Saturday, May 2, 2009

தீவிரவாதியின் வயது 18..

தலைப்ப பாத்துட்டு.. ஏதோ கதை சொல்ல போறேன்னு தப்பா நெனச்சுடாதிங்க..

விஷயம் இதுதான்..

நமது இந்திய சட்டமுறைப்படி குற்றவாளிகள் அவர்களின் வயதினை அடிப்படையாக கொண்டு, 18 வயதிற்கு கீழ் இருப்பின், அவர்களின் வழக்கு சிறார் நீதிமன்றத்திலும், 18 வயதிற்கு மேல் எனில், இந்த சிறார் நீதிமன்றங்களை தவிர்த்து பிற நீதிமன்றங்களில் வழக்கு விசாரிக்கப்படு(மா)ம்..

அண்மையில் நடந்த மும்பை தாக்குதல் தொடர்பான வழக்கில் முக்கியக் குற்றவாளியான அஜ்மல் கஸாப் 18 வயதைக் கடந்திருந்தாரா என்பது பற்றி விசாரணை நடத்துமாறு டாக்டர்கள், சிறைக்காவலர்களுக்கு மும்பை தாக்குதல் குறித்த வழக்கை விசாரித்து வரும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.எல். தகிலியானி உத்தரவிட்டு இருந்தார்.

இந்த சோதனைகளின்படி கஸாப் 18 வயதுக்கும் குறைவானவர் என்று தெரியவந்தால், வழக்கு சிறார் நீதிமன்றத்திற்கு மாற்றப்படும் என்றும், சிறார் நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்பட்டால், சட்டப்படி அதிகபட்சமாக 3 ஆண்டுகள் வரை மட்டுமே சிறைத் தண்டனை விதிக்க முடியும் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில், கஸாப்பிடம் மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட டாக்டர், அஜ்மலின் எலும்பு வளர்ச்சி, பல் மற்றும் ரத்தம் ஆகியவற்றை பரிசோதித்தில் அவன் 18 வயதுக்கு குறைந்த சிறுவனல்ல, 20 வயதுடைய பெரியவன் என்பது தெரிய வந்ததாக கூறி அதற்கான மருத்துவ பரிசோதனை அறிக்கையையும் சமர்ப்பித்தார்..

இதெல்லாம் ஊரறிந்த ரகசியம்டா..
இப்போ அதுக்கு என்னான்றங்கிரிங்களா..?
இந்த செய்தியால் எனக்கெழுந்த சந்தேகங்களில் சில..

சந்தேகம் 1: ஒருவேளை, அந்த சோதனையின் போது கஸாப்பின் வயது 18'க்கும் கீழ் என அறியப்பட்டிருப்பின், அதிகபட்சம் 3 ஆண்டு சிறை தண்டனையுடன் வெளி வந்திருப்பான். இவ்வளவு பெரிய பயங்கரத்தை நிகழ்த்திய தீவிரவாதியை, அவனது தீவிரவாத செயலை, வெறும் வயது அடிப்படையில் விசாரிப்பது எவ்வளவு ஆபத்தானது..

சந்தேகம் 2: ஒரு வேளை, அவன் உண்மையில் 18 வயதிற்கும் குறைவான சிறுவன் என்பது ஊர்ஜீதமாகி, அவன் 3 ஆண்டுகளில் சிறையில் இருந்து வெளியில் வந்தால்..
இதனை ருசிகண்டுவிட்ட அந்நிய நாட்டினர்கள், அவர்களின் இந்தியா மீதான வருங்கால தாக்குதல்களுக்கு முழுக்க முழுக்க 18 வயதிற்கும் குறைவான சிறார்களை பயன்படுத்தும் நிலையில், இந்தியாவின் நிலை என்னாகும்..

சந்தேகம் 3: அந்த அனைத்து 18 வயதிற்கும் குறைவான சிறார் தீவிரவாதிகளை உயிருடன் பிடித்தாலும் வெறும் (அதிகபட்சமாக)3 ஆண்டுகளில் சந்தோசமாக விடுதலை ஆகி, பின் அவர்களின் சேவையை நம் நாட்டில் தொடருவதற்கான சாத்தியக்கூறுகளின் விகிதம் நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை தானே..?

சந்தேகம் 4: இந்த கூத்தினை காணும், அந்த அந்நிய நாட்டினில் உள்ள, நம் நாட்டின் மீது அத்துமீறி தாக்குதல் நடத்துவதில் உள்ள சரி தவறுகளை அறியாத, தொடர்ந்து நம்மீதான தாக்குதலுக்காக மூளை சலவை செய்யப்படும் எந்த சிறாருக்கும் தானும் தன் நாட்டிற்காக, தீவிரவாதமெனும் அவர்களின் சேவையை இந்தியாவில் புரிய ஆர்வம் அதிகரிக்கும் என்றே நம்புகிறேன்..
மேலும், கஸாப்பை போல உயிருடன் மாட்டினால், எப்படியும் அதிகபட்சம் 3 ஆண்டுகளில் வெளிவந்துவிடலாமே என்ற அசாத்திய நம்பிக்கையும் ஒருபக்கம் இருக்குமல்லவா..?

தீவிரவாதத்திற்கு எல்லைகள் கிடையாது,
தீவிரவாதத்திற்கு மதம் கிடையாது,
தீவிரவாதத்திற்கு மொழி கிடையாது,
தீவிரவாதத்திற்கு நாசவேலையை தவிர எதுவும் தெரியாது,
தீவிரவாதத்திற்கு _____________ கிடையாது,
தீவிரவாதத்திற்கு _____________ கிடையாது,
தீவிரவாதத்திற்கு உள்ள இதுபோன்ற பட்டியலில்..,

தீவிரவாதத்திற்கு வயது வரம்பும் கிடையாது என்பதனை அறிந்தாலன்றி தீவிரவாதத்தினை, தீவிரவாதிகளை கையாள்வதிலும், ஒடுக்குவதிலும் நமக்கு உள்ள சற்று அதிகப்படியான சிரமங்களில் இதுவும் ஒரு பங்கினை கட்டாயம் பெறும்..

தீவிரவாதத்தில் ஈடுபடும் அவர்களை வயதுவரம்பை அடிப்படையாக கொண்டு மனிதர்களாக, சிறார்களாக காணாமல், நாட்டின், நாட்டுமக்களின் பாதுகாப்பிற்கான மிகப்பெரும் அச்சுறுத்தலாக காணாவிடில்.. நாளை இதே தீவிரவாதிகள், முன்னால் சிறார் மற்றும் இந்நாள் வளர்ந்த தீவிரவாதிகளாக உலாவருவர்.. ஆனால் அதைகாண நாமும் இருக்கமாட்டோம், நம் நாடும் நம்மிடம் இருக்காது..

வே.கோ: மறக்காம உங்க வோட்டை குத்திட்டு போங்க எசமான்.. குத்திட்டு போங்க..

17 comments:

sakthi said...

சந்தேகம் 4: இந்த கூத்தினை காணும், அந்த அந்நிய நாட்டினில் உள்ள, நம் நாட்டின் மீது அத்துமீறி தாக்குதல் நடத்துவதில் உள்ள சரி தவறுகளை அறியாத, தொடர்ந்து நம்மீதான தாக்குதலுக்காக மூளை சலவை செய்யப்படும் எந்த சிறாருக்கும் தானும் தன் நாட்டிற்காக, தீவிரவாதமெனும் அவர்களின் சேவையை இந்தியாவில் புரிய ஆர்வம் அதிகரிக்கும் என்றே நம்புகிறேன்..

aam athu than nijam

a very gud post

keep it up suresh

sakthi said...

தீவிரவாதத்தில் ஈடுபடும் அவர்களை வயதுவரம்பை அடிப்படையாக கொண்டு மனிதர்களாக, சிறார்களாக காணாமல், நாட்டின், நாட்டுமக்களின் பாதுகாப்பிற்கான மிகப்பெரும் அச்சுறுத்தலாக காணாவிடில்.. நாளை இதே தீவிரவாதிகள், முன்னால் சிறார் மற்றும் இந்நாள் வளர்ந்த தீவிரவாதிகளாக உலாவருவர்.. ஆனால் அதைகாண நாமும் இருக்கமாட்டோம், நம் நாடும் நம்மிடம் இருக்காது..

oru varthainalum thiruvarthai pa

सुREஷ் कुMAர் said...

//
sakthi said...
aam athu than nijam

a very gud post

keep it up suresh

//
ரொம்ப நன்றி sakthi.. :)

सुREஷ் कुMAர் said...

//
sakthi said...
oru varthainalum "thiru"varthai pa

//

யம்மாடி இது என்னோட வார்த்தை மா.. "திரு"வோடது இல்லை.. :)

வேத்தியன் said...

யோசிக்க வேண்டிய விடயம் தான் நண்பா...

மிக நல்ல பதிவு...

anujanya said...

பதினெட்டு வயதுக்குள் இருக்கும் சிறார்கள் (பெண் பாலாரும் அடக்கம்) எளிதில் மூளைச் சலவை செய்யப் படலாம். பொதுவாக அவர்களுக்குத் தாங்கள் செய்யும் குற்றங்களின் முழு வீரியம் தெரிய சாத்தியக் கூறுகள் குறைவு. அதனால் இத்தகைய சட்டம். அதாவது எய்தவன் எங்கோ இருக்க, அம்புகளை மட்டும் தண்டிப்பதா என்ற கோணத்தில் (பதினெட்டு வயதுக்குப் பின், சுய சிந்தனை மூளைச் சலவைகளை வெல்லும் சக்தி கொண்டிருக்கும் அல்லது கொண்டிருக்க வேண்டும்)

ஆயினும், பதிவு சிந்தனையைக் கிளறிவிடும் பதிவுதான்.

அனுஜன்யா

सुREஷ் कुMAர் said...

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அனுஜன்யா..
தொடர்ந்து வாருங்கள்..

सुREஷ் कुMAர் said...

//
அனுஜன்யா said...
தாங்கள் செய்யும் குற்றங்களின் முழு வீரியம் தெரிய சாத்தியக் கூறுகள் குறைவு.
//
ஆனால், அதனால் ஏற்படும் பாதிப்புகளும் இழப்புகளும் மிக அதிகமல்லவா..?
இரண்டு கோணங்களும் குழப்பமானது தான்..
ஆக, இதற்க்கான தீர்வு..?

cheena (சீனா) said...

சிந்திக்க வேண்டிய கருத்து - ம்ம்ம்ம்

தீப்பெட்டி said...

உங்கள் கருத்து ஏற்றுக்கொள்ள கூடியதல்ல....

நாளை ஒரு 10 அல்லது 15 வயது சிறுவனின் கைகளில் மூளை சலவை செய்தோ, ஏமாற்றியோ, பயமுறுத்தியோ அழிவு ஆயுதங்களை கொடுத்தனுப்பும் போது பிடிபட்டால் அந்த சிறுவனுக்கும் நாம் பயங்கரவாதிக்கு கொடுக்கும் தண்டனை கொடுக்க இயலுமா? அந்த சிறுவனின் மீதமுள்ள எதிர்காலத்தை கணக்கில் கொண்டே ஆகவேண்டும். எய்தவன் இருக்க அம்பை நோவதேன்?

எய்தவருக்கு எதிராக ஏதும் செய்யாமல் வெற்றுப் பேச்சு பேசிக்கொண்டு அல்லது எய்தவர் எவரென்றே தெரியாத வெட்டி உளவு துறையை வைத்து கொண்டு அல்லது உளவு துறையின் அறிக்கையின் பேரில் துணிந்து நேரடி நடவடிக்கை எடுக்கத் துணியாத கோழை அரசாங்கத்தை நாம் ஓட்டு போட்டு தேர்ந்து எடுத்துக்கொண்டு இருப்பதால் இந்தியாவிற்கு என்ன பயன்?

எட்வின் said...

நல்ல அலசல் நண்பரே... தீப்பெட்டி அய்யா சொல்வதிலும் உண்மை இருக்கிறது. நல்லா கொளுத்திப் போட்டுட்டு போயிட்டாரு.

सुREஷ் कुMAர் said...

//
தீப்பெட்டி said...
உங்கள் கருத்து ஏற்றுக்கொள்ள கூடியதல்ல....
//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தீப்பெட்டி சகா..

सुREஷ் कुMAர் said...

//
தீப்பெட்டி said...
எய்தவருக்கு எதிராக ஏதும் செய்யாமல் வெற்றுப் பேச்சு பேசிக்கொண்டு அல்லது எய்தவர் எவரென்றே தெரியாத வெட்டி உளவு துறையை வைத்து கொண்டு அல்லது உளவு துறையின் அறிக்கையின் பேரில் துணிந்து நேரடி நடவடிக்கை எடுக்கத் துணியாத கோழை அரசாங்கத்தை நாம் ஓட்டு போட்டு தேர்ந்து எடுத்துக்கொண்டு இருப்பதால் இந்தியாவிற்கு என்ன பயன்?
//
இதுவும் ஒருவிதத்தில் சரி தான்.. ஆனால்..

सुREஷ் कुMAர் said...

//
தீப்பெட்டி said...
உங்கள் கருத்து ஏற்றுக்கொள்ள கூடியதல்ல....

நாளை ஒரு 10 அல்லது 15 வயது சிறுவனின் கைகளில் மூளை சலவை செய்தோ, ஏமாற்றியோ, பயமுறுத்தியோ அழிவு ஆயுதங்களை கொடுத்தனுப்பும் போது பிடிபட்டால் அந்த சிறுவனுக்கும் நாம் பயங்கரவாதிக்கு கொடுக்கும் தண்டனை கொடுக்க இயலுமா? அந்த சிறுவனின் மீதமுள்ள எதிர்காலத்தை கணக்கில் கொண்டே ஆகவேண்டும். எய்தவன் இருக்க அம்பை நோவதேன்?
//
(டிஸ்கி:பின்னோட்டத்தில் என் பதில் கருத்து ஏதும் தவறாய் இருப்பின் மன்னிக்கவும்..)
ஒருவேளை உங்கள் வீட்டை நோக்கி ஒரு ஏவுகணை வருகிறது எனில்.. எய்த ஏவுகணை லாஞ்சர் எங்கோ இருக்க இந்த அம்பாகிய ஏவுகணையை நோவானேன் என்று விட்டு விட்டுவீரா..அந்த லாஞ்சரை அளிக்கும் முன்னர் முதலில் இந்த ஏவுகணையை கண்டிப்பாக அளிப்பீர்கள் தானே..? இல்லை, இது சக்தி குறைந்த ஏவுகணை, இது பெரிய ஏவுகணை என்று பேதம் பார்த்து கொண்டு இருப்பீரா..

सुREஷ் कुMAர் said...

//
எட்வின் said...
நல்ல அலசல் நண்பரே... தீப்பெட்டி அய்யா சொல்வதிலும் உண்மை இருக்கிறது. நல்லா கொளுத்திப் போட்டுட்டு போயிட்டாரு.
//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி எட்வின் சார்..

ஆம். நீங்கள் சொல்வது போல் தீப்பெட்டி அய்யா சொல்வதிலும் உண்மை இருக்கிறது.

எதற்கும் இருமுனைகள் இருக்குமல்லவா.. ஒரு முனை என்கருத்தாக இருப்பின், மறுமுனை அய்யா தீப்பெட்டியின் கருத்தாக இருக்கலாம்..

அன்பரசு said...

நீங்கள் கூறியவை அரசு உடனடியாக கவனிக்க வேண்டிய விசயங்கள்! தீப்பெட்டி கூறிய கருத்துக்கள் ஏற்புடையது அல்ல. நேரடி நடவடிக்கை என்று எதைச் சொல்லுகிறார்? போரைத்தானே? பாஜக தேர்தல் அரசியலுக்காக அப்படி ஒரு வாதத்தை வைத்திருக்கிறது. ஆனால் உண்மை நிலை என்ன? இரு அணு ஆயுத நாடுகள் போரிடுவதால் ஏற்படும் விளைவுகள் பற்றி யோசித்தீரா? நேரடி போரில் இறங்குவது, எனக்கு ஒரு கை போனாலும் உனக்கு இரு கையும் போக வேன்டும் என்பது போலாகும். இத்தனை காலமாக அரும்பாடு பட்டு நாடு செழிப்பை நோக்கி வேகமாக வளர்ந்து வரும் நிலையில், இப்படி செய்வது பாஜக போன்ற மதவெறி பிடித்த மனித நேயமற்ற கட்சிகளால் மட்டுமே சிந்திக்க முடியும்.
நன்றி!

सुREஷ் कुMAர் said...

//
தீப்பெட்டி said...
உங்கள் கருத்து ஏற்றுக்கொள்ள கூடியதல்ல....

நாளை ஒரு 10 அல்லது 15 வயது சிறுவனின் கைகளில் மூளை சலவை செய்தோ, ஏமாற்றியோ, பயமுறுத்தியோ அழிவு ஆயுதங்களை கொடுத்தனுப்பும் போது பிடிபட்டால் அந்த சிறுவனுக்கும் நாம் பயங்கரவாதிக்கு கொடுக்கும் தண்டனை கொடுக்க இயலுமா? அந்த சிறுவனின் மீதமுள்ள எதிர்காலத்தை கணக்கில் கொண்டே ஆகவேண்டும். எய்தவன் இருக்க அம்பை நோவதேன்?
//
(டிஸ்கி:பின்னோட்டத்தில் என் பதில் கருத்து ஏதும் தவறாய் இருப்பின் மன்னிக்கவும்..)

நாளை, ஒரு 15 வயது சிறுவன் ஒருவன் உங்களிடம், அண்ணா, எங்கள் இயக்கத்தில் இன்று முதல் கட்ட பயிற்சிக்காக 10 பேரை கொன்று விட்டு வர சொல்லி இருக்கிறார்கள்.. நீங்கள் உங்கள் வீட்டுக்கு அழைத்து சென்றால், உங்கள் குடும்பத்தை அளித்துவிட்டு நல்லபடியாக நான் இயக்கத்திற்கு திரும்புவேன்.. நான் குழந்தை தான்.. என்னை எய்தவர் வேறு எங்கேயோ உள்ளார்.. இந்த குழந்தையை உங்கள் குடும்பத்தை அழிக்க அனுமதித்து விட்டு, எய்தவனை தேடிகண்டுபிடித்து நடவடிக்கை எடுத்துக்கொள்ளுங்கள் என்றால்.. சரி என்று அவனை விட்டுவிடுவீரா..? கண்டிப்பாக இல்லை தானே..? உங்களால் முடிந்தவரை அவனை தடுக்கபார்பீர்கள் தானே..? முடிந்தால் அவனை உங்கள் வீட்டுப்பக்கம் அறவே வரமுடியாமல் என்னபண்ண முடியுமோ அதை பண்ணுவீர்கள் தானே..?