Tuesday, March 24, 2009

குறுக்கு புத்தி..

இது நம்ம எல்லாம் பின்னி பெடலெடுத்த exams பத்தினது..

exams'na என்ன மாதிரி ஆளுங்களுக்கு எல்லாம் வேப்பங்காய் தான்..
நாங்க எல்லாம் கிளாஸ் ரூம்'ல ரெஸ்ட் எடுக்க கூட first பெஞ்ச் பக்கம் ஒதுங்காத நல்லவங்க. ஏன்னா, ஒரு வேல நம்ம அங்க போயி, நல்லா படிச்சு அந்த பசங்களுக்கு கெட்ட பேர வாங்கி தந்துட கூடாதுல..? அதான்.
அதூம் இல்லாம, அந்த ஒரு semester'ku, ஏகப்பட்ட புக்ஸ்'ல ஆயிரகணக்கான pages'a படிச்சு அவங்க கேக்கற ஐம்பது அறுபது கேள்விகள்ல பத்து இருபாத செலக்ட் பண்ணி.. அதுல ஏழு எட்டு கேள்விகளுக்கு answer எழுதி.., இதெல்லாம் ஒரு பொழப்பா.. சும்மா கடுப்படிச்சுகிட்டு..
என்ன பொறுத்த வரைக்கும் semesters, exams'navay ஒரு கொள்கையோட தான் செயல்படுறது. எங்கள் கொள்கையின் சாராம்சம் என்னனா, எந்த கிலாஸ்கும் note'nu ஒன்ன கொண்டு போயி மாஸ்டர்'a கேவலப்படுத்திட கூடாது. ஏனா, குருவோட சாபம் பொல்லாதது. sem final மாடல் எக்ஸாம் வரைக்கும் கண்டிப்பா புக்'e வாங்க கூடாது. அப்புறம், யாராச்சு books'a வாங்கி xerox போட்டு பத்தரமா எடுத்து வெச்சுக்கணும். (arrears எழுத வேணும்ல.. அதுக்கு தான்.)

Exam ஆரம்ப்திச்சவொடனே, சில பல நல்ல white sheets'a வாங்கி பிட்டு பிட்டா கட் பண்ணி நோட்ஸ் எடுக்கணும். class'la நோட்ஸ் எடுத்தா மாஸ்டர்'a அவமதிச்சா மாதிரி. எக்ஸாம்'கு நோட்ஸ் எடுக்கட்டா, அது எக்ஸாம்'a அவமதிச்சா மாதிரி. So, நோட்ஸ் எடுத்துக்கணும். கொஞ்சும் descent'a சொன்னா, பிட் எடுத்துக்கணும்.

"பிட்டடித்து வாழ்வாரும் வாழ்வர் மற்றெல்லாம்
புக் படித்து மாழாதவர்."

என்னோட ரொம்ப முக்கியமான கொள்கை அடுத்தவரை சார்ந்து செயல் ஆற்றாமை.
எவ்ளோ பிட் தேவ பட்டாலும் ஒண்டியா ஒக்காந்து அத்தனையும் எழுதிட்டு போனம்னா, எல்லா பிட்டும் நமதே.. வெற்றியும் நாமதே.., மாட்டுனா சிக்கலும் நமதே.. யாருக்கும் பதில் சொல்ல தேவ இல்ல பாருங்க..
எனக்கு ஓவியம் வரையர்த்துனா ரொம்ப புடிச்ச விசயம்கரதால micro tip pen ஒன்னு எப்போமே வெச்சிருப்ப. அது 2 in 1'a இந்த மாதிரி நேரத்துல பயன்படும். என்னோட 7'th செமஸ்டர்'ல ஒரு எக்ஸாம்'கு 28 bits எடுத்துட்டு போயிருந்தேன். (நம்ப முடியலையோ.. உண்மையாதான் சொல்றேன்..நம்புங்க..)
அது தான் அந்த செமஸ்டர்'oda final எக்ஸாம். பத்து மணி exam'ku அடிச்சு புடிச்சு எப்டியோ 10.15 ku போயிட்டேன். இதுக்கே வாத்தி கடுப்புல இருந்தாரு. எல்லா நல விசாரிப்பு, அர்ச்சனை எல்லாம் முடிஞ்சு, என்னோட documents'oda பத்திரமா போயி ஒக்காந்தா, நான் கொண்டு போன ஒண்ணுகூட அதுல கேக்கல. question பேப்பர எதாச்சும் மாத்தி குடுத்துடானுங்கலோனு doubt வந்திடுச்சு.. என்னோட விதிய நொந்துகிட்டு கொண்டு போன 56 பக்க பிட்ட வெச்சு answer சீட்'ல ஆறு பக்கத fill பண்ணிட்டு கெளம்பலாம்னு பாத்தா, எனக்கு முன்னாடி பேன்ட் போட்ட சனி ஒன்னு சப்பணம் போட்டு ஒக்காந்துட்டு இருந்துச்சு. அது என்னோட பிட்டையும் பாத்துடுச்சு.
ஒரு 15 to 17 sheets அவருகிட்ட மாட்டிகிச்சு. அதுல நா எழுத பயன்படுத்தினது 0.5mm micro tip pen. ,சுமாரா ஒரு 25 மார்க் answer'a 3.5 X 10 CM பேப்பர்'ல எழுதிருப்பேன். அவருக்கு வேற 45 to 50 வயசு இருக்கும். மனுஷ பாவம் நொந்து போய்ட்டாரு. கிட்ட வெச்சு பாத்தாரு, அப்புறம் கொஞ்சம் தள்ளி வெச்சு பாத்தாரு.. ம்ம்ஹும் ஒன்னும் தெரில. ஒரு வார்த்தைய கூட அவரால படிக்க முடியல..
மொதல்லையே கடுப்புல இருந்த மனுஷன் இப்போ ரொம்ப கடுப்பாயிட்டாரு. அப்புறம் என்ன.. ஊரே பாரு, நாடே பாருன்னு போலந்து கட்டிட்டாரு.
அப்போ தான் ஒரு தீர்கமான முடிவு ஒன்னு பண்ணினேன். என்னான்னு பாக்குறிங்களா..? கொஞ்சம் மாநஸ்தன்னா அடுத்த semester'ku படிச்சுட்டு வந்து exam எழுதி பாஸ் பண்ணி காட்டுறேன்னு நெனச்சிருப்பேன்.. ஆனா நாம அப்டி நெனைக்க முடியுமா.. அதனால, இனிமே பிட் வெச்சு எக்ஸாம் எழுதினா, எக்ஸாம் சீக்கிரம் முடிச்சாலும், எல்லாரும் கெலம்பதினதுக்கு அப்புறமாதான் கெளம்பனும்'னு.. அப்போ தானே எல்லா பேப்பரையும் பொறுமையா மாட்டிக்காம திருப்பி எடுத்துட்டு வர முடியும். கடந்த 8 semesters'la இந்த ஒன்னே ஒன்னு தான் கரும்புள்ளியா போச்சு.. ஆனா ஒன்னு, அதுல என்ன ஹிட்'னா.., அப்டி 6 பக்கத்த fill பண்ணிட்டு வந்த அந்த paper'layum நல்லபடியா பாஸ் பண்ணிட்டேன்.
இப்போ எதாச்சும் PG பண்ணலாம்னு இருக்கேன்.. அதுலயாச்சும் படிச்சு எக்ஸாம் எழுதனும்,னு யோசிச்சதால அந்த எண்ணம் நிலுவையில இருக்கு.. பாப்போம் கொள்கை என்ன பண்ணும்னு..

இப்படிக்கு பிட்டடித்து வீணாய் போகாதவர்கள் சங்கத்தின் கடேசி தொண்டன்..

5 comments:

thevanmayam said...

"பிட்டடித்து வாழ்வாரும் வாழ்வர் மற்றெல்லாம்
புக் படித்து மாழாதவர்.////

புதுக்குறள் அருமை!!!

thevanmayam said...

நல்லா இருக்கு கதை!

Namakkal Shibi said...

:)

சுரேஷ் குமார் said...

//
நல்லா இருக்கு கதை!

//
இப்போ இது இங்க கதையா இருந்தாலும்.. அப்போ அங்க இது கதையல்ல.., நிஜம்..

cheena (சீனா) said...

அது சரி

புதுக்குறள் வேறயா - ம்ம்ம்ம்

கடைசித் தொண்டனா - ---- ம்ம்ம்ம்ம்

எப்பவாச்சும் படிச்சு ஏதாச்சும் டிகிரி வாங்கி இருக்கியா - இல்லையா

நல்லாருப்பா

தமிழில் மட்டும் எழுத வராதா - ஆங்கிலக் கலப்பின்றி