலங்களை படங்களுடன் வெளியிட்டிருந்தேன்..
அவை..
1. கற்காலம் 2. உலோககாலம் 3. இரும்பு காலம் 4. இருண்ட காலம் 5. தொழிற்காலம் 6. கம்பியூட்டர் காலம் என்பனவாகும்..
அதற்கு பின்னூட்டமாய் நண்பர் "thevanmayam" என்பவர் அடுத்து என்ன காலம் என்று கேட்டு இருந்தார்..
அவரின் கேள்விக்கு பதிலாய் இங்கு ஏழாவது காலமாய் "AI" என்று சுருக்கமாய் அறியப்படும் "ஆர்ட்டிபீசியல் இன்டலிஜென்ட்ஸ்" காலத்தை இணைக்கின்றேன்..
7. AI காலம்..
(மேலே உள்ள ஆறு காலங்களுடன் இதனையும் இணைத்துக்கொள்ளுங்கள்..)
என்னடா படத்தில் கணினியின் கை கற்கால மனிதனின் கை போல் கரடுமுரடாக உள்ளதே என்று நினைப்பவர்களுக்கு..
இது மனிதனின் கற்காலத்தை போல், ‘ஆர்ட்டிபீசியல் இன்டலிஜென்ட்ஸ்’இன் கற்காலம்..
இதன் பின், பல பரிணாம வளர்ச்சிகளை கண்டு, பின் கம்பியூட்டர் கால மனிதனை போன்று நம் ஆர்ட்டிபீசியல் இன்டலிஜென்ட்ஸ் ஆனது நாகரிகமான உருவத்தை அடையும்..
(அப்போது மனிதனின் கதி..?)
Friday, May 29, 2009
காலங்கள் மாறினாலும் #2..
Thursday, May 21, 2009
காலங்கள் மாறினாலும்..
என்ன தான் மனிதன் அன்றைய கற்காலம் முதல் இன்றைய கம்பியூட்டர் காலம் வரை வளர்ச்சி அடைந்து இருந்தாலும் சில குணங்கள் மட்டும் அவனிடம் என்றும் மாறாமல் அப்படியே இருந்துவருகின்றன..
கீழே உள்ள படங்களை பார்த்தாலே உங்களுக்கு விளங்கிவிடும் இவனைப்பற்றி..
1.கற்காலம்..
இங்க ஆரமிச்ச வினை தான்.. இன்னமும் தொடருது..********************
2. உலோககாலம்..
பார்ரா.. கல்லவிட்டுட்டு, கைல காப்பெல்லாம் போட்டுக்கிட்டு சுத்தியல பயன்படுத்தராங்கப்பா.. நல்ல முன்னேற்றம் தான்.. (ஆமா, அது என்ன உலோகம்னு சொல்லவே இல்லையே..?)********************
3. இரும்பு காலம்..
ஒரே டமால் டுமீல் தான்..
தட்டுங்க எசமான் தட்டுங்க..
உங்களால தான் இப்போ இங்க இப்டியெல்லாம் போய்ட்டு இருக்கு..
(இரும்பும் உலோகம் தானே.. அதென்ன தனியா இரும்பு காலம்னு எல்லாம் கேக்கபிடாது..)
(என்னாது இது.. துப்பாகிங்களா..? தமாசு தான் போங்க.. :))
4. இருண்ட காலம்..
உங்களால வெச்சாங்க பாருங்க எங்க அமைதிக்கு எல்லாம் ஒரு ஆப்பு.. சபா முடியலை..
இந்த போர் எல்லாம் எப்போ முடியும்னும் தெரியலை..********************
5. தொழிற்காலம்..
இன்னுமா தட்டிகிட்டு இருக்கீங்க..?!********************
6. கம்பியூட்டர் காலம்..
சபாஸ்..
என் இனமடா நீ..
என்ன பாஸ்.. தலைப்பு சரி தானே..?
காலங்கள் மாறினாலும்.. நாம் கொண்ட கோலங்கள் மாறினாலும்..
மேலே சொன்னது மட்டும் என்றும் மாறப்போவது இல்லை..
ஆகவே..
நீங்களும் நம் பரம்பரை குணாதிசயத்தை காக்க,
பொட்டி தட்டுங்க..
தட்டுங்க..
தட்டிகிட்டே இருங்க..



