Saturday, March 28, 2009

வுடுவமா நாங்க..

அங்க இங்கனு எங்கெங்கயோ ரெகமென்டேசன் எல்லாம் புடிச்சு கடைய விருச்சு யாராச்சும் கடைக்கு வருவாங்கன்னு மூணு பதிவும் போட்டாச்சு.. ஆனா இதுவரைக்கும் யாரும் இந்த பக்கம் எட்டிகூட (atleast திரும்பி) கூட பாக்கல.. இதுக்கு மேலயும் யாருமே இல்லாத கடையில டீ ஆத்தனுமா என்ன..?.
அப்டின்னு நெனச்சுட்டு இருக்கும்போது தான் கொசுவத்தி சுத்தி, செகண்ட் semester நெனப்பு வந்திடுச்சு..

அப்போ தான் பச்சி பய சுருள கட் பண்ணி ராசா கத சொன்னான்.. அந்த ராசாதி ராசா ஏதோ ஒரு நாட்டு மேல பதனாறு தபா சண்டையில arrear வெச்சு அப்பாலிக்கா வின் பண்ணுனாராம்ல.. நாம என்ன பதனாறு பதிவா போட்டுட்டு டீ ஆத்திட்டு இருக்கோம்.. இப்போ தான் மூணு போட்டிருக்கோம்.. இன்னும் (16 மைனஸ் 3) தபா பதிவ போட்டு ட்ரை பண்ணுவோம்..
//
அதுக்குள்ள கடைய தேத்திடலாம்னு ஒரு நம்பிக்கைதான்..
//
அப்போமு தேத்த முடிலனா என்ன பண்ணனு பச்சி பய புள்ள கேக்குறான்..
ஏண்டா.. அப்பேர் பட்ட ராசாக்கே பதனாறு டைம் arrear கிளியர் பண்ண சான்ஸ் குடுக்கறப்போ, நமக்கு ஒரு முப்பது முப்பத்தாறு சான்ஸ் கூடமா குடுக்காம பூடுவாங்க.. போடா போ.. போறப்ப எதாச்சும் பொருள வுட்டுட்டு போ.. வுசற வுட்டுட்டு போய்டாதனு அந்த பய புள்ளைய அமுக்கிட்டு, டீ ஆத்த ஆரம்பிச்சேன்..
நேத்து வரைக்கும் நம்மலே டீ ஆத்தி நம்மலே குடிச்சாச்சு.. இன்னிக்காச்சும், வடிவேல் மாதிரி யாரையாச்சும் கடத்திட்டு வந்தாச்சும் நம்ம கடைல டீ குடிக்க வெச்சுடனும்.. அதுக்கு என்ன டீ போடலாம்னு யோசிச்சுட்டு இருந்தப்போ தான், போன வாரம் ஆத்துன first semester டீ தூளு மீதி இருக்கறது நியாபகம் வந்திச்சு..
அப்புறம் என்ன.. அந்த தூல வெச்சு, இங்க காலேஜ் செகண்ட் semester டீய ஆத்திட வேண்டியது தான்..
//
ஒடனே நம்மள டீ மாஸ்டர் ரேஞ்சுக்கு பாக்குறத பாருயா இந்த பச்சி பய.. நக்கலு..
//
இது இந்த பரிதாப ராசாவின் நான்காவது முயற்சி.. இன்னும் (16 மைனஸ் 4) முயற்சிகள் பாக்கி இருக்கு..
ஆனா, இது இந்த ராசாவோட மெசேஜ சொல்றதுக்கான பதிவுன்றதால, இத கணக்குல சேக்கல..
//
ஆமா.. பதிவுன்னு நீ சொல்லிக்கற அந்த பழைய மூணையுமே யாரும் கணக்குல சேக்கல.. இதுல இது வேறயா..
//
So, இன்னும் (16 மைனஸ் 3) முயற்சிகள் பாக்கி இருக்கு..
தொடர்ந்து படையெடுப்போம்..
டெவெலப் பண்ணுவோம்..
வெற்றி வேல்.. // vetti vela//
வீர வேல்..
//இப்போவாச்சும் தலைப்புக்கும் இதுக்கும் கணீக்சன் கீதானு பாத்தா.. லொள்ளை தான்.. வுடுவுடு.. நம்ம முயற்சில இதெல்லாம் சாதாரணமப்பா..
//
* பின்குறிப்பு : இந்த மேட்டர்லாம் நா weekend leave'la வூட்டுக்கு போற அவசரத்துல எழுதலிங்கோ..

11 comments:

இராகவன் நைஜிரியா said...

மீ த பர்ஸ்ட்...

இராகவன் நைஜிரியா said...

இன்னும் படிக்கல...

படிச்சுடு வரேன்

இராகவன் நைஜிரியா said...

// ஆனா இதுவரைக்கும் யாரும் இந்த பக்கம் எட்டிகூட (atleast திரும்பி) கூட பாக்கல.. //

தப்பான செய்தி...

நாட்டாண்மை முதல்ல இத மாத்த சொல்லுங்க

இராகவன் நைஜிரியா said...

// இதுக்கு மேலயும் யாருமே இல்லாத கடையில டீ ஆத்தனுமா என்ன..?.//

எடுத்த வுடனேயே வியாபாரம் பிச்சுகிட்டு போக நாம என்ன அம்பானியா, டாடாவா, பிர்லாவா?

போகப் போகப் பிக்க அப் ஆகும்.

இராகவன் நைஜிரியா said...

// அதுக்குள்ள கடைய தேத்திடலாம்னு ஒரு நம்பிக்கைதான்.. //

கும்மியை நம்பினார் கைவிடப் படார்.

இராகவன் நைஜிரியா said...

// அப்போமு தேத்த முடிலனா என்ன பண்ணனு பச்சி பய புள்ள கேக்குறான்..
ஏண்டா.. அப்பேர் பட்ட ராசாக்கே பதனாறு டைம் arrear கிளியர் பண்ண சான்ஸ் குடுக்கறப்போ, நமக்கு ஒரு முப்பது முப்பத்தாறு சான்ஸ் கூடமா குடுக்காம பூடுவாங்க..//

கவலைப் படாம எழுதுங்கப்பு...

சில நாள் வேலை பளு இருக்கும், சில நாள் மத்த இடத்தில் கும்மி அடிக்க வேண்டியிருக்கும்..

அப்பப்ப இங்க வந்து கண்டுகினு போயிருவேன். டைம் கிடைச்சுச்சுன்னா பின்னூட்டம் போட்டுடுவேன்.

இராகவன் நைஜிரியா said...

// * பின்குறிப்பு : இந்த மேட்டர்லாம் நா weekend leave'la வூட்டுக்கு போற அவசரத்துல எழுதலிங்கோ.. //

அப்போ வீக் எண்டுக்குத்தான் வூட்டுக்கு போவீங்களா?

சுரேஷ் குமார் said...

இந்த கேள்வி கொஞ்சம் கஷ்டமானதா இருக்கு..
வேற எதாச்சும் ஈசியா கேளுங்க..

இராகவன் நைஜிரியா said...

// "வுடுவமா நாங்க.." //

இது தலைப்பு..

பின்னூட்டத்திற்கு பதில் போடுவது..

//சுரேஷ் குமார் said...

இந்த கேள்வி கொஞ்சம் கஷ்டமானதா இருக்கு..
வேற எதாச்சும் ஈசியா கேளுங்க..//

எப்படிங்க இதெல்லாம்?????

நட்புடன் ஜமால் said...

அண்ணா வந்தாச்சில்ல

இனி நாங்களும் ...

cheena (சீனா) said...

ராகவனத் தவிர யாருமே டீ குடிக்க வரலியா - ஓசில குடிக்க ஜமால் வந்தாரா - சரி சரி

வெற்றி வேல் வீர வேல் - உடாதீங்கடா பாவிங்களா - நல்லாருங்கடா