Thursday, June 18, 2009

கொலைகாரன் குடும்பத்தார் (part 1)..

(கதையின் பங்காளிகள்..

1. கொலைகாரன் - அப்பா.
2. சாகாதவன் - 1'in மகன், 3'in தம்பி.
3. செத்தவன் - 1'in மகன், 2'in அண்ணன்.
4. பாக்கலை - 1,2,3'in பக்கத்து வீட்டுக்காரர்.
5. போலீஸ் இன்ஸ்பெக்டர் )

சரி.. இனி கதை..

ஒரு ஊரில், "கொலைகாரன்" என்பவருக்கு "சாகாதவன்", "செத்தவன்'னு ரெண்டு பசங்க.. "சாகாதவன" எல்லாரும் செல்லமா "சாகலை"ன்னு கூப்டுவாங்க..

ஒருநாள், "சாகாதவன" யாரோ கொன்னுட்டாங்க..
அத "பார்க்கலை"ன்ற பக்கத்துவீட்டுகாரர் பாத்துட்டு போலிஸ்க்கு இன்பார்ம் பண்ணிட்டார்..

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸ், யாரு இன்பார்ம் பண்ணினதுனு கேக்க, தான் தான் இன்பார்ம் பண்ணினதா "பாக்கலை" சொல்றான். இன்ஸ்பெக்டர் அவர ஒரு தபா ஏற எறங்க பாத்துட்டு, நீ யாரு..? இவனுக்கும் உனக்கும் என்ன சம்பந்தன்ம்னு கேக்குறாரு..

அதுக்கு "பாக்கலை" சொல்றான்..,

ஐயா.. நான், இவங்க பக்கத்து வீட்டுக்காரனுங்க..அவர பாக்கலாம்னு இங்க வந்தப்போ இப்படி "சாகாதவன்" செத்து கெடக்குராருங்க..

இன்ஸ்பெக்டர் : சரி.. உம்பேரு என்னப்பா..?

நான் தான் "பாக்கலை" சார்..

இன்ஸ்பெக்டர் : என்னது..? நீ பாக்கலையா..? அப்புறம் ஏண்டா பாத்துட்டுதான் எங்களுக்கு போன் பண்ணினதா சொன்ன..

ஐயா நான் நெஜமாவே "பாக்கலை"தாங்க. ஆனா இத மெய்யாலுமே பாத்தேங்க..

இன்ஸ்பெக்டர் : ஆஹா.. ரொம்ப கொழப்புறியேடா.. முடியலை.. சரி.. அடுத்தவன பாத்துட்டு வந்து உன்ன தனியா டீல் பண்ணுறேன்..

++++++++

அடுத்து செத்தவன்கிட்ட (செத்துப்போன "சாகாதவனின்" அண்ணன்).

இன்ஸ்பெக்டர் : நீ யாருப்பா..? உனக்கும் இந்த செத்துபோனவனுக்கும் என்ன சம்பந்தம்..?

செத்தவன் :(அழுதுகொண்டே) சார்.. அ.. அ.. அவ.. அவன்.. அவன்.. என் தம்பி "சாகலை"ங்க.. ரொம்ப செல்லமா வளர்ந்தவங்க..

இன்ஸ்பெக்டர் : என்னது சாகலையா..? அப்போ இங்க செத்தவன் யாரு..?

செத்தவன் : இங்க “செத்தவன்” நான் தான் சார்..

இன்ஸ்பெக்டர் : நீ தான் செத்தவனா..? அப்புறம் எப்படிடா என்கிட்ட உயிரோட பேசிட்டு இருக்க..?

செத்தவன் : சார்.. இதென்ன கொடுமையா இருக்கு..?
சாகாதவன்” அவனையே செத்துட்டான்னு சொல்லும்போது.. நான் “செத்தவனா” இருக்கறதால உயிரோட இருக்ககூடாதா..?

இன்ஸ்பெக்டர் : டேய்.. இப்போதான் அங்க இத பாத்தவன் “பாக்கலைனு” சொல்லி கொலப்பினான்..
இப்போ நீ “செத்தவன்” சாகலைன்னு சொல்லி கொலப்புற..
அப்போ செத்தது யாருடா..?

செத்தவன் : “சாகாதவன்” தான் சார் சாகலை.. அவன செல்லமா அப்படி தான் சார் கூப்பிடுவோம்..
ஆனா, இங்க செத்தவன் அவன் தான் சார்..

இன்ஸ்பெக்டர் : ங்கொய்யாலே.. நீயுமாடா.. ஆளாளுக்கு கொழப்புரிங்கலேடா.. உன்னையும் அப்புறமா தனியா டீல் பண்ணுறேன்..

என்னடா இது.. கேஸ் ரொம்ப காம்ப்ளிகேட்டட்டா போய்ட்டு இருக்கே..
சரி அடுத்தவன பாப்போம்..(அடுத்த பார்ட்டில்..)

இன்வெஸ்டிகேசன் தொடரும்..

(பி கு: கதையில் வரும் பெயர்களும் சம்பவங்களும் கற்பனையே..
இதே பெயரில் யாராவது இருந்து.., இந்த சம்பவங்கள் அவரின் வாழ்க்கையுடன் ஒத்திருப்பின் அதற்கு கம்பெனி பொறுப்பாகாது..)

59 comments:

Suresh said...

யோவ் இப்படியா குழப்புறது இதுல வேற ;) வோட்டு போட்டாச்சு ஹா ஹா

Suresh said...

இன்வெஸ்டிகேசன் தொடரும்.. இன்னுமுமா அய்யோ

நீ பதிவுபோடதவன் ... நான் பார்க்காதவன் சாரி படிக்காதவன்..

இப்போ படிக்கதவன் பதிவுபோடதவனுக்கு பின்னூட்டம் போடம போயிட்டான்

Suresh said...

ஏன் சுரேஷ் இந்த கொல வெறி

" விளம்பரங்கள் " said...

வலையுலகில் இலவசமாக விளம்பரங்கள் செய்ய 'விளம்பரங்கள்' (http://www.vilambarangal.blogspot.com) என்ற தளத்தை உருவாக்கியுள்ளேன்... புதிதாக தொடங்கப்பட்டுள்ள இந்த வசதியை உங்களது நட்பு வட்டாரத்திற்கு தெரியப்படுத்தும்படி கேட்டுக்கொள்கிறேன்.

நட்புடன் ஜமால் said...

யப்பா! டேய்!

சூப்பரு

நசரேயன், ரம்யா ரேஞ்சுக்கு சிரிப்பாக இருந்தது.

வேலை ஜாஸ்த்தின்னு சொன்னியே இது தானா!

காலையிலேயே சிரிக்க வச்சிட்டே ரொம்ப சந்தோஷம் அப்பு ...

நட்புடன் ஜமால் said...

Suresh said...

ஏன் சுரேஷ் இந்த கொல வெறி

தினேஷ் said...

டரியல கிளப்புங்க ..

Anonymous said...

இப்ப நீ செத்தவன் ஆகப் போறப்பாரு...உன்னையெல்லாம் சும்மா விடக்கூடாது இரு கவிதை ஒன்னு மெயில் பண்றேன்....

sakthi said...

அருமை அருமை
எங்க ஊரிலும் ஒருத்தர் இருக்கார் தூள் கிளப்புவதற்கு என்பதில் மகிழ்ச்சியே....

सुREஷ் कुMAர் said...

//
Suresh said...

யோவ் இப்படியா குழப்புறது இதுல வேற ;) வோட்டு போட்டாச்சு ஹா ஹா
//
ஹலோ.. படிச்சுட்டு தான் வோட்டு போட்டதா சொன்னிங்க..

வோட்டு போட்டுட்டுதான் படிச்சிங்களா..?

सुREஷ் कुMAர் said...

//
Suresh said...

ஏன் சுரேஷ் இந்த கொல வெறி
//
பின்ன..?
ஆளாளுக்கு கதை எழுதி நம்மள படிக்கவெக்கிராங்கள்ள..
நம்மளும் நம்ம கைமாறா எதாச்சும் பண்ணலாமேனு தான்..

ஏம்பா.. வொய் கிரய்யிங்..?

सुREஷ் कुMAர் said...

//
நட்புடன் ஜமால் said...

யப்பா! டேய்!

சூப்பரு

நசரேயன், ரம்யா ரேஞ்சுக்கு சிரிப்பாக இருந்தது.

வேலை ஜாஸ்த்தின்னு சொன்னியே இது தானா!

காலையிலேயே சிரிக்க வச்சிட்டே ரொம்ப சந்தோஷம் அப்பு ...
//

நீங்களாச்சும் மனசு வந்து பாராட்டுரின்களே..

எல்லாரும் ஏதோ புரியாதத படிச்சுட்டா மாதிரி பதருறாங்க அண்ணா..

सुREஷ் कुMAர் said...

//
Blogger நட்புடன் ஜமால் said...

Suresh said...

ஏன் சுரேஷ் இந்த கொல வெறி
//
காபி பேஸ்ட் பண்ணும்போது கொஞ்சம் பாத்து பண்ணுங்க..
இக்கி..இக்கி..

सुREஷ் कुMAர் said...

//
சூரியன் said...

டரியல கிளப்புங்க ..
//
ஹீ..ஹீ.. நன்றி சூரியன்..

மெய்யாலுமே படிச்சுட்டு தான் கமெண்ட் பண்ணுரிங்களா..
நீங்க படிச்சிங்கலானு செக்பண்ண டெஸ்ட் வெக்கவா..?

सुREஷ் कुMAர் said...

//
தமிழரசி said...

இப்ப நீ செத்தவன் ஆகப் போறப்பாரு...உன்னையெல்லாம் சும்மா விடக்கூடாது இரு கவிதை ஒன்னு மெயில் பண்றேன்....
//
அப்போ உங்க கவிதைய படிச்சா நான் ஆவி ஆகிடுவேனு நீங்களே ஒத்துகிடுரிங்களா..
சபாஸு..

सुREஷ் कुMAர் said...

//
sakthi said...

அருமை அருமை
எங்க ஊரிலும் ஒருத்தர் இருக்கார் தூள் கிளப்புவதற்கு என்பதில் மகிழ்ச்சியே....
//
நன்றி சக்தி..

ஆனாலும் இப்படி மையமா பின்னூட்டும்போதுதான் நீங்க மெய்யாலுமே புரிஞ்சு படிச்சிங்கலானு சந்தேகமா இருக்கு..
(நியாயம் தானே..?)

நாமக்கல் சிபி said...

சூப்பர் சூப்பர்!
படிக்க ரொம்ப ஜாலியா இருக்கு!
நல்ல திருப்பங்கள்!

- படிக்காதவன்!

உண்மைத்தமிழன் said...

புதிய, வித்தியாசமான முயற்சியாக உள்ளது..

பாராட்டுக்கள்.. தொடருங்கள்..

வாழ்க வளமுடன்..!

நாமக்கல் சிபி said...

//(பி கு: கதையில் வரும் பெயர்களும் சம்பவங்களும் கற்பனையே..
இதே பெயரில் யாராவது இருந்து.., இந்த சம்பவங்கள் அவரின் வாழ்க்கையுடன் ஒத்திருப்பின் அதற்கு கம்பெனி பொறுப்பாகாது..)//

ஹெஹெ! இது வேறயா?

வெண்பூ said...

கலக்கல் சுரேஷ்.. வாய்விட்டு சிரிக்க வெச்சது. செகண்ட் பார்ட்டுன்னு சொல்றது உதைக்குது. ஒரு லெவலுக்கு மேல இதை இழுத்தா போர் அடிக்க ஆரம்பிச்சிடும்.

VIKNESHWARAN ADAKKALAM said...

நல்ல கிரியெட்டிவிட்டி... தொடருங்கள்...

தினேஷ் said...

/ஹீ..ஹீ.. நன்றி சூரியன்..

மெய்யாலுமே படிச்சுட்டு தான் கமெண்ட் பண்ணுரிங்களா..
நீங்க படிச்சிங்கலானு செக்பண்ண டெஸ்ட் வெக்கவா..?//

என்னங்க இப்படி சொல்லிட்டிங்க ..
கேளுங்க் என்கிட்ட செத்தவன் செத்தானா இல்ல சாகாதவன் செத்தானா .. செத்தவன் செத்த சாகலை பத்தி சொல்ரான் . சாகாதவன் செத்தவனு பர்க்கலை பார்த்தேனு சொல்றான் . என்னடா பார்கலைனு சொல்லிட்டு சாகாதவன் சாகலை செத்துட்டானு சொல்றான்...

போதுமா பாஸூ முடியல இப்படிலாம் டெஸ்ட் வச்சா ஓடிருவேன் .. எதோ முத தடவையால சொல்லிருக்கேன்.. இனி கேட்டிங்க அழுதுருவேன் ..

நியாய வலை கனவான்களே , பெருசுகளே , இளசுகளே , சிறுசுகளே நீங்களே கேளுங்க இவர் டெஸ்ட் எல்லாம் வைக்கிறது நியாயாமாய .. அட நியாயாமாய ..

सुREஷ் कुMAர் said...

//
சூரியன் said...

போதுமா பாஸூ முடியல இப்படிலாம் டெஸ்ட் வச்சா ஓடிருவேன் .. எதோ முத தடவையால சொல்லிருக்கேன்.. இனி கேட்டிங்க அழுதுருவேன் ..

நியாய வலை கனவான்களே , பெருசுகளே , இளசுகளே , சிறுசுகளே நீங்களே கேளுங்க இவர் டெஸ்ட் எல்லாம் வைக்கிறது நியாயாமாய .. அட நியாயாமாய ..
//
போதும்பா.. போதும்..

தலைவா..அசத்திட்டிங்க..

டெஸ்ட் வெக்கவானு கேட்டதுக்கு முழுகதையையும் சொல்லிட்டிங்களே..

நெஜமாவே நீங்க படிச்சிங்கன்னு ஒத்துக்குறேன்..

இனிமே உங்கள படிச்சிங்கலானு கேக்கவே மாட்டேன்பா..

உங்களின் இந்த மன தைரியத்திற்கு என் வாழ்த்துக்கள் சூரியன்.

सुREஷ் कुMAர் said...

//
நாமக்கல் சிபி said...

சூப்பர் சூப்பர்!
படிக்க ரொம்ப ஜாலியா இருக்கு!
நல்ல திருப்பங்கள்!

- படிக்காதவன்!
//
உங்களின் பின்னூட்டத்தில் இருந்தே நீங்கள் கதையில் எவ்வளவு ஒன்றி விட்டீர்கள்னு தெரியுது..

இந்த கதையை படித்தவன் ஆதலால், படிக்காதவன்னு சொல்லிருகீன்களே.. அருமை..

सुREஷ் कुMAர் said...

//
உண்மைத் தமிழன் said...

புதிய, வித்தியாசமான முயற்சியாக உள்ளது..

பாராட்டுக்கள்.. தொடருங்கள்..

வாழ்க வளமுடன்..!
//
முதல் வருகைக்கும்.., பாராட்டுக்கும்.., முக்கியமாக இந்த கதையை படித்தமைக்கும் நன்றி உண்மைத் தமிழன் அண்ணா..

தொடர்ந்து வாருங்கள்..

सुREஷ் कुMAர் said...

//
வெண்பூ said...

கலக்கல் சுரேஷ்.. வாய்விட்டு சிரிக்க வெச்சது.
//
முதல் வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி வெண்பூ அண்ணா..
(டெம்ப்ளேட் பின்னூட்டம் போல இருக்கோ..? என்ன பண்ண.. இருப்பதை தானே சொல்ல முடியும்.. அட்ஜஸ்ட் பண்ணிகோங்க..)

सुREஷ் कुMAர் said...

//
வெண்பூ said...

செகண்ட் பார்ட்டுன்னு சொல்றது உதைக்குது. ஒரு லெவலுக்கு மேல இதை இழுத்தா போர் அடிக்க ஆரம்பிச்சிடும்.
//
ஒரே பதிவா போடலாம் தான்..
ஆனா.. இவ்ளோ தெளிவா இருக்கும் கதைய ரொம்ப நீளமா போட்டா புரியாம போய்டுமோனு ஒரு பயம்தான்..

அதும் இல்லாம.. ரொம்ப பெருசா இருந்தா, என்னை உண்மைத் தமிழன் அண்ணா லிஸ்ட்ல சேர்ப்பதற்குனே சிபி அண்ணா காத்துட்டு இருகாங்க..

(உண்மைத் தமிழன் அண்ணா.. தயவு செய்து இந்த பின்னூட்டத்த மட்டும் படிச்சுடாதிங்க.. அப்படியே படிச்சாலும், இந்த பச்சபுள்ளைய மன்னிச்சுடுங்க..)

सुREஷ் कुMAர் said...

//
VIKNESHWARAN said...

நல்ல கிரியெட்டிவிட்டி... தொடருங்கள்...
//
முதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி VIKNESHWARAN..
தொடர்ந்து வாருங்கள்..
(மீண்டும் டெம்ப்ளட் நன்றிகளுக்கு மன்னிக்கவும்..)

சென்ஷி said...

செம்ம சூப்பர் :))

சிரிச்சுக்கிட்டே இருக்கேன். எஸ்.வி.சேகர், கிரேசி நாடகம் பார்த்த எஃபெக்ட் :))

நன்றி சுரேஷ்!

RAMYA said...

//
கொலைகாரன் குடும்பத்தார் (part 1)..
//

part 2 வேறே இருக்கா :))

RAMYA said...

//
கதையின் பங்காளிகள்..

1. கொலைகாரன் - அப்பா.
2. சாகாதவன் - 1'in மகன், 3'in தம்பி.
3. செத்தவன் - 1'in மகன், 2'in அண்ணன்.
4. பாக்கலை - 1,2,3'in பக்கத்து வீட்டுக்காரர்.
5. போலீஸ் இன்ஸ்பெக்டர் )
//

அருமையான குடும்பம் நல்லா புரிஞ்சி போச்சு :))

RAMYA said...

//
ஒரு ஊரில், "கொலைகாரன்" என்பவருக்கு "சாகாதவன்", "செத்தவன்'னு ரெண்டு பசங்க.. "சாகாதவன" எல்லாரும் செல்லமா "சாகலை"ன்னு கூப்டுவாங்க..
//

இவரை இப்போ நான் எப்படி கூப்பிடறது :))

RAMYA said...

//
ஒருநாள், "சாகாதவன" யாரோ கொன்னுட்டாங்க..
அத "பார்க்கலை"ன்ற பக்கத்துவீட்டுகாரர் பாத்துட்டு போலிஸ்க்கு இன்பார்ம் பண்ணிட்டார்..
//

ஐயோ பாவம் பெயர் குழப்பத்திலே சொதப்பிட்டாரு போல :)

RAMYA said...

//
இன்ஸ்பெக்டர் : என்னது..? நீ பாக்கலையா..? அப்புறம் ஏண்டா பாத்துட்டுதான் எங்களுக்கு போன் பண்ணினதா சொன்ன..
//

முட்டிக்கு முட்டி தட்டினா சரியாப் போகும்.

பாத்துட்டு பாக்கலைன்னு பொய்யா சொல்றான் ராஸ்கோலு :-)

RAMYA said...

//
ஐயா நான் நெஜமாவே "பாக்கலை"தாங்க. ஆனா இத மெய்யாலுமே பாத்தேங்க..
//

தோலை உரிச்கிட்டா எல்லாம் சரியாப் போகும் :))

பாக்கலை வெத்தலை என்னாதிது சின்னப் பிள்ளைத்தனமா இருக்கு :)

RAMYA said...

//
“சாகாதவன்” அவனையே செத்துட்டான்னு சொல்லும்போது.. நான் “செத்தவனா” இருக்கறதால உயிரோட இருக்ககூடாதா..?
//

இப்போ என்னோட நிலவரம் கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :))

RAMYA said...

//
இன்ஸ்பெக்டர் : ங்கொய்யாலே.. நீயுமாடா.. ஆளாளுக்கு கொழப்புரிங்கலேடா.. உன்னையும் அப்புறமா தனியா டீல் பண்ணுறேன்..
//

தனியா டீல் பண்ணினா மட்டும் புரிஞ்சிடுமா?

நாங்க யாரு?? விட்டா இந்த உலகத்தையே குழப்பிடுவோமில்லே :)

RAMYA said...

//
இன்வெஸ்டிகேசன் தொடரும்..
//

எஸ் சார் நாங்க ரெடி நீங்க ரெடியா :)

RAMYA said...

//
பி கு: கதையில் வரும் பெயர்களும் சம்பவங்களும் கற்பனையே..
இதே பெயரில் யாராவது இருந்து.., இந்த சம்பவங்கள் அவரின் வாழ்க்கையுடன் ஒத்திருப்பின் அதற்கு கம்பெனி பொறுப்பாகாது..)
//

இப்போதான் ஒருத்தர் போன் பண்ணி கேட்டாரு என்னாங்க என்னோட பெயரு இந்த சுரேஷ் தம்பி உபயோகப் படுத்தி இருக்காரு. அதுக்காக எனக்கு ஏதாவது தருவாரான்னு கேட்டாரு. அவருக்கு என்ன சொல்ல.

மத்தபடி கதை மிகவும் அருமை.

நேரா சுடுகாட்டுலே பொய் படுத்துடப் போறேனோன்னு ஒரே பயமா இருக்கு.

ஏற்கனவே பேயன்னா எனக்கு ரொம்ப பயம். இப்போ இந்த சாகதவன் வேறே படுத்தறான். சரி எப்படியாவது சமாளிக்கலாம்.

வால்பையன் said...

//இதே பெயரில் யாராவது இருந்து.., இந்த சம்பவங்கள் அவரின் வாழ்க்கையுடன் ஒத்திருப்பின் அதற்கு கம்பெனி பொறுப்பாகாது.//

இருக்காங்க!

ஒருத்தர் பேரு சுரேஷ கும்மல!
ஒருத்தர் பேரு சுரேஷ உதைக்கல!

Thamiz Priyan said...

ஏம்ப்பா.. உனக்கு இந்த கொல வெறி... ;-))

இராகவன் நைஜிரியா said...

ஏன்... இப்படியெல்லாம்

மனுஷனை குழப்புவது என்று ஆரம்பிச்சுட்டீங்க...

நடத்துங்க..

सुREஷ் कुMAர் said...

//
சென்ஷி said...

செம்ம சூப்பர் :))

சிரிச்சுக்கிட்டே இருக்கேன். எஸ்.வி.சேகர், கிரேசி நாடகம் பார்த்த எஃபெக்ட் :))

நன்றி சுரேஷ்!
//
ரொம்ப சந்தோசம் சென்ஷி அண்ணா..
25'ஆவது பாலோவர் ஆனதற்கு வாழ்த்துக்கள்..

सुREஷ் कुMAர் said...

//
RAMYA said...

அருமையான குடும்பம் நல்லா புரிஞ்சி போச்சு :))
//
வெறி குட்.. கண்டிநியு.. கோ அஹெட்..

सुREஷ் कुMAர் said...

//
RAMYA said...

//
ஒரு ஊரில், "கொலைகாரன்" என்பவருக்கு "சாகாதவன்", "செத்தவன்'னு ரெண்டு பசங்க.. "சாகாதவன" எல்லாரும் செல்லமா "சாகலை"ன்னு கூப்டுவாங்க..
//

இவரை இப்போ நான் எப்படி கூப்பிடறது :))
//
தங்கள் விருப்பம்.. அவரின் பாக்கியம்..

सुREஷ் कुMAர் said...

//
//
ஐயா நான் நெஜமாவே "பாக்கலை"தாங்க. ஆனா இத மெய்யாலுமே பாத்தேங்க..
//

தோலை உரிச்கிட்டா எல்லாம் சரியாப் போகும் :))

//
உப்பு தடவியா.. தடவாமையா..?

सुREஷ் कुMAர் said...

//
RAMYA said...

//
“சாகாதவன்” அவனையே செத்துட்டான்னு சொல்லும்போது.. நான் “செத்தவனா” இருக்கறதால உயிரோட இருக்ககூடாதா..?
//

இப்போ என்னோட நிலவரம் கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :))
//
இவ்ளோ நேரம் தாங்குநின்களே.. கன்கிராட்ஸ்கா..

ஆமா.. பாதாம் கீரா..
பிஸ்தாவா..?

सुREஷ் कुMAர் said...

//
RAMYA said...

//
இன்ஸ்பெக்டர் : ங்கொய்யாலே.. நீயுமாடா.. ஆளாளுக்கு கொழப்புரிங்கலேடா.. உன்னையும் அப்புறமா தனியா டீல் பண்ணுறேன்..
//

தனியா டீல் பண்ணினா மட்டும் புரிஞ்சிடுமா?

நாங்க யாரு?? விட்டா இந்த உலகத்தையே குழப்பிடுவோமில்லே :)
//
அது சரி..

ஆனா.. நடுவுல பாதிக்குமேல ஸ்கிப் பண்ணிட்டிங்களே.. எஸ்கேப்பா..?

सुREஷ் कुMAர் said...

//
RAMYA said...

//
இன்வெஸ்டிகேசன் தொடரும்..
//

எஸ் சார் நாங்க ரெடி நீங்க ரெடியா :)
//
ரெடிடிடிடி.. ஆனா ரெடி இல்லை..

सुREஷ் कुMAர் said...

//
RAMYA said...

இப்போதான் ஒருத்தர் போன் பண்ணி கேட்டாரு என்னாங்க என்னோட பெயரு இந்த சுரேஷ் தம்பி உபயோகப் படுத்தி இருக்காரு. அதுக்காக எனக்கு ஏதாவது தருவாரான்னு கேட்டாரு. அவருக்கு என்ன சொல்ல.
//

இன்னொரு கதை எழுதி தர்றேன்னு சொல்லுங்க..

//
மத்தபடி கதை மிகவும் அருமை.

நேரா சுடுகாட்டுலே பொய் படுத்துடப் போறேனோன்னு ஒரே பயமா இருக்கு.
//

நோ..நோ..நோ..நோ.. இதுக்கே இவ்ளோ பீல் பண்ணினா எப்படிக்கா..
இன்னும் எவ்ளவோ இருக்கே..

//
ஏற்கனவே பேயன்னா எனக்கு ரொம்ப பயம். இப்போ இந்த சாகதவன் வேறே படுத்தறான். சரி எப்படியாவது சமாளிக்கலாம்.
//

சமாளிங்க அக்கா.. சமாளிங்க..
எதாச்சும் பிரச்சனைனா கூப்டுங்க.. அவன அடக்க நம்ம கிட்ட இன்னும் கைவசம் ஸ்டாக் இருக்கு..

सुREஷ் कुMAர் said...

//
வால்பையன் said...

//இதே பெயரில் யாராவது இருந்து.., இந்த சம்பவங்கள் அவரின் வாழ்க்கையுடன் ஒத்திருப்பின் அதற்கு கம்பெனி பொறுப்பாகாது.//

இருக்காங்க!

ஒருத்தர் பேரு சுரேஷ கும்மல!
ஒருத்தர் பேரு சுரேஷ உதைக்கல!
//
வால்பையன் அண்ணா..

இப்படியெல்லாம் கெலப்பக்கூடாது..
புள்ள பாவம்ல..

सुREஷ் कुMAர் said...

//
தமிழ் பிரியன் said...

ஏம்ப்பா.. உனக்கு இந்த கொல வெறி... ;-))
//
ஹீ ஹீ சும்மா தான் அண்ணா..

முதல் வருகைக்கும், அன்பான பீளிங்க்ஸ்க்கும் நன்றி அண்ணா..
தொடர்ந்து வாருங்கள்..

सुREஷ் कुMAர் said...

//
இராகவன் நைஜிரியா said...

ஏன்... இப்படியெல்லாம்

மனுஷனை குழப்புவது என்று ஆரம்பிச்சுட்டீங்க...

நடத்துங்க..
//
நடத்துறேன்.. நடத்துறேன்..
நடத்திசெல்ல உங்களைப்போன்றோர் இருக்கும்வரை..
நடத்துறேன்.. நடத்துறேன்..

வேத்தியன் said...

நேத்தே படிச்சாச்சு...

உடனே பின்னூட்டம் போடலாம்ன்னு வந்தா மின்சாரத்தடை...

மாப்ள..
உங்க நகைச்சுவை அளவுக்கு ஒரு எல்லையே இல்லை போல??
கலக்கல்...
:-)

முனைவர் இரா.குணசீலன் said...

ஏங்க இப்படி.....

cheena (சீனா) said...

பாத்தவன் பாக்கலை
செத்தவன் சாகலை
உசுரோட இருக்கவன் செத்தவன்
கொலைகாரன் அப்பனா ?

யோவ் வேணும்யா எனக்கு இதுவும் இன்னமும்

सुREஷ் कुMAர் said...

//
வேத்தியன் said...

நேத்தே படிச்சாச்சு...

உடனே பின்னூட்டம் போடலாம்ன்னு வந்தா மின்சாரத்தடை...

மாப்ள..
உங்க நகைச்சுவை அளவுக்கு ஒரு எல்லையே இல்லை போல??
கலக்கல்...
:-)
//
நன்றி வேத்தியன்..

सुREஷ் कुMAர் said...

//
முனைவர்.இரா.குணசீலன் said...

ஏங்க இப்படி.....
//
எல்லாம் ஒரு டைம் பாஸுக்குதான்..

सुREஷ் कुMAர் said...

//
cheena (சீனா) said...

பாத்தவன் பாக்கலை
செத்தவன் சாகலை
உசுரோட இருக்கவன் செத்தவன்
கொலைகாரன் அப்பனா ?

யோவ் வேணும்யா எனக்கு இதுவும் இன்னமும்
//
அப்படியா..
கொடுத்திட்டா போச்சு..

முதல் வருகைக்கும், இன்னமும் வேண்டுமென்று விரும்பி கேட்டமைக்கும் நன்றி சீனா அண்ணா..