Friday, June 26, 2009

திருப்பூரில் மீண்டும் ஒரு 7 ஸ்டார்..

1. திருப்பூரில் மீண்டும் ஒரு 7 ஸ்டார்..

அதென்ன 7 ஸ்டார்'னு கேக்குறிங்களா..?

இது 25 வருடங்களுக்கு முந்தின கொசுவத்தி..

என்ன மேட்டர்னா.., இப்போ, கொஞ்ச வருசத்துக்கு முந்தி நிறைய பைனான்ஸ் கம்பெனிங்க பண்ணுனவேலைய மாதிரி அப்போவே அந்த 7 ஸ்டார்ங்கற நிறுவனம் அதிக வட்டிதர்றதா சொல்லி சுருட்டிட்டு ஓடிடுச்சு..

இப்போ.. திரும்பவும் அதேமாதிரி ஒன்னு முளைச்சிருக்கு..

இவங்களோட கொள்கைவிலக்கம் என்னனா.. நம்ம ஒரு லட்சம் ரூபா அவங்ககிட்ட முதலீடு பண்ணினா.., அவங்க நமக்கு காலம் பூரா மாசா மாசம் 10,000 ரூபா தருவாங்கலாமா..

மக்களே.., நீங்களே யோசிச்சு பாருங்க.. இது சாத்தியமா..?
அந்த ஒரு லட்ச ரூபாய மீட்டர் வட்டி, ஜெட்டு வட்டிக்கு விட்டாகூட மாசா மாசம் 10,000 ரூபா வட்டிவருமானு தெரியலை.. ஆனா இவனுங்க நமக்கு நோவாம காலம்பூரா, மாசா மாசம் 10,000 ரூபா தருவானுங்கலாமா..? எப்புடியா தருவானுங்க..?

(இது, அவர்கள் என் உறவினர் ஒருவரின் வீட்டு கதவை தட்டியதால் எங்கள் வீட்டில் கேட்ட செய்தி)

அடுத்து..

2. தட்டுங்கள் திறக்கப்படும்..

இந்த வாசகம் எந்த மதத்திற்கு சம்பந்தப்பட்டது என்று யோசிக்கவில்லை..

எந்த கருத்தையுமே நாம் காணும் கண்ணோட்டத்தின் அடிப்படையில் சரியாகவும் புரிந்துகொள்ளலாம்.. சிலசமையம் தவறாகவும் புரிந்துகொள்ளலாம் என்பதற்கான உதாரணமாய் கருதுகிறேன்..

"தட்டுங்கள் திறக்கப்படும்.."

ஆஹா.. என்னே இறைவனின் கருணை.. யாரையும் பேதமின்றி, தட்டுங்கள்.. பாரபட்சமின்றி திறக்கப்படும்னு சொல்லுறாரே..

அவ்வளவு கருணை உள்ளவரா இருப்பாரேயானால்..
"எதற்காக மூடிவைக்கிறார்..?" எப்போதும் திறந்தே வைத்திருக்க வேண்டியது தானேனு கேள்வி எழலாம்..

எதற்காக மூடிவைக்கவேண்டும்.. தட்டுங்கள் திறக்கப்படும்னு சொல்லணும்..
எப்போதும் திறந்தே வைத்திருங்களேன்'னு கேக்கலாம்..

கேக்கலாமா என்ன..?


இப்படி கேட்பது நம்மின் தவறான கண்ணோட்டமாக இருக்கலாம்..

சரியான கண்ணோட்டமாக நான் கருத்துவது..

எதையுமே நம்முடைய முயற்சியினால் பெறவேண்டும்..
சிறிதேனும் நம்மின்மூலம் காட்டப்படும் உழைப்பின் மூலம் பயனை அனுபவிக்கவேண்டும்..

இறைவன் கொடுக்கிறானே என்பதற்காக முயற்சிக்காமல் பயன் பெற நினைக்கக்கூடாது..

ஆகவே தான்.. நம்மால் இயன்ற அந்த ஒரு சிறு முயற்சியாக, சிறிதேனும் முயன்று பலன் பெறவேண்டுமென்பதே இந்த “தட்டுங்கள் திறக்கப்படும்..” வாசகத்தின் கருத்தாக இருக்கலாமென எண்ணுகிறேன்..


24 comments:

நாமக்கல் சிபி said...

குட் போஸ்ட்!

இன்னும் எல்லா மக்களுக்கும் இந்த விழிப்புணர்வு வரவில்லை என்பதுதான் வேதனையான உண்மை!

இன்னமும், இதற்குப் பிறகும் கூட இது போன்ற நிறுவனங்கள் தோன்றிக் கொண்டுதான் இருக்கும்! ஏமாறும் மக்களும் இருந்து கொண்டேதான் இருப்பார்கள்!

:(

இராகவன் நைஜிரியா said...

வெரி குட். ஐ லை திஸ் போஸ்ட்.

ஏமாறுகின்றவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள். ஆசையே அழிவுக்கு காரணம். அதிக வட்டி, அதிக நாஸ்தி.

பிரியமுடன்.........வசந்த் said...

வெல்டன் சுரேஷ்

இந்த பதிவுக்கு ஒரு பூங்கொத்து

சூரியன் said...

தட்டுங்கள் எழுதப்படும் என்று நீங்கள் சொல்வது புரியுது . தட்டியாச்சு ..

Anonymous said...

யாருப்பா இது? அப்பவே அது ரொம்ப பிரச்சனை யாக இருந்தது... திரும்பவுமா??

அபுஅஃப்ஸர் said...

மாயைகள் நிறைந்த உலகமப்பா இது

நாமதான் விழிச்சிக்கனும் இல்லேனா தலையை திண்ணுப்புடுவானுங்க‌

பேரரசன் said...

அவுங்க அட்ரஸ் கிடைக்குமா...

நீங்க திருப்பூரா...

Rajeswari said...

//இப்போ.. திரும்பவும் அதேமாதிரி ஒன்னு முளைச்சிருக்கு..
//

ஏமாறாம எல்லோரும் இருந்துக்கங்க

Rajeswari said...

//. நம்மால் இயன்ற அந்த ஒரு சிறு முயற்சியாக, சிறிதேனும் முயன்று பலன் பெறவேண்டுமென்பதே இந்த “தட்டுங்கள் திறக்கப்படும்..” வாசகத்தின் கருத்தாக இருக்கலாமென எண்ணுகிறேன்..//

உண்மை .நல்ல பதிவு

சுரேஷ் குமார் said...

//
நாமக்கல் சிபி said...

குட் போஸ்ட்!
//

நன்றி அண்ணா..

//
இன்னும் எல்லா மக்களுக்கும் இந்த விழிப்புணர்வு வரவில்லை என்பதுதான் வேதனையான உண்மை!

இன்னமும், இதற்குப் பிறகும் கூட இது போன்ற நிறுவனங்கள் தோன்றிக் கொண்டுதான் இருக்கும்! ஏமாறும் மக்களும் இருந்து கொண்டேதான் இருப்பார்கள்!

:(
//
உண்மைதான்..

சுரேஷ் குமார் said...

//
இராகவன் நைஜிரியா said...

வெரி குட். ஐ லை திஸ் போஸ்ட்.
//
ஹீ.. ஹீ..

போன தபா ஏத்துன சூட்ட இந்த தபா ஏறக்கியாச்சா..

இனிமே சூடு எத்தாததுக்கு நான் பொறுப்பு..
நன்றி அண்ணா..

சுரேஷ் குமார் said...

//
பிரியமுடன்.........வசந்த் said...

வெல்டன் சுரேஷ்

இந்த பதிவுக்கு ஒரு பூங்கொத்து
//
கொத்துக்கு நன்றி வசந்த்..

சுரேஷ் குமார் said...

//
சூரியன் said...

தட்டுங்கள் எழுதப்படும் என்று நீங்கள் சொல்வது புரியுது . தட்டியாச்சு ..
//
தட்டியது கேட்டது..
மீதி பாதி நடத்தப்படும் சூரியன்..

சுரேஷ் குமார் said...

//
மயில் said...

யாருப்பா இது? அப்பவே அது ரொம்ப பிரச்சனை யாக இருந்தது... திரும்பவுமா??
//
ஆமாங்கோவ்..
உஜாரா இருந்துக்கோங்க..

சுரேஷ் குமார் said...

//
அபுஅஃப்ஸர் said...

மாயைகள் நிறைந்த உலகமப்பா இது

நாமதான் விழிச்சிக்கனும் இல்லேனா தலையை திண்ணுப்புடுவானுங்க‌
//
உண்மைதான் அபு..

சுரேஷ் குமார் said...

//
பேரரசன் said...

அவுங்க அட்ரஸ் கிடைக்குமா...

நீங்க திருப்பூரா...
//
நான் திருப்பூரான் இல்லை..

சுரேஷ் குமார் said...

//
Rajeswari said...

//இப்போ.. திரும்பவும் அதேமாதிரி ஒன்னு முளைச்சிருக்கு..
//

ஏமாறாம எல்லோரும் இருந்துக்கங்க
//
ஆம்மா.. சொல்லிபோட்டோம்..

சுரேஷ் குமார் said...

//
Blogger Rajeswari said...

//. நம்மால் இயன்ற அந்த ஒரு சிறு முயற்சியாக, சிறிதேனும் முயன்று பலன் பெறவேண்டுமென்பதே இந்த “தட்டுங்கள் திறக்கப்படும்..” வாசகத்தின் கருத்தாக இருக்கலாமென எண்ணுகிறேன்..//

உண்மை .நல்ல பதிவு
//
நன்றி Rajeswari அக்கா..
முதல் வருகைக்கும் கருத்துக்கும்..

Anonymous said...

ஒரு விழிப்புணர்வு பதிவு இந்த ஏமாற்று கம்பனிகளால் ஏமாறுவது அப்பாவி பொது மக்கள் தான் அவர்கள் உழைப்பை எல்லாம் இது போன்ற நிறுவங்கள் ஏய்து விடுகிறது..

2வது பதிவும் வித்தியாசமான பதிவு சிந்திக்க வேண்டியது கூட....உண்மையை விளிம்பியிருக்கீங்க சுரேஷ்...

gonzalez said...

http://funny-indian-pics.blogspot.com/

நட்புடன் ஜமால் said...

ஆசை!

அழிவுகளின் பிறப்பிடம் ...

பேராசையாகி ...

நட்புடன் ஜமால் said...

எந்த கருத்தையுமே நாம் காணும் கண்ணோட்டத்தின் அடிப்படையில் சரியாகவும் புரிந்துகொள்ளலாம்..\\

சரியா சொன்னீங்க

சில சமயம் அல்ல

பல சமயங்களில் ...

நாஞ்சில் நாதம் said...

நல்ல கருத்து

செல்வேந்திரன் said...

தம்பி சுரேஷ், என்னைச் சந்தித்ததை அதற்குள் மறந்திருக்க மாட்டாய் என்று நம்புகிறேன். செவன் ஸ்டார் நிதி நிறுவனம் குறித்து மேலதிக தகவல்கள் இருப்பின் எனது மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். கொஞ்சம் கூரான கத்தியோடு டவுசரைக் கிழிக்கலாம்.

மிக்க அன்புடன்,
செல்வேந்திரன்.
k.selventhiran@gmail.com