Monday, March 30, 2009

பில்லிசூனியம் உண்மையா..?

பில்லிசூனியம், வாஸ்து உண்மையா..?

இது எனக்கு வேண்டப்பட்ட ஒருத்தங்க வீட்ல நடந்துட்டு இருக்குற நெச கூத்து..

என்னனா.., அந்த வூட்ல, ஒரு போர்சன்ல எனக்கு தெரிஞ்சவங்க குடி இருந்துட்டு, இன்னொரு போர்சன்ல அவங்க அண்ணன் குடும்பம் குடி இருந்துச்சு.. அவங்க ஏதோ சரி இல்லன்னு ஜோதிடம் பாத்ததுக்கு, கொஞ்ச நாளைக்கு அந்த வீட்ல இருக்க வேணா, வேற வீட்டல இருங்கன்னு சொல்லிருக்காரு.. so, அவங்க வேற வீட்டுக்கு போகவும், அவரு தம்பிய அங்க shift பண்ணிட்டு, அந்த வீட்ட வாடகைக்கு விட்டுடாங்க..

தம்பி இந்த வீட்டுக்கு ஷிபிட் பண்ணறதுக்கு முன்னாடியே, கிட்டத்தட்ட ஒன்னர வருசத்துக்கு முன்னாடி ஒரு நாள் நுரையீரல் இருக்கற area'la பயங்கரமா வலியெடுத்து, ரெண்டு நாளா தண்ணிகூட குடிக்கமுடியாம COVAI PSG'la அட்மிட் பண்ணுனாங்க..
அங்க என்ன கொடுமைனா..
இவங்கள சுமாரா evening 4 மணிக்கு கூட்டிட்டு போனாங்க.. ஒரு நர்ஸ் வந்து பெட் அரேஞ் பண்ணிகுடுத்துட்டு என்னான்னு கேட்டுட்டு, சரி sacn பண்ணனும்.. 15000 RS'a பே பண்ணிட்டு வெயிட் பண்ணுங்க. நைட் டாக்டர் வந்து பாப்பாங்கன்னு சொல்லிடு பூடாங்க.. அவங்க போன கொஞ்ச நேரத்துல யாரோ வர்றாமாதிரி சத்தம் கேட்டு டாக்டர்னு நெனச்சு பாத்தா.., யாரோ பக்கத்து பெட் நோயாளிக்கு வேண்டப்பட்டவங்க..
சரினு திருப்பி கொஞ்ச நேரம் வெய்ட் பண்ணிட்டு இருந்தப்போ திருப்பி சத்தம் கேட்டு திரும்பி பாத்தா.., யாரோ ஒருத்த சாப்பாட்டுக்கு ஆர்டர் எடுத்துட்டு இருந்தான்..

என்னடான்னு பாத்தா.. hospital rule'nu சொன்னான்.. இன்னாடா உங்க ரூல்ஸ்'னு கேட்டதுக்கு, அவன் சொன்னத கேட்டு, ஒரு நிமிஷம் அவன கொலை பண்ணிட்டு prison house'ku பூடலாம்னு ஆகிடுச்சு..
என்ன மேட்டர்னா.., வெளில இருந்து யாரும் சாப்பாடு கொண்டு வர கூடாதாமாம்..
இது பரவால.. நெக்ஸ்ட்.. அவங்க ஹாஸ்பிடல் கான்டீன்'ல இருந்து தான் சாப்பாடு வருமாமா.. அதும் இன்னைக்கு night, நாளைக்கு காலை சாப்பாடு, அப்பறம், நாளைக்கு மதிய சாப்பாடு, இந்த மூணுக்கும் இன்னைக்கு நைட்'e ஆர்டர் பண்ணியகானுமாம்..
என்னாங்கடா இது.. நாளைக்கு மதியம் என்ன சாப்ட போறேன்னு இன்னைக்கு night'e எப்டிடா முடிவு பண்ணுறது.. அதுவும், ரெண்டு நாளா தண்ணியே குடிக்க முடியாம இருக்கற இவருக்கு இப்போ என்ன தர்றதுனே தெரியல.. இதுல நாளைக்கு lunch ஆர்டர் பண்ண சொல்றானுங்க..
Night வரைக்கும் வெய்ட் பண்ணி பாத்தோம்.. டாக்டர் வரலை. ஆர்டர் பண்ணுன டிபன் அயிட்டம் தான் வந்துச்சு. அத்த பக்கத்து பெட்'ல இருந்தவங்களுக்கு டிபன் தானம் பண்ணிட்டு ராவோட ராவா வீட்டுக்கு வந்துட்டோம். அடுத்த நாள் காலில மொதோ வேலையா அவர எங்க பேமிலி டாக்டர் கிட்ட கூட்டிட்டு போயி காட்டுனோம். இவரு நல்ல மனுஷ.. செக் பண்ணி பாத்துட்டு பெருசா பயப்பட ஒன்னும் இல்லைன்னு சொல்லி மருந்து எழுதி குடுத்து அனுப்பிட்டு, அவங்க அப்பாவ மட்டும் தனியா வந்து பாக்க சொல்லிருக்காரு..
அடுத்த நாள் போயி பாக்கவும், டாக்டர் ரொம்ப பேஜார் பண்ணிபுடாறு.. என்னனா, டாக்டர் டெஸ்ட் பண்ணி பாத்ததுல, இவருக்கு CML'nu ஏதோ ஒரு வகை blood cancer'nu confirm பண்ணிருக்கறதா சொல்லவும் அப்பா அப்செட் ஆகிட்டாரு.. இது முதல் கட்ட பரிசோதனை தான்.. இன்னும் சில டெஸ்ட் எல்லாம் கோயமுத்தூர்'ல போயி எடுத்து பாத்தா தான் உறுதியா சொல்ல முடியும்னு சொல்லிடாரு..

எல்லா டெஸ்ட்'உம் முடிஞ்சு அது CML டைப் பிளட் கான்செர் தான்னு முடிவு பண்ணி மருந்து மாத்திரை எல்லாம் குடுத்தனுப்பிடாங்க.. அதுக்கு அப்புறம் எந்த பிரச்சனையும் வெளி பார்வைக்கு தெரியலேனாலும், மாசா மாசம் டெஸ்ட் பண்ணி பாக்கும் பொது சாப்புடுற மருந்தோட அளவ பொறுத்து டெஸ்ட் ரிப்போர்ட் ரிசல்ட் சில டைம் நல்லாவும், சில டைம் மோசமாவும் காட்டும்.. ஆனாலும் அவுருக்கு உடலளவுல எந்த பிரச்சனையும் தெரியல..
இந்த டைம்'ல தான் அவுரு இந்த வாஸ்த்து சரி இல்லாத அவங்க அண்ணன் வீட்டுக்கு குடிபோனாறு.. ஆனா அவங்க அண்ணன் இந்த வாஸ்து மேட்டர இவுரு கிட்ட இருந்து மறச்சுட்டு தான் குடிவசிருக்காரு.. போன ரெண்டாவது நாளே, அவுரும் ஒழுங்கா தூங்கல, அவரு wife'm ஒழுங்கா தூங்கல.. ஏதோ ஒன்னு அவங்கள disturb பண்றத உணர்ந்திருக்காங்க.. ரெண்டு மூணு நாள் போக போக, இந்த பிரச்ன பகல்லயே ஆரம்பிச்சிடுச்சு.. ரெண்டு பேத்துக்கும் வீட்டுக்கு போகவே பயம் வர ஆரம்பிக்கவே.. ஒன்னும் முடியாம பழைய வீட்டுக்கே திரும்பி வந்துட்டாங்க..

என்னடா இது ஒடம்பும் சரி இல்ல, வீடும் சரி இல்ல, என்ன தான் பிரச்னைனு தெரிஞ்சுக்க எங்க ஊர்ல இருக்கற ஒரு ஜோசியர் கிட்ட அவரோட ஜாதகத்த காட்டினோம். இத்தனைக்கும் நாங்க தான் அவரோட ஜாதகத்த கொண்டு போனோம்.. ஜோசியருக்கு அந்த ஜாதகத்தோட owner யாரு.. அவருக்கும் எங்களுக்கும் என்ன சம்பந்தம்'னு எல்லாம் தெரியாது.. தெரியவும் வாய்ப்பு இல்ல..

அவரோட ஜாதகத்த பாத்தா வொடனே, இவங்க வீட்டு வாசல் வடக்கு திசைல இருக்கானு கேட்டாரு.. அப்பாவும் யோசிச்சு பாத்து ஆமாம்னு சொல்லிருக்காரு.. அடுத்து அவுரு சொன்னது, கிட்டத்தட்ட கடந்த ரெண்டு வருசமா இவருக்கு ஒடம்பு சரி இல்லைன்னு ரொம்ப அதிகாமான மருத்துவ செலவு ஆகிட்டு இருக்கனுமே'னு கேட்டாரு.. ஆமா இதும் கரெக்ட் தான்னு சொல்லிவெக்கவும், அடுத்தத ஆரம்பிச்சாரு..
வீட்ல தொடர்ந்து பிரச்சனை இருந்துட்டே இருந்ததால வடக்கு பக்க கதவ அடைச்சிட்டு கிழக்கு பக்கம் கதவ வெச்சு சமீபத்துல வீட்ட மாத்திருகாங்களா'னு கேக்க அதுக்கும் அப்பா ஆமா போட்டிருக்காரு.. ஏனா உண்மையிலுமே, பழைய வீட்டுக்கு வந்த வொடனே இந்த கதவு மாத்தும் வைபவம் நடந்துச்சு..

உடனே எங்க அம்மா.., ஏங்க ஜோசியரே.. ஜாதகத்த வெச்சு கதவ புடுங்கி நட்டது எல்லாத்தயுமா சொல்ல முடியும்'னு கேட்டிருக்காங்க.. அதுக்கு அவரு, ஒருத்தரோட ஜாதகம், ஒவ்வொரு குறிப்பிட்ட காலத்திலையும் அந்த நபரோட வாழ்கையில நடக்கற எல்லா மாறுதல்களையும் சொல்லும்.. இந்த இந்த கால கட்டத்துல இது இது நடந்தே தீரும்னு அவரோட ஜாதகத்த வெச்சு உறுதியா சொள்ளமுடியும்னாறு..

அடுத்து சொன்ன மேட்டர் தான் நவீன கால அறிவியலையும் ஜோசியத்தையும் போட்டு கொலப்பிக்க காரணமா போச்சு..

எத நம்பறது.. எத விடுறதுனே தெரியல.. பெரியவங்க சொல்லுவாங்களே.. எத்த தின்ன பித்தம் தெளியும்கர நெலமனு.. மெய்யாலுமே அந்த நெலமைக்கு வந்துட்டோம்..
ஏனா.., ஜோசியர் சொல்றாரு, இவுரு வீட்ல ஒருத்தங்க சூனியம் வெச்சிருக்காங்க.. அதுவும் பக்கத்துல இருக்கற கணவனை இழந்த நெருங்கிய உறவினர் தான் இதுக்கு காரணம்னு சொன்னாரு.. அப்டிப்பட்ட ஒருத்தரும் அவங்க பக்கத்து வீட்ல இருந்தது தான் என்ன கலீஜ் பண்ணுனதுக்கு முக்கிய காரணம்.. ஆனா ஜோசியரையும் சந்தேகப்பட முடியாது.. ஏனா அவுருக்கு இந்த ஜாதகாரர் எந்த ஊருனே தெரியாது..
So, இப்போ இருக்கற வீட்ல இருந்தா உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் அளவுக்கு பெரிய அளவுல நோய் ஏற்பட்டு மருத்துவ செலவு இருந்துட்டே இருக்கும்.. இதுவே, அந்த புது வீட்ல தொடர்ந்து இன்னும் கொஞ்ச நாள் தங்கி இருந்தா மரணம் நிச்சயம்'னு சொல்லிருக்காரு..
இவுரு சொன்னமாதிரி, அவங்க அந்த புது வீட்ல இருந்து பழைய வீட்டுக்கு வர்றதுக்கு ரெண்டு மூணு நாளைக்கு முன்னாடி கிட்டத்தட்ட குடும்பத்தோட இறந்து போய்டுவோம்னு நெனைக்கிற அளவுக்கு ஏதோ நடந்திருக்கு.
இதுக்கு ஒரே தீர்வு, இந்த சூனியத்த எடுக்கற ஒருத்தர பாத்து சரிபண்ணுறது தான்னு சொல்லிடாரு.. இவரோட பிரச்சனைய தீக்க இது வரைக்கும் கடந்த ரெண்டு வருசத்துல சித்தா, ஆயுர்வேதம், கேரள வைத்தியம், ஆங்கில மருத்துவம்'னு பலதும் பாத்தாச்சு.. இன்னும் ஒன்னும் சரி பட்டு வரலை.. இந்த சூழ்நிலையில இப்டி ஒருத்தர் சொன்னா என்ன பண்ண தோணும்.. இது வரைக்கும் அந்த ஜோசியர நம்பாத நானே இந்த டைம் அப்பா கிட்ட அடுத்த செலவ எதாச்சும் சாமியாருக்கு பண்ணி பாத்துடலாம்பா'னு சொல்லிட்டனா பாத்துகோங்க, எவ்ளோ தான் இந்த மருத்துவம், அந்த மருத்துவம்னு சொல்லி அவங்கள ரெண்டு வருசமா அலைக்களிச்சு இருப்பாங்கனு..

இப்போ எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும் சாமி..
இவுருக்கு ஒடம்பு சரி இல்லாம போனதுக்கு காரணம் பில்லி சூனியம் மற்றும் வாஸ்துவா..? இல்லை நெஜம்மாலுமே சில அறிவியல் காரணங்களா..?

அறிவியல் காரணம்னு சொன்னா.. PSG’la இருந்து வெளிய வந்து பல பக்கம் சுத்தி வைத்தியம் பாத்துட்டு, அப்புறம் திருப்பி கோயமுத்தூர்'ல இருக்கற இன்னொரு பெரிய ஹாஸ்பிடல்'ல வைத்தியம் பாத்தும் இன்னும் ஒரு பிரயஜனமும் இல்லாததுக்கு காரணம் என்ன.. புற்று நோய்க்கு சிகிச்சை இல்லைன்னு தான் சொல்லுறாங்க.. ஆனா, இவுருக்கு சொல்லப்பட்டிருக்கும் இந்த CML வகை நோய்க்கு சிகிச்சை மூலம் வேறு பல நபர்களை குணப்படுத்தி இருக்கறதா அந்த முன்னணி ஹாஸ்பிடல் மாரடிசுக்கிட்டு இருந்தும், ஏன் இவர குணப்படுத்த முடியல.. அந்த பில்லி சூனியம் எல்லாத்தையும் தாண்டி நவீன அறிவியலால செயல்பட முடியலையோ..?

இன்னும் நெறையா கேக்க வேண்டி இருக்கு.. ஆனா இந்த மாதிரி கொஞ்சம் டிபிகல் டாபிக்க இதுக்கு மேலயும் கொலப்பவேண்டாம்னு தோணுது.. So, முடிக்காமல் முடிக்கிறேன்..

பி.கு: இத இங்க பதிவிடுவதன் நோக்கம் பதிவுகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது அல்ல..
இதை எல்லா துறைகளிலும் இருக்கும் பலரும் படிக்ககூடும்.. அவர்களில் எவரேனும் மருத்துவ துறையிலோ, ஜோதிட துறையிலோ புலமை பெற்றவராக இருந்து, அவர் மூலம் எனக்கு ஏதேனும் தகவல் கிடைக்க கூடும் என்ற நப்பாசையே இந்த பதிவின் நோக்கம்.

11 comments:

இராகவன் நைஜிரியா said...

தமிழிழ், தமிழ் மணம் போன்றவற்றில் இணையுங்கள்.

உங்களுக்கு நிறைய வாசகர்கள் கிடைப்பார்கள்.

இதற்கான பதிலும் உங்களுக்கு அவர்கள் மூலம் கிடைக்க வாய்ப்புண்டு.

நீங்க கேட்டு இருக்கும் கேள்வி, ரொம்ப காலமாகவே பலருக்கும் இருக்கும் சந்தேகம்.

இதற்கான பதில் எனக்கு தெரியவில்லை,

सुREஷ் कुMAர் said...

நீங்க தலைப்ப மட்டும் பாத்துட்டு பின்னூட்டிருகிங்கனு நெனைக்கிறேன்.. அப்டியே கொஞ்சம் உள்ள போயி பாருங்க.. மேட்டர் மீட்டரா பூடும்..

இராகவன் நைஜிரியா said...

இலை சுரேஷ்.

முழுவது இரண்டு முறை படித்துவிட்டேன்.

எந்த ஒரு இடுகையும் படிக்காமல் பின்னூடம் இடும் வழக்கம் இல்லை.

படிக்காமல் பின்னூட்டம் இடும் இடுகைகள் கும்மியில் மட்டும் தான் உண்டு. அதுவும் மீ த பர்ஸ்ட் என்பது போன்றவைகள். அதற்கு பின் படித்து பின்னூட்டம் போடும் வழக்கம் உண்டு.

सुREஷ் कुMAர் said...

ஓ.. சாரிபா..
அப்பறம், ரெண்டு தபா படிச்சதுக்கு ரொம்ப தேங்க்ஸ் பா..
//
ஆமா எதுக்கு ரெண்டு டைம் படிச்சு பாத்திங்க..?
எதாச்சும் feed back இருந்தா தயங்காம சொல்லுங்க..
//

நட்புடன் ஜமால் said...

பொய் பொய்

நம்பாதீங்கோ

सुREஷ் कुMAர் said...

நீங்களாச்சும் ஒரு தபா முழு பதிவையும் படிங்க..

நட்புடன் ஜமால் said...

மருத்தவ ரீதியாக ஒன்றும் அவ்வளவு தெரியாது

ஜோசியம் நம்பிக்கை இல்லை

ஆனாலும் ஆஸ்பத்திரியில் செய்வது அக்கிரமம்.

கவிதா | Kavitha said...

நம்பிக்கை இருக்கவங்க மாத்திக்க மாட்டாங்க.. அடிப்பட்டாலொழிய..

ம்...நானும் இது பற்றி எழுதி இருக்கேன்..

சுரேஷ் நல்லா இருக்குங்க. .நிறைய எழுதுங்க..

सुREஷ் कुMAர் said...

அப்டியா.. அதுக்கான link'a கொஞ்சம் (முழுவதுமாதான்யா.) சொல்லுங்க.. படிச்சு பாக்குறேன்..

கோவி.கண்ணன் said...

//15000 RS'a பே பண்ணிட்டு வெயிட் பண்ணுங்க. //

பதினஞ்சாயிரம் ரொம்ப அதிகமாக இருக்கே.

cheena (சீனா) said...

அன்பின் சுரேஷ்

படிக்கற மாதிரி சின்னதா இடுகை இட்டா நல்லா இருக்கும் - இவ்ளோ நீளமா எழுதுனா யாரு படிப்பாங்க ( நான் படிக்கறேன் அது வேற ) .

ஆமா ஜோஸ்யம் - வாஸ்து - பில்லி சூன்யம் - மருத்துவம் - இதெல்லாம் போட்டுக் கொளப்பிக்காத - இதெல்லாம் உண்மையா தெரியாது - பொய்யா தெரியாது - ஆனா உண்மைதான் - ஆனா பொய்தான்

அப்பாடா - ஒரு புனிதமான நோக்கத்தோட ஒரு இடுகை இட்டிருக்கே - நோ கமெண்ட்ஸ் - வாழ்க வளமுடன்