Wednesday, March 25, 2009

தேர்வுகள்..

இத்த போன பதிவோட (குறுக்கு புத்தி'in) தொடர்ச்சின்னு வெச்சுகோங்க..

7th semester'la ஒரு எக்ஸாம்'ல நடந்த அந்த கூத்துக்கே ஒரு பதிவுனா.., மீதி 7 semesters'ku எவ்ளோ பதிவு வருமோ தெர்ல.. அதபத்தி நாம ஏ கவலபடனும்.. அது இத்த படிக்கற மகா ஜனங்களோட பாடு.. சர்தானே..?

First semester'ku மட்டும் sem first day'la இருந்து போவோம்.. காலேஜ் ஆரம்பிக்கறதுக்கு முந்தின நாள் மாலை தான் பொட்டிய எல்லாம் கட்டிக்கிட்டு, பஸ் ஸ்டாப்'ல இருந்து ஆட்டோவ புடிச்சு ஹாஸ்டல் வந்து சேந்தேன். இங்க வந்து பாத்தா எல்லாம் ஒரே பீட்டருங்க.. அவனவன் கார்'ல வந்து இங்கிலீஷ்'ல பொளந்துட்டு இருந்தானுங்க. இங்கிலீஷ்னாவே எனக்கு குளிர் காய்ச்சல் வந்திடும்கரதால நமக்கு ஏத்த மக்காக்கல தேடிட்டு ரூம்க்கு வெளிய வந்தா, ஒருத்த என்ன பாத்து நேரா என் கிட்ட வந்து நின்னான்.. (அப்டின்னு தான் நியாபகம்). எது எப்டியோ நம்ம ஆள பாத்துட்டேன்.

அவன பாத்த ஒடனே நா கேட்ட முதல் கேள்வி என்னனு நெனைகிரிங்க..? பொதுவா எல்லாரும் பேர கேப்பாங்க.. ஆனா நான் கேட்டது, நீங்க தமிழ் medium தானேனு தான் ஆரம்பிச்சேன்.. பயபுள்ள இப்டி கேக்கவும், தல ரொம்ப குஸி ஆகிட்டாரு... ஏனா அவனும் என்ன மாதிரியே இங்கிலிஷோபோபியா வந்து அவதிப்பட்டு அலைஞ்சுட்டு இருந்தவன்.. அவ்ளோ தான், பேறே தெரியாம கண்டதும் நடப்பு பத்திகிச்சு (பையனா இருந்ததால..). இல்லனாலும் பத்திருக்கும், ஆனா வேறமாதிரி பத்திருக்கும்.

எப்டியோ ரெண்டு பேர் கொண்ட ஒரு குட்டி gang ஆரம்பிச்சாச்சு.. அப்புறம் ரெண்டு பேருமா சேந்து எங்கள மாதிரி வருங்காலத்துல உருப்படாம போகப்போற ஆளுங்கள தேடிபுடிச்சு gang'a டெவெலெப் பண்ணினோம். எங்களோட கொள்கை எல்லாம் போன பதிவுல சொன்னதுக்கு ஒத்து போச்சு (பிட் வெக்கரத தவிர). ஏனா, அதுக்கு ஆளுக்கு ஒரு டெக்னிக் வெச்சிருந்தானுங்க பாவிங்க.. எப்டியோ கடேசி வரைக்கும் புக்'a தொடாம நம்ம மானத்த காப்பாதினானுங்க.. அதுவரைக்கும் எல்லாரும் ரொம்ப நல்லவனுங்க எங்க பயபுள்ளைங்க..

எப்டியோ தக்கி முக்கி கிளாஸ் போக ஆரம்பிச்சு ஒரு மாசம் ஓடிருக்கும். பக்கத்து ரூம்ல இருந்து ஒருத்த வெட்டிய போட வந்தான். எங்க ரூம் சேர் எல்லாம் டிரெஸ்ஸ போட்டு fill பண்ணி வெச்சிருந்ததால, table மேல ஒக்கரலாம்'னு முடிவு பண்ணி அதுமேல இருந்த chemistry புக்'a நகுத்தி வெக்கறதுகாக எடுத்தான். ஆனா அது காலேஜ் ஆரம்பிச்ச புதுசுல அங்க வெச்சது. ஒருமாசமா தொடவே இல்லை. நல்லா table'la ஒட்டிகிச்சு. ரெண்டு மூணு நிமிஷம் போராடி புக்'கு சேதாரம் இல்லாம எப்டியோ பிச்சு எடுத்துட்டான். அவ்ளோ தான், அப்பவே எங்க கொள்கை புடிச்சுபோயி எங்க ஜோதில கலந்துட்டான்.

இது தான் எங்க gang உறுவான samll கதை. இதுக்கு அப்பறம் சில பல பேரு வந்து போனாலும், இவங்க மட்டும் தான் எங்க gang'in அடிப்படை உறுப்பினர்கள்.

காலேஜ் போனாலும், கக்கூஸ் போனாலும் ஒண்ணா தான் போவோம். எங்க 3 to 5 பேருக்கு காலை சாப்பாடு எப்போமே ஒரே தட்டுல தான்.. ஒருத்த தட்ட எடுத்துட்டு போவான். 15 , 17 இட்லி'a போட்டுட்டு வருவான். ஒண்ணா கும்மி அடிச்சுட்டு வேணும்னா ரெண்டாவது, மூணாவது ரவுண்டு போட்டு சாப்டுட்டு கிளாஸ்'கு போவோம். நாங்க கிளாஸ்'கு கெலம்பறதே ஒரு அலப்பறையான விஷயம்.

எங்க காலேஜ்'ல prayer எல்லாம் உண்டு. prayer'ku 5 min முன்னாடி ஒரு பெல் அடிப்பாங்க. அப்போ தான் நாங்க குளிச்சுட்டு வருவோம். அந்த 5 min'la டிரஸ் பண்ணிட்டு, முன்னாடி சொன்ன இட்லி எல்லாம் ஸ்வாஹா பண்ணிட்டு, காலேஜ் போய் சேரும்போது கண்டிப்பா கொறஞ்சது 15 min லேட் ஆகிருக்கும். ஆரம்ப நாட்கள்'a masters எல்லாம் எவ்ளவோ சொல்லி பாத்தாங்க. அப்புறம் ஒன்னும் முடியாம தண்ணி தெளிச்சு விட்டுடாங்க.

இப்டியே கூத்தடிச்சு இருக்கும் போதே first sem exams'um வந்திடுச்சு. பசங்க exams'ku முந்தின night'la தான் புதுசு புதுசா யோசிபானுங்க பாவிங்க.. இப்டித்தான், maths exam'ku முந்தின நாள் night'um வில்லங்கமா யோசிசானுங்க.. எதாச்சும் exam'la பாஸ் பண்ணுறத பத்தி யோசிச்சாலும் பரவால, ஆனா இவனுங்க யோசிச்சது cards வேலயாடுரத பத்தி. எனக்கு வேற எப்படி வெளையாடனும்'னு தெரியாதா, சரி எனக்கும் சொல்லி தாங்கடானு உக்காந்துட்டேன். அப்புறம் என்னத்த சொல்ல, அடுத்த நாள் பொழப்பு சிரிப்பா சிரிச்சிடுச்சு..

இதுக்கு நடுநடுவுல question paper லீக் ஆகிடுச்சுனு வேற அப்பப்போ கெளப்பி விடுவானுங்க. இப்டி தான், கடேசி எக்ஸாம் அன்னைக்கும் கெளப்பி விட்டானுங்க. 100 mark paper'la, 20 மார்க் 2 மார்க் question & 80 மார்க் 20 மார்க் question. பசங்க நாலு 20 மார்க் question'ayum சொல்லிடானுங்க.. எப்டியோ அது தான் கண்டிப்பா வரபோகுதுனு தெரிஞ்சு போச்சு. அப்புறம் என்ன சொல்லவா வேணும்.

ஆளுக்கு ஒரு book'a எடுத்து answer தேடி புடிச்சு பாத்தா, ஒவ்வொன்னும் மூணு நாலு பக்கத்துக்கு இருக்கு. நாலு question'ku 20 to 30 pages படிக்கணுமா..? படிப்பமா நாங்க.. அவனவன் calculator, hall ticket பின்னாடின்னு கெடச்ச பக்கமெல்லாம் எழுதறான். இதுல நெறைய ரிஸ்க் இருக்கு.. ஏனா எவனாச்சும் நம்ம calculator’a கடனா கேட்டா அம்பேல் தான்.. அதே மாதிரி, hall ticket'a யாராச்சும் செக் பண்ணவும் வாய்ப்பிருக்கு. அதனால ஒரு அழகான white sheeta எடுத்து பளிச்னு எழுதி கொண்டு போயி கலக்கிட்டோம்'ல..
அன்னைக்கு சங்கத்துல மொதநாள் பேறே தெரியாம friend ஆனமே.. அவனுக்கு birthday வேற (அந்த பாப்பா பேரு மணிவேல்).. எக்ஸாம்'a நல்லபடியா முடிச்சுட்டு அவன வாழ்த்தி வகுன்தெடுத்துட்டு semester leave'ku ஊருக்கு போய்ட்டோம்.

அடுத்த நாள் பேப்பர்'a பாத்தா, அதுல anna univercity’la இருந்து மெசேஜ் பாஸ் பண்ணிருந்தாங்க.. மாணவ மணிகளே..! நீங்க காப்பி அடிச்சு எழுதுன மேட்டர் எங்களுக்கு தெரிஞ்சு போச்சு.. ஒழுங்கு மரியாதையா அந்த எக்ஸாம்'a இன்னொரு தபா எழுதுங்கடானு போட்டிருந்துச்சு..

சரி.. புள்ள ஆச படுது.. நீ எத்தன தபா வெச்சாலும் நாங்க readymade'a பிட்'a ரெடி பண்ணி வெச்சிருக்கோம்.. நோ பிராப்ளம்'னு எழுதி முடிச்சோம். காலேஜ் லைப் புதுசுங்கரதால, இந்த first sem'la ஒன்னு ரெண்டு எக்ஸாம்'கு தான் பிட்டு வெச்சது. அடுத்த sem பாதில ரிசல்ட்'உம் வந்திச்சு.. மேல பண்ணிட்டு இருந்த கூத்துலையே தெரிஞ்சிருக்கும் ரிசல்ட் எப்படி வந்திருக்கும்'னு.. உழைப்புக்கு தகுந்த ஊதியம் correct'a கெடச்சுது..

அந்த birthday boy மணிவேல்'கு எல்லா paper'um ஊத்திகிச்சு.. எனக்கு கொஞ்சும் தேவலை.. ஒன்னுல பாஸ் பண்ணிட்டேன். அதுவும் சுத்தி போட்டாலும் வராத english paper'la.. அதான் comedy.. இதுனாலேயே அவன் கொஞ்சம் காண்டாயிட்டான் பாவம். இன்னொருத்தன் ரெண்டு'ல பாஸ். மீதி எல்லா உறுப்பினர்களும் 2 to 3 paper'la பாஸ் பண்ணிருந்தாங்க.. இது தான் எங்க first semester'oda மோஸ்ட் successful ஹிஸ்டரி..
(ஆமா.., இப்டி எல்லாம் எழுதி வெச்சா யாராச்சும் university'la போட்டுகுடுத்துட்டா..????)

22 comments:

நட்புடன் ஜமால் said...

பாஸ் தானே பாஸூ

gayathri said...

me they 2nd

सुREஷ் कुMAர் said...

பாஸே தான் பாஸு..

gayathri said...

anna post padichila

வேத்தியன் said...

மீ த 4th...

सुREஷ் कुMAர் said...

first second'la இருந்து.., 100 வரைக்கும் உங்க ராஜ்யம் தான்..

வேத்தியன் said...

எப்டியோ கடேசி வரைக்கும் புக்'a தொடாம நம்ம மானத்த காப்பாதினானுங்க.. அதுவரைக்கும் எல்லாரும் ரொம்ப நல்லவனுங்க எங்க பயபுள்ளைங்க..//

கலக்குறேள் போங்கோ...

நட்புடன் ஜமால் said...

\\தொடர்ச்சின்னு வெச்சுகோங்க..\\

தெளிவா சொல்லுங்கோ ...

நட்புடன் ஜமால் said...

\\தொடர்ச்சின்னு வெச்சுகோங்க..\\

தெளிவா சொல்லுங்கோ ...

நட்புடன் ஜமால் said...

\\தொடர்ச்சின்னு வெச்சுகோங்க..\\

தெளிவா சொல்லுங்கோ ...

வேத்தியன் said...

காலேஜ் போனாலும், கக்கூஸ் போனாலும் ஒண்ணா தான் போவோம்//

ச்சீ ச்சீ...
இதுக்குமா????
:-)

RAMYA said...

me the 3rd??

सुREஷ் कुMAர் said...

//
ச்சீ ச்சீ...
இதுக்குமா????
//
ஆமாங்க..ஆமா..

வேத்தியன் said...

ரொம்ப நல்லா இருக்குங்க...

RAMYA said...

ஜமால் எனக்கு கண்ணே தெரியலை

படிச்சிட்டு கமெண்ட் போடறேன்

நான் அப்புறமா வரேன்!!

सुREஷ் कुMAர் said...

//
தெளிவா சொல்லுங்கோ
//
என்னா மேட்டர்னா.. போன பதிவுல 7'th sem எக்ஸாம் பத்தி மட்டும் சொல்லிருந்தேன்.. அதான்..

सुREஷ் कुMAர் said...

//
ஜமால் எனக்கு கண்ணே தெரியலை
//
ஆமா பா.. எனக்கும் தான்.. இத்த கொஞ்ச நேரம் பாத்துட்டு வேற பேஜ் போனா கண்ண கட்டுது.. முடிஞ்ச வரைக்கும் சீக்கிரம் மாத்திடுறேன்..

सुREஷ் कुMAர் said...

வாங்க வேத்தியன்..
நன்றி for ur கமெண்ட்..

सुREஷ் कुMAர் said...

//
anna post padichila
//
ஓஓஓஓ... இது மலையாளமோ..?

RAMYA said...

ஒரு காலேஜ் குள்ளே போய் ஒரு ரவுண்டு மறுபடியும் படிச்சிட்டு வந்தது போல இருந்தது.

நல்லா எழுதறீங்க சுரேஷ்!

வாழ்த்துக்கள் !!

सुREஷ் कुMAர் said...

ஸபா.. எப்டியோ உங்கள ஒரு பதிவயாச்சும் படிக்க வெச்சுட்டேன்..

cheena (சீனா) said...

தொடர் இடுகையா - நாசமாப் போச்சு

பத்திக்கிச்சா பத்திக்கிச்சா - சரி சரி -

கேங் டெவல்ப்மெண்ட் - பலே பலே - ஆமாம் லீடர் யாரு

கேங்கின் அடிப்படை உறுப்பினர்கள் எல்லாம் இப்ப என்னா பண்றானுங்க

காலேஜ் போனா ஒண்ணா போங்க - சரி

அதென்ன .... போனாலும் ஒண்ணாத்தானா - த்தூ த்தூ த்தூ

ஒரே தட்டுல இட்லியா - 15 / 17 - மூணு அல்லது அஞ்சு பேருக்கு -- ம்ம்ம் - சரி சரி

கணக்குப் பரீசைக்கு படிடான்னா - சீட்டுக்கச்சேரியா நடத்துனே - ஒன்னெய ....

மணிவேலுக்குப் பொறேந்த நாளா - சரி கொண்டாடினீங்களா -

திரும்ப ரீஎக்ஸாமா - இங்கிளீஷ்லே பாசா - நீயா - எப்படிடா

மோஸ்ட் சக்ஸஸ் புஃல் ஹிஸ்டரி - சூபர் சூப்பர்

நல்லாவே இருக்கு - அனுபவிச்சிருக்கீங்கடா பாவிகளா