27 நாட்களுக்கு பிறகு “என்ன ஊருடா சாமீய்ய்ய்..”ன் மூன்றாம் பகுதி..
ஊரிலுள்ள இசுலாமிய, கிறித்தவ மக்களுடன் கொண்டுள்ள சுமுகமான நட்பு..
சென்ற பகுதியில் சொன்னாமாதிரி இவர்களின் ஜாதி மக்களுக்குள்தான் இப்டிப்பட்ட கட்டுப்பாடு..
அடுத்த ஜாதி, மதத்தினருடன் எப்பவுமே தோழமையுடன்தான் உள்ளனர்..
வருடா வருடம் ஆயுத பூஜைக்கு அடுத்தநாள் சாமி ஊர்வலம் நடத்துவார்கள்..
அதில் ஒவ்வொரு வீட்டின் முன்பும் அவர்களின் சாமிக்கான பிரசாதங்கள் படைக்கப்பட்டு பூஜைசெய்துகொடுப்பர்..
இப்படி ஒவ்வொரு வீதியாக செல்லும்போது சென்ற இடுகையில் சொன்னவாறு ஊரைவிட்டு ஒதுக்கிவைக்கப்பட்டவர்களின் வீட்டுக்கு பூஜை செய்து தரமாட்டார்கள்..
ஊரே கூடியுள்ள ஒரு ஊர்ப்பொது விழாவில் இப்படி செய்வது அவ்வீட்டாருக்கு உண்மையில் ஒரு பெருத்த அவமானம்தான்..
ஆனால்.. எங்கள் ஊரில் பலவருடங்களாக சில இசுலாமிய மதத்தவர்கள் வாழ்ந்துவருகின்றனர்..
எங்கள் ஊர்க்காரர்கள் எவருமே அவர்களுடன் எப்போதும் ஒற்றுமையுடந்தான் உள்ளனர்..
இதிலும் ஒருபெரிய ஆச்சரியம்.. அந்த இசுலாமிய குடும்பத்தாரும் இந்த சாமி ஊர்வலத்தின் போது நம் இந்துகடவுளுக்கு படையலிட்டு வணங்குவர்..
இந்த ஜாதிக்காரர்களும் எவ்வித மறுப்புமின்றி அவர்களுக்கு பூஜைசெய்து கொடுக்கின்றனர்..
இந்தநிகழ்வு / இந்த ஒற்றுமை / இந்த புரிந்துணர்வு உண்மையில் எனக்கு ரொம்ப சந்தோசமான ஒன்று..
இந்த சந்தோசம் அந்நிய மதத்தினர் எம்மத கடவுளை வணங்குவதால் இல்லை..
எம்மக்களின் சாதிமதம் கடந்த புரிந்துணர்விற்காக..
எங்கள் ஊரின் அருகாமை கிராமத்தில் கிறித்துவர்கள் பலர் வசிக்கின்றனர்..
1955+'களில் அவர்களின் வீட்டில் நீர் அருந்துவது மற்றும் அவர்கள் இவர்களின் வீட்டில் நீர் அருந்துவது , வீட்டுக்குள் நுழைவது போன்றவை கூட விரும்பத்தகாததாக கருதப்பட்டு வந்துள்ளது..
இரு மதத்தினரும் ஒன்றாக பேசியும் நட்புபாராட்டியும் இருந்துவந்தாலும் அவர்களின் வீட்டுக்கு செல்வது.. அவர்களை தங்களின் வீட்டுக்குள் அனுமதிப்பது போன்ற பழக்கங்கள் குறைவு / இல்லை..
எல்லா நட்பும் வீட்டு வாசலுடன் முடிந்தது..
ஆனால்..1970 / 1980+ களில் நல்ல முன்னேற்றம்..
காரணம் கிராமத்தின் ஆரம்ப பள்ளிகளில் கிறித்துவ ஆசிரியர்கள்..
ஆரம்பப்பள்ளியில் ஒருவகுப்பிலேனும் அவர்களிடம் படித்தாகவேண்டும்..
மேலும் டியூசனும் அவர்களிடம் செல்லும்போது அவர்களின் வீடுகளில் இந்த குழந்தைகள் புழங்க நேரிட்டது..
காலப்போக்கில் பிள்ளைகளுடன் பெற்றோர்களும் யதார்த்தத்தை உணர ஆரமித்துவிட்டார்கள் போலும்.. இப்போது அவர்களையும் சாதாரணமாக வீட்டுக்குள் அனுமதிக்கின்றனர்..
இப்போது இம்மூன்று மதத்தவருமே அன்புடனும் நட்புடனும் நல்ல புரிந்துணர்வுடனும் இருந்துவந்தாலும், "மதம் மாறுவதால் யாருக்கு லாபம்..?" என்ற இடுகையில் குறிப்பிட்டுள்ளதைபோல் அருகாமையில் வாழும் கிறித்துவர்கள் எம்மக்களின் வறுமையை ஆயுதமாகக்கொண்டு இந்துக்களை கிறித்துவர்களாக மதம்மாற்ற முனைந்தது கொஞ்சம் வருத்தப்படவைத்த செயல்தான்..
இந்த இடுகைமுழுதும் என்மக்களின் பார்வையில் மற்ற மதத்தவருடன் இவர்களின் புரிந்துணர்வே..
ஆனால் இன்னும் இவர்கள் எந்த சர்ச்சுக்கோ மசூதிக்கோ சென்று வழிபாடுநடத்தி நான் கண்டதில்லை..
(வீடுவரை அனுமதிக்க பழகவே இவ்வளவு காலம் ஆகிவிட்டது.. )
(மேலும், இப்படி அந்நிய மதத்தினரின் வழிபாட்டு தளங்களுக்கு சென்று வழிபடாமை என்பது பொதுவாகவே உலகின் எல்லா பகுதிகளுக்கும், எல்லா மதத்தவருக்குமே பொருந்துமென்றே நினைக்கிறேன்..
பெரும்பாலும் யாரும் அந்நிய மதத்தினரின் வழிபாட்டு தளங்களுக்கு சென்று வழிபடுவதில்லை.. ஒன்றிரண்டு யதார்த்தத்தை உணர்ந்த ஆத்மாக்கள் வேண்டுமானால் விதிவிலக்காக இருக்கலாம்..)
காரணம் எதுவாக இருப்பினும் இவர்கள் (மட்டுமல்ல, உலகில் பலரும்) அப்படி சென்று வழிபாடுநடத்தும் அளவுக்கு இன்னும் பக்குவம் அடையவில்லைஎன்பதே யதார்த்தம்..
மிக நீண்ட இடைவெளிக்கு பின் எழுதுகிறேன்..
கருத்தில் ஏதும் பிழை இருப்பின் பொறுமையுடன் அன்பாய் சுட்டிக்காட்டவும்..
இந்த இடுகையில் காதல் ஜோடிகளைபற்றியும் எழுதுவதாய் கூறியிருந்தேன்..
இந்தமுறை இங்கு எழுதமுடியவில்லை..
அடுத்த பகுதியில் அவர்களைப்பற்றி எழுதுகிறேன்..
நன்றி..
Wednesday, August 19, 2009
Friday, August 7, 2009
LOGOFF செய்யப்படுகிறது..

வணக்கம் நண்பர்களே..
கொஞ்சம் அதிகப்படியான வேலைப்பளுவின் காரணமாக தற்காலிகமாக காலவரையற்ற LOG OFF செய்துகொள்கிறேன்..
(ஷட்டவுன் செய்யவில்லைபா.. ஒன்லி LOG OFF..)
விரைவில் திரும்புகிறேன்..
நன்றி..
Subscribe to:
Posts (Atom)