Friday, April 3, 2009

மதம் மாறுவதால் யாருக்கு லாபம்..?

இந்த பதிவின் நோக்கம், நீண்ட காலமாக நான் கிணற்று தவளையாய் என் Computer உடனும், கம்ப்யூட்டர் வீடியோ கேமிலும் மட்டுமே முழு சிந்தனையுடன் தவத்தில் இருந்தமையால், எனக்கு நம் சமூக கட்டமைப்புகளில் ஏற்பட்டுவிட்ட சில சிறுபிள்ளைதனமான சந்தேகங்களை தெளிவுபடுத்தி கொள்ளும் ஒரு சிறு முயற்சி..

ஒருவர், ஒரு மதத்தில் இருந்து இன்னொரு மதம் மாறுவதற்கு நம் சட்டம் அனுமதிக்கின்றது. இதன் மூலம் எனது அருகாமை வீட்டார் கூட இந்து மதத்தில் இருந்து, குடும்பத்தில் ஆள் ஒருவருக்கு ரூபாய்10,000 பெற்றுக்கொண்டு வேற்று மதத்திற்கு மாறியுள்ளனர்.. (அதற்காக அவர்கள் எங்கள் ஊர் நாட்டாண்மையால், சாதியில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டது தனி கதை..)

அவர்கள் மதம் மாறியதற்கு முக்கிய காரணம் பசி.. கணவன், மனைவி, மூன்று பெண் குழந்தைகள், வயதான தாய்.. இது தான் அவர்களின் குடும்பம்.. எனக்கு தெரிந்து பல மாதங்கள் அவர்களின் குடும்பம் பட்டினியில் கிடந்துள்ளன.. அப்போதெல்லாம் இந்த சாதியா வந்து அவர்களுக்கு சோறு போட்டது..?


எதற்கும் உதவாத சாதியை வைத்துக்கொண்டு,பசியை கண்டு பீதியில் சாவதை விட,தற்காளிகமகாவாவது பசியாற்றிக்கொள்ள அவர்கள் மதம் மாறியதில் குற்றம் இருப்பதாய் எனக்கு தெரியவில்லை.. மானத்தை விற்று வாழ்வது தான் பாவமே தவிர, மதம் மாறி வாழ்வதில் தவறேதும் இல்லை என்பது என் கருத்து.. ஏனெனில், மதத்தை காட்டிலும் உயிர் நமக்கு முக்கியம், அவசியம்.. உயிரே போன பிறகு மதம் எதற்கு..?

ஆனால்ல்ல்....., அவர்களுக்கு நான் விடுக்கும் ஒரே வேண்டுகோள்.. நீங்கள் எந்த மதத்திற்கும் மாறுங்கள்.. ஆனால்.., தாங்கள் தழுவுகின்ற (or) தழுவபோகின்ற மதத்தினை இயன்ற வரை முழுதாய் அறிந்து செயல்படுங்கள்.. உணவுக்காக மதம் மாறிய நீங்கள், எக்காரணத்தை கொண்டும் அதனை இழிவுபடுத்தும் விதத்தில் எதனையும் செய்துவிடாதிர்..

ஆனால் இவர்கள் சில மாதம் அந்த மதத்தில் இருந்து அதன் சம்பிரதாயப்படி வாழ்கை நடத்தினர் (என்று தான் நினைக்கிறேன்).. சில மாதங்களில் அவர்களின் தொழில் வளர்ச்சி பெற்றது.. வாழ்க்கை தரம் உயர்ந்தது.. அவ்வளவு தான்.., ஆபத்துக்கு உதவிய மதத்தினை தூக்கி எரிந்துவிட்டு மீண்டும் தன் பழைய மதத்திற்கே மாறி விட்டனர்.. இதை தான் என்னால் ஏற்கமுடியவில்லை..எனக்கு சட்டம் அவ்வளவாக தெரியாது.. இருப்பினும், எனது கருத்து, இப்படி மதம் மாறுவதை ஒன்று அல்லது இரண்டு முறைக்குமேல் அனுமதிக்காத வகையில் சட்டத்தை கடுமையாக்க வேண்டும்..

ஆனால் இவை அனைத்தும் அந்த பாமர மக்களின் வாழ்க்கை போராட்டம்..இன்னொரு கோணத்தில் பார்த்தால், இவர்களின் மீது பரிவு காட்டும் அந்த மதத்தினருக்கு இவர்களின் மேல் ஏன் இவ்வளவு பரிதாபம் என்று பார்த்தால் அது கொஞ்சம் கசப்பான உண்மை தான்.. அவர்களின் நோக்கம் இங்கு அவர்களின் மதம் சார்ந்தவர்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும்.. இங்கு அவர்களின் மதத்தினர் தான் அதிகம் என்று காட்டவேண்டும். இதற்காக அந்த மதத்திற்கான நிர்வாகிகளுக்கு அயல்நாட்டிலிருந்து கோடிகளில் பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது.. அவர்களின் சுயலாபத்திற்காக இந்தமாதிரி பாமர மக்களை விலை கொடுத்து வாங்கயுள்ளனர், வாங்குகின்றனர்.. (எனினும் வாழவும் வைத்துள்ளனர்..)
//uncle நீங்க நல்லவரா கெட்டவரா..?//

இதே கதை தான்.. ஒரு தாழ்த்தப்பட்ட பிரிவினர்க்கு நிகழ்ந்தது..
இதை நம்மில் பலரும் அறிந்திருக்க வாய்ப்பு உள்ளது.. அதாவது தாழ்த்தப்பட்ட மக்களை, பரவலாக, பல ஊர்களிலும் கோவில்களுக்குள் அனுமதிப்பது இல்லை (மற்ற இடங்களில் இப்போதும் அப்படியா என்று எனக்கு தெரியாது. இன்னும் எங்கள் ஊரில் அப்படி தான்)..

// சமீபத்தில் தமிழரசி (Minister for Adi-Dravidar Welfare) அவர்கள் தமிழகத்தில் ஒரு புகழ் பெற்ற கோவிலுக்கு சென்று வந்தவுடன், அந்த கோவில் தீட்சிதர்கள் கோவில் முழுவதையும் தண்ணீர் ஊற்றி கழுவியதை நாம் அறிவோம்..//

இப்படி எங்கள் ஊரில் இருந்த ஒரு பிரிவினரை அந்த குறிப்பிட்ட மதத்தினர் அவர்களின் இன்சொற்கள் மூலம் எளிதில் சாய்த்து விட்டனர்..இங்கு அவர்கள் பயன்படுத்திய ஆயுதம் பணம் மட்டுமல்ல, தீண்டாமை ஒழிப்பு என்ற போர்வையையும் போர்த்திவிட்டனர்.. எங்கள் மதத்திற்கு மாறினால், உங்களுக்கு நிறைய பணம் கிடைப்பதோடல்லாமல், நீங்கள் எங்கள் கோவிலுக்குள் எந்த நிபந்தனையும் இன்றி முழு சுதந்திரத்துடன் அனுமதிக்கபடுவீர்..நீங்கள், உங்கள் சமூகம், எங்களில் ஒருவராக கருத்தபடுவீர்.இதன் மூலம் நீங்கள் சமூகத்தில் உயர்ந்த பிரிவினர்களாக மதிக்கபடுவதொடல்லாமல், உங்கள் குழந்தைகளின் எதிர்காலம் நல்ல நிலயை அடையும். இது தான் அவர்கள் இந்த பிரிவினர்க்கு விரித்த வலை.. இந்த உத்தி நன்றாகவே பயனளித்தது.. என்ன செய்ய.. இந்த பாலாய் போன உலகத்தில் வாழ தேவை அங்கீகாரம் மட்டுமல்ல.. அதற்குமேல் தேவை காசு..!!!!!

ஆனால், ஆடு வளர்க்கபடுவது பிரியாணி ஆக்கபடுவதற்கே தவிர பச்சாதாபத்திற்காக அல்ல.. இங்கே இப்போது எங்கள் ஊரில் வளர்ந்து கொண்டிருக்கும் இந்த மனித ஆடுகளின் நிலை வரும் காலத்தில் என்னவாகும் என்று எனக்கு சத்தியமாக தெரியவில்லை.. பொறுத்திருந்து தான் காணவேண்டும்..

இப்போது தலைப்பிற்கான காரணம் புரியுமென நினைக்கிறேன்..அதாவது நான் அறிய விரும்புவது.. உணமையில் மதம் மாறியதால் பயன் யாருக்கு..? பசியில் வாடிக்கொண்டிருந்த அந்த ஏழை குடும்பம் மற்றும் பிறப்பால் தாள்தபட்டவராய் ஒதுக்கப்பட்டு, இப்போது திடீரென மேல் ஜாதிகாரனாய் மாறிப்போன அந்த வளர்ப்பு மனித ஆடுகளுக்கா இல்லை இவர்களை எல்லாம் காசுகொடுத்து வாங்கியுள்ள அந்த மதவாதிகளுக்கா..? யாருக்கு லாபம்..?

இவற்றையெல்லாம் மீறி எனக்குள் எழும் இன்னொரு கேள்வி, மதம் மாறுவது என்பது வெறும் லாப நோக்கத்திற்காக மட்டுமா..? இல்லை.. ஏனெனில்.. சிலர் அவர்கள் பின்பற்றும் மதம் சொல்லும் சில நெறிகளில் மாற்று கருத்து கொண்டு, வேறு மதத்தினை நாடுகின்றனர்.. எண்ணற்ற, இந்த பலதறபட்ட ஜாதிகளுக்கு இடையில் தாவுவதற்கு மனிதன் கொண்டுள்ள காரணங்கள் தான் பலபல..

எந்த காரணத்தை கொண்டு என்ன ஜாதியில் இருப்பினும் சரி, எப்போதும் நீ மனிதனாய் இரு. நிச்சயம் உன்னால் ஜாதிக்கு நன்மதிப்புடன் கூடிய லாபம் கிட்டும்.

// Subject கொஞ்சம் ரிஸ்க்கானதுதான்னாலும், என்னை சுற்றி நடந்துகொண்டிருக்கும் இதுபோன்றவற்றை என்னால் கேட்காமல் இருக்க முடியவில்லை. இருப்பினும் என்னால் முடிந்தவரை யாரையும் நோண்டிவிடாமல் மேலோட்டமாக எனது கருத்தினை பதிந்து இருக்கிறேன்.. ஏதேனும் தவறுதலாய் இருப்பின் பெரிய மனது வைத்து மன்னிக்கவும்..//

11 comments:

நட்புடன் ஜமால் said...

\\ஆனால்ல்ல்....., அவர்களுக்கு நான் விடுக்கும் ஒரே வேண்டுகோள்.. நீங்கள் எந்த மதத்திற்கும் மாறுங்கள்.. ஆனால்.., தாங்கள் தழுவுகின்ற (or) தழுவபோகின்ற மதத்தினை இயன்ற வரை முழுதாய் அறிந்து செயல்படுங்கள்.\\

மிக(ச்)சிறப்பா சொன்னீங்க

RAMYA said...

//
எந்த காரணத்தை கொண்டு என்ன ஜாதியில் இருப்பினும் சரி, எப்போதும் நீ மனிதனாய் இரு. நிச்சயம் உன்னால் ஜாதிக்கு நன்மதிப்புடன் கூடிய லாபம் கிட்டும்.
//

அருமை அருமை நல்லா எழுதி இருக்கீங்க தம்பி.

ஆமாம் மனித ஜாதிதான் மிகச் சிறந்த ஜாதி.

RAMYA said...

//
ஒருவர், ஒரு மதத்தில் இருந்து இன்னொரு மதம் மாறுவதற்கு நம் சட்டம் அனுமதிக்கின்றது. இதன் மூலம் எனது அருகாமை வீட்டார் கூட இந்து மதத்தில் இருந்து, குடும்பத்தில் ஆள் ஒருவருக்கு ரூபாய்10,000 பெற்றுக்கொண்டு வேற்று மதத்திற்கு மாறியுள்ளனர்..
//

படிக்க மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது.

ஏழ்மையின் கொடும எதுவுமே பெரிதாகத் தோன்றவில்லை பார்த்தீங்களா??

வேத்தியன் said...

ரொம்ப அருமையா எழுதியிருக்கீங்க...

ரொம்ப நாளா நான் எழுதனும்ன்னு நெனைச்சுட்டே இருந்த விஷயம்..
யார் எழுதுறதுங்கிறது மிக்கியமில்ல..
எழுதுற விஷயம் தான் முக்கியம்ன்னு திருவள்ளுவரே சொல்லியிருக்கார்ல..
:-)

வாழ்த்துகள்...

சுரேஷ் குமார் said...

நன்றி ஜமால் and ரம்யா அக்கா..

சுரேஷ் குமார் said...

வாங்க வேத்தியன்..
நீங்க சொல்றத பாத்தா என்னைப்போல் நிறைய பேருக்கு அனுபவம் இருக்கும் போல..

கோவி.கண்ணன் said...

ரொம்ப நல்லா இருக்கு !

லாபத்துக்காக மதம் மாறுபவர்களை என்னால் குறைச் சொல்ல முடியவில்லை, அது கூட கிடைக்கவில்லை என்றால் ஒருவர் மதம் மாறுவதால் என்ன பயன் ? :)

Suresh said...

வாங்க கோவி.கண்ணன்..
உங்களின் இந்த முதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி..
உங்களின் கருத்துக்களையும், ஆதரவையும் இனி வரபோகும் என் புதிய பதிவுகளுக்கும் வழங்குக..
நன்றி..

Enathu Payanam said...

நல்ல பதிவு. தொடர்ந்து இதுபோல் நல்ல விஷயங்களை எழுதுங்கள். நீங்கள், நான் கீழே கொடுத்துள்ள புத்தகத்தை வாங்கிப் படித்தால் சிறுபான்மை அரசியல், மத மாற்றம், பொருளாதாரம் என பல பூதாகரமான விஷயங்களைத் தெரிந்துகொள்ளலாம்.

http://online-tamil-books.blogspot.com/2009/01/thaneer-vitto-valarthom-part-1-2-3.html

ஒவ்வொரு வருடமும் முக்கிய இந்திய ஆளுமைகள் பட்டியலில் முதல் 30 இடங்களில் ஒன்றை இதன் ஆசிரியர் பிடித்துவிடுவார் என நண்பன் சொல்லி கேட்டிருக்கிறேன்.

சுரேஷ் குமார் said...

தங்கள் வருகைக்கும் ஆலோசனைக்கும் நன்றி " Enathu Payanam" ..
தொடர்ந்து வாருங்கள்.

cheena (சீனா) said...

அன்பின் சுரேஷ்

நல்ல ஐயம் - நல்ல கருத்து - நல்ல இடுகை - ஆங்கிலக் கலப்பின்றி எழுதப்பட்ட இடுகை -

பதில் எளிதில் கிடைக்காத இடுகை

மறுமொழி எண்ணிக்கை கூடி இருக்கிறதே

கோவி கூட வந்திருக்கிறாறே

நல்வாழ்த்துகள்