27 நாட்களுக்கு பிறகு “என்ன ஊருடா சாமீய்ய்ய்..”ன் மூன்றாம் பகுதி..
ஊரிலுள்ள இசுலாமிய, கிறித்தவ மக்களுடன் கொண்டுள்ள சுமுகமான நட்பு..
சென்ற பகுதியில் சொன்னாமாதிரி இவர்களின் ஜாதி மக்களுக்குள்தான் இப்டிப்பட்ட கட்டுப்பாடு..
அடுத்த ஜாதி, மதத்தினருடன் எப்பவுமே தோழமையுடன்தான் உள்ளனர்..
வருடா வருடம் ஆயுத பூஜைக்கு அடுத்தநாள் சாமி ஊர்வலம் நடத்துவார்கள்..
அதில் ஒவ்வொரு வீட்டின் முன்பும் அவர்களின் சாமிக்கான பிரசாதங்கள் படைக்கப்பட்டு பூஜைசெய்துகொடுப்பர்..
இப்படி ஒவ்வொரு வீதியாக செல்லும்போது சென்ற இடுகையில் சொன்னவாறு ஊரைவிட்டு ஒதுக்கிவைக்கப்பட்டவர்களின் வீட்டுக்கு பூஜை செய்து தரமாட்டார்கள்..
ஊரே கூடியுள்ள ஒரு ஊர்ப்பொது விழாவில் இப்படி செய்வது அவ்வீட்டாருக்கு உண்மையில் ஒரு பெருத்த அவமானம்தான்..
ஆனால்.. எங்கள் ஊரில் பலவருடங்களாக சில இசுலாமிய மதத்தவர்கள் வாழ்ந்துவருகின்றனர்..
எங்கள் ஊர்க்காரர்கள் எவருமே அவர்களுடன் எப்போதும் ஒற்றுமையுடந்தான் உள்ளனர்..
இதிலும் ஒருபெரிய ஆச்சரியம்.. அந்த இசுலாமிய குடும்பத்தாரும் இந்த சாமி ஊர்வலத்தின் போது நம் இந்துகடவுளுக்கு படையலிட்டு வணங்குவர்..
இந்த ஜாதிக்காரர்களும் எவ்வித மறுப்புமின்றி அவர்களுக்கு பூஜைசெய்து கொடுக்கின்றனர்..
இந்தநிகழ்வு / இந்த ஒற்றுமை / இந்த புரிந்துணர்வு உண்மையில் எனக்கு ரொம்ப சந்தோசமான ஒன்று..
இந்த சந்தோசம் அந்நிய மதத்தினர் எம்மத கடவுளை வணங்குவதால் இல்லை..
எம்மக்களின் சாதிமதம் கடந்த புரிந்துணர்விற்காக..
எங்கள் ஊரின் அருகாமை கிராமத்தில் கிறித்துவர்கள் பலர் வசிக்கின்றனர்..
1955+'களில் அவர்களின் வீட்டில் நீர் அருந்துவது மற்றும் அவர்கள் இவர்களின் வீட்டில் நீர் அருந்துவது , வீட்டுக்குள் நுழைவது போன்றவை கூட விரும்பத்தகாததாக கருதப்பட்டு வந்துள்ளது..
இரு மதத்தினரும் ஒன்றாக பேசியும் நட்புபாராட்டியும் இருந்துவந்தாலும் அவர்களின் வீட்டுக்கு செல்வது.. அவர்களை தங்களின் வீட்டுக்குள் அனுமதிப்பது போன்ற பழக்கங்கள் குறைவு / இல்லை..
எல்லா நட்பும் வீட்டு வாசலுடன் முடிந்தது..
ஆனால்..1970 / 1980+ களில் நல்ல முன்னேற்றம்..
காரணம் கிராமத்தின் ஆரம்ப பள்ளிகளில் கிறித்துவ ஆசிரியர்கள்..
ஆரம்பப்பள்ளியில் ஒருவகுப்பிலேனும் அவர்களிடம் படித்தாகவேண்டும்..
மேலும் டியூசனும் அவர்களிடம் செல்லும்போது அவர்களின் வீடுகளில் இந்த குழந்தைகள் புழங்க நேரிட்டது..
காலப்போக்கில் பிள்ளைகளுடன் பெற்றோர்களும் யதார்த்தத்தை உணர ஆரமித்துவிட்டார்கள் போலும்.. இப்போது அவர்களையும் சாதாரணமாக வீட்டுக்குள் அனுமதிக்கின்றனர்..
இப்போது இம்மூன்று மதத்தவருமே அன்புடனும் நட்புடனும் நல்ல புரிந்துணர்வுடனும் இருந்துவந்தாலும், "மதம் மாறுவதால் யாருக்கு லாபம்..?" என்ற இடுகையில் குறிப்பிட்டுள்ளதைபோல் அருகாமையில் வாழும் கிறித்துவர்கள் எம்மக்களின் வறுமையை ஆயுதமாகக்கொண்டு இந்துக்களை கிறித்துவர்களாக மதம்மாற்ற முனைந்தது கொஞ்சம் வருத்தப்படவைத்த செயல்தான்..
இந்த இடுகைமுழுதும் என்மக்களின் பார்வையில் மற்ற மதத்தவருடன் இவர்களின் புரிந்துணர்வே..
ஆனால் இன்னும் இவர்கள் எந்த சர்ச்சுக்கோ மசூதிக்கோ சென்று வழிபாடுநடத்தி நான் கண்டதில்லை..
(வீடுவரை அனுமதிக்க பழகவே இவ்வளவு காலம் ஆகிவிட்டது.. )
(மேலும், இப்படி அந்நிய மதத்தினரின் வழிபாட்டு தளங்களுக்கு சென்று வழிபடாமை என்பது பொதுவாகவே உலகின் எல்லா பகுதிகளுக்கும், எல்லா மதத்தவருக்குமே பொருந்துமென்றே நினைக்கிறேன்..
பெரும்பாலும் யாரும் அந்நிய மதத்தினரின் வழிபாட்டு தளங்களுக்கு சென்று வழிபடுவதில்லை.. ஒன்றிரண்டு யதார்த்தத்தை உணர்ந்த ஆத்மாக்கள் வேண்டுமானால் விதிவிலக்காக இருக்கலாம்..)
காரணம் எதுவாக இருப்பினும் இவர்கள் (மட்டுமல்ல, உலகில் பலரும்) அப்படி சென்று வழிபாடுநடத்தும் அளவுக்கு இன்னும் பக்குவம் அடையவில்லைஎன்பதே யதார்த்தம்..
மிக நீண்ட இடைவெளிக்கு பின் எழுதுகிறேன்..
கருத்தில் ஏதும் பிழை இருப்பின் பொறுமையுடன் அன்பாய் சுட்டிக்காட்டவும்..
இந்த இடுகையில் காதல் ஜோடிகளைபற்றியும் எழுதுவதாய் கூறியிருந்தேன்..
இந்தமுறை இங்கு எழுதமுடியவில்லை..
அடுத்த பகுதியில் அவர்களைப்பற்றி எழுதுகிறேன்..
நன்றி..
Wednesday, August 19, 2009
Subscribe to:
Post Comments (Atom)
31 comments:
இப்போ உள்ளேன் மட்டும் நாளைக்கு படிச்சுட்டு கமெண்ட் எழுதறேன்:))
காரணம் எதுவாக இருப்பினும் இவர்கள் (மட்டுமல்ல, உலகில் பலரும்) அப்படி சென்று வழிபாடுநடத்தும் அளவுக்கு இன்னும் பக்குவம் அடையவில்லைஎன்பதே யதார்த்தம்
ஆம் சுரேஷ்
கருத்தாழமிக்க பதிவு
ஏய் - மொத ரெண்டெயும் படிசிட்டி அப்புறமா சாவகாசமா பதிலு சொல்லட்டா
காரணம் எதுவாக இருப்பினும் இவர்கள் (மட்டுமல்ல, உலகில் பலரும்) அப்படி சென்று வழிபாடுநடத்தும் அளவுக்கு இன்னும் பக்குவம் அடையவில்லைஎன்பதே யதார்த்தம்
உண்ம தல ..
ஆனால் நான் பள்ளியில் படிக்கும் போது மசூதிக்குள் சென்றதுண்டு , இப்போ சில நேரங்களில் சர்ச்சுக்கும் செல்வதுண்டு நண்பனோடு. அவனும் என்னோடு கோயிலுக்கு வருவான்..
நகரங்கள்ளே இருக்கிற பொறுப்பும்,விழிப்புணர்ச்சியும் கிராமங்கள்ளே இல்லைன்னு சொல்வாங்க. அதை கிட்டே இருது பார்க்கிற வாய்ப்பு உங்களுக்கு இருக்கு. எழுதுங்க தெரிஞ்சிக்கிறோம். உங்க எழுத்திலே மனித நேயமும், சமூகப் பொறுப்பும் இருக்கு. பாராட்டுக்கள்.
http://kgjawarlal.wordpress.com
27 நாட்களுக்கு பிறகு]]
இவ்வளவு தானா.
Hi
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.
உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.
நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்
பொதுவாக எல்லோரும் ஒற்றுமையாக இருக்கவே விரும்புகின்றோம் - ஆனாலும் சிலர் கிள்ளிவிட்டு வேடிக்கை பார்க்கின்றனர்.
/வழிபாட்டு தளங்களுக்கு சென்று வழிபடாமை என்பது பொதுவாகவே உலகின் எல்லா பகுதிகளுக்கும், எல்லா மதத்தவருக்குமே பொருந்துமென்றே நினைக்கிறேன்../
வழிபாட்டுத் தலங்களுக்கு செல்வது வேறு. வழிபடுவது வேறு. முறையாக வழிபடப் பயிற்றுவிக்கப்படுதல் அவசியமாகிறது. அங்கு மதம் நுழைந்துவிடும். முறையற்று வழிபாடு செய்கிறேன் என்பதே பிரச்சனைக்கு காரணமாகி விடக்கூடும்.
என்னை போல் நாத்திகர்கள்!
ரம்ஜானுக்கு பிரியாணியும்,
கிருஸ்மஸுக்கு வான்கோழி பிரியாணியும்!
தீபாவளிக்கு பலகாரமும் எல்லார் வீட்டிலயும் சாப்பிடுவோம்!
//
எங்கள் ஊரின் அருகாமை கிராமத்தில் கிறித்துவர்கள் பலர் வசிக்கின்றனர்..
1955+'களில் அவர்களின் வீட்டில் நீர் அருந்துவது மற்றும் அவர்கள் இவர்களின் வீட்டில் நீர் அருந்துவது , வீட்டுக்குள் நுழைவது போன்றவை கூட விரும்பத்தகாததாக கருதப்பட்டு வந்துள்ளது..
//
ஆமாம் நீங்க கூறிய காலகட்டத்தில் இவைகள் இருந்திருக்கின்றன!
இவைகள் எல்லாம் ஜீரணிக்க மிகவும் கஷ்டமான ஒன்றுதான் சுரேஷ் :(
//
காரணம் எதுவாக இருப்பினும் இவர்கள் (மட்டுமல்ல, உலகில் பலரும்) அப்படி சென்று வழிபாடுநடத்தும் அளவுக்கு இன்னும் பக்குவம் அடையவில்லைஎன்பதே யதார்த்தம்.
//
ஆமாம் யதார்த்தம்தான் காரணம்
காரணங்கள் மாறும் தருணம் வரும் சுரேஷ்!
//
மிக நீண்ட இடைவெளிக்கு பின் எழுதுகிறேன்..
//
நீண்ட இடைவெளிக்குப் பிறகு எழுதினாலும் அருமையான
கருத்தாழமிக்க பதிவு சுரேஷ்.
யாரும் திட்ட மாட்டாங்க, சுட்டி காட்ட இந்த இடுகையில்
ஒரு தவறும் என் கண்களுக்கு தெரியவில்லை!!
//கருத்தில் ஏதும் பிழை இருப்பின் பொறுமையுடன் அன்பாய் சுட்டிக்காட்டவும்//
-பொறுமையுடன், அன்பாய் - ரெண்டுமே நமக்கு கிடையாதே'டா :)
டேய், ஒரு தடவ மட்டும் Attendance போட்டுட்டு எஸ்கேப் ஆயிட்ட? இல்ல, பேர பார்த்துட்டு இனிமேல் வரவே கூடாதுன்னு முடிவு பண்ணிட்டியா? அப்படி எதாவது முடிவு பண்ணி இருந்தா கொஞ்சம் பெரிய மனசு பண்ணி அத மாத்திட்டு நம்மளையும் உங்க லிஸ்ட்'ல சேர்த்து, ரெகுலரா வாங்க சார்..
Arun Karthik R K
//
RAMYA said...
இப்போ உள்ளேன் மட்டும் நாளைக்கு படிச்சுட்டு கமெண்ட் எழுதறேன்:))
//
உங்க பாசைல, நாளைக்குனா, அது என்னோட அடுத்த போஸ்ட்டுக்கு முந்தின நாள்தானே.. சரி.. அப்டியே வாங்க..
//
sakthi said...
ஆம் சுரேஷ்
கருத்தாழமிக்க பதிவு
//
கருத்துக்கு நன்றி சக்தி..
//
cheena (சீனா) said...
ஏய் - மொத ரெண்டெயும் படிசிட்டி அப்புறமா சாவகாசமா பதிலு சொல்லட்டா
//
சீனா ஐயா.. சாவகாசமா வரட்டுமான்னு கேட்டுட்டு போனிங்க.. இன்னும் ஆளையே காணோமே.. ரொம்ப சாவகாசமா வர்ரிங்களோ..
//
சூரியன் said...
உண்ம தல ..
ஆனால் நான் பள்ளியில் படிக்கும் போது மசூதிக்குள் சென்றதுண்டு , இப்போ சில நேரங்களில் சர்ச்சுக்கும் செல்வதுண்டு நண்பனோடு. அவனும் என்னோடு கோயிலுக்கு வருவான்..
//
நல்லவிசயம் சூரியன்.. நன்றி..
//
Jawarlal said...
நகரங்கள்ளே இருக்கிற பொறுப்பும்,விழிப்புணர்ச்சியும் கிராமங்கள்ளே இல்லைன்னு சொல்வாங்க. அதை கிட்டே இருது பார்க்கிற வாய்ப்பு உங்களுக்கு இருக்கு. எழுதுங்க தெரிஞ்சிக்கிறோம். உங்க எழுத்திலே மனித நேயமும், சமூகப் பொறுப்பும் இருக்கு. பாராட்டுக்கள்.
//
கருத்துக்கும் முதல் வருகைக்கும் நன்றி Jawarlal..
தொடர்ந்து வாருங்கள்..
//
நட்புடன் ஜமால் said...
27 நாட்களுக்கு பிறகு]]
இவ்வளவு தானா.
//
இவ்வளவு நாளா'னு கேக்குறதுக்கு பதில் இவ்வளவு தானா'னு கேக்குரிங்களோ.. இருந்தாலும் பதில் ஆமாம்தான்..
//
நட்புடன் ஜமால் said...
பொதுவாக எல்லோரும் ஒற்றுமையாக இருக்கவே விரும்புகின்றோம் - ஆனாலும் சிலர் கிள்ளிவிட்டு வேடிக்கை பார்க்கின்றனர்.
//
ம்ம்.. புரிகிறது அண்ணா..
//
வானம்பாடிகள் said...
வழிபாட்டுத் தலங்களுக்கு செல்வது வேறு. வழிபடுவது வேறு. முறையாக வழிபடப் பயிற்றுவிக்கப்படுதல் அவசியமாகிறது. அங்கு மதம் நுழைந்துவிடும். முறையற்று வழிபாடு செய்கிறேன் என்பதே பிரச்சனைக்கு காரணமாகி விடக்கூடும்.
//
வழிபட செல்லுதல் என்பதையே, வழிபாட்டு தளங்களுக்கு செல்லுதல் என்றவாறு எழுதினேன்.. பெரும்பாலும் வழிபாட்டு தளங்களுக்கு வழிபடவே செல்கிறோம்..
அகாவேதான் வழிபாட்டு தளங்களுக்கு செல்லுதல் என்றாலும், வழிபட செல்லுதல் என்றாலும் ஒன்றுபோலவே பொருள்கொள்வீர்கள் என்று நினைத்தேன்..
சில தளங்களுக்கு வேண்டுமானால் வேறு சில காரணங்களுக்காக செல்வதாய் இருக்கலாம்..
உதாரணத்திற்கு, தஞ்சை பெரிய கோவிலுக்கு வழிபட செல்வத்தை காட்டிலும், அதனை சுற்றிபார்க்க செல்வோர் அதிகமென நினைக்கிறேன்..
கருத்துக்கும் முதல் வருகைக்கும் நன்றி வானம்பாடிகள்..
தொடர்ந்து வாருங்கள்..
//
வால்பையன் said...
என்னை போல் நாத்திகர்கள்!
ரம்ஜானுக்கு பிரியாணியும்,
கிருஸ்மஸுக்கு வான்கோழி பிரியாணியும்!
தீபாவளிக்கு பலகாரமும் எல்லார் வீட்டிலயும் சாப்பிடுவோம்!
//
அட வாலு..
அப்போ வருசத்துக்கு ஒருதபாதான் வான்கோழி பிரியாணியும், பலகாரமும் சாப்டுரிங்களா.. பாவம்ங்க நீங்க..
//
RAMYA said...
ஆமாம் நீங்க கூறிய காலகட்டத்தில் இவைகள் இருந்திருக்கின்றன!
இவைகள் எல்லாம் ஜீரணிக்க மிகவும் கஷ்டமான ஒன்றுதான் சுரேஷ் :(
//
இருக்கலாம்.. ஆனால், அவர்களின் அந்த காலகட்டத்தில் இருந்திருந்தால் நமக்கும் அது சாதாரண ஒன்றாகவே இருந்திருக்கும்..
இப்போ, பல வருடங்கள் கழித்து, வெளிய இருந்து பார்க்கும்போதுதான் ஜீரணிக்க கஷ்டமா இருக்கு..
//
RAMYA said...
//
மிக நீண்ட இடைவெளிக்கு பின் எழுதுகிறேன்..
//
நீண்ட இடைவெளிக்குப் பிறகு எழுதினாலும் அருமையான
கருத்தாழமிக்க பதிவு சுரேஷ்.
யாரும் திட்ட மாட்டாங்க, சுட்டி காட்ட இந்த இடுகையில்
ஒரு தவறும் என் கண்களுக்கு தெரியவில்லை!!
//
கருத்துக்கும் ஆதரவிற்கும் நன்றி அக்கா..
//
கார்ல்ஸ்பெர்க் said...
டேய், ஒரு தடவ மட்டும் Attendance போட்டுட்டு எஸ்கேப் ஆயிட்ட? இல்ல, பேர பார்த்துட்டு இனிமேல் வரவே கூடாதுன்னு முடிவு பண்ணிட்டியா? அப்படி எதாவது முடிவு பண்ணி இருந்தா கொஞ்சம் பெரிய மனசு பண்ணி அத மாத்திட்டு நம்மளையும் உங்க லிஸ்ட்'ல சேர்த்து, ரெகுலரா வாங்க சார்..
Arun Karthik R K
//
டேய் மச்சி.. நீதானா.. உன் பிளாக்ல அந்த கலர்ல போட்டோ பாத்தப்பவே மைல்டா டவுட் வந்தது.. அதான் எந்த காலேஜ்னு கேட்டேன்..
நல்லா கீறியா..
ஏண்டா நான்தான் கொஞ்சநாளைக்கு லாக்ஆஃப் பண்ணிக்கிறேன்னு போட்டிருந்தானே.. அப்புறம் ஏன் வரலை, ஏன் வரலைனு யாரும் இல்லாத வீட்லபோய் சவுண்டு வுட்டா மட்டும் வந்திடுவமா.. வேலை முடிஞ்சதும் வர்ரண்டா..
நம்ம காலேஜ்ல படிச்சவன்பூராவும் இப்டித்தான் இருப்பிங்கலாடா..
நல்ல பதிவு.. காதலர்கள் பத்தியும் எழுது.
//வேலை முடிஞ்சதும் வர்ரண்டா..//
-அப்ப இன்னும் உன் வேல முடியலையா??
//நம்ம காலேஜ்ல படிச்சவன்பூராவும் இப்டித்தான் இருப்பிங்கலாடா..//
-நீ வேற.. இப்படியாவது இருக்கமேன்னு சந்தோஷப் பட்டுக்க வேண்டியதுதான் :)
சுரேஷ்
உங்கள் மின் அஞ்சல் முகவரியை இந்த முகவரிக்கு அனுப்ப வேண்டுகிறேன், நீங்கள் குறிப்பிட்டுள்ள அந்த தொழில் நுட்ப விஷயங்கள் தெரிந்து கொள்ளும் பொருட்டு,
ஜோதிஜி
தேவியர் இல்லம். திருப்பூர்.
texlords@gmail.com
நட்புடன்
ஜோதி கணேசன். (ஜோதிஜி)
தேவியர் இல்லம். திருப்பூர்.
http://deviyar-illam.blogspot.com/
Post a Comment