Saturday, April 25, 2009

49-O'வும்..!! கிராமங்களில் 49-O'வும்..!!

Rule 49-O is a rule in The Conduct of Elections Rules, 1961 of India, which governselections in the country. It describes the procedure to be followed when a valid voter decides not to cast his vote, and decides to record this fact. The apparent purpose of this section is to prevent the election fraud or the misuse of votes.

------------------------------------------------------------------------------------
(டிஸ்கி 1: இத ஆளாளுக்கு அவங்க ஸ்டைல்ல அலசி ஆராய்ந்து இருந்தாலும்.. நானும் கொஞ்சம் என் கிராமத்தான் பார்வையில் அலச விரும்புகிறேன்.. படிக்காமல் டிமிக்கி கொடுப்போருக்கு என் 49-O தான் கிடைக்கும்..

டிஸ்கி 2: இது நான், 49-O பட்டன் மின்னணு வாக்கு இயந்திரத்தில் இல்லையென wikipedia'il படித்தமையினால் சொல்லுகின்ற கருத்துக்கள். ஒருவேளை, அது பழைய அப்டேட் செய்யப்படாத தகவலாக இருந்து, இப்போது உண்மையாகவே 49-O பட்டனை மின்னணு வாக்கு இயந்திரத்தில் சேர்த்திருப்பின் இந்த பதிவிற்கு நிர்வாகம் பொறுப்பாகாது..

டிஸ்கி 3: பதிவில் ஏதேனும் செய்திகள் தவறாக சொல்லப்பட்டிருப்பின் மன்னித்து முடிந்தால் சுட்டிகாடிடுங்க..)
------------------------------------------------------------------------------------


“49-O”..!!,
வாக்காளர் தனது ஓட்டினை எந்த வேற்பாளருக்கும் போட விருப்பமில்லாமையை தெரிவிப்பதற்கான ஒரு ஏற்பாடே இந்த "49-O"..

வாக்காளர் தனது வாக்கினை 49-O'ஆகா பதிவதற்கு, முந்தய முறைப்படியிலான வாக்கு சீட்டிலும், இப்போதைய மின்னணு வாக்கு இயந்திரத்திலும் வசதிகள் இல்லை (எதற்கும் டிஸ்கி 1ஐ துணைக்கு அழைக்கிறேன்..).. இவற்றில் வேட்பாளர்களின் பட்டியல் மட்டுமே இருக்கும். வாக்காளர் தனது வாக்கை 49-o’ஆக பதிய Form-17A’ ஐ உரிய தேர்தல் அதிகாரியிடம் இருந்து கேட்டு பெற்று பூர்த்தி செய்து தனது கையெழுத்தையோ அல்லது கைகட்டை விரல் ரேகையையோ பதிய வேண்டும். இது sub-rule (1) of rule 49L’இன்படி கட்டாயமான ஒன்று. இதனை அந்த தேர்தல் பூத்திற்க்கான அதிகாரி சரிபார்த்து ஒப்புதல் அளித்ததும், உங்கள் பொன்னான வாக்கு 49-o’வாக வீரநடை போடும்..
---------------------------------------------------------------------------------------
நான் ஏன் என் வோட்டை செல்லாத வோட்டாக போடாமல் 49-o’ஆக பதிவு செய்ய வேண்டும்..?


ஏனெனில்..,
நீங்கள் யாருக்கும் வோட்டுபோட விரும்பவில்லை எனில், பொதுவாக நடைமுறையில் உள்ள ஒன்றான செல்லா வாக்காக பதியலாம்.. இப்படி பதிய, ஒன்றுக்கு மேற்பட்ட வேற்பாளர்களுக்கு உங்களின் வோட்டை பதிவதின் மூலம் அது செல்லா வோட்டாக பதியப்படும்..


இப்போ, தேர்தல்ல வெற்றி பெற்றவங்களோட வாக்கு எண்ணிக்கைல இந்த செல்லாத வோட்டுகல கௌன்ட் பண்றது இல்லைனாலும், அந்த செல்லா வோட்டுகலால எந்த பயனும் இல்லை..(but, எவ்ளோ செல்லா வோட்டுகள் இருக்குன்னு Ele. Com. கிட்ட information இருக்கும்). செல்லா வோட்டின் மூலம் நமது எதிர்ப்பை காட்டினாலும் அதனால் யாருக்கும் பயனும் இல்லை, இவற்றால் அவர்களுக்கு எந்த பின்விளைவும், பயமும் இருக்கபோவதில்லை..


அதனால் தான் நமது எதிர்ப்பை, நமது செல்லா வோட்டை பயனுள்ள, அரசியல் கட்சிகளுக்கு பயத்தினை உணர்த்தும் வகையில் பயன்படுத்த தான் இந்த 49-O அமல்படுத்தப்பட்டுள்ளது..

இதன் பயனை அறிய சின்ன உதாரணம்..
ஒரு குறிப்பிட்ட வார்டில்(ward) ஒரு வேட்பாளர் உதாரணமாக 143 வாக்குகளில் (நல்ல நம்பர்ல..!!) வெற்றிபெற்று இருந்து, அந்த வார்டில்(ward) பதிவு செய்யப்பட 49-O வோட்டுகளின் எண்ணிக்கை 143’க்குமேல் எனில் அந்த வார்டுக்கான தேர்தல் கேன்சல் செய்யப்பட்டு மறு தேர்தல் நடத்தப்படும். (apdi thaane..?)


அது மட்டுமின்றி, அந்த கேன்சல் செய்யப்பட்ட தேர்தலில் நின்ற வேற்பாளர்கள் எவரும் இந்த மறு தேர்தலில் போட்டியிட அனுமதி மறுக்கப்பட்டு, வேறு புதிய வேற்பாளர்கள் மட்டுமே போட்டியிட வகை செய்கிறது. ஏன்எனில் அந்த பழைய வேற்பாளர்களின் மேல் உள்ள தங்களின் கருத்துக்களை தான் முந்தய கேன்சல் செய்யப்பட தேர்தலில் 49-O’வாக மக்கள் பதிவு செய்து தங்களின் எதிர்ப்பை காட்டிஉள்ளனரே..? ஆகவே தான் இந்த புது வேற்பாளர்கள்.. இது கட்சிகளினிடையே பயத்தை உண்டு பண்ணி, ஒரு நல்ல வேற்பாளரை நிறுத்துவதற்கான சாத்தியங்களுக்காக.. இது நிச்சயம் நமது political system’il நல்ல மாறுதல்களை நிகழ்த்தும் என்று நம்பப்படுகிறது.. பொறுத்திருந்து பார்ப்போம்..


--------------------------------------------------------------------------------
சரி மக்கா.. அதிகாரிகளையும் அவங்களோட இந்த சட்டங்களையும் விடுங்க..
நம்ம பிரச்சனைக்கு வருவோம்..

கிராமத்தானோ, நகர்புறத்தானோ.. யாரா இருந்தாலும் இந்த 49-o’வ யூஸ் பண்ண முடியும்னாலும், அதுல சில நடைமுறை சிக்கல்கள் இருக்கு.. என்ன பண்ணலாம்..?


கிராமபுறத்துல இருக்கரவங்களுக்கான சில சிக்கல்கள இங்க சொல்லுறேன்..

1. இங்க என் அங்கிள் ஒருத்தர்க்கு 4 பசங்க.. அங்கிள் தீவிர கம்யூனிஸ்ட், அவரோட மூத்த பைய்யன் BJP, இன்னொரு பைய்யன் DMK, அவரோட பேரன் ஒருத்தன் இப்போ தே.மு.தி.க’ல சேந்திருக்கான். அவரோட மீதி ரெண்டு பசங்களும் வேற ஏதோ கட்சியில இருகாங்க..

தேர்தல் அன்னைக்கு நான் வோட்டு போட போகும்போது இவங்க தான் அங்க பூத் ஏஜென்ட்டா ஒக்காந்துட்டு இருப்பாங்க..


எல்லா மாமன்களும், முந்தின நாள் தான் அவங்க கட்சிக்கு வோட்டு போட சொல்லி நல்லா கவனிச்சு இருப்பாங்க..


இந்த சமயத்துல, நான் போயி தேர்தல் அதிகாரிகிட்ட, சார், எனக்கு இந்த வேட்டபாளர்கள் யாருக்கும் வோட்டு போட இஷ்டம் இல்ல, என்னோட வோட்ட 49-O வோட்டா பதிவு செய்ய "Form-17A" வேணும்னு கேட்டா, நாளைக்கு நான் எப்படி மாமன் வீட்டுக்கு போறது.. மொத்தமா 5 மாமன்களும் சேந்து கும்மிடுவாங்க..


2. அங்க இவங்க மட்டுமே பூத் ஏஜன்ட்டா இருக்க மாட்டாங்க..
என்னோட நண்பர்கள், அப்பாக்கு தெரிஞ்சவங்க இப்டின்னு நெறையபேரு இருப்பாங்க..


இவங்க எல்லார் முன்னாடியும், எனக்கு என்னோட வோட்டு உரிமை தான் முக்கியம். நண்பர்கள், உறவினர்கள், அவங்க இவங்க எல்லாம் அப்புறம் தான்னு சொல்லி 49-O’வ போட்டுட்டு வீட்டுக்கு போய்ட்டா.. அதுக்கு அப்புறம் நான் எவன் மூஞ்சில முழிப்பேன்..


3. என் அப்பாவும், அம்மாவும் (அப்பாவ விட அம்மா தான்) என்கிட்ட எதையும் மறைக்காம வெளிப்படையா பேசுவாங்க.. கல்லூரியில எதாச்சும் கசமுசா ஆகி, யாரையாச்சும் இழுத்துட்டு வந்தா என்ன பண்ணுவாங்கங்கறது உற்பட.. :)


25 வருஷ காலமா கூட இருக்கற அவங்க, இதுவரைக்கும் எந்த கட்சிக்கு வோட்டு போட்டுட்டு இருக்காங்கனு என்னால கண்டுபுடிக்க முடியலை..


பெரும்பாலும் எல்லா கட்சிகளிலும் அப்பாவுக்கு நண்பர்கள் இருகாங்க.. (பின்ன, மேல சொன்னா மாதிரி மாமா வீட்லயே 5 வேறுபட்ட கட்சி பிரமுகர்கள் இருகாங்க.. அப்புறம் என்னத்த பண்ண..)


நானா அவங்க கிட்ட எந்த கட்சிக்கு வோட்டு போட்டிங்கனு கேட்டா.. அதெல்லாம் உனக்கெதுக்கு.. உனக்கு எந்த கட்சிக்கு வோட்டு போடனும்னு தோணுதோ அந்த கட்சிக்கு வோட்டு போடு.. நாங்க எதுக்கு போட்டோம்னு சொல்ல மாட்டேனு சொல்லிடுவாங்க..


பெத்த புள்ளகிட்டயே எந்த கட்சிக்கு வோட்டு போட்டேன்னு சொல்லாதவங்க.. இப்டி பகிரங்கமா 49-O’கு வோட்டு போட form’a வாங்குவாங்கனு நெனைகிரின்களா..?


அப்டி அவங்க 49-O'கு வோட்டு போட்டா, அங்க பூத் ஏஜன்ட்டா இருக்கற என் நண்பனோ இல்லை மாமனோ, மச்சானோ என்னிடம் சொல்லும்போது, நான் பெருமையாக நினைத்தாலும், அவர்களின் சுதந்திரம் இங்கே பறிக்கபடுமல்லவா..?

இல்லை, அங்கு உள்ள என் உறவினர்களும், நண்பர்களுடனான உறவுதான் அதற்க்கு மேல் தொடருமா..?
உன்னோட சொந்தம், உன்னோட நண்பன் கட்சிக்கே வோட்டு போடாத உன்னை நான் வெறுக்கிறேனு ஆளாளுக்கு சொல்லிட்டா, அந்த சின்ன கிராமத்துல வேறு யாரையும் அறியாத அப்பாவி கிராமத்தான் அதன் பின்பு என்ன செய்வான்..?


சத்தமில்லாம 49-O’ல வோட்டு போட்டுட்டு வர, மின்னணு வாக்கு இயந்திரத்திலேயே ஒரு பட்டன்’a வெச்சுட்டா ஒருவேள எங்களுக்கு எல்லாம் சௌகரியமாக இருக்கும் என்று நம்ம்ம்பி இந்த பதிவை வெளியிடுகிறேன்..


(மீண்டும் டிஸ்கி பார் மை பாதுகாப்பு: இது நான் மேற்கூறியவாறு, 49-O பட்டன் மின்னணு வாக்கு இயந்திரத்தில் இல்லையென wikipedia'il படித்தமையினால் சொன்ன கருத்துக்கள். ஒருவேளை, அது பழைய அப்டேட் செய்யப்படாத தகவலாக இருந்து, இப்போது உண்மையாகவே 49-O பட்டனை மின்னணு வாக்கு இயந்திரத்தில் சேர்த்திருப்பின் இந்த பதிவிற்கு நிர்வாகம் பொறுப்பாகாது.. )

22 comments:

Muhammad Ismail .H, PHD., said...

அன்பின் சுரேஷ் குமார்,

வாவ், அருமையான கருத்துக்கள். உண்மையில் இது வரை 49-O விற்கு ஆதரவாக மின்னணு வாக்கு இயந்திரத்தில் பட்டன் கிடையாது. இனிமேலும் வர வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை. இதற்கு நாடாளுமன்றத்தில் எம்.பி கள் ஓட்டு போட்டு தான் வரனும் என்றால் இந்த ஜென்மத்தில் 49-O விற்கு பட்டன் வராது. இப்போதைய நாடாளுமன்றமே திருடர்கள் அனைவரும் சேர்ந்து நடத்தும் காவல் நிலையத்தினை போன்றதே !!!. பின்னர் எப்படி அவர்கள் சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்வார்களா என்ன?


49-O ஒரு அருமையான வழிமுறை. ஆனால் அதை நடைமுறைக்கு கொண்டுவருவதென்பது நீங்கள் குறிப்பிட்டது போல வலிக்கும் வழிமுறை தான். வாக்கு சாவடிக்கு சென்று 49-O விற்கு ஓட்டு போடப்போகின்றேன் என்று "சனியனை பனியனுக்குள் விட்டுக் கொள்ள" யாரும் தயாரில்லை. அப்ப என்னதான் பண்ணலாம் ??? யாரிடமாவது திட்டம் இருக்கா ???



with care and love,

Muhammad Ismail .H, PHD,

மணி said...

வருகின்ற தேர்தலைப் புறக்கணித்தால் தமிழகத்தில் ஒரு சதவீதம் ஓட்டு கூட போடப்படாவிட்டால் மத்திய அரசின் சட்டம் ஆட்சி என எதுவுமே செல்லாது என்ற நிலைமை ஆகிவிடும். அதுதான் 49 ஓ என்ற சட்டவாத்த்தை விட வலிமையானது. பதிலாக 49 ஓ என்பது இந்த அரசியல் விபச்சாரத்திற்கு அதாவது ஈழப்பிரச்சினையை கண்டுகொள்ளாத கபட நாடகத்திற்கு நிரோத் போடும் வேலைதான் ...

பரிசல்காரன் said...

ரகளையான பதிவு நண்பா! கலக்கல்!

सुREஷ் कुMAர் said...

//
பரிசல்காரன் said...
ரகளையான பதிவு நண்பா! கலக்கல்!
//
முதல் வருகைக்கு நன்றி "பரிசல்காரன்"..
கடைக்கு தொடர்ந்ந்ந்ந்து வாங்க சகா..

குசும்பன் said...

//நாளைக்கு நான் எப்படி மாமன் வீட்டுக்கு போறது.. மொத்தமா 5 மாமன்களும் சேந்து கும்மிடுவாங்க..//

மாமன்களுக்கு மகள் இருந்தால் இது சீரியசான விசயமே:)

எனக்கும் இருக்காங்க 4 மாமன்ஸ் ஒரு மாமனுக்கு நோ பொண்ணு எல்லாம் கட்டகாளி பசங்க:(

सुREஷ் कुMAர் said...

//
எனக்கும் இருக்காங்க 4 மாமன்ஸ் ஒரு மாமனுக்கு நோ பொண்ணு எல்லாம் கட்டகாளி பசங்க:(
//
எல்லாம் அவரவர் வினைப்பயன் சகா.. ஆமா, மீதி இருக்கற 3 மாமன்ஸ்'கு இருக்கற பொண்ணுங்க போதலையா..? அந்த ஒரு மாம்ஸயாச்சும் விட்டுவைங்களே..

सुREஷ் कुMAர் said...

இது வரைக்கும் உங்களை பிறரது வலைப்பதிவுகளில் தான் பார்த்திருக்கிறேன்..
இங்கு முதல்முறை வந்திருக்கும் உங்களுக்கு நன்றிகள் "குசும்பன்"..

இராகவன் நைஜிரியா said...

ஆஹா...

மாம குடும்பத்தை தாக்க இது ஒரு வழியா..

सुREஷ் कुMAர் said...

//
இராகவன் நைஜிரியா said...
ஆஹா...

மாம குடும்பத்தை தாக்க இது ஒரு வழியா..
//
அடடா.. மெயின் மேட்டர விட்டுட்டு எல்லாரும் மாமா குடும்பத்த பத்தி யோசிக்க ஆரமிச்சுடின்களே..!?
இது நியாயமா..?

सुREஷ் कुMAர் said...

Muhammad Ismail .H, PHD மற்றும் தளபதி அவர்களின் முதல் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பர்களே..
தொடர்ந்து வாருங்கள்..

Suresh said...

உங்க பதிவு யூத் பூல் விகடனில் வாழ்த்துகள் Take Screen ;) Shot

सुREஷ் कुMAர் said...

//
Suresh said...
உங்க பதிவு யூத் பூல் விகடனில் வாழ்த்துகள் Take Screen ;) Shot
//
அப்டியா.. நெசமாத்தான் சொல்ரியலா..
என்னால நெஜமா நம்பவே முடியலை..
ஏதும் என்ன வெச்சு காமெடி கீமெடி பண்ணலியே..
அவ்வ்வ்வ்வ்...

सुREஷ் कुMAர் said...

ஹேய்.. ஆமாம் பா.. ஆமாம்.. யூத் பூல் விகடனில் வந்திருக்கு.. :)
தகவலுக்கு நன்றி suresh..

selventhiran said...

பொறுப்பான எழுத்து. வாழ்த்துக்கள். சஞ்செயும் ஓ போடாதீங்க... ஓட்டு போடுங்கன்னு எழுதி இருந்தார்.

सुREஷ் कुMAர் said...

//
செல்வேந்திரன் said...
பொறுப்பான எழுத்து. வாழ்த்துக்கள். சஞ்செயும் ஓ போடாதீங்க... ஓட்டு போடுங்கன்னு எழுதி இருந்தார்.
//
வாங்க செல்வேந்திரன்..
வாழ்த்துக்களுக்கும், முதல் வருகைக்கும் நன்றிகள்..
தொடர்ந்து வாருங்கள்..

sakthi said...

really a nice post suresh

a different one keep it up

सुREஷ் कुMAர் said...

சக்தியோட வந்து வாழ்த்து சொல்லி எனக்கு புது சக்தியையும் ஊக்கத்தையும் தரும் sakthi'kku என் நன்றிகள்.. :)

யாத்ரீகன் said...

Interesting perspective.. very true... on reality 49-O is also a vote but why to reveal that when i have ability not to reveal the vote.. you can send this as a letter in english to the election commison..

सुREஷ் कुMAர் said...

//
யாத்ரீகன் said...
Interesting perspective.. very true... on reality 49-O is also a vote but why to reveal that when i have ability not to reveal the vote.. //
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி யாத்ரீகன்..

//
you can send this as a letter in english to the election commison..
//
எப்டியோ என்ன காலிபண்ண நல்ல வழிய கண்டுபுடிசுடிங்க போல..

Muhammad Ismail .H, PHD., said...

அன்பின் சுரேஷ் குமார்,

அட இந்த பதிவுக்கு முதலும் நானே, முடிவும் நானே ! நான் பின்னூட்டத்தை பற்றி சொன்னேன். அவ்வ்வ்வ்.

இதை படித்த பிறகு ஒரு ஆராய்ச்சியில் ஈடுபட்டேன். அதன்படி 49-O வினால் எந்த பயனும் கிடையாது. கீழே உள்ள தகவல் அனைத்தும் பொய்யானவை. ஆகவே நீங்கள் இதையே மீள் பதிவு இட்டாலும் நன்மையே.


மேல் விவரங்கள் இங்கே .

49-O என்னும் உதவாக்கரை சட்டம் !!!

http://gnuismail.blogspot.com/2009/05/49-o.html


// இதன் பயனை அறிய சின்ன உதாரணம்..
ஒரு குறிப்பிட்ட வார்டில்(ward) ஒரு வேட்பாளர் உதாரணமாக 143 வாக்குகளில் (நல்ல நம்பர்ல..!!) வெற்றிபெற்று இருந்து, அந்த வார்டில்(ward) பதிவு செய்யப்பட 49-O வோட்டுகளின் எண்ணிக்கை 143’க்குமேல் எனில் அந்த வார்டுக்கான தேர்தல் கேன்சல் செய்யப்பட்டு மறு தேர்தல் நடத்தப்படும். (apdi thaane..?)


அது மட்டுமின்றி, அந்த கேன்சல் செய்யப்பட்ட தேர்தலில் நின்ற வேற்பாளர்கள் எவரும் இந்த மறு தேர்தலில் போட்டியிட அனுமதி மறுக்கப்பட்டு, வேறு புதிய வேற்பாளர்கள் மட்டுமே போட்டியிட வகை செய்கிறது. ஏன்எனில் அந்த பழைய வேற்பாளர்களின் மேல் உள்ள தங்களின் கருத்துக்களை தான் முந்தய கேன்சல் செய்யப்பட தேர்தலில் 49-O’வாக மக்கள் பதிவு செய்து தங்களின் எதிர்ப்பை காட்டிஉள்ளனரே..? ஆகவே தான் இந்த புது வேற்பாளர்கள்.. இது கட்சிகளினிடையே பயத்தை உண்டு பண்ணி, ஒரு நல்ல வேற்பாளரை நிறுத்துவதற்கான சாத்தியங்களுக்காக.. இது நிச்சயம் நமது political system’il நல்ல மாறுதல்களை நிகழ்த்தும் என்று நம்பப்படுகிறது.. பொறுத்திருந்து பார்ப்போம்.. //



ஆனால் இதற்கு தீர்வு - 49-O விற்கு ஆதரவாக மின்னணு வாக்கு இயந்திரத்தில் பட்டன் வைக்கும் போது 49-O வை அனைத்து தொகுதியிலும் போட்டியிடும் பொது வேட்பாளராக வைக்க சட்டம் இயற்றப்பட வேண்டும். இது எம்.பி கள் ஓட்டு போட்டு தான் சட்டமாக வரணுமாம். அவர்கள் சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்வார்களா என்ன?



with care and love,

Muhammad Ismail .H, PHD,

सुREஷ் कुMAர் said...

//
Muhammad Ismail .H, PHD, said...
//
என் இந்த இடுகையை கருத்தில் கொண்டு, நீங்களும் உங்களால் முடிந்த கருத்துக்களை அறிந்து உங்கள் தளத்தில் இடுகை இட்டுள்ளமைக்கு நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள் Muhammad Ismail..

உங்கள் இடுகையில் குறிப்பிட்டுள்ள "http://en.wikipedia.org/wiki/49-O" என்ற தளத்தை இப்போது நானும் கண்டேன்..
அதில் நான்காவது (4th) தலைப்பில் (Disqualification hoax) எழுதி இருப்பது, என் இடுகையில் நீங்கள் தவறு என சுட்டிக்காட்டியுள்ள கருத்தானது /(வரிகள்) உண்மையில் சரி என்பதுபோலவே உள்ளதாய் நான் உணர்கிறேன்..

அந்த வரிகள்..
( Disqualification hoax
A hoax has been circulating which claims that if the '49-O' votes more than those of the winning candidate, then that poll will be canceled and will have to be re-polled. Furthermore, it claims that the contestants will be banned and they cannot contest the re-polling for their life time.)

Subu said...

மின்னணு வாக்குப்பதிவில் மோசடி சாத்தியமா ? சாத்தியம் என்றே தோன்றுகிறது...

மென்பொருளை மாற்றுவது செய்யக்கூடியதே....

மீள்பார்வைக்கு, மீண்டும் எண்ண காகித வாக்குகள் இல்லை

மேலும் சிந்தனைகள்

http://manakkan.blogspot.com/2010/04/blog-post_04.html