Tuesday, June 2, 2009

‘பாஸ்வோர்’டாய நம:

ஓம் ‘பாஸ்வோர்’டாய நம:

நீங்க உங்க தினப்படி வாழ்க்கையில எவ்ளோ தடவ எங்க எல்லாம் பாஸ்வோர்ட் உபயோகிக்கிறிங்கனு லைட்டா யோசிச்சுட்டே இந்த இடுகைய படிங்க மக்கள்ஸ்..

என்னுடைய சராசரி நாளில்..

காலைல எழுந்தவுடனே, ஸ்நூஷ்'ல இருக்குற மொபைல்'a அன்லாக் பண்ண பாஸ்வோர்ட் கொடுத்து, அலாரம்'a ஆப் பண்ணி, வெட்டியா வந்த மெசேஜ் எல்லாம் படிச்சுட்டு எழுந்திரிக்கும்போது அன்றைய முதல் பாஸ்வோர்ட் என்ட்ரி முடிஞ்சது..
(இப்படி பாஸ்வோர்ட் இல்லாம இருந்தா, உடன்பிறப்புக்கள் நைட்டோட நைட்டா அலாரம் டைம மாத்தி கபடி வெலையாடிடுவாங்க.. அதுக்கு தான் இந்த பாஸ்வோர்ட்..)

அடுத்து, காலைல பண்ணவேண்டியத எல்லாம் பண்ணிக்கிட்டு, நம்ம கம்பியூட்டர ஆன்பண்ணி, நம்ம யூசர் அக்கவுண்ட்ல லாகின் பண்ண பாஸ்வோர்ட் கொடுத்து லாகின் பண்ணிமுடிக்கும்போது, அடுத்த பாஸ்வோர்ட் என்ட்ரி ஓவர்..
(இப்படி வீட்ல நம்ம அக்கவுண்ட்க்கு பாஸ்வோர்ட் வெக்காட்டி எதாச்சும் வாண்டுங்க கண்டத காணாம பண்ணிடுங்க.. அதான் சேப்டிக்கு..)

அடுத்து, சிஸ்டம்ல மெயில் செக் பண்ணலாம்னு ஜி-மெயில் ஓபன் பண்ணினா, நம்ம அதுலேயே மூணு அக்கவுண்ட் வெச்சிருப்போம்..
ஒவ்வொண்ணுக்கும் பாஸ்வோர்ட் கொடுத்து மெயில் செக்பண்ணிட்டு, அடுத்ததா யாகூ.. இதுலயும் ரெண்டு மூணு அக்கவுண்ட் இருக்கும்.. அதுக்கும் தனித்தனி பாஸ்வோர்டுகள் யூஸ்பண்ணிட்டு, அடுத்து reddif'la இருக்குற ரெண்டு மூணு அக்கவுண்டுக்கு பாஸ்வோர்ட்..

அப்பறம், ஆர்குட் ஓபன் பண்ண.. சிலபேர் இதுலயும் ரெண்டு மூணு அக்கவுண்ட் வெச்சிருப்பாங்க.. அவங்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பாஸ்வோர்டுகள்..

அப்பறம், linkein கம்யுணிட்டி.. இதுக்கு தனியா பாஸ்வோர்ட்..
அப்புறம், facebook'ku தனியா யூசர்நேம், பாஸ்வோர்ட்..

யாகூ குரூப்ஸ் மற்றும் இன்னபிற குரூப்ஸ்களுக்கான பாஸ்வோர்ட்கள்..

அப்புறம், e-newspaper படிக்கற பழக்கம் இருந்தா.. ஒவ்வொரு பத்திரிக்கைக்கும் நம்மளோட பாஸ்வோர்ட் யூஸ் பண்ணவேண்டி இருக்கும்..

அப்புறம்.. நம்ம பிளாக்'ல நுழைந்து அன்றைய கடமைகளை நிறைவேற்ற பாஸ்வோர்ட் தேவைப்படும்..
படித்த, பார்த்த சிலரின் இடுகைகளுக்கு வோட்டுபோடுவதற்காக தமிழ்மணம், தமிழிஷ், இன்னபிற வலைபக்கங்களுக்குள் நுழைய அவற்றிற்கான பாஸ்வோர்டுகள்..

தனது பிளாக்கின் ஹிட்ஸ், டிராப்பிக் ரேஞ்சை அவ்வப்போது பார்க்க அதற்கான வலைத்தளங்களில் தங்களின் கணக்கிற்கான பாஸ்வோர்ட்டுகள்..

இப்படியெல்லாம் மூளையில் ஒளிந்துள்ள பாஸ்வோர்ட்டுகளை பயன்படுத்தி காலை கடமைகளை நிறைவேற்றிவிட்டு, ஆபீஸ் போய், கணினியை ஆன் செய்து மீண்டும் லாகின் பண்ண பாஸ்வோர்ட்..

அப்பறம், அன்றைய ஆணிகளை பார்க்க, கம்பெனியில் வழங்கப்பட்டுள்ள ID'il மெயில் செக் பண்ண ஒரு பாஸ்வோர்ட்..

பிராஜெக்ட் சார்பான database'ai ஏக்சஸ் செய்யவேண்டிஇருந்தால், அதற்கான பாஸ்வோர்ட்..

(இப்போது சில நாட்களாக தரவிறக்கம் செய்யப்படும் "zip" பார்மெட் file'ai அன்ஜிப் செய்யக்கூட பாஸ்வோர்ட் செட் செய்திருப்பதை காணமுடிகிறது.)

இதற்கு இடையில், நண்பர்களுடன் சாட்ட, gtalk, yahoo- messenger போன்றவற்றின் நமது அக்கவுண்ட்டிற்குள் நுழைய தனிதனி பாஸ்வோர்டுகள்..

அப்புறம், ஆணிகளுக்கு இடையே மக்களின் இடுகைகளுக்கு பின்னூட்ட, முடிந்தால் ஒரு இடுகையை நம் சார்பாக தட்டிவிட, அதுஇது என்று பிளாக் சம்பந்தமான பயன்பாட்டிற்கு பாஸ்வோர்ட்டுகள்..

இவ்வளவுக்கு மத்தியில்,இப்போது உள்ள கம்பெனியை விடுத்து, வேறு கம்பெனியில் ஆணி புடுங்க ஆசைப்பட்டு, naukri, monsterindia போன்றவற்றில் வேலைதேட எண்ணி உள்நுழைய அவற்றிற்கான பாஸ்வோர்ட்..

நடுவில் எங்கயாச்சும் வெளியில் உலாத்த செல்லும்போது, வழியில் ஏதாவது வாங்க நினைத்து, தேவையான பணம் பெற ATM சென்டர்களுக்கு சென்று அட்டையை நீட்டினால், அங்கும் பாஸ்வோர்ட்..
(அதுவும், ஊரில் உள்ள ஒவ்வொரு வங்கியிலும் அக்கவுண்ட் ஆரமித்து ATM கார்ட் வைத்திருப்பதால்..
அவ்வளவு கார்டுக்கும் ஒவ்வொரு பாஸ்வோர்ட்வேறு..)


இப்படி எங்கு நோக்கினும் பாஸ்வோர்ட் மயமாக இருந்தால், ஒருமனுசன் எவ்ளோ பாஸ்வோர்ட்ஐத்தான் நியாபகம் வைத்திருப்பான்..

இதுவரைக்கும் வாழ்க்கையில் பாஸ்வோர்ட்டே உபயோகிக்காதவர்களின் நலசங்கம் சார்பாக,
"தனி ஒரு மனிதனுக்கு பாஸ்வோர்ட் இல்லையேல்.. (வேறு என்ன செய்ய முடியும்..) புதிதாய் பெற்றிடுவோம்.."னு சொல்லிட்டு கிளம்புகின்றேன்.. நன்றி.. வணக்கம்..


11 comments:

ஆர்வா said...

ஆஹா பட்டைய கிளப்புறீங்க...

அப்துல்மாலிக் said...

தல கடைசிலே உங்க பதிவை படிப்பதற்கு பாஸ்வேர்ட் செட் பண்னாமல் போனீங்களே

ஹி ஹி ரசிச்சேன் மொத்த பாஸ்வேர்ட் புலப்பத்தை..

தினேஷ் said...

/அதுவும், ஊரில் உள்ள ஒவ்வொரு வங்கியிலும் அக்கவுண்ட் ஆரமித்து ATM கார்ட் வைத்திருப்பதால்..
அவ்வளவு கார்டுக்கும் ஒவ்வொரு பாஸ்வோர்ட்வேறு..)
//

எதுலயாச்சும் பணம் இருக்குமா இல்ல வெறும் கார்டு மட்டும்தானா ?

இராகவன் நைஜிரியா said...

ஆஹா... சூப்பர்...

பாஸ்வேர்ட் பின்னாடி இவ்வளவு இருக்கா..

நடக்கட்டும்...

सुREஷ் कुMAர் said...

//
கவிதை காதலன் said...
ஆஹா பட்டைய கிளப்புறீங்க...
//
நன்றி கவிதை காதலன்..

सुREஷ் कुMAர் said...

//
அபுஅஃப்ஸர் said...

தல கடைசிலே உங்க பதிவை படிப்பதற்கு பாஸ்வேர்ட் செட் பண்னாமல் போனீங்களே

ஹி ஹி ரசிச்சேன் மொத்த பாஸ்வேர்ட் புலப்பத்தை..
//
பண்ணலாம்.. அப்புறம் கடையில் ஆகும் போனி..??

सुREஷ் कुMAர் said...

//
சூரியன் said...

/அதுவும், ஊரில் உள்ள ஒவ்வொரு வங்கியிலும் அக்கவுண்ட் ஆரமித்து ATM கார்ட் வைத்திருப்பதால்..
அவ்வளவு கார்டுக்கும் ஒவ்வொரு பாஸ்வோர்ட்வேறு..)
//

எதுலயாச்சும் பணம் இருக்குமா இல்ல வெறும் கார்டு மட்டும்தானா ?
//
என்னது சின்ன புள்ள தனமா..?
ATM'la பணம் இல்லாம இருக்குமா..?

सुREஷ் कुMAர் said...

//
இராகவன் நைஜிரியா said...

ஆஹா... சூப்பர்...

பாஸ்வேர்ட் பின்னாடி இவ்வளவு இருக்கா..

நடக்கட்டும்...
//
ஆமாம்ணா.. ஆமாம்..
என்னாத்த சொல்ல..?
நம்ம பொழப்பே இப்படிதானு ஆகிடுச்சு..

நட்புடன் ஜமால் said...

இம்பூட்டு சொல்லிக்கீறிய

உங்கட கடவுச்சொல்லை
சொல்லவே இல்லை

முனைவர் இரா.குணசீலன் said...

உண்மை தான் எத்தனை பாஸ்வேர்டுதான் கொடுப்பது

cheena (சீனா) said...

உண்மை உண்மை -அத்தனை கடவுச் சொல்லையும் நினைவில் வைத்திருந்து பயன் படுத்துகிறோமே ! நாம் உண்மையிலேயே பெரிய ஆள்தான்