Friday, June 26, 2009

திருப்பூரில் மீண்டும் ஒரு 7 ஸ்டார்..

1. திருப்பூரில் மீண்டும் ஒரு 7 ஸ்டார்..

அதென்ன 7 ஸ்டார்'னு கேக்குறிங்களா..?

இது 25 வருடங்களுக்கு முந்தின கொசுவத்தி..

என்ன மேட்டர்னா.., இப்போ, கொஞ்ச வருசத்துக்கு முந்தி நிறைய பைனான்ஸ் கம்பெனிங்க பண்ணுனவேலைய மாதிரி அப்போவே அந்த 7 ஸ்டார்ங்கற நிறுவனம் அதிக வட்டிதர்றதா சொல்லி சுருட்டிட்டு ஓடிடுச்சு..

இப்போ.. திரும்பவும் அதேமாதிரி ஒன்னு முளைச்சிருக்கு..

இவங்களோட கொள்கைவிலக்கம் என்னனா.. நம்ம ஒரு லட்சம் ரூபா அவங்ககிட்ட முதலீடு பண்ணினா.., அவங்க நமக்கு காலம் பூரா மாசா மாசம் 10,000 ரூபா தருவாங்கலாமா..

மக்களே.., நீங்களே யோசிச்சு பாருங்க.. இது சாத்தியமா..?
அந்த ஒரு லட்ச ரூபாய மீட்டர் வட்டி, ஜெட்டு வட்டிக்கு விட்டாகூட மாசா மாசம் 10,000 ரூபா வட்டிவருமானு தெரியலை.. ஆனா இவனுங்க நமக்கு நோவாம காலம்பூரா, மாசா மாசம் 10,000 ரூபா தருவானுங்கலாமா..? எப்புடியா தருவானுங்க..?

(இது, அவர்கள் என் உறவினர் ஒருவரின் வீட்டு கதவை தட்டியதால் எங்கள் வீட்டில் கேட்ட செய்தி)

அடுத்து..

2. தட்டுங்கள் திறக்கப்படும்..

இந்த வாசகம் எந்த மதத்திற்கு சம்பந்தப்பட்டது என்று யோசிக்கவில்லை..

எந்த கருத்தையுமே நாம் காணும் கண்ணோட்டத்தின் அடிப்படையில் சரியாகவும் புரிந்துகொள்ளலாம்.. சிலசமையம் தவறாகவும் புரிந்துகொள்ளலாம் என்பதற்கான உதாரணமாய் கருதுகிறேன்..

"தட்டுங்கள் திறக்கப்படும்.."

ஆஹா.. என்னே இறைவனின் கருணை.. யாரையும் பேதமின்றி, தட்டுங்கள்.. பாரபட்சமின்றி திறக்கப்படும்னு சொல்லுறாரே..

அவ்வளவு கருணை உள்ளவரா இருப்பாரேயானால்..
"எதற்காக மூடிவைக்கிறார்..?" எப்போதும் திறந்தே வைத்திருக்க வேண்டியது தானேனு கேள்வி எழலாம்..

எதற்காக மூடிவைக்கவேண்டும்.. தட்டுங்கள் திறக்கப்படும்னு சொல்லணும்..
எப்போதும் திறந்தே வைத்திருங்களேன்'னு கேக்கலாம்..

கேக்கலாமா என்ன..?


இப்படி கேட்பது நம்மின் தவறான கண்ணோட்டமாக இருக்கலாம்..

சரியான கண்ணோட்டமாக நான் கருத்துவது..

எதையுமே நம்முடைய முயற்சியினால் பெறவேண்டும்..
சிறிதேனும் நம்மின்மூலம் காட்டப்படும் உழைப்பின் மூலம் பயனை அனுபவிக்கவேண்டும்..

இறைவன் கொடுக்கிறானே என்பதற்காக முயற்சிக்காமல் பயன் பெற நினைக்கக்கூடாது..

ஆகவே தான்.. நம்மால் இயன்ற அந்த ஒரு சிறு முயற்சியாக, சிறிதேனும் முயன்று பலன் பெறவேண்டுமென்பதே இந்த “தட்டுங்கள் திறக்கப்படும்..” வாசகத்தின் கருத்தாக இருக்கலாமென எண்ணுகிறேன்..


Tuesday, June 23, 2009

ஆணும் பெண்ணும்..

இந்த முறை நான் எடுத்துள்ள இரண்டு விஷயங்களுமே பலரால் ஆட்சேபிக்கபடலாம்..

இந்த கருத்துக்களில் ஏதேனும் தவறாகவோ, யாரையேனும் புண்படுத்தும்படியோ இருக்குமேயானால் தயவுசெய்து மன்னிக்கவும்..

(கள்ளச்சாராய..ச்ச..கலாச்சார.. அரசியல்.. சமூக நோக்கர்கள் தயவுசெய்து இதனை ஒரு கனவாக நினைத்து, மன்னித்து, மறந்துவிடுங்கள்.. ஏதும் தாண்டவம் ஆடிவிடாதீர்கள்..)

இப்போ மேட்டர்..

1.

24 மணிநேரத்தில் 790+ ஹிட்ஸ்கள் கொடுத்து பீதியை கிளப்பியதாலும், நண்பர்கள் சிலரின் வேண்டுகோளுக்கு இணங்கியும், பதிவின் முதல்பகுதி நீக்கப்பட்டுள்ளது..

சிரமத்திற்கு மன்னிக்கவும்..


சரி அடுத்தது..

2. ஒருவனுக்கு ஒருத்தி நம் பாரத பண்பாடு..

ஒருவனுக்கு ஒருத்தி..
ஆணும் பேணும் சமம்..
(கேக்க நல்லா இருக்குல்ல..?)

(சரி..,இப்போ, இதுல கேட்டிருக்கற சந்தேகம் ஏதும் கொச்சையாக இருந்தால் தயவுசெய்து மன்னிக்கவும்.)

நம்ம நாட்டுல..

Number Of ஆண்கள் == Number Of பெண்கள்னா,

ஒருவனுக்கு ஒருத்தி..
ஆணும் பேணும் சமம்..(இதுவேற சமமோ..? சரி சரி விடுங்க..)
இதெல்லாம் ஒத்துவரும்..


இப்போ பொதுவாவே ஒரு மாநிலத்த எடுத்துகிட்டோம்னா.. அதுல ஆண்களைவிட பெண்களின் எண்ணிக்கை கம்மியா தான் இருந்துட்டு இருக்கு..

உதாரணத்திற்கு..
(சத்தியமாக இதற்கும் கேப்டனுக்கும் சம்பந்தம் இல்லை..)


(படத்தை கிளிக்கி பெரிதுபடுத்தி பார்த்துக்கொள்ளவும்..)

இங்க, ஒவ்வொரு மாநிலத்தையும் எடுத்துகிட்டிங்கனா.. ஆண்களின் எண்ணிக்கையே அதிகமா இருக்கு..

இதுல, ஜோடிசேந்த மக்களை தவிர மீதமுள்ள ஆண்கள் ஜோடிக்கு என்ன பண்ணுவாங்க..?


எனக்கு தெரிந்து.. இந்தியாவிலேயே ஆண்களைவிட அதிக எண்ணிக்கையில் பெண்கள்உள்ள ஒரே மாநிலம் "கேரளா" தான்..

அங்கு மக்கள்தொகை நிலவரம்..



அப்போ.. இங்க இருக்குற அதிகப்படியான பெண்கள் ஜோடிக்கு என்ன பண்ணுவாங்க..

சிலபேர் எடக்குமடக்கா ஒன்னுகேப்பிங்களே..

இங்க இருக்குற அதிகப்படியான பெண்களை மீதி மாநிலத்துல இருக்கற ஆண்களுக்கு ஜோடிசேத்திடலாம்னு..

இந்தியா முழுவதும் எல்லா மாநிலங்களிலும் ஆண்கள் அதிகம்.. இங்க இருக்கும் அதிகப்படியான பெண்கள் அந்த மொத்த அதிகப்படியான ஆண்களைவிட ரொம்ம்ம்ம்ப குறைவு..

(மீண்டும் சொல்றேன்.., இதுல கேட்டிருக்கற சந்தேகம் ஏதும் கொச்சையாக இருந்தால் தயவுசெய்து மன்னிக்கவும்.)

ஆக மொத்தத்துல.. எனக்கு எல்லாம் கல்யாணத்துக்கு பொண்ணு தேடும்போது பொண்ணே இருக்காதுன்னு நினைக்கிறேன்..

வீட்ல சொல்லி சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கனுமோ..?


Thursday, June 18, 2009

கொலைகாரன் குடும்பத்தார் (part 1)..

(கதையின் பங்காளிகள்..

1. கொலைகாரன் - அப்பா.
2. சாகாதவன் - 1'in மகன், 3'in தம்பி.
3. செத்தவன் - 1'in மகன், 2'in அண்ணன்.
4. பாக்கலை - 1,2,3'in பக்கத்து வீட்டுக்காரர்.
5. போலீஸ் இன்ஸ்பெக்டர் )


சரி.. இனி கதை..

ஒரு ஊரில், "கொலைகாரன்" என்பவருக்கு "சாகாதவன்", "செத்தவன்'னு ரெண்டு பசங்க.. "சாகாதவன" எல்லாரும் செல்லமா "சாகலை"ன்னு கூப்டுவாங்க..

ஒருநாள், "சாகாதவன" யாரோ கொன்னுட்டாங்க..
அத "பார்க்கலை"ன்ற பக்கத்துவீட்டுகாரர் பாத்துட்டு போலிஸ்க்கு இன்பார்ம் பண்ணிட்டார்..

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸ், யாரு இன்பார்ம் பண்ணினதுனு கேக்க, தான் தான் இன்பார்ம் பண்ணினதா "பாக்கலை" சொல்றான். இன்ஸ்பெக்டர் அவர ஒரு தபா ஏற எறங்க பாத்துட்டு, நீ யாரு..? இவனுக்கும் உனக்கும் என்ன சம்பந்தன்ம்னு கேக்குறாரு..

அதுக்கு "பாக்கலை" சொல்றான்..,

ஐயா.. நான், இவங்க பக்கத்து வீட்டுக்காரனுங்க..அவர பாக்கலாம்னு இங்க வந்தப்போ இப்படி "சாகாதவன்" செத்து கெடக்குராருங்க..

இன்ஸ்பெக்டர் : சரி.. உம்பேரு என்னப்பா..?

நான் தான் "பாக்கலை" சார்..

இன்ஸ்பெக்டர் : என்னது..? நீ பாக்கலையா..? அப்புறம் ஏண்டா பாத்துட்டுதான் எங்களுக்கு போன் பண்ணினதா சொன்ன..

ஐயா நான் நெஜமாவே "பாக்கலை"தாங்க. ஆனா இத மெய்யாலுமே பாத்தேங்க..

இன்ஸ்பெக்டர் : ஆஹா.. ரொம்ப கொழப்புறியேடா.. முடியலை.. சரி.. அடுத்தவன பாத்துட்டு வந்து உன்ன தனியா டீல் பண்ணுறேன்..

++++++++

அடுத்து செத்தவன்கிட்ட (செத்துப்போன "சாகாதவனின்" அண்ணன்).

இன்ஸ்பெக்டர் : நீ யாருப்பா..? உனக்கும் இந்த செத்துபோனவனுக்கும் என்ன சம்பந்தம்..?

செத்தவன் :(அழுதுகொண்டே) சார்.. அ.. அ.. அவ.. அவன்.. அவன்.. என் தம்பி "சாகலை"ங்க.. ரொம்ப செல்லமா வளர்ந்தவங்க..

இன்ஸ்பெக்டர் : என்னது சாகலையா..? அப்போ இங்க செத்தவன் யாரு..?

செத்தவன் : இங்க “செத்தவன்” நான் தான் சார்..

இன்ஸ்பெக்டர் : நீ தான் செத்தவனா..? அப்புறம் எப்படிடா என்கிட்ட உயிரோட பேசிட்டு இருக்க..?

செத்தவன் : சார்.. இதென்ன கொடுமையா இருக்கு..?
சாகாதவன்” அவனையே செத்துட்டான்னு சொல்லும்போது.. நான் “செத்தவனா” இருக்கறதால உயிரோட இருக்ககூடாதா..?

இன்ஸ்பெக்டர் : டேய்.. இப்போதான் அங்க இத பாத்தவன் “பாக்கலைனு” சொல்லி கொலப்பினான்..
இப்போ நீ “செத்தவன்” சாகலைன்னு சொல்லி கொலப்புற..
அப்போ செத்தது யாருடா..?

செத்தவன் : “சாகாதவன்” தான் சார் சாகலை.. அவன செல்லமா அப்படி தான் சார் கூப்பிடுவோம்..
ஆனா, இங்க செத்தவன் அவன் தான் சார்..

இன்ஸ்பெக்டர் : ங்கொய்யாலே.. நீயுமாடா.. ஆளாளுக்கு கொழப்புரிங்கலேடா.. உன்னையும் அப்புறமா தனியா டீல் பண்ணுறேன்..

என்னடா இது.. கேஸ் ரொம்ப காம்ப்ளிகேட்டட்டா போய்ட்டு இருக்கே..
சரி அடுத்தவன பாப்போம்..(அடுத்த பார்ட்டில்..)

இன்வெஸ்டிகேசன் தொடரும்..



(பி கு: கதையில் வரும் பெயர்களும் சம்பவங்களும் கற்பனையே..
இதே பெயரில் யாராவது இருந்து.., இந்த சம்பவங்கள் அவரின் வாழ்க்கையுடன் ஒத்திருப்பின் அதற்கு கம்பெனி பொறுப்பாகாது..)


Monday, June 15, 2009

என்னாது இது..?

கருப்பு பல்பு கெடைக்குமா..?

கிராமங்கள்ல திருவிழாக்களின்போது கலர் காலரா சீரியல் பல்பு தொங்கவிட்டு இருப்பாங்க.. அதுல பல்புமேல என்ன கலர் வேணுமோ அந்த கலர் பாலிதின்பேப்பர சுத்திஇருப்பாங்க..
(யாராச்சும் பாத்திருகீகளா..?)

(இது அந்த பழைய முறைப்படி கலர் காகிதம் சுத்தாமல், இப்போது பயன்படுத்தப்படும் மேற்ப்புற கலர் கண்ணாடிகளை கொண்ட சீரியல் பல்பு..)

சிவப்பு கலர் சுத்தினது சிவப்பு கலர்ல 'ஙே'னு எறிஞ்சுட்டு இருக்கும்..

வீட்ல, உதாரணத்திற்கு, பச்சை கலர் பல்புல, அந்த பல்பின் மேர்ப்புற கண்ணாடில பச்சை வர்ணத்துல ஏதோபூசி இருப்பதால பச்சை வர்ணம் கெடைக்குது..
(யாரும் அறிவியல் ரீதியா ஆராய்ச்சி பண்ணி அப்ஜெக்சன் சொல்லி கொலப்பிடாதீக..)



இப்படி நமக்கு எந்தவர்ணத்தில் வெளிச்சம் வேண்டுமோ அந்த வர்ண வெளிச்சத்தில் வீட்டை நிரப்பலாம்..



இப்போ, எனக்கு, வெளிச்சம் இருக்கற வீட்ட நல்ல அடர் இருட்டு நிறத்துல (அதாங்க, கருப்பு நிறத்துல) நல்லா இருட்டா ஆக்கணும்னா,
கருப்பு பல்பு கெடைக்குமா..?

இதாங்க என்னோட டவுட்டு..
சொல்லுங்கப்பா.. கெடைக்குமா என்ன..?

--------
'BABA' 'papa' ஆகமுடியுமா..?

BABA = பாபா = papa
அப்படினா..,
BABA = papa'va..?

என்ன.. சின்னபுள்ள தனமா இருக்கு..? ராஸ்க்கல்..

--------

இப்டி இருந்தா எப்படி இருக்கும்..?

இது நம்ம தலைவரோட பாபா பட கிளைமாக்ஸ் பத்தினது..

அந்த படத்துல, கிளைமாக்ஸ்ல, கடேசியா அவரோட அந்த 'நினைத்ததை நிறைவேற்றும் ஏழாவது வரத்த' ரெண்டுல ஒரு காரியத்துக்கு பயன்படுத்த வேண்டி இருக்கும்..

அப்டி அவர் அந்த கடேசி வரத்த அந்த ரெண்டுக்குமே பயன்படுத்தாம, அவரோட வரத்த இன்னும் முடிவிலி (அதாங்க இன்பினிட்டி) டைம்ஸ் பயன்படுத்த வரம் கேட்டிருந்தா, அதவெச்சு "பாபா பார்ட்-2, பார்ட்-3", etc... னு பல பார்ட்டுகள் எடுத்து கலக்கி இருக்கலாமே..

--------
என்னாச்சோ..?

என் கையில் ஒரு போர்வாள்..

ஆக்ரோசத்தோடு எதிரில் தாக்கவந்தவனை வெட்டிவிட்டு, வாளை பின்னோக்கி சுழற்றியபோது, பின்னாலிருந்து தாக்கவந்தவனின் தலையில் எனது வாள் பட்டு, அவனின் மண்டைஓட்டை சிறிது பெயர்த்து விட்டது..

அவனின் மூளை வெளியில் தெரியும் அந்த நரகவேதனையில், அவன் வலியை பொறுத்துக்கொண்டு என்னை தாக்கவருவானா..? இல்லை, வலி தாங்காமல் அவனின் வாளாலேயே குத்திக்கொண்டு தற்கொலை செய்துகொள்வானா என யோசித்த அந்த நொடி, அம்மா காப்பி டம்ளருடன் வந்து தூக்கத்தில் இருந்த என்னை எழுப்பிவிட்டார்கள்.. அவன் கதி என்னாச்சோ..?

ஹும்.. எனக்கு மட்டும் ஏன் தான் இப்படி எல்லாம் தோணுதோ தெரியலை..


Wednesday, June 10, 2009

உயிர் காணும் வாழ்க்கைகனவு..

இது நான் ISKCON (International Society For Krishna Consciousness, Bangalore) உடன் தொடர்பில் இருந்த போது அங்கு ஒருவருடன் ஏற்பட்ட விவாதத்தின் அடிப்படையில் பதிவுசெய்வது..

பொதுவாக நாம் உறக்கத்தில் காணும் கனவுகள், உண்மையற்ற, ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாமல் அல்லது நமது நிஜ சூழ்நிலையை ஒத்து, அல்லது ஏதாவது போல கசாமுசான்னு வருகின்றன..

எது எப்படியோ.. அப்படி நாம் காணும் கனவுகளில் பெரும்பாலானவை அடுத்தநாள் நாம் விழித்தெழும்போது நியாபகத்தில் இல்லாமல் மறந்துபோயிருக்கும்..

சில கனவுகள், நாம் கண்விழித்தபின்பும் அன்றைய பொழுதில் வெகு நேரத்திற்கு நியாபகத்தில் நிறைந்திருக்கும்.. ரொம்ப வெகுசில கனவுகளே நம் நினைவில் வெகு நாட்களுக்கு மறையாமல் நிலைத்திருக்கும்.. ஆனால், அவையும் நாம் கண்ட அனைத்தும் அப்படியே சிறிதும் பிசகாமல் நினைவில் உள்ளதாஎன்பது சந்தேகமே..

இந்த கனவுகள் உண்மையற்ற மாயை அவ்வளவே..

இப்படி நாம் உறக்கத்தில் காணும் இந்த குறுகிய கால கனவுகள் நம் வாழ்வின் ஒரு சிறு பகுதியே.. அதுவும் நிஜமல்லாத மாயை..

ISKCON'il அவர்களின் வாதப்படி, நம்முடைய 'இந்த வாழ்க்கை என்பது நம் ஆத்மாவின் குறுகிய கால கனவு' என்பதே அவர்கள் கூற்றின் சாராம்சம்..

இதை புரிவதற்கான சின்ன விளக்கம்..

நாம் எப்படி கண் விழிக்கும்போது நாம் கண்ட கனவுகள் மறைந்து, நம்மின் இந்த நிஜ உலகில் ஜீவிக்கிரோமோ..,அதே போல், நம் ஆத்மாவானது இவ்வுலகில், நம் உடலை விட்டு பிரிந்து, அதன் உண்மை இருப்பிடமான மேலுலகை, எல்லாமுமாகிய அந்த இறைவனை அடையும்போது, அது கண்ட உலக வாழ்க்கை எனும் இந்த கனவானது மறைந்து அதன் நிஜ உலகில் பிரவகிக்கிறது..

இந்த உலகவாழ்க்கை என்பது நம் ஆத்மா காணும் குறுகியகால உண்மை இல்லாத மாயையாகிய கனவுஆகும்..

உலக வாழ்வை விடுத்து, இறைவனில் கலந்த அந்த நிலையில், அதற்கு இந்த உலக வாழ்க்கையானது சற்றும் நினைவில் இராது..

ஆத்மாவின் உண்மை வாழ்க்கையானது, உலக வாழ்வை விடுத்து, மறுபிறவிகள் எனும் வாழ்க்கை / பிறவிச்சுழற்சியை கடந்து, நிலையாக, அந்த இறையுடன் அணுவாய் ஒன்றர கலந்த அந்த நிலையே ஆகும்..

(ஏதோ ஆன்மிகம் போல இருக்கேன்னு பீல் பண்ணாதிங்க..

இது என்ன மேட்டர்னா.. நம்மளோட இந்த வாழ்க்கைன்றது நம்ம உசுரு காணுற ஒரு (நீண்ண்ண்ட) கனவு.. அம்முட்டுதான்..)

இந்த உலக வாழ்க்கைன்றது உண்மை இல்லாத, நம்ம உசுரு காணும் கனவுபா..

புரிஞ்சுக்கோ.. உசுரே முழிச்சுக்கோ.. சீக்கிரம் கெலம்பிக்கோ..


Tuesday, June 2, 2009

‘பாஸ்வோர்’டாய நம:

ஓம் ‘பாஸ்வோர்’டாய நம:

நீங்க உங்க தினப்படி வாழ்க்கையில எவ்ளோ தடவ எங்க எல்லாம் பாஸ்வோர்ட் உபயோகிக்கிறிங்கனு லைட்டா யோசிச்சுட்டே இந்த இடுகைய படிங்க மக்கள்ஸ்..

என்னுடைய சராசரி நாளில்..

காலைல எழுந்தவுடனே, ஸ்நூஷ்'ல இருக்குற மொபைல்'a அன்லாக் பண்ண பாஸ்வோர்ட் கொடுத்து, அலாரம்'a ஆப் பண்ணி, வெட்டியா வந்த மெசேஜ் எல்லாம் படிச்சுட்டு எழுந்திரிக்கும்போது அன்றைய முதல் பாஸ்வோர்ட் என்ட்ரி முடிஞ்சது..
(இப்படி பாஸ்வோர்ட் இல்லாம இருந்தா, உடன்பிறப்புக்கள் நைட்டோட நைட்டா அலாரம் டைம மாத்தி கபடி வெலையாடிடுவாங்க.. அதுக்கு தான் இந்த பாஸ்வோர்ட்..)

அடுத்து, காலைல பண்ணவேண்டியத எல்லாம் பண்ணிக்கிட்டு, நம்ம கம்பியூட்டர ஆன்பண்ணி, நம்ம யூசர் அக்கவுண்ட்ல லாகின் பண்ண பாஸ்வோர்ட் கொடுத்து லாகின் பண்ணிமுடிக்கும்போது, அடுத்த பாஸ்வோர்ட் என்ட்ரி ஓவர்..
(இப்படி வீட்ல நம்ம அக்கவுண்ட்க்கு பாஸ்வோர்ட் வெக்காட்டி எதாச்சும் வாண்டுங்க கண்டத காணாம பண்ணிடுங்க.. அதான் சேப்டிக்கு..)

அடுத்து, சிஸ்டம்ல மெயில் செக் பண்ணலாம்னு ஜி-மெயில் ஓபன் பண்ணினா, நம்ம அதுலேயே மூணு அக்கவுண்ட் வெச்சிருப்போம்..
ஒவ்வொண்ணுக்கும் பாஸ்வோர்ட் கொடுத்து மெயில் செக்பண்ணிட்டு, அடுத்ததா யாகூ.. இதுலயும் ரெண்டு மூணு அக்கவுண்ட் இருக்கும்.. அதுக்கும் தனித்தனி பாஸ்வோர்டுகள் யூஸ்பண்ணிட்டு, அடுத்து reddif'la இருக்குற ரெண்டு மூணு அக்கவுண்டுக்கு பாஸ்வோர்ட்..

அப்பறம், ஆர்குட் ஓபன் பண்ண.. சிலபேர் இதுலயும் ரெண்டு மூணு அக்கவுண்ட் வெச்சிருப்பாங்க.. அவங்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பாஸ்வோர்டுகள்..

அப்பறம், linkein கம்யுணிட்டி.. இதுக்கு தனியா பாஸ்வோர்ட்..
அப்புறம், facebook'ku தனியா யூசர்நேம், பாஸ்வோர்ட்..

யாகூ குரூப்ஸ் மற்றும் இன்னபிற குரூப்ஸ்களுக்கான பாஸ்வோர்ட்கள்..

அப்புறம், e-newspaper படிக்கற பழக்கம் இருந்தா.. ஒவ்வொரு பத்திரிக்கைக்கும் நம்மளோட பாஸ்வோர்ட் யூஸ் பண்ணவேண்டி இருக்கும்..

அப்புறம்.. நம்ம பிளாக்'ல நுழைந்து அன்றைய கடமைகளை நிறைவேற்ற பாஸ்வோர்ட் தேவைப்படும்..
படித்த, பார்த்த சிலரின் இடுகைகளுக்கு வோட்டுபோடுவதற்காக தமிழ்மணம், தமிழிஷ், இன்னபிற வலைபக்கங்களுக்குள் நுழைய அவற்றிற்கான பாஸ்வோர்டுகள்..

தனது பிளாக்கின் ஹிட்ஸ், டிராப்பிக் ரேஞ்சை அவ்வப்போது பார்க்க அதற்கான வலைத்தளங்களில் தங்களின் கணக்கிற்கான பாஸ்வோர்ட்டுகள்..

இப்படியெல்லாம் மூளையில் ஒளிந்துள்ள பாஸ்வோர்ட்டுகளை பயன்படுத்தி காலை கடமைகளை நிறைவேற்றிவிட்டு, ஆபீஸ் போய், கணினியை ஆன் செய்து மீண்டும் லாகின் பண்ண பாஸ்வோர்ட்..

அப்பறம், அன்றைய ஆணிகளை பார்க்க, கம்பெனியில் வழங்கப்பட்டுள்ள ID'il மெயில் செக் பண்ண ஒரு பாஸ்வோர்ட்..

பிராஜெக்ட் சார்பான database'ai ஏக்சஸ் செய்யவேண்டிஇருந்தால், அதற்கான பாஸ்வோர்ட்..

(இப்போது சில நாட்களாக தரவிறக்கம் செய்யப்படும் "zip" பார்மெட் file'ai அன்ஜிப் செய்யக்கூட பாஸ்வோர்ட் செட் செய்திருப்பதை காணமுடிகிறது.)

இதற்கு இடையில், நண்பர்களுடன் சாட்ட, gtalk, yahoo- messenger போன்றவற்றின் நமது அக்கவுண்ட்டிற்குள் நுழைய தனிதனி பாஸ்வோர்டுகள்..

அப்புறம், ஆணிகளுக்கு இடையே மக்களின் இடுகைகளுக்கு பின்னூட்ட, முடிந்தால் ஒரு இடுகையை நம் சார்பாக தட்டிவிட, அதுஇது என்று பிளாக் சம்பந்தமான பயன்பாட்டிற்கு பாஸ்வோர்ட்டுகள்..

இவ்வளவுக்கு மத்தியில்,இப்போது உள்ள கம்பெனியை விடுத்து, வேறு கம்பெனியில் ஆணி புடுங்க ஆசைப்பட்டு, naukri, monsterindia போன்றவற்றில் வேலைதேட எண்ணி உள்நுழைய அவற்றிற்கான பாஸ்வோர்ட்..

நடுவில் எங்கயாச்சும் வெளியில் உலாத்த செல்லும்போது, வழியில் ஏதாவது வாங்க நினைத்து, தேவையான பணம் பெற ATM சென்டர்களுக்கு சென்று அட்டையை நீட்டினால், அங்கும் பாஸ்வோர்ட்..
(அதுவும், ஊரில் உள்ள ஒவ்வொரு வங்கியிலும் அக்கவுண்ட் ஆரமித்து ATM கார்ட் வைத்திருப்பதால்..
அவ்வளவு கார்டுக்கும் ஒவ்வொரு பாஸ்வோர்ட்வேறு..)


இப்படி எங்கு நோக்கினும் பாஸ்வோர்ட் மயமாக இருந்தால், ஒருமனுசன் எவ்ளோ பாஸ்வோர்ட்ஐத்தான் நியாபகம் வைத்திருப்பான்..

இதுவரைக்கும் வாழ்க்கையில் பாஸ்வோர்ட்டே உபயோகிக்காதவர்களின் நலசங்கம் சார்பாக,
"தனி ஒரு மனிதனுக்கு பாஸ்வோர்ட் இல்லையேல்.. (வேறு என்ன செய்ய முடியும்..) புதிதாய் பெற்றிடுவோம்.."னு சொல்லிட்டு கிளம்புகின்றேன்.. நன்றி.. வணக்கம்..