Wednesday, September 30, 2009

என்ன ஊருடா சாமீய்ய்ய் 5..

போன இடுகையில் கொஞ்சம் வித்தியாசமான காதல் கதைகளபத்தி சொன்னேன்..
அடுத்து, காதல் திருமணம் பற்றியது இல்லை..

மறுமணம் பற்றியது..

இதுல(யும்)ஆணுக்கும் பெண்ணுக்குமான சட்டங்கள் எங்கள் ஊரில் / ஜாதியில் முற்றிலும் மாறுபட்டவையாக இருக்கின்றன..

ஒரு ஆண், தன் மனைவி இறந்துவிட்டால், அவன் வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொள்வதை எங்கள் ஜாதி சட்டதிட்டங்கள் தடுப்பதில்லை..

எனக்கு மாமன் முறைவேண்டிய ஒருவர், சில வருடங்களுக்கு முன்பு ஏதோ கோபத்தில் அவரின் மனைவியை உயிருடன் கொளுத்திவிட்டார்..

கோர்ட்டு கேசுன்னு ஏழெட்டு வருடங்கள் அலைந்து இறுதியில் குற்றம் நிரூபிக்கப்பட்டு ஆறுவருடங்கள் சிறைத்தண்டனை பெற்றார்..

ஏற்கனவே கேஸ் நடக்கும்போது ஏழெட்டு வருடங்கள் சிறைவாசம் இருந்ததால், சீக்கிரம் விடுவிக்கப்பட்டும்விட்டார்.. வெளியில் வந்து ஒருவருடத்துக்குள்ளாகவே சமீபத்தில் +12 முடித்த ஒரு உறவினர் பெண்ணை திருமணம் செய்துகொண்டார்..

இந்த மறுமணத்தை எதிர்க்காத ஜாதி, அடுத்து சொல்லப்போகும் மருமணத்தை எதிர்ப்பதைதான் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை..

அப்படி அவர்கள் எதிர்த்த மறுமணம், எங்க ஊர் பூசாரி ஒருவரின் மகளான, கணவனை இழந்த இளம் பெண் ஒருத்திக்கு நிகழ்ந்தது..

அந்த பெண்ணுக்கு மறுமண ஏற்பாடு முடிந்ததும் ஊர்க்கூட்டம் போட்டு எடுத்த முதல் முடிவு, அவ்வாறு அப்பெண்ணுக்கு மறுமணம் செய்துவைக்கும்பட்சத்தில் இவர் தொடர்ந்து கோவில் பூசாரியாக இருக்க அனுமதிக்கமுடியாது.. உடனடியாக பூசாரி பொறுப்பிலிருந்து நீக்கப்படுவார் என்பதுதான் அவர்களின் முடிவு..

இவருக்கு பூசாரி பொறுப்பைவிட தன் மகளின் எதிர்கால வாழ்க்கையே முக்கியம் என்பதால் பூசாரி பொறுப்பைவிடுத்து மகளுக்கு மறுமணம் முடித்தார்..

பூசாரி பொறுப்பு போனால் என்ன என்றுதானே நினைக்குரிங்க..
அது அவர்களின் பரம்பரை உரிமை அதுஇதுன்னு ஒரு ட்ராக்..

அதுவும் இல்லாம.. இப்டி ஜாதியைவிட்டு தள்ளி வைக்கப்பட்டவர்களின் எந்த விசேசத்துக்கும் ஊர் / ஜாதி நாட்டாண்மைகள் செல்லமாட்டார்கள்..

எங்கள் ஜாதியில் ஒருவரின் திருமணத்திற்கு மாப்பிள்ளை / பெண் கொடுப்பதெனில், அக்குடும்பத்தாரின் திருமணத்திற்கு அவர்கள் ஊரின் ஜாதி நாட்டாண்மை(கள்) வந்து சம்மதம் தெரிவிக்கவேண்டும்.. அப்படி அந்த நாட்டாண்மை வர மறுக்கும் குடும்பத்துக்கு வேறு எவரும் மாப்பிள்ளை / பெண் கொடுக்கமாட்டார்கள்..

இதனாலேயே எந்த ஒரு தலைமுறையிலும் ஜாதிவிட்டு ஜாதி திருமணமோ, பெண்ணுக்கு மறுமணமோ செய்ய ஊர் / ஜாதிமக்கள் தயங்குகிறார்கள்..
அப்படி செய்யும் பட்சத்தில், அக்குடும்பத்தின் வேறு எவருக்கும் எக்காலகட்டத்திலும் எங்கள் ஜாதியில் இருந்து எவரும் பெண் / மாப்பிளை எடுக்கவோ கொடுக்கவோ முன்வரமாட்டார்கள்..

ஜாதியில் இருந்து ஒதுக்கியபின் ஊருக்குள்வாழ்வது மிக மிக கடினம்.. காரணம் அது கிராமம்.. அடித்தாலும் பிடித்தாலும் நாளை அவர்களின் முகத்தில்தான் விழித்தாகவேண்டும்..

இந்த சட்டதிட்டங்கள் / வழக்கம் பரம்பரை பரம்பரையா அவர்களின் இரத்தத்தில் ஊறியும்விட்டதால், இவை அவர்களுக்கு பெரியவிசையமாய் தெரியவும் இல்லை..

ஆனாலும் சென்ற இடுகையில் குறிப்பிட்டுள்ளது போன்ற மக்களின் சில தவறான நடவடிக்கைகளை தடுக்க இவர்களின் ஜாதிகட்டுப்பாட்டின் சில சட்டதிட்டங்கள் நல்லதுசெய்வனவாகத்தான் இருக்கிறதோவென்றும் நினைக்கத்தோன்றுகிறது..

காரணம் ஜாதிக்கட்டுப்பாட்டுக்கு பயந்தாவது தவறான பாதையில்செல்ல மக்கள் பயப்பட்டு தவறுகள்குறையுமோஎன்று தோன்றுகிறது..

எதிலும் நல்லது கெட்டது உள்ளதுபோல், எங்கள் ஜாதி கட்டுப்பாடுகளிலும், சட்டதிட்டங்களிலும் சில நல்லவையும் பல கெட்டவையும் இருப்பதாகவே கருதுகிறேன்..

சரி.. இந்தளவுக்கு எங்க ஊற டேமேஜ் பண்ணினதுபோதும்னு நினைக்கிறேன்..

அடுத்தமுறை வேறுவிதமான இடுகையுடம் சந்திக்கிறேன்..

55 comments:

RAMYA said...

//
என்ன ஊருடா சாமீய்ய்ய் 5..
//

இன்னும் எவ்வளவு பாகம் வரும் தம்பி :((

RAMYA said...

//
போன இடுகையில் கொஞ்சம் வித்தியாசமான காதல் கதைகளபத்தி சொன்னேன்..
அடுத்து, காதல் திருமணம் பற்றியது இல்லை..
//

அதை படிச்சிட்டு பயத்துலே நாலு நாள் தூங்கவே இல்லே:(

RAMYA said...

//
இதுல(யும்)ஆணுக்கும் பெண்ணுக்குமான சட்டங்கள் எங்கள் ஊரில் / ஜாதியில் முற்றிலும் மாறுபட்டவையாக இருக்கின்றன..
//

எல்லா ஊரிலும் அப்படிதான்!

RAMYA said...

//
இவருக்கு பூசாரி பொறுப்பைவிட தன் மகளின் எதிர்கால வாழ்க்கையே முக்கியம் என்பதால் பூசாரி பொறுப்பைவிடுத்து மகளுக்கு மறுமணம் முடித்தார்..
//

அந்த தந்தையின் முடிவு கண்களில் நீரை வரவழைத்து விட்டது:(

RAMYA said...

சமூகம் என்ற அமைப்புக்குள் வருவதுதான் பாதுகாப்பு. என்ன செய்வது அது போல் நிறைய இடங்களில் சட்டங்கள் வரையறுத்து விடுகிறார்கள். இன்னமும் இது போல்தான் நடக்கிறது. அதை மீறினால் அவதிக்குள்ளாவது இருவரும் அந்த இருவரை சார்ந்தவர்க்களும்தான்.

கேட்பதற்கு சங்கடமாக இருக்கும். என்ன செய்ய சொல்லுங்க. அதுபோல் வரையறுத்து விட்டார்கள்.

ஆமாம் இவை அனைத்தும் நம்மை சுற்றும் உண்மைகள்.

சுரேஷ் நல்லா எழுதி இருக்கீங்க! வாழ்த்துக்கள்!!

நாமக்கல் சிபி said...

//சமூகம் என்ற அமைப்புக்குள் வருவதுதான் பாதுகாப்பு. என்ன செய்வது அது போல் நிறைய இடங்களில் சட்டங்கள் வரையறுத்து விடுகிறார்கள். இன்னமும் இது போல்தான் நடக்கிறது. அதை மீறினால் அவதிக்குள்ளாவது இருவரும் அந்த இருவரை சார்ந்தவர்க்களும்தான்.

கேட்பதற்கு சங்கடமாக இருக்கும். என்ன செய்ய சொல்லுங்க. அதுபோல் வரையறுத்து விட்டார்கள்.

ஆமாம் இவை அனைத்தும் நம்மை சுற்றும் உண்மைகள். //

சமூகம் என்பது நம்மையும் நம்மைப் போன்ற மற்றவர்களையும் உள்ளடக்கிய ஒன்றுதான்! சமூகம் என்று புதிதாய் முளைத்து வருவதில்லை!

அவர் நினைப்பாரோ, இவர் ஒதுக்கி விடுவாரோ என்று நாமும், நம் பொருட்டு மற்றவர்களும், ஒருவருக்கொருவர் மீதான தவறான எண்ணங்கள் எழுமோ என்ற அச்சத்தினால்தான் எந்தவொரு மாற்றங்களையும் ஏற்றுக் கொள்ள மறுக்கிறோம்!

விதவை மறுமணத்தைப் பற்றி பேசும்போது கூட பிறருக்குப் பயந்து நாமும், நமக்குப் பயந்து பிறரும் ஆதரிப்பதில்லை! ஆயினும் அப்படி திருமணம் நடந்தால் நல்லபடியாக வாழ்வார்கள் என்ற அடிப்படைச் சிந்தனை அனைவருக்குமே உண்டு!

ஆக நாம் விரும்பும் மாற்றங்களை நமக்குள்ளே ஒவ்வொருவராக தயங்காமல் கொண்டுவருதல் வேண்டும்! அதற்காக சிலவற்றை இழக்க வேண்டி வரலாம்! அந்த பூசாரி தனது பூசாரிப் பணியை இழந்தது போல!

இந்த தனிமனித மாற்றங்கள் கொஞ்சம் கொஞ்சமாக சமூக மாற்றமாக மாறத் துவங்கும்!

ஒருவருமே மாறத் துணியாமல்/முன்வராமல் வெறுமனே சமூக மாற்றங்கள் வேண்டும் என்று மட்டும் பேசிப் பயனில்லை!

இந்த மாற்றங்கள் மெதுவே ஏற்பட்டுக் கொண்டுதானிருக்கின்றன என்பது எனது கருத்து!

நகரங்களில் பெரும்பாலும் இத்தகைய கட்டுப்பாடுகள் இருப்பதில்லை! இவர் கூறியது போல கிராமங்களிலும் கூட வசதியானவர்கள் எனில் இவர்களை யாரும் சட்டை செய்திருக்க மாட்டார்கள்! மாறாக ஆதரித்தே இருப்பார்கள்! அல்லது ஆதரிப்பது போல நடித்தாவது இருப்பார்கள்!

இராகவன் நைஜிரியா said...

என்னாச் சொல்லுவது.. எதாவது கேட்டாள் கிராமத்துக் கட்டுப்பாடுகள் என்றுச் சொல்லுவார்கள்.

சிபி அவர்கள் சொன்னது மாதிரி, நகரத்தில் இந்த கட்டுப்பாடுகள் இல்லை என்றேச் சொல்லலாம். அது மாதிரி பணம் இருப்பவர்களுக்கு கட்டுப்பாடுகள் கிடையாது என்பதும் ஏற்க வேண்டிய விசயம்தாங்க.

சூரியன் said...

உண்மை இது உங்கள் ஊரில் மட்டும் நடப்பதில்லை.பல கிராமங்களில் இப்படித்தான் உள்ளது.

சூரியன் said...

/சட்டதிட்டங்களிலும் சில நல்லவையும் பல கெட்டவையும் இருப்பதாகவே கருதுகிறேன்..
//

எல்லாம் மாயை..

Anonymous said...

யப்பா , என்ன ஊருடா இது சாமீயோவ்.
கொடுமையா இருக்கு.
இப்பத்தான் எல்லா பாகமும் படிச்சேன்.

S.A. நவாஸுதீன் said...

போன பதிவைவிட இதுல ரொம்பல்ல பதற வச்சிட்டீங்க. தலைப்புதான் திரும்ப சொல்லனும். வேற என்ன சொல்ல

கார்ல்ஸ்பெர்க் said...

//எனக்கு மாமன் முறைவேண்டிய ஒருவர், சில வருடங்களுக்கு முன்பு ஏதோ கோபத்தில் அவரின் மனைவியை உயிருடன் கொளுத்திவிட்டார்//

-அடப் பாவிங்களா!!! இவ்வளவு சாதாரணமா சொல்லிட்ட.. நீ கூட ஆளு மட்டும் தான் ஒல்லின்னு நெனைக்குறேன். எதுக்கும் இனிமேல் உன்ன சுரேஷ் சார்'ன்னே கூப்பிடுறேன்.. :)

Barari said...

kiramaththu kattuppaattil pala nanmaikalum sila theemaikalum unduthaan.sila theemaikal mattum kalaiyapattal kiraamaththu vazkkaiye siranthathaaka irukkum.

வால்பையன் said...

//எங்கள் ஜாதி சட்டதிட்டங்கள்//

:( :( :(

வால்பையன் said...

//ஏதோ கோபத்தில் அவரின் மனைவியை உயிருடன் கொளுத்திவிட்டார்..//

ஏதோ கோபம் என்றால் என்ன தல!?

வால்பையன் said...

//கோர்ட்டு கேசுன்னு ஏழெட்டு வருடங்கள் அலைந்து இறுதியில் குற்றம் நிரூபிக்கப்பட்டு ஆறுவருடங்கள் சிறைத்தண்டனை பெற்றார்..//

முதலில் அவர் குற்றத்தை ஒப்பு கொள்ள மறுத்த காரணம்!

வால்பையன் said...

உங்க ஊர் காட்டாமைகளை காட்டுக்கு அனுப்பிட்டா எல்லாம் சரியாயிரும்னு நினைக்கிறேன்!

வால்பையன் said...

RAMYA said...

//
போன இடுகையில் கொஞ்சம் வித்தியாசமான காதல் கதைகளபத்தி சொன்னேன்..
அடுத்து, காதல் திருமணம் பற்றியது இல்லை..
//

அதை படிச்சிட்டு பயத்துலே நாலு நாள் தூங்கவே இல்லே:(//

சுரேஷ் பேய் கதையா சொன்னாரு!?

வால்பையன் said...

//நீ கூட ஆளு மட்டும் தான் ஒல்லின்னு நெனைக்குறேன். எதுக்கும் இனிமேல் உன்ன சுரேஷ் சார்'ன்னே கூப்பிடுறேன்.. :)//

நான் இதை ஆரம்பத்தில் இருந்தே கடைபிடிக்கிறேன்!
சரி தானே தல!

ராகவன் அண்ணண் சுரேஷ் சாரை அண்ணண் என்று தான் அழைத்திருந்தார்!

அபுஅஃப்ஸர் said...

படித்தவர்களே ஜாதிக்கட்டுப்பாட்டுக்குள் அடைப்பட்டிருப்பது நினைத்து வருத்தம்... என்று ஒழியும் இந்த ஜாதி

கார்ல்ஸ்பெர்க் said...

//// வால்பையன் said...
நீ கூட ஆளு மட்டும் தான் ஒல்லின்னு நெனைக்குறேன். எதுக்கும் இனிமேல் உன்ன சுரேஷ் சார்'ன்னே கூப்பிடுறேன்.. :)//

நான் இதை ஆரம்பத்தில் இருந்தே கடைபிடிக்கிறேன்!
சரி தானே தல!

ராகவன் அண்ணண் சுரேஷ் சாரை அண்ணண் என்று தான் அழைத்திருந்தார்!
..////

-அப்ப எல்லாருமே Alert'ஆ தான் இருக்கீங்களா? நான் தான் யோசிக்காம ஏதேதோ பேசிட்டேன் போல.. சுரேஷ் சார், என்ன மன்னிச்சு விட்டுடுங்க சார்.. :)))

Anonymous said...

//அப்பெண்ணுக்கு மறுமணம் செய்துவைக்கும்பட்சத்தில் இவர் தொடர்ந்து கோவில் பூசாரியாக இருக்க அனுமதிக்கமுடியாது.. உடனடியாக பூசாரி பொறுப்பிலிருந்து நீக்கப்படுவார் என்பதுதான் அவர்களின் முடிவு..//

என்ன தான் முன்னேற்றங்களையும் மாறுதல்களையும் கண்டாலும் இன்னும் பல இடங்களில் இந்த முறை நடைமுறையில் இருப்பது வருந்தத்தக்கதே.....

நுண்ணியமா அலசறீங்க உங்க ஊரை....

kanagu said...

கிராமங்கள் இதை தாண்டி வந்தா தான் நாம் எண்ணுகிற சமத்துவ சமுதாயம் அமையும்... ஆனால் அப்படி ஒரு நிலை ஏற்படுமா என்று தெரியவில்லை...

நல்ல பதிவுங்க சுரேஷ்...

கல்யாணி சுரேஷ் said...

//
இதுல(யும்)ஆணுக்கும் பெண்ணுக்குமான சட்டங்கள் எங்கள் ஊரில் / ஜாதியில் முற்றிலும் மாறுபட்டவையாக இருக்கின்றன..
//

எல்லா ஊரிலும் அப்படிதான்!

ரிப்பீட்டு.

ஷ‌ஃபிக்ஸ்/Suffix said...

ஆள விடுங்க சாமிய்ய்ய், யப்பா.......!!

இய‌ற்கை said...

உங்க ஊரை நெனச்சா கொஞ்சம் பயமாத்தாங்க இருக்கு

இய‌ற்கை said...

உங்க தலைமுறைலயாவது இதுல கொஞ்சம் மாற்றக்களைக் கொண்டுவரப் பாருங்க‌

सुREஷ் कुMAர் said...

//
RAMYA said...

//
என்ன ஊருடா சாமீய்ய்ய் 5..
//

இன்னும் எவ்வளவு பாகம் வரும் தம்பி :((
//
ஏன்கா.. போரடிக்குதா..

सुREஷ் कुMAர் said...

//
RAMYA said...

//
போன இடுகையில் கொஞ்சம் வித்தியாசமான காதல் கதைகளபத்தி சொன்னேன்..
அடுத்து, காதல் திருமணம் பற்றியது இல்லை..
//

அதை படிச்சிட்டு பயத்துலே நாலு நாள் தூங்கவே இல்லே:(
//
நான் என்ன பேய்கதையா சொன்னேன்..

सुREஷ் कुMAர் said...

//
RAMYA said...

//
இதுல(யும்)ஆணுக்கும் பெண்ணுக்குமான சட்டங்கள் எங்கள் ஊரில் / ஜாதியில் முற்றிலும் மாறுபட்டவையாக இருக்கின்றன..
//

எல்லா ஊரிலும் அப்படிதான்!
//
ம்ம்.. அதென்னவோ வாஸ்தவம்தான்..

सुREஷ் कुMAர் said...

//
RAMYA said...

//
இவருக்கு பூசாரி பொறுப்பைவிட தன் மகளின் எதிர்கால வாழ்க்கையே முக்கியம் என்பதால் பூசாரி பொறுப்பைவிடுத்து மகளுக்கு மறுமணம் முடித்தார்..
//

அந்த தந்தையின் முடிவு கண்களில் நீரை வரவழைத்து விட்டது:(
//
நெம்ப உணர்ச்சிவசப்படாதிங்க கா..

सुREஷ் कुMAர் said...

//
Blogger RAMYA said...

ஆமாம் இவை அனைத்தும் நம்மை சுற்றும் உண்மைகள்.

சுரேஷ் நல்லா எழுதி இருக்கீங்க! வாழ்த்துக்கள்!!
//
வாழ்த்துக்களுக்கு நன்றி அக்கா..

सुREஷ் कुMAர் said...

//
நாமக்கல் சிபி said...

இவர் கூறியது போல கிராமங்களிலும் கூட வசதியானவர்கள் எனில் இவர்களை யாரும் சட்டை செய்திருக்க மாட்டார்கள்! மாறாக ஆதரித்தே இருப்பார்கள்! அல்லது ஆதரிப்பது போல நடித்தாவது இருப்பார்கள்!
//
உங்கள் கருத்தினை மறுப்பதற்கு மன்னிக்கவும் அண்ணா..

நான் கூறிய இன்னொரு காதல் கதி நியாபகம் இருக்கா.. அதான், அந்த கவுன்சிலர் பையனை எங்கள் ஜாதிபெண் மணந்தகதை.. அதி இருவருமே வசதியானவர்கள்தான்.. ஆனாலும் அவர்களையும் இந்த ஜாதி சட்டதிட்டங்கள் விட்டுவைக்கவில்லையே..

सुREஷ் कुMAர் said...

//
இராகவன் நைஜிரியா said...

என்னாச் சொல்லுவது.. எதாவது கேட்டாள் கிராமத்துக் கட்டுப்பாடுகள் என்றுச் சொல்லுவார்கள்.

சிபி அவர்கள் சொன்னது மாதிரி, நகரத்தில் இந்த கட்டுப்பாடுகள் இல்லை என்றேச் சொல்லலாம். அது மாதிரி பணம் இருப்பவர்களுக்கு கட்டுப்பாடுகள் கிடையாது என்பதும் ஏற்க வேண்டிய விசயம்தாங்க.
//
சில இடத்தில் வேண்டுமானாலும் இருக்கலாம்.. ஆனாலும் பணம் பாயமுடியாத இடங்களும் இருக்கத்தானே செய்கின்றன..

सुREஷ் कुMAர் said...

//
சூரியன் said...

உண்மை இது உங்கள் ஊரில் மட்டும் நடப்பதில்லை.பல கிராமங்களில் இப்படித்தான் உள்ளது.
//
ம்ம்.. கருத்துக்கு நன்றி சூரியன்..

ஆமா.. கேட்டதின் அடிப்படையில் சொல்றிங்களா.. இல்லை, உங்களுக்கே நேரில் கண்ட நேரடி அனுபவம் இருக்கா சூரியன்..

सुREஷ் कुMAர் said...

//
சூரியன் said...

/சட்டதிட்டங்களிலும் சில நல்லவையும் பல கெட்டவையும் இருப்பதாகவே கருதுகிறேன்..
//

எல்லாம் மாயை..
//
இல்லை சூரியன்..
இதில் மாயை ஏதும் இல்லை..

சில சட்டதிட்டங்கள் நமக்கு உண்மையில் நல்லதுசெய்யும் விதமாக நல்லவகையில்தான் அமைந்துள்ளன..

सुREஷ் कुMAர் said...

//
சின்ன அம்மிணி said...

யப்பா , என்ன ஊருடா இது சாமீயோவ்.
கொடுமையா இருக்கு.
இப்பத்தான் எல்லா பாகமும் படிச்சேன்.
//
கருத்துக்கும், எல்லா பாகங்களையும் ஒரே மூச்சில் படித்தமைக்கும் நன்றி சின்ன அம்மிணி..

தொடர்ந்து வாருங்கள்..

सुREஷ் कुMAர் said...

//
S.A. நவாஸுதீன் said...

போன பதிவைவிட இதுல ரொம்பல்ல பதற வச்சிட்டீங்க. தலைப்புதான் திரும்ப சொல்லனும். வேற என்ன சொல்ல
//
:-)
கருத்துக்கு நன்றி S.A. நவாஸுதீன்..

பரவால.. தலைப்பையே சொல்லுங்க..

सुREஷ் कुMAர் said...

//
கார்ல்ஸ்பெர்க் said...

//எனக்கு மாமன் முறைவேண்டிய ஒருவர், சில வருடங்களுக்கு முன்பு ஏதோ கோபத்தில் அவரின் மனைவியை உயிருடன் கொளுத்திவிட்டார்//

-அடப் பாவிங்களா!!! இவ்வளவு சாதாரணமா சொல்லிட்ட.. நீ கூட ஆளு மட்டும் தான் ஒல்லின்னு நெனைக்குறேன். எதுக்கும் இனிமேல் உன்ன சுரேஷ் சார்'ன்னே கூப்பிடுறேன்.. :)
//
அருணு ஏன் இந்த கொலைவெறி..

सुREஷ் कुMAர் said...

//
Barari said...

kiramaththu kattuppaattil pala nanmaikalum sila theemaikalum unduthaan.sila theemaikal mattum kalaiyapattal kiraamaththu vazkkaiye siranthathaaka irukkum.
//
ஆம் barari.. நீங்கள் சொன்னதுபோல் அந்த சில தீமைகள் மட்டும் களையப்பட்டால் உண்மையில் கிராமத்துவாழ்க்கை மிகச்சிறந்ததாக இருக்கும்..

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி barari..
தொடர்ந்து வாருங்கள்..

सुREஷ் कुMAர் said...

//
வால்பையன் said...

//எங்கள் ஜாதி சட்டதிட்டங்கள்//

:( :( :(
//
இதில் வருத்தப்பட ஒண்ணுமே இல்லை வால்..

सुREஷ் कुMAர் said...

//
வால்பையன் said...

//ஏதோ கோபத்தில் அவரின் மனைவியை உயிருடன் கொளுத்திவிட்டார்..//

ஏதோ கோபம் என்றால் என்ன தல!?
//
ஏதோ குடும்பத்தகராறில், மனைவியுடன் கொண்ட கோபத்தில்'னு மாத்தி டைப்பண்ணிஇருந்தேன்.. ஏனோ போஸ்ட்ட சேவ் செஞ்சு பப்ளிஷ் பண்ணும்போது சேவ்ஆகாம பழைய வரிகளே பப்ளிஷ் ஆகிருச்சு வால்.. தவறுக்கு மன்னிக்கவும்..

सुREஷ் कुMAர் said...

//
வால்பையன் said...

//கோர்ட்டு கேசுன்னு ஏழெட்டு வருடங்கள் அலைந்து இறுதியில் குற்றம் நிரூபிக்கப்பட்டு ஆறுவருடங்கள் சிறைத்தண்டனை பெற்றார்..//

முதலில் அவர் குற்றத்தை ஒப்பு கொள்ள மறுத்த காரணம்!
//
கோர்டுல என்ன நடந்ததுன்னு தெரியலை..

அவர் நிச்சயமா மறுத்தார்னு சொல்ல முடியாது.. அவர் குற்றத்த ஒத்துகிடார்னுதான் நினைக்கிறேன்.. இதபத்தி யாருகிட்டயும் விளக்கமா கேக்கமுடியலை..

எப்டியோ கேச ஆறு ஏழு வருசம்னு இழுத்துடானுங்க..

सुREஷ் कुMAர் said...

//
வால்பையன் said...

உங்க ஊர் காட்டாமைகளை காட்டுக்கு அனுப்பிட்டா எல்லாம் சரியாயிரும்னு நினைக்கிறேன்!
//
:-)
இன்னும் கொஞ்ச வருசங்கள்ல காட்டுக்கு என்ன, ஆயுள் முடிஞ்சு வேற கிரகத்துக்கே போய்டுவாங்க..

सुREஷ் कुMAர் said...

//
வால்பையன் said...

//நீ கூட ஆளு மட்டும் தான் ஒல்லின்னு நெனைக்குறேன். எதுக்கும் இனிமேல் உன்ன சுரேஷ் சார்'ன்னே கூப்பிடுறேன்.. :)//

நான் இதை ஆரம்பத்தில் இருந்தே கடைபிடிக்கிறேன்!
சரி தானே தல!

ராகவன் அண்ணண் சுரேஷ் சாரை அண்ணண் என்று தான் அழைத்திருந்தார்!
//
அவர் என்னை அண்ணேனு அழைப்பதின்மூலம் அவர் இன்னும் யூத்னு நம்மகிட்ட பதிவு செய்ய முயல்கிறார்..

सुREஷ் कुMAர் said...

//
அபுஅஃப்ஸர் said...

படித்தவர்களே ஜாதிக்கட்டுப்பாட்டுக்குள் அடைப்பட்டிருப்பது நினைத்து வருத்தம்... என்று ஒழியும் இந்த ஜாதி
//
படித்தவர்கள்னு யார சொல்றிங்க..

ஜாதிகட்டுப்பாடும் சில வழிகளில் நாட்டு மக்களுக்கு விதிக்கப்பட்டுள்ள சட்டங்கள் போன்றதுதான்.. ஆனால், அவற்றில் சில கெட்டவையாகவும், ஆணாதிக்க சிந்தனையுடனும் இருப்பதுதான் பிரச்சனையே.. அந்த சில தவறுகளை மட்டும் களைந்துவிட்டால், உண்மையில் நம் நாட்டின் சட்டங்களை போல்/விட இந்த ஜாதி சட்டதிட்டங்கள் நம்மை நல்வழிப்படுத்தும் என்பதில் இன்னும் ஒரு ஓரத்தில் நம்பிக்கை ஒட்டிக்கொண்டுதான் உள்ளது எனக்கு..

सुREஷ் कुMAர் said...

//
தமிழரசி said...

//அப்பெண்ணுக்கு மறுமணம் செய்துவைக்கும்பட்சத்தில் இவர் தொடர்ந்து கோவில் பூசாரியாக இருக்க அனுமதிக்கமுடியாது.. உடனடியாக பூசாரி பொறுப்பிலிருந்து நீக்கப்படுவார் என்பதுதான் அவர்களின் முடிவு..//

என்ன தான் முன்னேற்றங்களையும் மாறுதல்களையும் கண்டாலும் இன்னும் பல இடங்களில் இந்த முறை நடைமுறையில் இருப்பது வருந்தத்தக்கதே.....

நுண்ணியமா அலசறீங்க உங்க ஊரை....
//
நன்றி அக்கா..

सुREஷ் कुMAர் said...

//
kanagu said...

கிராமங்கள் இதை தாண்டி வந்தா தான் நாம் எண்ணுகிற சமத்துவ சமுதாயம் அமையும்... ஆனால் அப்படி ஒரு நிலை ஏற்படுமா என்று தெரியவில்லை...

நல்ல பதிவுங்க சுரேஷ்...
//
நிச்சயம் ஒருநாள் ஏற்படும் kanagu..

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி kanagu..
தொடர்ந்து வாருங்கள்..

सुREஷ் कुMAர் said...

//
கல்யாணி சுரேஷ் said...

//
இதுல(யும்)ஆணுக்கும் பெண்ணுக்குமான சட்டங்கள் எங்கள் ஊரில் / ஜாதியில் முற்றிலும் மாறுபட்டவையாக இருக்கின்றன..
//

எல்லா ஊரிலும் அப்படிதான்!

ரிப்பீட்டு.
//
ம்ம்.. நானும்..

सुREஷ் कुMAர் said...

//
ஷ‌ஃபிக்ஸ்/Suffix said...

ஆள விடுங்க சாமிய்ய்ய், யப்பா.......!!
//
விட்டாச்சேய்..

நன்றி ஷ‌ஃபிக்ஸ்/Suffix

सुREஷ் कुMAர் said...

//
இய‌ற்கை said...

உங்க ஊரை நெனச்சா கொஞ்சம் பயமாத்தாங்க இருக்கு
//
ம்ம்.. அது..
அந்த பயம் இருக்காட்டும்.. :-)

सुREஷ் कुMAர் said...

//
இய‌ற்கை said...

உங்க தலைமுறைலயாவது இதுல கொஞ்சம் மாற்றக்களைக் கொண்டுவரப் பாருங்க‌
//
அதான் பசங்க புதுவிதமா லவ்வி மாற்றம் கொடுவந்துட்டு இருக்காங்களே.. :-)

விரைவில் நல்ல மாற்றங்கள் நிகழுமென எதிர்பார்க்கிறேன்..

அன்புடன் மலிக்கா said...

உங்க ஊர நெனச்சா ரொம்பவுல பயமாயிருக்கு,
தலைப்புக்கு ஏத்த ஊருங்கோ,

http://niroodai.blogspot.com/

விக்னேஷ்வரி said...

எல்லா இடத்திலும் பெண்ணுக்கொரு நியாயம், ஆணுக்கொரு நியாயம் தானே. ம்ஹும்...

ஷ‌ஃபிக்ஸ்/Suffix said...

நண்பர்கள் அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்!!