Thursday, July 23, 2009

என்ன ஊருடா சாமீய்ய்ய் 2..

இந்த தொடர் இடுகையின் முதல் பகுதிக்கு இங்கே செல்லவும்..

2. பெண்களுக்கான வினோத சட்டதிட்டங்கள்..

உலக வழக்கப்படி.. இங்கயும் பெண்களுக்கான சட்டங்கள் கொஞ்சம் மாதிரியானவைதான்.. என்னபண்ண, பொறந்த ஊராப்போச்சே.. சொல்லிதானே ஆகணும்..

எங்க ஊரு கட்டுப்பாட்டின்படி பெண்கள் மறுதிருமணம் / இரண்டாவது திருமணம் செய்துகொள்ளமுடியாது.. இளம் வயதிலேயே கணவன் இறந்துவிட்டாலும் அப்பெண் கடேசிவரைக்கும் விதவையாகத்தான் வாழ்ந்தாகவேண்டும்..

ஏன்.. கட்டுப்பாட்டைமீறி திருமணம் செய்துகொண்டால் என்னான்னு தானே கேக்குறிங்க.. அப்படிசெய்துகொண்டால் பெண்ணுடன் சேர்த்து மொத்த குடும்பமுமே ஊரைவிட்டு ஒதுக்கிவைக்கப்படுவர்..

எங்க ஊரில், கோவில் பூசாரி ஒருவரின் மகளுக்கு இப்படி மறுதிருமணம் முடித்தமையால், பூசாரிபதவி பறிக்கப்பட்டு சாதியில் இருந்து தள்ளிவைக்கப்பட்டனர் என்பது ஊரின் பொன்னான வரலாற்று செய்திகளில் ஒன்று..

ஏன்.. சாதியில் இருந்து, ஊரில் இருந்து தள்ளி வைத்து விட்டால் என்ன.. வாழமுடியாதானு கேக்குறிங்களா..?

கிராமங்களில், சொந்த பந்தங்கள் இல்லாமல் ஊருக்குள் தனிமையில் வாழ்வது மிகக்கடினம்..

அதேபோல்தான் சாதிவிட்டு வேறு சாதியில் மணமுடிக்கும் மணமக்களின் குடும்பங்களும் ஊரைவிட்டு ஒதுக்கிவைக்கப்படுவர்.. இதில் அப்பெண்ணின் குடும்பத்தார் பஞ்சாயத்தார் முன்னிலையில் தவறுக்கு மன்னிப்புகோரினால் அவர்கள் மன்னிக்கப்பட்டு, மணமகனுடன் சேர்த்து பெண் மட்டும் ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்படுவாள்..
(என்ன மக்கா எப்படி இருக்கு.. )

சில வருடங்களுக்கு முன், எங்கள் ஊரைச்சேர்ந்த ஒரு பெண் வேறு சாதியை சேர்ந்த பையனை திருமணம் செய்துகொண்டதால், (பெற்றோர் மன்னிப்பு கேட்டுக்கொண்டதால் அவர்களை தவிர்த்து) கணவனுடன் சேர்த்து பெண் மட்டும் ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட வரலாறும் எங்கள் ஊரில் உண்டு..

இத்தனைக்கும் அப்படி தள்ளிவைக்கப்பட்ட காலகட்டத்தில் அந்த பையன் அரசியல் கட்சியின் சார்பாக வெற்றிபெற்று "கவுன்சிலர்" பதவியில் இருந்த ஒருவர்.. இப்படி தங்கள் சாதி பெண்ணை திருமணம் செய்துகொண்டதால்வேறு சாதியை சேர்ந்த கவுன்சிலரையே ஊரைவிட்டு ஒதுக்கிவைக்கும் நாட்டாண்மைகளின் சட்டம் எவ்வளவு சூப்பரானது..

பெண்ணின் குடும்பத்தார் பஞ்சாயத்தில் மன்னிப்புகோறியமையால் அவர்கள் மன்னிக்கப்பட்டு மணமக்கள் மட்டும் தள்ளிவைக்கப்பட்டனர்..

இந்த சம்பவத்திற்குப்பின், கடேசியாக நடந்த "கவுன்சிலர்" தேர்தலில் இம்முறை அந்த பெண் அவரின் கணவன் சார்ந்துள்ள அந்த அரசியல் கட்சியின் சார்பாக கணவனின் துணையுடன் பங்கேற்று வெற்றியும் பெற்றுவிட்டார்

இப்போது சாதியில் இருந்து / ஊரைவிட்டு தள்ளிவைக்கப்பட்ட தங்கள் ஊரைச்சேர்ந்த பெண்ணே எங்கள் ஊருக்கு கவுன்சிலராக உள்ளார்.. (நல்லா இருக்குல்ல..)

பெண்களுக்கு உண்டான இந்த கட்டுபாடுகள் ஆண்களுக்கும் உண்டோ என்னவோ தெரியலை..

ஆண்களுக்கு எதிரானவை என்றாலே அச்சட்டங்கள் இருட்டினில் கண்ட கருப்புத்திரையாய் காணாமல் போய்விடுகின்றன..

எங்கள் ஊரில் பெண்களே இந்த கட்டுப்பாடுகளால் அதிகம் பாதிக்கப்படுவதாலே அவற்றை இங்கு கூறுகிறேன்..

அடுத்த இடுகையில், இப்படி சாதியை கொண்டாடும் எம்மக்கள் ஊரிலுள்ள இசுலாமிய மக்களுடன் கொண்டுள்ள சுமுகமான நட்பு.. மற்றும்

கடந்த ஆறு மாதங்களில் யெஸ்ஸான ஏழுக்கும் அதிகமான காதல் ஜோடிகளின் சாதனைகள்..

இவற்றில் சில, குழப்பமான உறவுமுறைகளுடன் கூடிய ஜோடிகள் என்பதாலும், சிலர் என்னுடைய பள்ளி தோழர்கள் என்பதாலும் சிறப்புபெறுகின்றனர்..


28 comments:

சூரியன் said...

//ஆறு மாதங்களில் யெஸ்ஸான ஏழுக்கும் அதிகமான காதல் ஜோடிகளின் சாதனைகள்..//

சாதனை கதைகள எழுதுங்க .. பல நாடோடி கதைகள் ..

உங்களுக்கு நாடோடி அனுபவம் இருக்கா ?

சந்ரு said...

நல்ல கருத்துக்கள் நண்பரே இன்னும் எழுதுங்கள்..

நட்புடன் ஜமால் said...

ராஸா ரொம்ப விவரமாத்தான் எழுதுறீங்க

[[இளம் வயதிலேயே கணவன் இறந்துவிட்டாலும் அப்பெண் கடேசிவரைக்கும் விதவையாகத்தான் வாழ்ந்தாகவேண்டும்..]]


எந்த நூற்றாண்டுப்பா ...

சின்ன அம்மிணி said...

இன்னுமா இப்படி நடக்குது?

SanjaiGandhi said...

Vote panniyachida..

தமிழரசி said...

ஆம் கல்வியறிவு இல்லாமையே இவற்றிற்கு காரணமும் கூட...ஊர் கட்டுப்பாடுன்னு ஒன்ன வச்சி பயமுறுத்தி அடிமைத்தனம் பண்ணியிருக்காங்க...ஆனால் காலச் சுழற்சி இப்போது பெரும்பாலும் சுமுகமான சூழ்னிலையே.... நல்லா பொருமையா தருகிறீர்கள் பதிவை..இப்பவே அடுத்த பதிவின் ஆர்வத்தை தூண்டியாச்சி..

பிரியமுடன்.........வசந்த் said...

என்ன ஊருடா சாமீய்ய்?

:(

வோட் போட்டாச்சு சுரேஷ்.....தமிழ் கூறும் நல்லுலகம் காணவேண்டும் இப்பதிவை செல்வேந்திரன் போன்றோர் இதற்க்கு தீர்வு காண வேண்டும்......

ganesh said...

என்னங்க ஜமால்... நீங்க எந்த உலகத்துல இருக்கீங்க... நான் ஒரு இடுகை போட்டுருக்கேன்... போய்ப்பாருங்க...
http://ganeshwrites.blogspot.com/2009/07/62.html

RAMYA said...

இதை படிக்கவே மனசுக்கு ரொம்ப கஷ்டமா போச்சு சுரேஷ். என்ன சொல்றதுன்னே தெரியலை. ஆனால் காலம் மாறும் இந்த கைம்பெண்களின் நிலைகளும் கண்டிப்பா ஒரு நாள் மாறத்தான் போகுது பாருங்களேன். சமுதாய எழுச்சி வரும். :((

நட்புடன் ஜமால் said...

ganesh said...

என்னங்க ஜமால்... நீங்க எந்த உலகத்துல இருக்கீங்க... நான் ஒரு இடுகை போட்டுருக்கேன்... போய்ப்பாருங்க...]]

நண்பர் கணேஷ்

[[
எந்த நூற்றாண்டுப்பா ...]]

இப்படி நான் போட்டது, இப்பவெல்லாம் நடக்கவில்லை என்று சொல்லவில்லை

இன்னமும் இப்படி இருக்காங்களேன்னு தான்.

வால்பையன் said...

ஆணாதிக்க கிராமமாக இருக்கிறது!

மற்றோரு வேண்டுகோள்!
உங்கள் ஊரில் தலித்துகளுக்கு, சிறுபான்மையினருக்கு எதிரான அடக்குமுறைகள் இருந்தால் சொல்லுங்கள், அதை மாற்றி அமைக்க உடன் வருகிறேன் குழுவோடு!

பழைய அரைவேக்காடுகள் அதுவும் வேகாமல் நம்மையும் வேகவிடாமல் செய்யும். அடுத்த தலைமுறைக்கு சாதி என்பதே என்னவென்று தெரியக்கூடாது நண்பரே!

நாஞ்சில் நாதம் said...

இன்னமும் இப்படி தான் இருக்காங்களா?

நாஞ்சில் நாதம் said...

தல உங்க பேர்ல உள்ள ஹிந்தி எழுத்துக்கு என்ன அர்த்தம்

सुREஷ் कुMAர் said...

//
சூரியன் said...

//ஆறு மாதங்களில் யெஸ்ஸான ஏழுக்கும் அதிகமான காதல் ஜோடிகளின் சாதனைகள்..//

சாதனை கதைகள எழுதுங்க .. பல நாடோடி கதைகள் ..

உங்களுக்கு நாடோடி அனுபவம் இருக்கா ?
//
இன்னும் நாடோடி பாக்கலியே..

நம்மலே ஓடிட்டு இருக்கோம்.. இதுல எங்கத்த நாடோடி பாக்குறது..
விரைவில் பார்க்க முயற்சி நடக்குது..

सुREஷ் कुMAர் said...

//
சந்ரு said...

நல்ல கருத்துக்கள் நண்பரே இன்னும் எழுதுங்கள்..
//
நன்றி சந்ரு
தொடர்ந்து வாருங்கள்..

सुREஷ் कुMAர் said...

//
நட்புடன் ஜமால் said...

ராஸா ரொம்ப விவரமாத்தான் எழுதுறீங்க

[[இளம் வயதிலேயே கணவன் இறந்துவிட்டாலும் அப்பெண் கடேசிவரைக்கும் விதவையாகத்தான் வாழ்ந்தாகவேண்டும்..]]

//
விவரமாத்தான் எழுதுறனா..

ஏண்ணா.. என்னாச்சு.. ஏதும் தப்பா சொல்லிட்டனா..

//
எந்த நூற்றாண்டுப்பா ...
//
எல்லாம் இன்னைக்கும் எங்க ஊர்ல இருக்கறததான் சொல்லிருக்கேன்..

இன்னைக்குன்றது எந்த நூற்றாண்டுங்ணோவ்..

सुREஷ் कुMAர் said...

//
சின்ன அம்மிணி said...

இன்னுமா இப்படி நடக்குது?
//
ஆமாங்க அம்மிணி.. இன்னும் இப்படித்தான்..

முதல்வருகைக்கு நன்றி அம்மிணி..

सुREஷ் कुMAர் said...

//
SanjaiGandhi said...

Vote panniyachida..
//
நன்றிங்ணோவ்..

सुREஷ் कुMAர் said...

//
தமிழரசி said...

ஆம் கல்வியறிவு இல்லாமையே இவற்றிற்கு காரணமும் கூட...ஊர் கட்டுப்பாடுன்னு ஒன்ன வச்சி பயமுறுத்தி அடிமைத்தனம் பண்ணியிருக்காங்க...ஆனால் காலச் சுழற்சி இப்போது பெரும்பாலும் சுமுகமான சூழ்னிலையே....
//
அப்படி இல்லைங்க..
எங்க ஊர்ல அப்டி சுமுகமா இல்லையேனுதான் இங்க எழுதி இருக்கேன்..

सुREஷ் कुMAர் said...

//
பிரியமுடன்.........வசந்த் said...

என்ன ஊருடா சாமீய்ய்?

:(

வோட் போட்டாச்சு சுரேஷ்.....தமிழ் கூறும் நல்லுலகம் காணவேண்டும் இப்பதிவை செல்வேந்திரன் போன்றோர் இதற்க்கு தீர்வு காண வேண்டும்......
//
முதல் பகுதியைவிட இரண்டாம் பகுதிக்கு தலைப்பு சரியா இருக்கோ..

கண்டிப்பா நீங்க சொல்வது நடக்கும்.. (எப்போனுதான் தெரியலை..)

நம்மளால இங்கதான் எழுத முடியும்.. ஊருக்குள்ள எதும்பண்ணமுடியாது.. நான் சொல்லிட்டு இங்க இருக்கலாம்.. என் குடும்பம் அங்கதானே இருக்கு..

सुREஷ் कुMAர் said...

//
ganesh said...

என்னங்க ஜமால்... நீங்க எந்த உலகத்துல இருக்கீங்க... நான் ஒரு இடுகை போட்டுருக்கேன்... போய்ப்பாருங்க...
http://ganeshwrites.blogspot.com/2009/07/62.html
//
கருத்துக்கு நன்றி ganesh..

ஜமாலின் விளக்கம் வேறுமாதிரி இருக்கு.. முதலில் நானும் உங்களைபோலத்தான் தவறாய் புரிந்துகொண்டேன்..

सुREஷ் कुMAர் said...

//
RAMYA said...

இதை படிக்கவே மனசுக்கு ரொம்ப கஷ்டமா போச்சு சுரேஷ். என்ன சொல்றதுன்னே தெரியலை. ஆனால் காலம் மாறும் இந்த கைம்பெண்களின் நிலைகளும் கண்டிப்பா ஒரு நாள் மாறத்தான் போகுது பாருங்களேன். சமுதாய எழுச்சி வரும். :((
//
நன்றி அக்கா..

இதுக்காக நீங்க ஏன் கவலைப்படுரிங்க..
எல்லாம் அடுத்தடுத்த படித்த தலைமுறையினர் வரும்போது தானாசரியாகிடும்..

सुREஷ் कुMAர் said...

//
நட்புடன் ஜமால் said...

ganesh said...

என்னங்க ஜமால்... நீங்க எந்த உலகத்துல இருக்கீங்க... நான் ஒரு இடுகை போட்டுருக்கேன்... போய்ப்பாருங்க...]]

நண்பர் கணேஷ்

[[
எந்த நூற்றாண்டுப்பா ...]]

இப்படி நான் போட்டது, இப்பவெல்லாம் நடக்கவில்லை என்று சொல்லவில்லை

இன்னமும் இப்படி இருக்காங்களேன்னு தான்.
//
உங்களின் கருத்தை தவறாய் புரிந்துகொண்டதை உணர்ந்து நன்முறையில் விளக்கியமைக்கு நன்றி அண்ணா..

सुREஷ் कुMAர் said...

//
வால்பையன் said...

ஆணாதிக்க கிராமமாக இருக்கிறது!
//
கொஞ்சம் சரி.. ஆனா இவற்றை கொண்டுமட்டுமே முழுதும் அப்படி தீர்மானித்துவிட முடியாது..

உலக வழக்கப்படி இங்கையும் வீட்டு நிர்வாகத்தில் தங்கமணிகளின் ராஜ்ஜியம்தான்.. அவர்களை மீறி ரங்கமணிகள் ஏதும் செய்யமுடியாது..

//
மற்றோரு வேண்டுகோள்!
உங்கள் ஊரில் தலித்துகளுக்கு, சிறுபான்மையினருக்கு எதிரான அடக்குமுறைகள் இருந்தால் சொல்லுங்கள், அதை மாற்றி அமைக்க உடன் வருகிறேன் குழுவோடு!
//
அதற்கு அவசியமே இல்லை வால்..

இவர்களின் ஆளுமை பெரும்பாலும் அவர்களின் ஜாதிக்குள் மட்டுமே.. ஊரில் பெரும்பகுதியினர் ஒரே ஜாதிஎன்பதால் ஜாதிக்கட்டுப்பாடு கிட்டத்தட்ட ஊர் கட்டுப்பாடாய் உள்ளது அவ்வளவே..

இவர்களின் கட்டுப்பாடுகள் இவர்களுக்குள் மட்டுமே.. இவர்களின் கட்டுப்பாடுகளால் தலித்துகள், சிறுபான்மையினருக்கு ஏதும் பிரச்சனை இல்லை..

//
பழைய அரைவேக்காடுகள் அதுவும் வேகாமல் நம்மையும் வேகவிடாமல் செய்யும். அடுத்த தலைமுறைக்கு சாதி என்பதே என்னவென்று தெரியக்கூடாது நண்பரே!
//
சரிதான்..

இப்போதுள்ள தலைமுறையினர் எவ்வளவோ முன்னேறி உள்ளனர்..
இனிவரும் காலங்களில் நிச்சயம் இந்த நிலை மாறும்..

सुREஷ் कुMAர் said...

//
நாஞ்சில் நாதம் said...

இன்னமும் இப்படி தான் இருக்காங்களா?
//
ஆமாங் நாஞ்சில் நாதம்..

முதல் வருகைக்கு நன்றி..

सुREஷ் कुMAர் said...

//
நாஞ்சில் நாதம் said...

தல உங்க பேர்ல உள்ள ஹிந்தி எழுத்துக்கு என்ன அர்த்தம்
//
வாழ்க்கைக்கே அர்த்தம் தெரியாம சுத்திட்டு இருக்கேன்..

இதுல பேருக்கு அர்த்தம்கேட்டாவே அநியாயம்..
நீங்க அதுல இருக்குற மொத எழுத்துக்கு அர்த்தம் கேக்குரிங்லே..
இது ரொம்ப அநியாயம்..

ஷ‌ஃபிக்ஸ் said...

நல்ல ஊருடா சாமீ....!! கொஞ்சம் சாக்கிரதையா இருந்துக்கோங்க சுரேஷ்!!

டக்ளஸ்... said...

வேறென்ன,தலைப்புதான்..!