Friday, May 15, 2009

அன்பின் வடிவாய் ஆட்டோ ஓட்டிகள்..!

தலைப்பு எப்படி இருக்கு..? தலைப்ப கேட்டாலே சும்மா ஜிவ்வுன்னு ஏறுதோ..?

இது நான் (பெங்களூருவில்) சந்தித்த மற்றும் (சென்னையில்) கேள்விபட்ட இரண்டு ஆட்டோ ஓட்டிகளை பற்றியது..


பொதுவாக நமக்கு ஆட்டோ டிரைவர்கள் என்றால் உடனே நியாபகம் வருபவைகளில் சில, அவர்களின், மீட்டருக்கு சூடு வைத்து பணம் பறிக்கும் செயல், கிட்டக்க உள்ள இடத்தை அங்கே இங்கே என்று சுத்தி பயண தூரத்தை அதிகரித்து பணம் பார்ப்பது, எகத்தாளமான பேச்சுகள் நடவடிக்கைகள், சில ஏமாற்று வேலைகள் இவைகள் தான்..


ஆனால் எதிலும் நல்லது கெட்டது உள்ளது போல், இவர்களின் கூட்டத்திலும் சில சேற்றில் முளைத்த செந்தாமரைகள் இருக்கத்தான் செய்கின்றன. அப்படி ஒரு ஆட்டோ டிரைவரை நான் சந்தித்தது பெங்களூருவில்..


சென்ற வருடம், ஆறு ஏழு மாதங்களாக அனிமேசன் துறையில் வேலைதேடிக்கொண்டு இருந்த போழ்து, சமயத்துக்கு உதவும் வகையில், கோயமுத்தூரில், இருவர் மட்டுமே கொண்ட அலுவலகத்தில், மூன்றாவது ஆளாக, வெப் டெக்னாலஜி துறையில் வேலை செய்ய வாய்ப்பு கிடைத்தது..


சரி சும்மா இருப்பதற்கு இதிலாவது வேலை செய்யலாமென பொட்டியை கட்டிக்கொண்டு, பேருந்து நிலையம் செல்ல ஆட்டோ ஒன்றை அழைத்தேன்.. அவரிடம் வாடகை எவ்வளவு என கேட்டதற்கு அவர் சொன்னது 120 ரூபாய் என நியாபகம்.. சிறிது நேர பேரத்திற்கு பிறகு அவர் சொன்னது 100 ரூபாய்.. நான் கேட்டது 70 ரூபாய்.. ஆனால் அவர் 100 ரூபாய்க்கு கீழ் மசியவில்லை..


சரி தொலையட்டும் என்று ஏறி உக்காந்தவுடன் பேச்சுகொடுக்க ஆரமித்தார்.. நான் கொண்டுசென்ற கணினியின் பெட்டியில் தமிழில் எழுதி இருந்ததை பார்த்து நீங்க தமிழா என கேட்க இருவருமே தமிழ் தான் என அறிந்து இருவருமே மகிழ்ந்தோம்.. அவர் அவரது மனைவி, குழந்தைகள் என்று அவரின் குடும்பத்தை பற்றி விலாவாரியாக சொல்லிவிட்டு, நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன்.. இப்போ எங்கே போய் கொண்டு இருக்கிறேன் என்றெல்லாம் விசாரிக்க ஆரமித்தார்..


நானும் வேலை தேடி அலைந்துவிட்டு இப்போது செய்ய போய்க்கொண்டு உள்ள வேலையை பற்றி எல்லாம் சொன்னதும், அவரால் எனக்கு இந்த IT துறையில் உதவ முடியுமெனவும், உதவி வேண்டுமா எனவும் கேட்டார்.. எனக்கு ஆச்சரியம் மேலோங்க, உங்களால் எப்படி முடியுமென கேட்டேன்..


அவர் ஆட்டோ ஓட்டும் போது, சில சமயம் பகுதி நேர வேலையாக சில IT துறையில் மேல்மட்டத்தில் உள்ள பலருக்கு அவர்களின் கார் டிரைவராக வேலை செய்வதாகவும், அதில் பலர் இவருக்கு ரெகுலர் கஸ்டமர் எனவும் சொன்னார்.. இவரின் சிபாரிசின் பேரில் சிலருக்கு வேலையும் கிடைத்திருப்பதாகவும், நான் விரும்பினால் எனக்கும் உதவுவதாகவும் சொன்னார்..


உண்மையில் அவரால் முடியுமோ இல்லையோ, சும்மா உதவிசெய்கிறேன் என்று ஒரு ஜீவன் சொல்வதே நமக்கு புது உற்சாகத்தை கொடுக்குமல்லவா.. இருப்பினும், இப்போது எனக்கு இந்த துறையில் அனுபவம் என்று ஏதும் இல்லை. இப்போது கிடைத்துள்ள வேலையில் ஒருவருடமாவது பணியாற்றி கிடைக்கும் கொஞ்சநஞ்ச அனுபவத்துடன் அடுத்த ஆண்டு வேண்டுமானால் வருகிறேன் என்று சொல்லிவிட்டு வந்தேன்..


அவரோ விடாப்பிடியாக அவரது கைப்பேசி என்னை கொடுத்து கண்டிப்பாக அழைக்கவேண்டுமென கூறி பாசமழையை பொழிந்துவிட்டார்.. பேருந்து நிலையம் வந்ததும் ஏற்கனவே பேசியது போல் 100 ரூபாயை கொடுக்கவும், நான் சொன்ன 70 ரூபாயை மட்டும் எடுத்துக்கொண்டு மீதி பணத்தை திருப்பி கொடுத்துவிட்டார்..


பேசிய பணத்தைவிட அதிகமாக பிடுங்கிக்கொள்ளும் இந்த காலத்தில், இப்படி அவர் செய்தது உண்மையில் உள்ளுக்குள் என்னை ஏதோ செய்துவிட்டது.. பின் நான் வீட்டுக்கு வந்தபிறகு, ஆறு மாதங்கள் கழித்து, சும்மா அழைத்து பார்க்கலாமென அவரை அழைத்தபோது, டக்கென அடையாளம் கண்டுகொண்டு நலம் விசாரித்தபோது மிகவும் நெகிழ்ந்துவிட்டேன்..


ஒருசில நிமிடங்களில் முடிந்துவிட்ட ஒருபயணத்தில் இப்படி ஒரு நல்ல உள்ளத்தினை கண்டத்தில் எனக்கு இப்போவும் ரொம்ப பெருமிதம் உண்டு..

+++++++++++++++


அடுத்து நான் சொல்லப்போவது சென்னையில் ஒரு ஆட்டோ டிரைவரை பற்றி..


என் பக்கத்து வீட்டு இளைஞான் ஒருவர் ஸ்ரீலங்காவில் ரோட்டோரம் நடை பாதையில் துணிவிற்கும் தொழில் செய்துவந்தான். அவன் உள்ள இடமோ ஏதோ கடல் பகுதிக்கு அருகிலாம்.. ஒருநாள் அவன் அந்த கடல் பகுதியில் நடந்து சென்றுகொண்டு இருந்த போதுதான் சுனாமி பேரலை உருவாகி அந்த ஏரியாவையே நாசம் செய்து உள்ளது..


எதிர்பாராத இந்த நிகழ்வின் போது மயக்கமடைந்துவிட்ட அவர் கண்விழித்தபோது இருந்தது 35 to 40 கிலோமீட்டர்கள் தள்ளி இதுவரை அவர் சென்றிராத ஏரியாவில் அமைந்த ஒரு சிறு குன்றில் வெறும் ஜட்டியுடன், ஒரு கை உடைந்த நிலையில் படுத்துகிடந்துள்ளார்..


எப்படியோ அங்கு நிவாரண பொருளாக கிடைத்த ஆடைகளை உடுத்திக்கொண்டு, அங்கு இருந்தவர்களின் உதவியுடன் சென்னை இரயில் நிலையம் வந்து சேர்ந்துள்ளார். ஆனால் அங்கு இருந்து சொந்த ஊரான ஈரோட்டுக்கு வரவும், அப்போதைய பசிக்கு தேவையான உணவை வாங்கவும் அவரிடம் பணம் இல்லை..


ஒன்றிரண்டு நாட்கள் அவர் சாப்பிட்டு இருக்கவில்லையென நியாபகம்.. அந்த நெடிய பசி மயக்கத்தில், உடைந்த கையுடன், இரயில் நிலையத்தின் வெளிப்புறத்தில் சுற்றிக்கொண்டு இருந்ததை பார்த்து ஒரு ஆட்டோ டிரைவர் என்னவென்று விசாரிக்க, இவர் நடந்ததை சொல்லி இருக்கிறார்..


உடனே, அந்த ஆட்டோ டிரைவர், அவரின் சொந்த செலவில் இவரின் பசியாற்ற உணவு வாங்கி கொடுத்து, ஊருக்கு இரயில் டிக்கெட்டும் எடுத்துகொடுத்து, அவரை வண்டி ஏற்றி ஊருக்கு அனுப்பி வைத்துவிட்டு, ஊரில் உள்ள இவரின் உறவினருக்கும் போன் செய்து தகவல் கொடுத்து உள்ளார்..


எந்த பிரதிபலனும் எதிர் பாராமல் அவர் செய்த அந்த உதவியை என்னவென்று சொல்வது..? ஆட்டோ டிரைவர்கள் என்றாலே, அதுவும் சென்னையில் உள்ள ஆட்டோ டிரைவர்கள் என்றாலே வெறுப்பின் உச்சத்தை அடையும் நமக்கு இவரை போன்றவர்கள் கண்ணுக்கு தட்டு படுவதே இல்லை(யோ)..


இவர்கள் மூலம் நான் அறிந்த ஒன்று, எங்கும் எதிலும் நல்லதும் இருக்கும் தீயதும் இருக்கும்.. தீயதை மட்டுமே காண சாத்தியப்பட்ட இடத்திலும் கூட கண்டிப்பாக கொஞ்சமேனும் நல்லவையும் இருக்கும்..

அப்புறம்.., இவர்கள் இருவருக்குமே எனது நன்றிகள் உரித்தாகுக..


12 comments:

இராகவன் நைஜிரியா said...

நீங்க சொல்வது போல் நிறைய ஆட்டோ ஒட்டுனர்கள் சென்னையில் உண்டு. ஒரு சிலர் செய்யும் தவறுகள் அனைவரையும் பாதிக்கின்றது. ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் கலந்த மாதிரிதான் இது.

பல நல்லவர்கள் இருக்கும் இடத்தில், சில கெட்டவர்கள் போதுமானது அனைவரது பேரையும் கெடுக்க.

सुREஷ் कुMAர் said...

//
பல நல்லவர்கள் இருக்கும் இடத்தில், சில கெட்டவர்கள் போதுமானது அனைவரது பேரையும் கெடுக்க.
//
உண்மை தான் அண்ணா..

Anonymous said...

உதாரணமாய் இரண்டு சம்பவங்கள்....
முகம் தெரியாத அந்த மனிதர் சில நிமிடங்களில் ஏற்படுத்திக் கொண்ட அன்னோன்னியம் உதவும் நோக்கம் மொழியால் ஏற்பட்ட ஈர்ப்பு ம்ம்ம் ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்பது தான் நினைவுக்கு வருகிறது......

सुREஷ் कुMAர் said...

வாங்க தமிழ்..
உண்மை தான்..
ஆமா, அங்க யாரு ஏழை..?
உதவ முட்பட்ட அவரா..?
உதவி தேவைபட்ட நானா..?

Vijayashankar said...

Can you please give the first auto drivers no? I am in search of a job.

सुREஷ் कुMAர் said...

மன்னிக்கவும் Vijay நண்பா..
அவரின் அலைப்பேசி என்னை தொலைத்துவிட்டதினால் ஏற்ப்பட்ட வருத்தத்தினால் தான், இந்த இடுகையையே இட்டுள்ளேன்..

உதவ இயலாமைக்கு மன்னிக்கவும்..

Chandru said...

plz give ur mail id to vnchandru@gmail.com

सुREஷ் कुMAர் said...

முதல் வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றிகள் பாலா..
தொடர்ந்து வாருங்கள்..

தேவன் மாயம் said...

அவரோ விடாப்பிடியாக அவரது கைப்பேசி என்னை கொடுத்து கண்டிப்பாக அழைக்கவேண்டுமென கூறி பாசமழையை பொழிந்துவிட்டார்.. பேருந்து நிலையம் வந்ததும் ஏற்கனவே பேசியது போல் 100 ரூபாயை கொடுக்கவும், நான் சொன்ன 70 ரூபாயை மட்டும் எடுத்துக்கொண்டு மீதி பணத்தை திருப்பி கொடுத்துவிட்டார்..////

சே!! நல்ல மனிதருங்க!!

सुREஷ் कुMAர் said...

//
thevanmayam said...
சே!! நல்ல மனிதருங்க!!
//
ஆம் சகா..
அந்த நல்மனதிற்காக தான் இந்த இடுகையே.. :)

வருகைக்கும், கருத்துக்கும் நன்றி thevanmayam..
தொடர்ந்து வாருங்கள்..

सुREஷ் कुMAர் said...

//
Chandru said...
plz give ur mail id
//
எனது ஈ மெயில் முகவரி..
aswin105.suresh@gmail.com நண்பா..

cheena (சீனா) said...

அன்பின் சுரேஷு

நல்ல மனிதர்களை அவ்வப்போது நினைவு கூறுவது நன்று

நல்வாழ்த்துகள்