Wednesday, September 30, 2009

என்ன ஊருடா சாமீய்ய்ய் 5..

போன இடுகையில் கொஞ்சம் வித்தியாசமான காதல் கதைகளபத்தி சொன்னேன்..
அடுத்து, காதல் திருமணம் பற்றியது இல்லை..

மறுமணம் பற்றியது..

இதுல(யும்)ஆணுக்கும் பெண்ணுக்குமான சட்டங்கள் எங்கள் ஊரில் / ஜாதியில் முற்றிலும் மாறுபட்டவையாக இருக்கின்றன..

ஒரு ஆண், தன் மனைவி இறந்துவிட்டால், அவன் வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொள்வதை எங்கள் ஜாதி சட்டதிட்டங்கள் தடுப்பதில்லை..

எனக்கு மாமன் முறைவேண்டிய ஒருவர், சில வருடங்களுக்கு முன்பு ஏதோ கோபத்தில் அவரின் மனைவியை உயிருடன் கொளுத்திவிட்டார்..

கோர்ட்டு கேசுன்னு ஏழெட்டு வருடங்கள் அலைந்து இறுதியில் குற்றம் நிரூபிக்கப்பட்டு ஆறுவருடங்கள் சிறைத்தண்டனை பெற்றார்..

ஏற்கனவே கேஸ் நடக்கும்போது ஏழெட்டு வருடங்கள் சிறைவாசம் இருந்ததால், சீக்கிரம் விடுவிக்கப்பட்டும்விட்டார்.. வெளியில் வந்து ஒருவருடத்துக்குள்ளாகவே சமீபத்தில் +12 முடித்த ஒரு உறவினர் பெண்ணை திருமணம் செய்துகொண்டார்..

இந்த மறுமணத்தை எதிர்க்காத ஜாதி, அடுத்து சொல்லப்போகும் மருமணத்தை எதிர்ப்பதைதான் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை..

அப்படி அவர்கள் எதிர்த்த மறுமணம், எங்க ஊர் பூசாரி ஒருவரின் மகளான, கணவனை இழந்த இளம் பெண் ஒருத்திக்கு நிகழ்ந்தது..

அந்த பெண்ணுக்கு மறுமண ஏற்பாடு முடிந்ததும் ஊர்க்கூட்டம் போட்டு எடுத்த முதல் முடிவு, அவ்வாறு அப்பெண்ணுக்கு மறுமணம் செய்துவைக்கும்பட்சத்தில் இவர் தொடர்ந்து கோவில் பூசாரியாக இருக்க அனுமதிக்கமுடியாது.. உடனடியாக பூசாரி பொறுப்பிலிருந்து நீக்கப்படுவார் என்பதுதான் அவர்களின் முடிவு..

இவருக்கு பூசாரி பொறுப்பைவிட தன் மகளின் எதிர்கால வாழ்க்கையே முக்கியம் என்பதால் பூசாரி பொறுப்பைவிடுத்து மகளுக்கு மறுமணம் முடித்தார்..

பூசாரி பொறுப்பு போனால் என்ன என்றுதானே நினைக்குரிங்க..
அது அவர்களின் பரம்பரை உரிமை அதுஇதுன்னு ஒரு ட்ராக்..

அதுவும் இல்லாம.. இப்டி ஜாதியைவிட்டு தள்ளி வைக்கப்பட்டவர்களின் எந்த விசேசத்துக்கும் ஊர் / ஜாதி நாட்டாண்மைகள் செல்லமாட்டார்கள்..

எங்கள் ஜாதியில் ஒருவரின் திருமணத்திற்கு மாப்பிள்ளை / பெண் கொடுப்பதெனில், அக்குடும்பத்தாரின் திருமணத்திற்கு அவர்கள் ஊரின் ஜாதி நாட்டாண்மை(கள்) வந்து சம்மதம் தெரிவிக்கவேண்டும்.. அப்படி அந்த நாட்டாண்மை வர மறுக்கும் குடும்பத்துக்கு வேறு எவரும் மாப்பிள்ளை / பெண் கொடுக்கமாட்டார்கள்..

இதனாலேயே எந்த ஒரு தலைமுறையிலும் ஜாதிவிட்டு ஜாதி திருமணமோ, பெண்ணுக்கு மறுமணமோ செய்ய ஊர் / ஜாதிமக்கள் தயங்குகிறார்கள்..
அப்படி செய்யும் பட்சத்தில், அக்குடும்பத்தின் வேறு எவருக்கும் எக்காலகட்டத்திலும் எங்கள் ஜாதியில் இருந்து எவரும் பெண் / மாப்பிளை எடுக்கவோ கொடுக்கவோ முன்வரமாட்டார்கள்..

ஜாதியில் இருந்து ஒதுக்கியபின் ஊருக்குள்வாழ்வது மிக மிக கடினம்.. காரணம் அது கிராமம்.. அடித்தாலும் பிடித்தாலும் நாளை அவர்களின் முகத்தில்தான் விழித்தாகவேண்டும்..

இந்த சட்டதிட்டங்கள் / வழக்கம் பரம்பரை பரம்பரையா அவர்களின் இரத்தத்தில் ஊறியும்விட்டதால், இவை அவர்களுக்கு பெரியவிசையமாய் தெரியவும் இல்லை..

ஆனாலும் சென்ற இடுகையில் குறிப்பிட்டுள்ளது போன்ற மக்களின் சில தவறான நடவடிக்கைகளை தடுக்க இவர்களின் ஜாதிகட்டுப்பாட்டின் சில சட்டதிட்டங்கள் நல்லதுசெய்வனவாகத்தான் இருக்கிறதோவென்றும் நினைக்கத்தோன்றுகிறது..

காரணம் ஜாதிக்கட்டுப்பாட்டுக்கு பயந்தாவது தவறான பாதையில்செல்ல மக்கள் பயப்பட்டு தவறுகள்குறையுமோஎன்று தோன்றுகிறது..

எதிலும் நல்லது கெட்டது உள்ளதுபோல், எங்கள் ஜாதி கட்டுப்பாடுகளிலும், சட்டதிட்டங்களிலும் சில நல்லவையும் பல கெட்டவையும் இருப்பதாகவே கருதுகிறேன்..

சரி.. இந்தளவுக்கு எங்க ஊற டேமேஜ் பண்ணினதுபோதும்னு நினைக்கிறேன்..

அடுத்தமுறை வேறுவிதமான இடுகையுடம் சந்திக்கிறேன்..


Monday, September 21, 2009

என்ன ஊருடா சாமீய்ய்ய் 4..

வணக்கம் நண்பர்களே..
சென்ற முறையாவது 27 நாட்களுக்கு பிறகுவந்தேன்..
இந்த முறை 32 நாட்களுக்கு பிறகு இப்போதுதான் வர முடிந்தது..

இடையில் ஒருவாரகாலம் வலைச்சர ஆசிரியராக பணியாற்றியபோது வலைச்சரம்வந்து வாழ்த்தி கருத்துக்களும் ஆதரவும் தந்த அனைத்து நல்உள்ளங்களுக்கும் நன்றிகள் பல..

இந்த பகுதியில் ஊரில் சமீபத்தில் நடந்த சில வித்தியாசமான காதல் ஜோடிகளின் கதைகளை கூறுவதாக கூறியிருந்தேன்..

முதல் காதல் ஜோடி "என்ன ஊருடா சாமீய்ய்ய் 2.."ல் கூறப்பட்டிருந்த ஒரு மாநில கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வென்ற வேறு ஜாதி கவுன்சிலரை எங்கள் ஜாதியை சேர்ந்த பெண் காதலித்து மணந்த கதை..

அதில், இப்படி சாத்திவிட்டு ஜாதி திருமணம் செய்தமையால் அந்த ஜோடி ஊரைவிட்டு / ஜாதியை விட்டு தள்ளி வைக்கப்பட்டது பற்றி கூறியிருந்தேன்....
(மேலதிக விபரங்களுக்கு மேலே கொடுக்கப்பட்டுள்ள சுட்டியை கிளிக்கவும்..)

$$$$$$


அடுத்து என் பள்ளி தோழன் ஒருவனின் கதை..

இவன் எட்டாம் வகுப்புவரை என்னோடு படித்தவன்..
அதன்பின் எங்கள் குலத்தொழிலான நெசவுத்தொழிலில் மூழ்கடிக்கப்பட்டான்..

பெரும்பாலும் எங்கள் கிராம இளைஞர் இளைஞிகளின் வரலாறு இப்படி பள்ளிப்படிப்பு முடிந்ததும் நெசவுத்தொழில் தள்ளப்பட்டதாகத்தான் இருக்கும்..

இப்போதுதான் கொஞ்சம் முன்னேறி ஒரு சில ஜீவன்கள் தப்பித்தவறி பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரிசென்று பட்டதாரிகளாக உலாவருகின்றனர்..

என் பக்கத்துவீட்டு பெண் ஒருவள் அருகிலுள்ள டவுனுக்கு தினமும் சென்று படித்து வந்துள்ளாள்.. இவனோ வீட்டில் நெசவுத்தொழில் செய்பவன்.. இவன் வீடும் அந்த பெண்ணின் வீடும் நேரெதிர் திசையில் உள்ளன..

இவனுக்கு இந்த வீட்டுப்பக்கம் வரும்பழக்கமும் இல்லை.. இந்தபக்கம் இவனுக்கு ஜோலியும் இல்லை..
நடுவில் எங்கு பற்றிக்கொண்டதோ தெரியவில்லை, ஒரு நாள் தொலைப்பேசி அழைப்புவந்தது..

மச்சி.. நம்மாளு வாத்தியார் பொண்ண கூட்டிட்டு ஓடிட்டாண்டா'னு..

நானும், சரி விடுடா.. சாதிவிட்டு ஜாதில இழுத்துட்டு போனாதானே பெருசுங்க பிரச்சனை பண்ணும்.. நம்மாளு உசாரா நம்ம ஜாதி பொண்ணையே கரெக்ட் பண்ணிட்டான்ல.. பிரச்சனை இல்லைன்னு சொன்னேன்..

அதற்கு அவர்கள் சொன்னது, அவன் இழுத்துட்டுப்போன பொண்ணு அவனுக்கு தங்கச்சிமுறை வேணும்னு..

எனக்கு என்ன சொல்றதுனே தெரியலை.. வர வர நம்ம இளைய தலைமுறை மக்களுக்கு ஊருக்குள்ள இருக்குறவங்களோட உறவுமுறைகூட என்னான்னு தெரியாத அளவுக்கு இடைவெளி அதிகமாகிடுச்சோனு சந்தேகத்தோட கெளம்பிவந்துட்டேன்..

இவனுகளோட இந்தமாதிரி காதலுக்கு எங்க ஊரு பெருசங்களோட சட்டதிட்டமே பரவாலையோனு யோசிக்க வெச்சுட்டான் பயபுள்ள..

$$$$$$


அடுத்து அவனோட பெரியப்பா மகன் பண்ணின கூத்து..

மேல சொன்னவனும், இவனும் ஒரே காலகட்டத்துலதான் கூட்டு சேந்துட்டு லவ்விருப்பங்கபோல..

அவன் வேலைய முடிச்ச அடுத்த கொஞ்ச நாள்ல இவன் ஒரு பொண்ணோட காணாம போய்ட்டான்..

விசாரிச்சதுல அவன் இழுத்துட்டு போனது வேற ஜாதி பொண்ணு..
ஊரைவிட்டு போயி பக்கத்து ஊரு போலிஸ் ஸ்டேசன்ல அடைக்கலமாகி எஸ்கேப் ஆகிட்டாங்க..

அப்புறம் என்னாச்சுனு தெரியலை.. ஒருவாரம் கழிச்சு பொண்ணுமட்டும் ஊர் திரும்புச்சு.. பையன் இன்னைக்கு வரைக்கும் ஆள காணோம்.. கேட்டா தலை மறைவா இருக்கறதா சொல்றாங்க..

தலைமறைவா இருக்கானா.. தலையவே எடுத்தாச்சானு யாருக்குதெரியும்னு தெரியலை..

$$$$$$


அடுத்து என்னோட ரெண்டு வயசு மூத்த பையன் ஒருத்தனோட கதை..

இவனும் கொஞ்சம் உசார் பார்ட்டிதான்.. தன்னோட ஜாதியிலையே கரெக்ட் பண்ணிருக்கான்..

ரெண்டு பேரும் வழக்கம்போல ஒருநாள் காணாம போய்ட்டாங்க..
பொண்ணோட வீட்டுக்கு பயந்து பையன் குடும்பமே ஊரைவிட்டு தலைமறைவாகிட்டாங்க..

பொண்ணோட அப்பன்காரன் பையன் சொந்தக்காரங்களான மேல சொன்ன தங்கச்சிய கட்டின பையன் வீட்ல போய் கேட்டதுக்கு, நீயே பொண்ண அனுப்பி வெச்சுட்டு இங்கவந்து நல்லவன் மாதிரி கேக்குரியானு ஒரு பிட்டபோட.. இவங்க திருப்பி ஒரு ஆயுதத்தபோட கைகலப்பாகி போலிஸ் கேசாகிடுச்சு..

விடிஞ்சா பொண்ணு வீட்ல, புதுசா கட்டிருக்கற வீட்டுக்கு கிரகப்பிரவேசம்..
பொண்ணோட அப்பாவும் மனச தேத்திகிட்டு என்னோட பொண்ணு செத்துபோய்ட்டதா நெனச்சுக்குறேன்.. இனி எனக்கு பொண்ணே இல்லைன்னு நெனச்சுகிட்டு கிரகப்பிரவேசத்த நல்லா பண்ணுவேனுட்டு வைராக்கியத்தோட பண்ணிமுடிச்சாறு..

அன்னைக்கு சாயந்திரம் என்ன நெனச்சாரோ தெரியலை, திடீர்னு விசத்த குடிச்சுட்டாறு.. அப்புறம் அங்க இங்கனு கொண்டுபோய் காப்பாத்திட்டாங்க..

ஆனா.. இப்டி இருபது இருபத்திரெண்டு வருஷம் ஆசை ஆசையா வளத்த பெத்தவங்க மனச நோகடிச்சு அவங்க எப்டித்தான் நல்லா இருப்பாங்களோ தெரியலை..

பெத்தவங்களும் அப்டித்தான்.. அவங்க பசங்க கேட்டதெல்லாம் வாங்கிகொடுத்து அவ்ளோபாசமா வளக்குற அவங்க, கல்யாணம்னு வந்தா மட்டும் இப்டி ஒரேயடியா அடம் புடிக்கறது ஏன்னு புரியலை..

$$$$$$


என்னடா.. இவன் ஊர்ல நல்லவிதமா எதுவுமே சொல்றதுக்கு இல்லையோனு நினைக்காதிங்க..

நம்ம மனசு பயபுள்ளைக்கு எப்போமே நல்லதவிட கெட்டத துருவி துருவி பாக்குரதுலதான் பழக்கம் அதிகம்.. என்ன பண்ண..

$$$$$$


சரி.. அடுத்து.. இதுல ரெண்டு பேருமே எங்க ஜாதி காரங்க இல்லைனாலும், எங்க ஊர்ல நடந்த காதல்கதைன்றதால சொல்றேன்..


பொண்ணுவீடும் பையன் வீடும் ரொம்ப தூரமெல்லாம் இல்லை.. எதிரெதிர் வீடுதாங்க..
கொஞ்சநாள் கண்கள் நான்கும் பேசிருக்கு..
அப்புறம் மனசு ரெண்டும்..
அப்புறம் என்னென்ன பேசுச்சுனு தெரியலை..
அதுக்கு அப்புறம் ஊரே பேசுச்சு அவங்களபத்தி..

காரணம், ரெண்டுபேத்துக்கும் பத்திகிச்சு..

பையன் வீட்ல பெத்தவங்க எதித்தாலும் பிரச்சனை இல்லை.. ஏனா, அவங்க பெத்தவங்கதான்..

ஆனா பொண்ணு வீட்ல அவ புருஷன் எதுக்குறான்.. பொண்டாட்டிய அவ புது காதலன்கூட சேர்க்கவிடமாட்டேனு அடம்புடிக்குறான்..

ஆமாங்க.. இந்த பையன் எதிர்வீட்டுக்காரன் பொண்டாட்டிக்கு ரூட்டுபோட்டு கரெக்ட் பண்ணிருக்கான்.. அந்த பொண்ணுக்கு ரெண்டு கொழந்தைங்கவேற இருக்கு..

அப்டி இப்டின்னு பிரச்சனைய முடிச்சு எனக்கு அந்த கொழந்தைங்களும் வேணாம் புருசனும் வேணாம்னு தூக்கி போட்டுட்டு எதிர்வீட்டு காதலனோட புருஷன் வீட்டுக்கு எதிர் வீட்லயே காதலனோட குடித்தனம் நடத்திட்டு இருக்கா அந்த பொண்ணு..

என்ன ஊருடா சாமீய்ய்ய்..