சமீபத்தில், படுக்கையில் குப்புற படுத்துட்டு விட்டத்தை வெறித்துக்கொண்டு (நீங்களும் ட்ரை பண்ணிபாருங்க) என்னைப்பற்றி யோசித்தபோது கிடைத்த சில அறிய, (இந்த தலைப்பை போன்று அல்லாத) முரண்பட்ட விஷயங்கள்..
(சிலபேரால மல்லாக்க படுத்துட்டே விட்டத்த பாக்கமுடியாது..
அவக எப்படி குப்புரபடுத்துட்டு விட்டத்த பாப்பாங்களோ..!)
1. சிலபேர் தூக்கம் வரலைனா, ஒழுங்கா, நிம்மதியா கவலை மறந்து தூங்குறதுக்கு தூக்கமாத்திரை சாப்பிடுவாங்க..
ஆனா எனக்கு இந்த தூக்க மாத்திரை சாப்பிட்டா, கொஞ்சம் சோம்பலா, டயர்டா இருந்தாகூட, ஃபிரெஸ் ஆகி ரொம்ப புத்துணர்ச்சியா ஃபீல் பண்ணுவேன்.. அப்புறம் அன்னைக்கு ராத்திரி ஃபுல்லா சிவராத்திரி தான்..
எப்போமே இப்படி தான் தூக்கமாத்திரை சாப்பிட்டா புத்துணர்ச்சியா ஃபீல் பண்ணுரனா, இல்லை நம்ம மனபிராந்தியானு செக்பண்ண, ஒடம்பு நல்லாஇருந்த, ஒரு காலேஜ் செமெஸ்டர் எக்ஸாம் அன்னைக்குகூட தூக்க மாத்திரை சாப்பிட்டு செக் பண்ணி பாத்தேன்..
நான் நெனச்சது சரி தான்.. முந்தைய பொழுதைவிட தூக்கமாத்திரை சாப்பிட்டபின் கொஞ்சம் ஃபிரஸ்ஸா ஃபீல் பண்ணினேன்.. (நல்ல வேலை, அந்த மாத்திரை எப்பெக்ட்ல தூங்கிருந்தாஆஆஆ.. பரீட்சை அவ்ளோ தான்..)
2. நீங்க நான்வெஜ் சாப்பிடுரவங்களா..?
அப்போ, உங்களுக்கு சளி பிடிச்சா, வீட்ல நாட்டுகோழி கொழம்பு அல்லது சூப்பு வெச்சு கொடுத்திருகாங்களா..?
அத, நல்லா காரசாரமா குடிச்சா,ஒடம்புக்கு நல்லா இருக்கும் / சளி நல்லா ஆகிடும்னு சொல்லுவாங்க..
ஆனா எனக்கு இந்த நாட்டுகோழி கொழம்ப இப்டி காரசாரமா குடிச்சா கண்டிப்பா சளிபுடிச்சுக்குது..
சரி.. சளி புடிச்சு இருக்கும்போது குடிச்சா நல்லா ஆகிடும்னு பாத்தா.. சளி அதிகமாகி காய்ச்சல் வந்திடுது.. என்ன கொடுமைங்க இது.
3. நீங்க என்ன சாம்பு போட்டு குளிக்கிறிங்க..?
சில பேர் பொடுகு தொல்லைய போக்க கிளினிக் ஆள் கிளியர் சாம்பு யூஸ் பண்ணுவாங்க..
அவங்களுக்கு பொடுகு போச்சோ இல்லையோ, இந்த சாம்புவ யூஸ் பண்ணினா எனக்கு பொடுகு வந்திடுது..
என் அறியாத வயசுல, பொடுகுனா என்னனே தெரியாத வயசுல (9th படிக்கும்போதுன்னு நியாபகம்), அவசரத்துக்கு கெடைச்ச இந்த சாம்புவ பயன்படுத்தினதின் பலனா எனக்கு இந்த பொடுகு அறிமுகமாச்சு..
அப்புறம் இந்த சாம்புவ தலை முளுகுனதுக்கு அப்புறம் பொடுகு போயேபோச்..
இப்போ என் தலை (வெளிய) ஆள் கிளியரா இருக்கு..
4. யாருமே பசியிலையோ, பசிமயக்கத்துலையோ இருக்கும்போது வயிறார சாப்பிட்டா, சாப்டதுக்கு அப்புறம் தெம்பா வேலை செய்வாய்ங்க..
ஆனா நான், எப்போ சாப்டாலும் ஒடனே டயர்ட் ஆகி தூங்கி வழிய ஆரமிச்சுடுவேன்..
(இப்டி சாப்டா தூங்குற சகாக்கள் என்னைபோலவே சேம் பிளட்டோட பலபேர் இருபிங்கனு நெனைக்கிறேன்..)
5. எல்லாரும் சளி பிடிச்சா, சளியிலிருந்து கொஞ்சம் ஆறுதல் தரும்னு விக்ஸ் போட்டுப்பாங்க..(நீங்க எப்புடி..?)
ஆனா எனக்கு.. இந்த விக்ஸ் போட்டா,சளி அதிகமாகி காய்ச்சல் வந்திடும்.. (நான் எப்புடி..?)
6. எனக்கு தெரிஞ்சு என் பிரண்ட்ஸ் எல்லாருக்குமே 'பீர் ஈஸ் பெட்டர் தேன் ஹாட்' தான்..
ஆனா, அது ஏனோ தெரியலை.. எனக்கு எப்போமே 'ஹாட் ஈஸ் பெட்டர் தேன் பீர் தான்'.. (ஹா..ஹா.. இது எப்புடி..?)
இது பொதுவானது..
இதை எல்லாம் மீறி நம்ம மக்களுக்கே உரிய வினோத பழக்கம் ஒன்னும் இருக்கு..
என்னான்னு கேக்குறீயளா..?
என்னனா.. இங்க எவ்ளோ தான் வெய்யில் பிச்சுகிட்டு அடிச்சாலும்..
இந்த அதிகப்படியான வெய்யில்ல எவ்ளோ தான் கெடந்து வெந்தாலும்..
வெய்யில் கொளுத்துற இந்த நண்பகல் நேரத்துலயும் 'சூடா கொதிக்க கொதிக்க டீ, காப்பி' குடிக்கற பழக்கம் நம்மகிட்டதான் இருக்கும்னு நெனைக்கிறேன்.. (கரீட்டா..?)
(டிஸ்கி:
ஆறாவது பாய்ண்ட படிச்சுட்டு நான் ஏதோ குடிகாரன்னு முடிவு பண்ணிடாதிங்க..
நான், நம்ம முன்னோர்கள் சொன்ன பழமொழிய காப்பாத்த தான் அவ்ளோ பாடுபட்டு முயற்சி பண்ணினேன்..
அப்புடி என்ன பழமொழின்னு கேக்குறீயளா..?
அதாங்க, "களவும் கற்றுமற.."
அதான் கத்துகிட்டேன்.. அடுத்த பாதிய மறந்துட்டேன்..
எப்பூடி..!
33 comments:
சிலபேரால மல்லாக்க படுத்துட்டே விட்டத்த பாக்கமுடியாது..
அவக எப்படி குப்புரபடுத்துட்டு விட்டத்த பாப்பாங்களோ.
ஆரம்பமே அமர்க்களம் போங்க ..
அது என்ன தூங்கிருந்தாதாதாதா.
சளி புடிச்சு இருக்கும்போது குடிச்சா நல்லா ஆகிடும்னு பாத்தா.
தப்பு பண்றீங்க கோழி சூப்பு குடிக்க கூடாது.ஒல்டு மங்க் ஒரு குவார்ட்டர் போட்டு பாருங்க ..
/இப்போ என் தலை (வெளிய) ஆள் கிளியரா இருக்கு..//
உள்ளே எப்டி இருக்கு ?
இப்டி சாப்டா தூங்குற சகாக்கள் என்னைபோலவே சேம் பிளட்டோட பலபேர் இருபிங்கனு நெனைக்கிறேன்.
சேம் பிளட் ... ஹி ஹி ஹி
//ஹாட் ஈஸ் பெட்டர் தேன் பீர் தான்//
மச்சான் எனக்கும் தான் ... எப்பவும் குடிங்க ஹாட்ரிங்க்ஸ்... உடம்புக்கும் உள்ளத்துக்கும் உற்சாகம் உத்தரவாதம்.
'சூடா கொதிக்க கொதிக்க டீ, காப்பி' குடிக்கற பழக்கம் நம்மகிட்டதான் இருக்கும்னு நெனைக்கிறேன்.. (கரீட்டா..?)
கரீட்டுப்பா ...
// "களவும் கற்றுமற.."
அதான் கத்துகிட்டேன்.. அடுத்த பாதிய மறந்துட்டேன்..
எப்பூடி..!//
நெத்தியடி..
//4. யாருமே பசியிலையோ, பசிமயக்கத்துலையோ இருக்கும்போது வயிறார சாப்பிட்டா, சாப்டதுக்கு அப்புறம் தெம்பா வேலை செய்வாய்ங்க..
ஆனா நான், எப்போ சாப்டாலும் ஒடனே டயர்ட் ஆகி தூங்கி வழிய ஆரமிச்சுடுவேன்..
(இப்டி சாப்டா தூங்குற சகாக்கள் என்னைபோலவே சேம் பிளட்டோட பலபேர் இருபிங்கனு நெனைக்கிறேன்..)//
ஆமாப்பா..
//என்னனா.. இங்க எவ்ளோ தான் வெய்யில் பிச்சுகிட்டு அடிச்சாலும்..
இந்த அதிகப்படியான வெய்யில்ல எவ்ளோ தான் கெடந்து வெந்தாலும்..
வெய்யில் கொளுத்துற இந்த நண்பகல் நேரத்துலயும் 'சூடா கொதிக்க கொதிக்க டீ, காப்பி' குடிக்கற பழக்கம் நம்மகிட்டதான் இருக்கும்னு நெனைக்கிறேன்.. (கரீட்டா..?)//
அட இதுக்கும் ஆமாப்பா...
துவக்கமே வில்லங்கமா இருக்கே
எப்படிப்பா
கீழே கண்ணாடி வச்சிகிட்டு பார்ப்பியளோ
ஆனா நான், எப்போ சாப்டாலும் ஒடனே டயர்ட் ஆகி தூங்கி வழிய ஆரமிச்சுடுவேன்..\\
புச்சாக்கீது பா
அப்புறம் இந்த சாம்புவ தலை முளுகுனதுக்கு அப்புறம் பொடுகு போயேபோச்..
இப்போ என் தலை (வெளிய) ஆள் கிளியரா இருக்கு..
///
உங்க தலையைப் பத்தி கிளியரா தெரிஞ்சுபோச்சு எங்களுக்கு!!!இஃகி!! இஃகி!!
//ஆனா எனக்கு இந்த நாட்டுகோழி கொழம்ப இப்டி காரசாரமா குடிச்சா கண்டிப்பா சளிபுடிச்சுக்குது..
சரி.. சளி புடிச்சு இருக்கும்போது குடிச்சா நல்லா ஆகிடும்னு பாத்தா.. சளி அதிகமாகி காய்ச்சல் வந்திடுது.. என்ன கொடுமைங்க இது.//
இந்த மெசேஜ் கோழி கூவுது சங்கத்துக்கு தெரிஞ்சு, இன்னக்கி அவுங்க பார்ட்டி கொடுக்கிராங்களாம்
மொத்ததில் ஒரு விவகாரமான ஆளாத்தேன் தெரியுரிய...பார்த்துக்கோங்க அப்பு
//ஆனா நான், எப்போ சாப்டாலும் ஒடனே டயர்ட் ஆகி தூங்கி வழிய ஆரமிச்சுடுவேன்..//
அப்போ ஒரு நாளைக்கு நீங்க எத்தனை முறை தூங்குவீங்க...சாரி சாப்பிடுவீங்க?
சிலபேர் தூக்கம் வரலைனா, ஒழுங்கா, நிம்மதியா கவலை மறந்து தூங்குறதுக்கு தூக்கமாத்திரை சாப்பிடுவாங்க..
ஆனா எனக்கு இந்த தூக்க மாத்திரை சாப்பிட்டா, கொஞ்சம் சோம்பலா, டயர்டா இருந்தாகூட, ஃபிரெஸ் ஆகி ரொம்ப புத்துணர்ச்சியா ஃபீல் பண்ணுவேன்.. அப்புறம் அன்னைக்கு ராத்திரி ஃபுல்லா சிவராத்திரி தான்..
சேம் ப்ளட்
சளி புடிச்சு இருக்கும்போது குடிச்சா நல்லா ஆகிடும்னு பாத்தா.. சளி அதிகமாகி காய்ச்சல் வந்திடுது.. என்ன கொடுமைங்க இது.
ரொம்ப கொடுமை தான்....
//எனக்கு தெரிஞ்சு என் பிரண்ட்ஸ் எல்லாருக்குமே 'பீர் ஈஸ் பெட்டர் தேன் ஹாட்' தான்..
ஆனா, அது ஏனோ தெரியலை.. எனக்கு எப்போமே 'ஹாட் ஈஸ் பெட்டர் தேன் பீர் தான்'.. (ஹா..ஹா.. இது எப்புடி..?)//
இப்படி தான் யோசிக்கனும்,
நானும் அப்படி தான்!
நன்றி சூரியன்..
நன்றி வசந்த்..
//
நன்றி ஜமால் அண்ணா..
கீழே கண்ணாடி வச்சிகிட்டு பார்ப்பியளோ
//
ஹீ.. ஹீ.. உங்களுக்கும் தெரியலையா..?
நன்றி தேவன்மயம்..
முதல் வருகைக்கு நன்றி ஷஃபிக்ஸ்..
//
Blogger ஷஃபிக்ஸ் said..
அப்போ ஒரு நாளைக்கு நீங்க எத்தனை முறை தூங்குவீங்க...சாரி சாப்பிடுவீங்க?
//
முழிச்சிருந்தா தானே தூங்குறதுக்கு..
எப்போமே தூக்கம் தான்..
நன்றி sakthi..
நன்றி வால்பையன்..
ஒரு முடிவோட தான் இந்த பதிவை போட்ட மாதிரியிருக்கே...இனிமேல் உன்னோட பேரு எடக்கு மடக்கு சுரேஷ்...ஆமா நல்லதையே யோசிக்கத் தெரியாதா? ஒரு கதை எழுதி என்னை காலி பண்ணிட்ட இப்ப ஆவியான கூட எனக்கு நிம்மதியில்லை..5வது பாயிண்ட் வரை அப்ப உண்மையா? தாங்கலைடா............... தம்பி சுரேஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷீ
இது பொதுவானது மட்டும் சாட்சாத் உண்மைத் தான்....
வால்பையன் said...
//எனக்கு தெரிஞ்சு என் பிரண்ட்ஸ் எல்லாருக்குமே 'பீர் ஈஸ் பெட்டர் தேன் ஹாட்' தான்..
ஆனா, அது ஏனோ தெரியலை.. எனக்கு எப்போமே 'ஹாட் ஈஸ் பெட்டர் தேன் பீர் தான்'.. (ஹா..ஹா.. இது எப்புடி..?)//
இப்படி தான் யோசிக்கனும்,
நானும் அப்படி தான்!//
தல நாங்களும் இருக்கோம்ல...லிஸ்ட்ல நிறைய பேரு இருக்காங்க...அவங்க எல்லாரோட சார்பா நான் இதை வழி மொழிகிறேன்...
ம்கும் ஒன்னும் சொல்லிக்கிறமாதிரி இல்லே தம்பி.
யாராவது போட்டு மாத்து மாத்துன்னு மாத்த போறாங்க உஷாரு உஷாரு :))
யோசனை எல்லாம் சூப்பர்!!
//
சூரியன் said...
சிலபேரால மல்லாக்க படுத்துட்டே விட்டத்த பாக்கமுடியாது..
அவக எப்படி குப்புரபடுத்துட்டு விட்டத்த பாப்பாங்களோ.
//
சுரேஷ் நீ எப்படி வேணும்னாலும் படுத்திகிட்டு விட்டத்தை பார்ப்பே
ஏன்னா உனக்கு அறிவு அதிகம் இல்லையா அதனால்தான் :))
//
சூரியன் said...
சிலபேரால மல்லாக்க படுத்துட்டே விட்டத்த பாக்கமுடியாது..
அவக எப்படி குப்புரபடுத்துட்டு விட்டத்த பாப்பாங்களோ.
//
சுரேஷ் நீ எப்படி வேணும்னாலும் படுத்திகிட்டு விட்டத்தை பார்ப்பே
ஏன்னா உனக்கு அறிவு அதிகம் இல்லையா அதனால்தான் :))
//
இப்போ என் தலை (வெளிய) ஆள் கிளியரா இருக்கு..
//
உள்ளேயும் கிளியர்தானா :))
//
தமிழரசி said...
ஆமா நல்லதையே யோசிக்கத் தெரியாதா?5வது பாயிண்ட் வரை அப்ப உண்மையா? தாங்கலைடா............... தம்பி சுரேஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷீ
//
யோசிப்பது என்பதே நல்லதுதான்..
அதிலென்ன நல்லதை யோசிக்கறது..
//
இங்கிலீஷ்காரன் said...
வால்பையன் said...
//எனக்கு தெரிஞ்சு என் பிரண்ட்ஸ் எல்லாருக்குமே 'பீர் ஈஸ் பெட்டர் தேன் ஹாட்' தான்..
ஆனா, அது ஏனோ தெரியலை.. எனக்கு எப்போமே 'ஹாட் ஈஸ் பெட்டர் தேன் பீர் தான்'.. (ஹா..ஹா.. இது எப்புடி..?)//
இப்படி தான் யோசிக்கனும்,
நானும் அப்படி தான்!//
தல நாங்களும் இருக்கோம்ல...லிஸ்ட்ல நிறைய பேரு இருக்காங்க...அவங்க எல்லாரோட சார்பா நான் இதை வழி மொழிகிறேன்...
//
வழி மொழிஞ்சுட்டா போச்சு..
நன்றி இங்கிலீஷ்காரன்..
//
RAMYA said...
ம்கும் ஒன்னும் சொல்லிக்கிறமாதிரி இல்லே தம்பி.
யாராவது போட்டு மாத்து மாத்துன்னு மாத்த போறாங்க உஷாரு உஷாரு :))
யோசனை எல்லாம் சூப்பர்!!
//
மொதல்லையே மாறிறுக்கற மேட்டரதான் சொல்லிருக்கேன்..
இதுல அவங்க எப்படி வந்து மாத்து மாத்துன்னு மாத்துவாங்க..?
(அதுமில்லாம, மாத்து மாத்துன்னு மாத்துறதுக்கு அவங்களுக்கு இதனோட பாச்வோர்டும் தெரியாதே..)
//
RAMYA said...
சுரேஷ் நீ எப்படி வேணும்னாலும் படுத்திகிட்டு விட்டத்தை பார்ப்பே
ஏன்னா உனக்கு அறிவு அதிகம் இல்லையா அதனால்தான் :))
//
உண்மைய எல்லாம் இப்டி வெளிப்படையா பேசப்பிடாது..
//
RAMYA said...
//
இப்போ என் தலை (வெளிய) ஆள் கிளியரா இருக்கு..
//
உள்ளேயும் கிளியர்தானா :))
//
இப்டி கேப்பிங்கனு தெரிஞ்சு தான் வெறுமனே கிளியர்னு போடாம, (வெளிய) கிளியர்னு போட்டிருக்கேன்..
திரும்பவும் உள்ளையும் கிளியரானு கேட்டுகிட்டு.. ராஸ்க்கல்ஸ்..
எப்பா - உன்னெப் பாக்கணும் - பழகணும் - ம்ம்ம்ம்
குப்புறப்படுத்து விட்டத்த வெறிச்சியா .... மப்பா
வாலு கூடச் சேராதே
காப்பி குடி - தப்பில்ல - அதுவும் ஹாட்டா குடி - பெட்டர் தேன் எனிதிங்
அப்புறம் .....
நல்லாரு - நல்லாரு
Post a Comment