Thursday, March 19, 2009

விருப்பங்கள் ஆயிரம்..

எனக்கு பிடித்தவற்றை அறிவதற்கான ஒரு பிளாஷ் பேக் தொடர்..
இங்கு நான் முதலில் அறிய விரும்புவது எனக்கு பிடித்த நிறம்..
இது என் முதல் பதிவு என்பதால் யாதேனும் தவறுகள் இருப்பின் மன்னிக்க..
என்னோட முதல் பதிவை என்னிடம் இருந்தே தொடங்குகிறேன்..

நான் பார்த்தவரை எல்லோருக்கும் எந்த ஒரு விசயத்திலும் எப்போதும் விருப்பு / வெறுப்பு இருந்துகொண்டு தான் இருக்கிறது.. இப்போது எனக்கு பிடிக்கும் ஒரு விஷயம் அல்லது ஒரு பொருள் சிறிது நேரத்திற்கு பிறகு பிடிக்காமல் போகலாம். இன்றேல், பிடிக்காத ஒன்று இப்போ பிடித்தும் போகலாம். ஆனால் யாருக்கும் எதையாவது ஒன்றை எப்போதும் பிடித்திருக்கும்..

எங்கே இருந்து என் புலம்பலை தொடங்குவதுனு தெரியாததால கொஞ்சம் தத்துவம் பேசி என் புலம்பலுக்கு பிள்ளையார் சுழி போட்டுட்டேன்..

சரி இப்போ மேட்டர்'கு வருவோம்..

இப்போ ஒருத்தர பாத்து உங்களுக்கு புடிச்ச இனிப்பு எதுன்னு கேட்டா, அவரு மனசு சிட்டில இருக்குற எல்லா லாலா கடையையும் சுத்திட்டு வந்து ஒரு ஸ்வீட் பேர சொல்லுவாரு..

ஹேய் குட்டி பாபா..! உனக்கு புடிச்ச கலர் என்ன'னா..?, அது ஸ்கூல்'அ சொல்லிக்குடுத்த கலர்'அ எல்லாம் யோசிச்சு பச்சையோ சிவப்போ, எதையாச்சும் ஒன்ன சொல்லி வெக்கும்.. செரிதானே..??

நா குட்டியா இருக்கறப்போ என்னையும் இப்டி யாராச்சும் கேட்டுடே இருப்பாங்க..
நீங்களா இருந்தா என்ன சொல்லிருபிங்கனு எனக்கு தெரியாது.. ஆனா என்ன அன்னைக்கு கேட்ட கேள்விக்கு இன்னைக்கும் பதில் தெரியாது. எனக்கு புடிச்சது என்ன கலர், என்ன படம்,எந்த நடிகை, எந்த இடம்.. Etc., எதுவும் தெரியாது.
எல்லாத்தையும் புடிக்கும்'னு சொல்ல முடியாட்டியும் எதையும் புடிக்கலை'னு சொல்லறதுஇல்லை..
உதாரணம்:, இப்போ நா ஒரு மொக்க படத்துக்கு (கடேசியா பாத்த மொக்க "வில்லு")போறேனா, படத்த ரசிக்க முடியலைனாலும், அத எவ்ளோ மொக்கையா எடுதிருகாங்க'னு தெரிஞ்சுக்கவாச்சும் முழு படத்தையும் பொறுமையா பாத்துட்டு வருவேன். ஆனா இந்த வில்லு'அ பாத்துட்டு வெளிய வந்து படத்த பத்தி என்னோட friend கிட்ட கதைய பத்தி பேசலாம்னு அவன தேடி புடிச்சு மேட்டர ஆரம்பிச்சா..... நா அப்டியே ஷாக் ஆயிட்டேன்.. ஏனா அதுக்குள்ள எனக்கு கதை மறந்து போச்சு.. ஒரு மாசத்துக்கு மேல ஆகியும் இன்னும் நியாபகம் வரலை..

matter எங்கயோ ஆரம்பிச்சு எங்கயோ போய்டு இருக்கு..

இது வரைக்கும் எழுதுனத வெச்சு என்ன சொல்ல try பண்ணிட்டு இருக்கேன்'a, எனக்கு என்ன தான் புடிக்கும், புடிக்கலைன்னு ஒரு முடிவுக்கு வர முடியலை..
so, என்னோட முதல் முயற்சியா எனக்கு புடிச்ச color'a தேட ஆரம்பிச்சேன். இதுக்கு நா என்னோட சின்ன வயசு வரைக்கும் பிளாஷ் பேக் போயி தேடி பாத்தேன்.. எந்த எந்த டைம்'ல, என்ன என்ன கலர்கல அதிகமா use பண்ணினேன்'னு பாக்கயில ஒரு பிளாஷ் பேக் கதை ஆரம்பிச்சுச்சு..

புடிச்ச கலர்'கு ஒரு பிளாஷ் பேக்..!!!!! (ஐயோ ஐயோ..)

ரொம்ப சின்ன வயசுல என்ன கலர் அதிகம் use பண்ணினேன்னு நியாபகம் இல்லை.. ஆனா 6th'o 7th'o படிக்கும் போது எனக்கு painting'la மொதல்லையே இருந்த ஆர்வம் கொஞ்சும் அதிகம் ஆகிடுச்சு.அப்போ நான் வரைஞ்ச ஒரு ஓவியம் என்னோட ஒரு புது முயற்சி'னு தான் சொல்லணும். Bcaz, அப்போ நான் வரைய ட்ரை பண்ணின ஓவியம் ஒரு ஆஞ்சநேயர். ஆனா அது மேட்டர் இல்லை. அதா நான் வரைய use பண்ணினது black color ball point pen. வரஞ்சது பேப்பர்'ல இல்லை, ஒரு flex மாதிரியான ஒன்னு. இத ஏ சொல்றேனா, ஒருவேள எங்கயாச்சும் தப்பா வரஞ்சுட்டேனா அதா திருப்பி அழிச்சு வரைய முடியாது.so, first try'laye தப்பில்லாம வரஞ்சு ஆகணும். அதான் அந்த முயற்சியின் thrill. நெனச்ச மாதிரியே அத வரஞ்சும் முடிச்சேன். பனிரெண்டு, பதிமூணு வருஷம் கழிச்சும், இன்னும் அந்த ஓவியம் எங்க வீட்டு சுவத்துல தொங்கிட்டு இருக்கு.

அந்த ஓவியத்துல வெள்ளை, கருப்பு கலர்'a தவிர ஏதும் யூஸ் பண்ணலை. அப்போ என் மனசுல விழுந்த ஒரு பொறி என்னனா, " பல வண்ணங்கள கொட்டி வரையற ஓவியங்களை விட கருப்பு வண்ணத்தை மட்டுமே கொண்டு வரையப்படும் ஓவியத்திற்கு ஒரு ஈர்ப்பு உள்ளதாய் உணர்ந்தேன்.

எல்லோரும் துக்க நிறமாக,எதிர்ப்பை தெரிவிக்கும் நிறமாக கருதும் கருப்பில் உள்ள அந்த ஈர்ப்பை மிஹ ஆழமாக அப்போது என்னால் ரசிக்க முடிந்தது. இப்போதும் ஒரு geththu look வேணும்னா பலரும் கருப்பு நிறத்தை பயன்படுத்துவதை வெஹுவாக எங்கும் காண முடியும்.
உதாரணம்: scorpio car பல colors'la வந்தாலும், கருப்பு கலர் ச்கோர்பயோ ரோட்ல போனா கண்டிப்பா அதுக்கு ஒரு தனி geththu இருக்கும்.

மேல சொன்ன மாதிரி, கருப்புனா எல்லாரும் அத ஒரு துக்க நிகழ்ச்சிக்கு போகும்போது கருப்பு கலர் dress'a போட்டுட்டு போவாங்க. சிலர் எதுக்காச்சும் எதிர்ப்பு அல்லது அவங்க கண்டனத்த தெரிவிக்க கருப்பு கொடிய காட்டுவாங்க. அப்டியாபட்ட கருப்பு எனாக்கு சந்தோஷத்தை வாரித்தரும் வர்ணமாக மாறியது. அதுநாள் முதல் உலகின் பிற நிறங்களை விட கருப்பே என் கண்களை நிறைத்தன.

அப்டி காத்து கருப்பு சேந்து அடிக்காம, கருப்பு மட்டும் அடிச்சதுல ஒரு சந்தோஷம், நிம்மதி இருந்துச்சு. ஆனா, இங்க என்ன கொடுமைனா, எல்லாரையும் காத்து கருப்பு அடிக்கும்..இங்க கருப்ப நான் அடிச்சுட்டு இருக்கேன் (ஓவியமாக).

அப்போ, இப்போ இருக்கற மாதிரியே நல்ல வெயில் காலம். நான் குடும்பத்தோட ஈரோடு பரணி சில்க்ஸ்'ல துணி எடுக்க போனேன். எல்லாரும் எத எதையோ எடுத்தாங்க. எனக்கு ஒரு jeans எடுக்கணும்'னு ஆசை. என்ன தான் கருப்பு அடிசிருசே..
அதனால கருப்பு கலர்'ல ஒரு jeans எடுத்துட்டு வந்துட்டேன். அந்த வெயில்ல கருப்பு கலர்ல, அப்டி ஒரு கெட்டியான jeans'a போட்டுட்டு ஒருமணி நேரம் கூட இருக்கா முடியல.உள்ள எல்லாம் அவிஞ்சு போச்சு. கருப்பின் அருமையை என் ஓவியத்தில் விட அந்த வெயிலில் அறிந்தேன். அதுக்கு அப்புறம் collage'ku போற வரைக்கும் jeans'e போடலை.

இந்த ஓவியம் வரையும் முன், நான் சாதாரணமா, பென்சில்ல வரஞ்சு, schetch pen'la கலர் பண்ணுவேன். நல்லா வரைஞ்சாலும் அழிச்சு அழிச்சு வரையறதுல எனக்கு உடன்பாடு இல்ல.so, bollpoint pen'la வரைய ஆரம்பிச்சேன். இதுல என்ன சிக்கல்'na ரெண்டு நாள், மூணு நாள் கஷ்டப்பட்டு வரஞ்சு, கடேசி நிமிசத்துல எதாச்சும் தப்பு ஆச்சுனா அவ்ளோ தான். திருப்பி first இருந்து தான் வரையனும்.இந்த சவால் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்துச்சு.
அப்போல இருந்து எனக்கு படம் வரைய எந்த schetch pen'um தேவ படல.எனக்கு தேவ எல்லாம் ஒரு black pen மட்டும் தான்.அப்போது இருந்து என் உலகம் கருப்பாய் அமைந்தது.

பிளாஷ் பேக் முடிஞ்சு இப்போ வெளிய வந்து பாத்தா, அதுக்கு அப்புறம் நான் வரைந்த அனைத்து ஓவியங்களும் கருப்பு நிறத்தில் படைக்க பட்டதில் எனக்கு இப்போதும் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி உண்டு.
இப்போ நான் வைத்துள்ள ஆடைகளை 80% ஆடைகள் கருப்பு நிற ஆடைகள் தான். எல்லோரும் இழவு வீட்டிற்கு அணிந்து செல்லும் அந்த துக்க நிறம் என் வாழ்வின் வசந்த நிறமாக மாறிய அனுபவம் சொற்களால் சொல்ல முடியாதவை. வாரத்தின் 7 நாட்களை குறைந்தது 4 நாட்களுக்கு நான் அணியும் உடையின் நிறம் கருப்பாகவே இருக்கும். இப்போது வெயில் தொடங்கி விட்டாலும் முன்புபோல் கருப்பு ஆடை என்னை வருத்துவது இல்லை.

கருப்புக்கு இன்னும் சில பல பிளாஷ் பேக் மீதம் உள்ளது. அதை அடுத்த blog'இல் தொடருகிறேன்.

பிடித்தவற்றை அறிவதற்கான இந்த பிளாஷ் பேக்’ku இப்போதைக்கு ஒரு சின்ன
தொடரும்...


17 comments:

இராகவன் நைஜிரியா said...

ஆயிரம் விருப்பங்களில் முதல் விருப்பம் இது.

மீதி 999 - எதிர் பார்த்து கொண்டு இருக்கின்றோம்.

இராகவன் நைஜிரியா said...

// எனக்கு பிடித்தவற்றை அறிவதற்கான ஒரு பிளாஷ் பேக் தொடர்.. //

இனிமேல்தான் அறிய போகின்றீர்களா...

கிழிஞ்சது கிருஷ்ணகிரி..

இராகவன் நைஜிரியா said...

// இது என் முதல் பதிவு என்பதால் யாதேனும் தவறுகள் இருப்பின் மன்னிக்க..//

சரி சரி மன்னிச்சுட்டோம் .. ஆரம்பிங்க

இராகவன் நைஜிரியா said...

//என்னோட முதல் பதிவை என்னிடம் இருந்தே தொடங்குகிறேன்.. //

அதான் ஆரம்பத்திலேயே சொல்லீட்டிங்களே..”எனக்குப் பிடித்தவற்றை” என்று ..

இராகவன் நைஜிரியா said...

// இப்போது எனக்கு பிடிக்கும் ஒரு விஷயம் அல்லது ஒரு பொருள் சிறிது நேரத்திற்கு பிறகு பிடிக்காமல் போகலாம். இன்றேல், பிடிக்காத ஒன்று இப்போ பிடித்தும் போகலாம். ஆனால் யாருக்கும் எதையாவது ஒன்றை எப்போதும் பிடித்திருக்கும்..//

தத்துவம் நெ. 1

இராகவன் நைஜிரியா said...

// சரி இப்போ மேட்டர்'கு வருவோம்.. //

இன்னும் மேட்டருக்கு வரவேயில்லையா...ஆ....ஆ....ஆ....

இராகவன் நைஜிரியா said...

// இப்போ ஒருத்தர பாத்து உங்களுக்கு புடிச்ச இனிப்பு எதுன்னு கேட்டா, அவரு மனசு சிட்டில இருக்குற எல்லா லாலா கடையையும் சுத்திட்டு வந்து ஒரு ஸ்வீட் பேர சொல்லுவாரு.. //

ஆமாம் .. லாலா கடையெல்லாம் போய்ட்டு வந்திருக்கீங்க அப்படின்னு நினைக்கின்றேன்..

सुREஷ் कुMAர் said...

/ எனக்கு பிடித்தவற்றை அறிவதற்கான ஒரு பிளாஷ் பேக் தொடர்.. /

//இனிமேல்தான் அறிய போகின்றீர்களா...

கிழிஞ்சது கிருஷ்ணகிரி..//

தங்களை முழுதாய் அறிந்த நீங்க நெஜமாவே ஞானிங்க..
சரி..நா புலம்பறதுக்கு நீங்க ஏம்பா கிருஷ்ணகிரி'a எல்லாம் போட்டு கிழிக்கிரிங்க..

/* sorry spelling mistake'naala prev. comment'a delete panniten.. */

இப்டித்தான் அப்பப்போ சொதபிட்டே இருப்பேன். :)

இராகவன் நைஜிரியா said...

// இப்டித்தான் அப்பப்போ சொதபிட்டே இருப்பேன். :)//

சொதப்புவது நமது பிறப்புரிமை..இதுக்கெல்லாம் கவலைப் படக்கூடாது..

இராகவன் நைஜிரியா said...

ஐயா, ராஜா, கண்ணா, சகா...

இந்த word verification ஐ எடுத்துடுங்க... பின்னூட்டம் போடும் போது ரொம்ப லொள்ளு அது...

நாமக்கல் சிபி said...

கருப்புத்தான் எனக்கு பிடிச்ச கலரு டொய்யிங் டொய்யிங் னு பாடுவீங்க போல

सुREஷ் कुMAர் said...

//இந்த word verification ஐ எடுத்துடுங்க... பின்னூட்டம் போடும் போது ரொம்ப லொள்ளு அது..//

தூக்கியாச்சு நண்பா..

RAMYA said...

//
பிட்டடித்து வாழ்வாரும் வாழ்வர் மற்றெல்லாம்
புக் படித்து மாழாதவர்."
//

சூப்பர் அருமையான யோசனை தான் என்ன செய்ய
மாட்டினா பிரச்சனையாகி விடுமே :))

RAMYA said...

// இப்போது எனக்கு பிடிக்கும் ஒரு விஷயம் அல்லது ஒரு பொருள் சிறிது நேரத்திற்கு பிறகு பிடிக்காமல் போகலாம். இன்றேல், பிடிக்காத ஒன்று இப்போ பிடித்தும் போகலாம். ஆனால் யாருக்கும் எதையாவது ஒன்றை எப்போதும் பிடித்திருக்கும்..//

அப்பா சொக்கா நீ எங்கே இருக்கே லேசா தலை சுத்துதே :))
என்னை மட்டும் காப்பாத்துப்பா :)

தம்பி இந்த தத்துவம் ரொம்ப சூப்பர் போங்க!!

RAMYA said...

மொத்தத்திலே உங்கபதிவு படிக்க ரொம்ப intresting இருந்திச்சு

வாழ்த்துக்கள் !!

सुREஷ் कुMAர் said...

நன்றி அக்கா..
(sabaaaa ippo thaan orutharaachum paaratirukaanga..)

தம்பியா..?
அட.. ஒரே நாளுல எனக்கொரு அக்கா கெடசிருக்காங்கப்பா..

cheena (சீனா) said...

அன்பின் சுரேஷ்

கருப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு

கருப்பு ஜீன்ஸ் மொதல்ல

இப்ப நெரெய டிரஸ் கருப்புல

ம்ம் - பரவா இல்ல

ஆமா உள்ளே அவிஞ்சு போச்சுன்னு சொல்லி இருக்கியே ! என்னா அர்த்தம்னேன்

என்னா எழுதப் போறேன்னு தெரியாம எத வேணும்னாலும் எழுதினா அது ஒரு இடுகையா - விருப்பங்கள் ஆயிரம் - தலைப்பு நல்லா இருக்கு

நல்வாழ்த்துகள்