Wednesday, June 10, 2009

உயிர் காணும் வாழ்க்கைகனவு..

இது நான் ISKCON (International Society For Krishna Consciousness, Bangalore) உடன் தொடர்பில் இருந்த போது அங்கு ஒருவருடன் ஏற்பட்ட விவாதத்தின் அடிப்படையில் பதிவுசெய்வது..

பொதுவாக நாம் உறக்கத்தில் காணும் கனவுகள், உண்மையற்ற, ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாமல் அல்லது நமது நிஜ சூழ்நிலையை ஒத்து, அல்லது ஏதாவது போல கசாமுசான்னு வருகின்றன..

எது எப்படியோ.. அப்படி நாம் காணும் கனவுகளில் பெரும்பாலானவை அடுத்தநாள் நாம் விழித்தெழும்போது நியாபகத்தில் இல்லாமல் மறந்துபோயிருக்கும்..

சில கனவுகள், நாம் கண்விழித்தபின்பும் அன்றைய பொழுதில் வெகு நேரத்திற்கு நியாபகத்தில் நிறைந்திருக்கும்.. ரொம்ப வெகுசில கனவுகளே நம் நினைவில் வெகு நாட்களுக்கு மறையாமல் நிலைத்திருக்கும்.. ஆனால், அவையும் நாம் கண்ட அனைத்தும் அப்படியே சிறிதும் பிசகாமல் நினைவில் உள்ளதாஎன்பது சந்தேகமே..

இந்த கனவுகள் உண்மையற்ற மாயை அவ்வளவே..

இப்படி நாம் உறக்கத்தில் காணும் இந்த குறுகிய கால கனவுகள் நம் வாழ்வின் ஒரு சிறு பகுதியே.. அதுவும் நிஜமல்லாத மாயை..

ISKCON'il அவர்களின் வாதப்படி, நம்முடைய 'இந்த வாழ்க்கை என்பது நம் ஆத்மாவின் குறுகிய கால கனவு' என்பதே அவர்கள் கூற்றின் சாராம்சம்..

இதை புரிவதற்கான சின்ன விளக்கம்..

நாம் எப்படி கண் விழிக்கும்போது நாம் கண்ட கனவுகள் மறைந்து, நம்மின் இந்த நிஜ உலகில் ஜீவிக்கிரோமோ..,அதே போல், நம் ஆத்மாவானது இவ்வுலகில், நம் உடலை விட்டு பிரிந்து, அதன் உண்மை இருப்பிடமான மேலுலகை, எல்லாமுமாகிய அந்த இறைவனை அடையும்போது, அது கண்ட உலக வாழ்க்கை எனும் இந்த கனவானது மறைந்து அதன் நிஜ உலகில் பிரவகிக்கிறது..

இந்த உலகவாழ்க்கை என்பது நம் ஆத்மா காணும் குறுகியகால உண்மை இல்லாத மாயையாகிய கனவுஆகும்..

உலக வாழ்வை விடுத்து, இறைவனில் கலந்த அந்த நிலையில், அதற்கு இந்த உலக வாழ்க்கையானது சற்றும் நினைவில் இராது..

ஆத்மாவின் உண்மை வாழ்க்கையானது, உலக வாழ்வை விடுத்து, மறுபிறவிகள் எனும் வாழ்க்கை / பிறவிச்சுழற்சியை கடந்து, நிலையாக, அந்த இறையுடன் அணுவாய் ஒன்றர கலந்த அந்த நிலையே ஆகும்..

(ஏதோ ஆன்மிகம் போல இருக்கேன்னு பீல் பண்ணாதிங்க..

இது என்ன மேட்டர்னா.. நம்மளோட இந்த வாழ்க்கைன்றது நம்ம உசுரு காணுற ஒரு (நீண்ண்ண்ட) கனவு.. அம்முட்டுதான்..)

இந்த உலக வாழ்க்கைன்றது உண்மை இல்லாத, நம்ம உசுரு காணும் கனவுபா..

புரிஞ்சுக்கோ.. உசுரே முழிச்சுக்கோ.. சீக்கிரம் கெலம்பிக்கோ..


8 comments:

நட்புடன் ஜமால் said...

\\இந்த உலக வாழ்க்கைன்றது உண்மை இல்லாத, நம்ம உசுரு காணும் கனவுபா..

புரிஞ்சுக்கோ.. உசுரே முழிச்சுக்கோ.. சீக்கிரம் கெலம்பிக்கோ..\\

இது நல்லாக்கீதே!

இராகவன் நைஜிரியா said...

ம்.... என் சிற்றறிவிற்கு எட்டாத விசயங்கள்.

இந்த உலக வாழ்க்கையே கனவு அப்படின்னா, அந்த கனவில் வரும் கனவு.

எனக்கு இப்படி ஒரு கனவு வந்தத்துங்க...

கனவில் நான் தூங்கிகிட்டு இருக்கேன். அந்த தூக்கத்தில் கனவு காண்கின்றேன். அந்த உள் கனவிலும் தூங்கிகிட்டு இன்னொரு கனவு காண்கின்றேன்.

இப்படி போனால் எந்த கனவு நிஜமான கனவு, எந்த கனவு நிஜமில்லாத ஆனால் நிஜாமாகவே கண்ட கனவு..

உங்க இடுகையைப் படிச்ச பிறகு ரொம்ப குழம்பிட்டோனோ???

முனைவர் இரா.குணசீலன் said...

இடுகை நன்றாகவுள்ளது.
தங்கள் இடுகையோடு தொடர்புடைய ஒரு கேள்வி?


ஒரு சின்ன கதை.........
குருவுக்கு உறக்கத்திலிருந்து திடீரென விழிப்பு வந்தது. சீடர்கள் ஓடி வந்து என்ன குருவே கலக்கமாக இருக்கிறீர்கள்? என வினவினார்கள்.

குரு எனக்கு ஒரு ஐயம் என்று சொன்னார்..
சீடர்கள் சொன்னார்கள் குருவே எங்கள் ஐயத்தையே தாங்கள் தான் தீர்த்து வைக்கிறீர்கள். தங்களுக்கே ஐயமா?
அப்படி என்ன ஐயம் என்றார்கள்.

குரு சொன்னார் வேறு ஒன்றுமில்லை நான் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தேன்....
அப்போது கனவு வந்தது. அந்தக் கனவில் பட்டாம்பூச்சி ஒன்று பறந்து வந்து பல பூக்களில் அமர்ந்து தேனருந்தியது. இது தான் எனக்கு குழப்பத்தை ஏற்படுத்திய கனவு என்றார்.

சீடர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை..
இதில் என்ன ஐயம் குருவே என்றார்கள் சீடர்கள்.
குரு சொன்னார்.....
நான் தூங்கினேன் கனவு வந்தது. கனவில் பட்டாம்பூச்சி வந்தது..

(இது தான் வினா?)
என் கனவில் பட்டாம்பூச்சி வந்ததா?
இல்லை பட்டாம்பூச்சியின் கனவு தான் என் வாழ்கையா?

என்றார்.

सुREஷ் कुMAர் said...

வந்துட்டீயளா..

நட்புடன் ஜமால் said...
\\இந்த உலக வாழ்க்கைன்றது உண்மை இல்லாத, நம்ம உசுரு காணும் கனவுபா..

புரிஞ்சுக்கோ.. உசுரே முழிச்சுக்கோ.. சீக்கிரம் கெலம்பிக்கோ..\\

இது நல்லாக்கீதே!
//
ஹீ..ஹீ.. நன்றிபா..

सुREஷ் कुMAர் said...

//
இராகவன் நைஜிரியா said..

இப்படி போனால் எந்த கனவு நிஜமான கனவு, எந்த கனவு நிஜமில்லாத ஆனால் நிஜாமாகவே கண்ட கனவு..
//
இதுல என்னங்க கொழப்பம்..
நீங்க கண்ட 'அந்த' கனவு தான் நிஜம்..

सुREஷ் कुMAர் said...

நன்றி குணசீலன்..

//
முனைவர்.இரா.குணசீலன் said...
(இது தான் வினா?)
என் கனவில் பட்டாம்பூச்சி வந்ததா?
இல்லை பட்டாம்பூச்சியின் கனவு தான் என் வாழ்கையா?

என்றார்.
//
எனக்கென்னவோ அவர் கனவில் பட்டாம்பூச்சி வந்ததுன்னு தான் தோனுது..
அப்படியா..?

முனைவர் இரா.குணசீலன் said...

அப்படித்தான் இயல்பாகத் தோன்றுகிறது. ஆனால் பட்டாம்பூச்சியின் நிலையில் இக்கதையைக் காணும்போது

முனிவரின் வாழ்க்கை ஏன் பட்டாம்பூச்சியின் கனவாக இருக்கக் கூடாது என்று தோன்றுகிறது.

(இயல்பு நிலையில் எந்தக்குழப்பமும் இல்லை,தத்துவ நிலையில் நோக்கும்போது சற்று சிந்திப்பதாகவே இக்கதை உள்ளது.)

வினோத் கெளதம் said...

சுவரஸ்யமான விவாதம் சுரேஷ்..