Tuesday, April 14, 2009

யார் தமிழன்..?

அனைவருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ளும் இந்த நன்னாளிலே எனக்கு இந்த வினோதமான சந்தேகம் ஏற்பட்டுள்ளது.. சந்தேகம் என்னவெனில்.., யார் தமிழன்..?? தமிழனாய் அறிவதற்கான அளவுகோல் ஏதும் உண்டா..?? இந்த சந்தேகம் வந்ததற்கான காரணிகள் நம் அரசியல்வாதிகளே.. அவர்களின் சமீபத்திய சில பேச்சுக்களே எனக்குள் இந்த கேள்வியை எழுப்பியுள்ளன..

மதரீதியாய் பார்ப்போமேயானால், இன்று இந்து மதத்தினனாய் உள்ள ஒருவர் சட்டரீதியாக இஸ்லாமியராகவோ, கிறித்துவராகவோ, அல்லது அவர் விரும்பும் வேறு மதத்திற்கோ மாற சட்டம் வகை செய்கிறது.. அதேசட்டம் ஒருமதத்தினுள், சாதி விட்டு சாதிமாற அனுமதிகின்றதா என்பது எனக்கு தெரியவில்லை.. ஏனெனில், அப்படி அனுமதிக்கும் பட்சத்தில், ஒரு குறிப்பிட்ட சாதியினர், அதிக சலுகைகள் கிடைக்கபெறக்கூடிய இன்னொரு சாதிக்கு மாற வாய்ப்புகள் அதிகம்..

யாரும் பொழுதுபோக்காக இப்படி செய்வார்கள் இல்லையெனினும், வாழ்வியல் காரணங்களுக்காக மற்றும் சில பொருளாதார பிரச்சினைகளை கருத்தில்கொண்டு இப்படி மாற சாத்தியகூறுகள் அதிகம் என்பதே என்கருத்து..

ஒருவேளை, மதம் மாறுவதைபோல் சாதிமாறுவதையும் நம் சட்டம் அனுமதிக்குமேயானால்.. எனது அடுத்த சந்தேகம்..

SC/ST பிரிவினரை தவிர்த்து வேறு எந்த பிரிவினரும் இந்த IAS,IPS போன்ற தேர்வுகளை ஒரு குறிப்பிட்ட முறைகள் மட்டுமே எழுத அனுமதிக்கபடுகிறார்கள்..
இந்த SC/ST பிரிவினர்கள் மட்டும் எவ்வளவு முறை வேண்டுமானாலும் இந்த தேர்வினை எழுதலாமென கேள்விபட்டிருக்கிறேன்.. (மேலும் இவர்களுக்கு இன்னபிற சலுகைகளும் அதிகம்..) எனில், இவ்வாறு IAS,IPS தேர்வு எழுத விரும்பும் SC/ST பிறிவினை சாறாத மாணவன், இந்த பிறிவுக்கு சாதி மாறிக்கொள்ளும் பட்சத்தில் அவன் சலுகை அடிப்படையில் பலமுறை தேர்வுஎழுத மற்றும் அந்த அதிகப்படியான சலுகைகளை பெற ஏதுவாகிவிடுமே.. இதற்க்கு சாத்தியங்கள் உண்டா என யாரேனும் அறிந்தால் சொல்லுங்கள்.. அறியவிழைகிறேன்..

(back to the thalaippu..)

உண்மையில் தமிழன் என்பவன் யார்..? தமிழகத்திலே பிறந்து இங்கேயே வாழும், மற்றும் தமிழகத்திற்கு வெளியே குடிபெயர்ந்த, தாய்மொழி தமிழாக கொண்டவர்களே தமிழர்களா..?? அப்படியெனில், காலம் காலமாக, பரம்பரை பரம்பரையாக தமிழ்நாட்டிலே பிறந்து தமிழ்வழி கல்விகற்று, வாழ்நாள் முழுவதும் தமிழ் மொழியை மட்டுமே செய்திதொடர்புக்கு பயன்படுத்திவரும் மக்களை தமிழர்கள் என்றுசொல்ல முடியுமா முடியாத..?

உதாரணமாத, இங்கு வாழும் ஒரு முதலியார் அல்லது ஒரு செட்டியார் சமூகத்தை சார்ந்த ஒருவனின் பரம்பை தமிழையே பயன்படுத்திவருவதால் அவர்கள் தமிழர்களாக ஏற்றுகொள்ளபடுவார்களா..? இல்லை, அவர்கள் தமிழை பயன்படுத்துவதால் மட்டும் தமிழர்கள்ஆக முடியாதுஎனில், மதம் மாறுவதைபோல், சாதி மாறுவதைபோல், முதலியார்/ செட்டியார் சமூகத்தில் இருந்து தமிழ் சமுதாய மக்களாக மாற சட்டம் வழிசெய்கிறதா..?

மிக சமீபத்தில், நமது பதிவுலகாதிலேயே, நட்சத்திர, பிறப்பால் கன்னடனான ஒரு தமிழ் நடிகனை, கன்னட *** , மற்றும் சில இனவெறி வார்த்தைகளால் வசை பாடிஇருந்தனர்.. அவர் பிறப்பால் கன்னடனாய் இருந்தாலும், இப்போது தமிழில், தமிழ்நாட்டில் வாழ்ந்தாலும் தமிழனாய் அங்கீகரிக்கப்படாமல் உள்ளார்.. இதே நிலை தான், நமது அம்மா அவர்களுக்கும்.. (சத்தியமாய் அரசியல் இல்லை சாமி.. சும்மா ஒரு உதாரணத்துக்கு தான்..)

ஆக, பிறப்பாலும், தாய்மொழியாழும்,வேறு சமுதாயத்தினனாய் உள்ள ஒருவன், அவன் மிகவும் நேசிக்கும் தமிழ்மொழியுடன், தமிழனாய் அங்கீகாரம் கிடைக்கபெறவே முடியாதா..? அப்படி இருப்பின் அந்த நட்சத்திர (பிறப்பால்)கன்னட (மொழியால் தமிழ்)நடிகரை, மற்றும் அம்மாவை தமிழர்களாக ஏற்றுகொள்ளமுடியுமா..? அப்படி ஏற்றுகொள்ளும் பட்சத்தில், பிழைப்புக்காக மாநிலம்விட்டு இங்குவந்து (வேறுவழியில்லாமல்) தமிழ் பேசும் அனைத்து மாநிலத்தவரையும் தமிழன் என்று சொல்லிவிட முடியுமா..?

ஆக.. தமிழன் என்பவனை அடையாளம் காண்பதற்கான அளவுகோல் தான் என்ன..?


யார் தமிழன்..?


இணைப்பு:


இது போன பதிவில் ஜமால் அண்ணாச்சி விரும்பி கேட்டுகிட்டதுகாக..இப்போ சவுரியமா வந்து பதிவ படிச்சுட்டு போங்க ஜமால் அண்ணாத்த..

43 comments:

நட்புடன் ஜமால் said...

கேள்வி நல்லாத்தான் இருக்கு

விடை தான் தெரியலை ...

சுரேஷ் குமார் said...

அப்போ.. இதுக்கு விடை சொல்றவியலுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும்னு போர்டு வெச்சா கண்டிப்பா யாராச்சும் தேடிபுடிச்சு பதில் சொல்லிடுவாங்கனு நெனைக்கிறேன்.. வசதி எப்படி..?

நட்புடன் ஜமால் said...

தக்க சன்மானம் நான் தாறேன்ப்பா

விடை சொல்லுங்கோ ...

சுரேஷ் குமார் said...

அப்போ..
விட கேளு..விட கேளு..
ஜோரான விட கேளு..
கரெக்டா சொல்லும் பதிவர் கிட்ட
விடய இப்போவே கேளு..
பதிலே தெரியாத கேள்விக்கெல்லாம்
விடைய நல்லா கேளு'னு..
பாட்டு பாடி விடைய தேடவேண்டியது தான்..

சுரேஷ் குமார் said...

அண்ணாத்த,போன பதிவுல நீங்க கேட்டதுக்காக ஆட்டோ அனுப்பிருக்கேன்..
ஒகேவா..?

இராகவன் நைஜிரியா said...

கேள்வி கேட்கணும் அப்படின்னு கேள்வி கேட்க கூடாது.

எவ்வளவு பெரிய விசயத்தை கேட்டு இருக்கீங்க.. பதில் கிடைச்சா ரொம்ப சந்தோஷம்.

சுரேஷ் குமார் said...

//
கேள்வி கேட்கணும் அப்படின்னு கேள்வி கேட்க கூடாது.
//
ஜீ.. நெஜமாவே ரொம்பநாளா இருக்கற கொளப்பத்தால தான் இத்த கேட்டிருக்கேன்..
சும்மானாச்சுக்கும் எல்லாம் கேக்கலை..

சுரேஷ் குமார் said...

//
இராகவன் நைஜிரியா said...
பதில் கிடைச்சா ரொம்ப சந்தோஷம்.
//
அப்போ, உங்களுக்கும் பதில் தெரியலையா..??

இராகவன் நைஜிரியா said...

\\ சுரேஷ் குமார் said...

//
இராகவன் நைஜிரியா said...
பதில் கிடைச்சா ரொம்ப சந்தோஷம்.
//
அப்போ, உங்களுக்கும் பதில் தெரியலையா..??\\


நாங்க என்ன வச்சுக்கிட்டே வஞ்சனை பண்றமா என்ன. பதில் தெரிஞ்சா சொல்ல மாட்டோமா?

சுரேஷ் குமார் said...

//
நாங்க என்ன வச்சுக்கிட்டே வஞ்சனை பண்றமா என்ன
//
சே..சே.. உங்கள அப்டிசொல்லிட முடியுமா..??
நீங்க யாரு..?
நல்லவர்..
வல்லவர்..
நாளும் தெரிஞ்சவர்..
(அப்போ இது அஞ்சாவதா இருக்குமோ.. அதான் உங்களுக்கு தெரியல போல..)

RAMYA said...

புத்தாண்டில் தம்பி சுரேஷ் அருமையான கேள்வி கேட்டு இருக்கீங்க.

யாராவது பதில் சொல்லுவாங்க. இருங்க பார்க்கலாம்.

RAMYA said...

//
மதரீதியாய் பார்ப்போமேயானால், இன்று இந்து மதத்தினனாய் உள்ள ஒருவர் சட்டரீதியாக இஸ்லாமியராகவோ, கிறித்துவராகவோ, அல்லது அவர் விரும்பும் வேறு மதத்திற்கோ மாற சட்டம் வகை செய்கிறது.. அதேசட்டம் ஒருமதத்தினுள், சாதி விட்டு சாதிமாற அனுமதிகின்றதா என்பது எனக்கு தெரியவில்லை.. ஏனெனில், அப்படி அனுமதிக்கும் பட்சத்தில், ஒரு குறிப்பிட்ட சாதியினர், அதிக சலுகைகள் கிடைக்கபெறக்கூடிய இன்னொரு சாதிக்கு மாற வாய்ப்புகள் அதிகம்..
//


சூப்பர் நச்சுன்னு சொல்லி இருக்கீங்க !

சுரேஷ் குமார் said...

//
RAMYA said...
புத்தாண்டில் தம்பி சுரேஷ் அருமையான கேள்வி கேட்டு இருக்கீங்க.
//
நன்றிக்கா..
ம்ம்.. பாப்போம்..
(அப்போ, நீங்களும் சொல்லபோறது இல்லையா..??)
அவ்வ்வ்வ்வ்..

RAMYA said...

//
ஆக, பிறப்பாலும், தாய்மொழியாழும்,வேறு சமுதாயத்தினனாய் உள்ள ஒருவன், அவன் மிகவும் நேசிக்கும் தமிழ்மொழியுடன், தமிழனாய் அங்கீகாரம் கிடைக்கபெறவே முடியாதா..? அப்படி இருப்பின் அந்த நட்சத்திர (பிறப்பால்)கன்னட (மொழியால் தமிழ்)நடிகரை, மற்றும் அம்மாவை தமிழர்களாக ஏற்றுகொள்ளமுடியுமா..? அப்படி ஏற்றுகொள்ளும் பட்சத்தில், பிழைப்புக்காக மாநிலம்விட்டு இங்குவந்து (வேறுவழியில்லாமல்) தமிழ் பேசும் அனைத்து மாநிலத்தவரையும் தமிழன் என்று சொல்லிவிட முடியுமா..?
//

உங்க பதிவு ஒரு விதமா யோசிச்சால் நீங்க சொல்லறது சரின்னும் படுது
இல்லே யோசிக்கணும் என்றும் படுது.

நியாயமான கேள்வி குழப்பம் இல்லாமல் பதில் தேவை இல்லையா?

சுரேஷ் குமார் said...

//
RAMYA said...
...
...
உங்க பதிவு ஒரு விதமா யோசிச்சால் நீங்க சொல்லறது சரின்னும் படுது
இல்லே யோசிக்கணும் என்றும் படுது.

நியாயமான கேள்வி குழப்பம் இல்லாமல் பதில் தேவை இல்லையா?
//
கண்டீடீடீடீப்பா..
ஆமா..பதில் வெச்சிருகீன்களோ..??

RAMYA said...

சுரேஷ், என்னை கேட்டால் தமிழ் மொழியை நல்லா பேசி, தமிழ் தாயை வணங்கி, தமிழ்நாட்டுக்கு துரோகம் நினைக்காதவர்கள் எல்லாரும் தமிழர்கள்தான்.

சம்பாதிப்பது தமிழ் நாட்டில், ஆனால் சொத்துக்கள் சேர்ப்பது மற்றும் தொழில் தொடங்குவது அவங்க சொந்த நாட்டில் என்று இல்லாமல், ஒரு தமிழன் தமிழ் நாட்டில் சம்பாத்தித்து அதில் தொழில் தொடங்கி மற்றொரு தமிழன் குடும்பத்தை வாழவைப்பவன் எல்லாருமே தமிழன்தான்.

அவன் பிறப்பால் யாராக இருந்தாலும் சரி, வளர்ப்பால் யாராக இருந்தாலும் சரி. இது தான் எனது பதில். மதத்தால் யாராக இருந்தாலும் சரி.

என்ன சுரேஷ் சரிதானே?

RAMYA said...

//
சுரேஷ் குமார் said...
//
RAMYA said...
...
...
உங்க பதிவு ஒரு விதமா யோசிச்சால் நீங்க சொல்லறது சரின்னும் படுது
இல்லே யோசிக்கணும் என்றும் படுது.

நியாயமான கேள்வி குழப்பம் இல்லாமல் பதில் தேவை இல்லையா?
//
கண்டீடீடீடீப்பா..
ஆமா..பதில் வெச்சிருகீன்களோ..??

//


பதில் சொல்லிட்டோமில்லே !!

சுரேஷ் குமார் said...

//
சம்பாதிப்பது தமிழ் நாட்டில், ஆனால் சொத்துக்கள் சேர்ப்பது மற்றும் தொழில் தொடங்குவது அவங்க சொந்த நாட்டில் என்று இல்லாமல், ஒரு தமிழன் தமிழ் நாட்டில் சம்பாத்தித்து அதில் தொழில் தொடங்கி மற்றொரு தமிழன் குடும்பத்தை வாழவைப்பவன் எல்லாருமே தமிழன்தான்.
//
ரொம்ப சரி தான்..
ஆனா.., இத நம்மள மாதிரி பதிவர்கள் தான் சொல்லிகிடுறோ(வோ)ம்..
நம்மள ஆளும் ஆட்சியாளர்களும் சரி, ஆளத்துடிப்பவர்களும் சரி, இப்படி நினைக்கறா மாதிரி எனக்கு தெரியல.. சரி தானே..?

RAMYA said...

//
சுரேஷ் குமார் said...
//
சம்பாதிப்பது தமிழ் நாட்டில், ஆனால் சொத்துக்கள் சேர்ப்பது மற்றும் தொழில் தொடங்குவது அவங்க சொந்த நாட்டில் என்று இல்லாமல், ஒரு தமிழன் தமிழ் நாட்டில் சம்பாத்தித்து அதில் தொழில் தொடங்கி மற்றொரு தமிழன் குடும்பத்தை வாழவைப்பவன் எல்லாருமே தமிழன்தான்.
//
ரொம்ப சரி தான்..
ஆனா.., இத நம்மள மாதிரி பதிவர்கள் தான் சொல்லிகிடுறோ(வோ)ம்..
நம்மள ஆளும் ஆட்சியாளர்களும் சரி, ஆளத்துடிப்பவர்களும் சரி, இப்படி நினைக்கறா மாதிரி எனக்கு தெரியல.. சரி தானே..?
//

ரொம்ப சரிதான், உங்களை மாதிரி பகுத்துப் பார்க்கும் இளைஞர்கள் வரவேண்டும் பெரிய பொறுப்புகளுக்கு.

இதெல்லாம் நடக்குமா?

இல்லே வெறும் கனவாக முடிந்து விடுமா?

vanathy said...

இது மிக சிக்கலான கேள்விதான்.
ஆனால் நீங்கள் கொஞ்சம் குழப்பியும் விட்டீர்கள்.
மதம் என்பது மாறக்கூடியது.
சாதி என்பது இந்தியாவிலும் வேறு சில தென்னாசிய நாடுகலிலும் மட்டுமே காணப்படும் ஒரு ஆக்கிரமிப்புக் கோட்ப்பாடு ஆனால் மொழி இனம் என்பது இயற்கையான ஒரு அடையாளம்
நான் தமிழர் என்று இந்த மூன்று விதமான மக்களையும் கருதுகிறேன்..
1.தமிழைத் தாய்மொழியாகவும் முதல் மொழியாகவும் கொண்டவர்கள் --தமிழ்ப் பிராமணர்கள் என்னைபொறுத்த வரையில் தமிழர்கள்தான்.
2.தமிழைத் தாய் மொழியகாக் கொண்டிராவிட்டலும் ,பல சந்ததிகளாகத் தமிழ் நாட்டில் வாழ்ந்து தமிழை முதல் மொழியாகக் கொண்டும் ,தமிழ் மொழியிலும் தமிழ் நாட்டிலும் அக்கறையுடன் இருப்பவர்கள் எல்லாம் தமிழர்கள்தான்.-அந்த வகையில் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டாலும் வைக்கோ போன்றோரும் ,மலையாளத்தை தாய் மொழியாகக் கொண்டிருந்தாலும் தமிழனாகவே வாழ்ந்த எம்ஜிஆரும் தமிழர்கள்தான்.
3.தமிழ் நாட்டிலும் தமிழ் ஈழத்திலும் இருந்து புலம் பெயர்ந்து வேறு பல நாடுகளின் தங்கிவிட்டர்களின் சந்ததியினர் தமிழ் பேசாமல் உள்நாட்டு மொழிகளைப் பேசினாலும் ,தம்மை தமிழர் என்ற அடையாளத்துக்குள் உணர்பவர்கள் எல்லாம் தமிழர்கள்தான்
--வானதி.

Suresh said...

சூப்பர் கேள்வி :-) பதில் :-(

சுரேஷ் குமார் said...

//
vanathy said...
...
...
//
நல்லா சொல்லிருகிங்க vanathy..
இத சும்மா நம்ம பதிவர்கள் கருத்தா இல்லாம, எல்லாரும் நடைமுறையில பின்பற்றினா சந்தோஷம்..

முதல் வருகைக்கு நன்றி..
இனி வரவிருக்கும் எனது புதிய பதிவுகளுக்கும் அட்டெநென்ஸ் போட கண்டிப்பா வாங்க vanathy..

சுரேஷ் குமார் said...

Suresh said...
சூப்பர் கேள்வி :-) பதில் :-(
//
வாங்க Suresh..
முதல் வருகைக்கு நன்றி..
வரவிருக்கும் எனது புதிய பதிவுகளையும் எட்டிப்பார்க்க காண்டீடீடீடீடீபா வாங்க பாஸு..

நாமக்கல் சிபி said...

வானதி அவர்கள் சொல்வது கரெக்ட்!

//2.தமிழைத் தாய் மொழியகாக் கொண்டிராவிட்டலும் ,பல சந்ததிகளாகத் தமிழ் நாட்டில் வாழ்ந்து தமிழை முதல் மொழியாகக் கொண்டும் ,தமிழ் மொழியிலும் தமிழ் நாட்டிலும் அக்கறையுடன் இருப்பவர்கள் எல்லாம் தமிழர்கள்தான்.-அந்த வகையில் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டாலும் வைக்கோ போன்றோரும் ,மலையாளத்தை தாய் மொழியாகக் கொண்டிருந்தாலும் தமிழனாகவே வாழ்ந்த எம்ஜிஆரும் தமிழர்கள்தான்.//

நீங்க நம்ம இனம்தான்வே!

நாமக்கல் சிபி said...

ஐ நான்தான் 25!

நாமக்கல் சிபி said...

தமிழில் கருத்தைப் பரிமாறிக்கொள்ளும் அனைவருமே தமிழர்கள்தான்

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...

அண்ணாச்சி நம்மூருங்களா? ஆனா ரொம்ப நல்லா எழுதறிங்களே.. சரி இல்லையே.. என்னவோ போங்க.. வாழ்த்துகள்.. இன்னும் சிறப்பாக எழுதி ஊர்ப் பேரைக் காப்பாத்துங்க.. :)

Suresh said...

//
அண்ணாச்சி நம்மூருங்களா? ஆனா ரொம்ப நல்லா எழுதறிங்களே.. சரி இல்லையே.. என்னவோ போங்க.. வாழ்த்துகள்.. இன்னும் சிறப்பாக எழுதி ஊர்ப் பேரைக் காப்பாத்துங்க.. :)
//
ஆமாங்க்ணா.. நம்மூரு தான்..
ஊரு நம்ம பேர காப்பாத்துனா சரி தானுங்ணா..
அப்பப்போ எதையாச்சும் பண்ணி கோயம்புத்தூர்னாவே டெரற கெலப்பிடுறாங்க..

நாமக்கல் சிபி said...

//அப்பப்போ எதையாச்சும் பண்ணி கோயம்புத்தூர்னாவே டெரற கெலப்பிடுறாங்க..//

அதனாலே கோயமுத்தூர்லே டெரரா நீங்க கெளம்பிட்டீங்களா?

Suresh said...

//
அதனாலே கோயமுத்தூர்லே டெரரா நீங்க கெளம்பிட்டீங்களா?
//
ஆமா.. டெரரா தான் கெலம்பிருக்கேன்.. எவன் என்ன பானுவானோனு..

ரங்கன் said...

//ஆமா.. டெரரா தான் கெலம்பிருக்கேன்.. எவன் என்ன பானுவானோனு..//

இன்னும் பயிற்சி வேண்டுமோ..?

Suresh said...

//
இன்னும் பயிற்சி வேண்டுமோ..?
//
அதுக்கு தானே சங்கம் இருக்கு..??!!

Anonymous said...

தமிழன் என்பவனை அடையாளம் காண அளவுகோள் கேட்டு இருந்திங்க...
உதாரணத்துக்கு உங்களை கூட தமிழன் என்று சொல்லிடலாம் எப்படினு கேக்கிறிங்களா..
உங்க மனசில் இருக்கும் எல்ல சந்தேகங்களையும் ஆதங்கங்களையும் கேட்டு விட்டு சொல்லியும் விட்டு கடைசியில் அடிச்சிங்க பார் பல்டி
இது ஜமால் அண்ணன் கேட்டதுக்காக போட்டது என்று...
காரணம் ஆட்டோ பயம்
இது ஒரு நகைசுவை
ஆனால் உண்மையும் இது தான் நமக்கு என்ன நேருமோ என்ற அச்சம் பொதுஜனத்துக்கு
இதில் தவறு இல்லை...
அரசியல் சூழ்நிலை சுய நலம்
ஹையோ........
இந்த பதிவை நான் படிக்க வரலைங்க நண்பர் சிபி தான் படிக்க சொன்னார் பாராட்டு வாதாக இருந்தாலும்
பழி வாங்குவாதாக இருந்தாலும் அவரையே.......

Anonymous said...

சாரி சுரேஷ் அண்ணா கேட்டது ஆட்டோனு தெரியாது அத அவர் சொன்ன பிறகு தெரிந்து கொண்டு என் வருத்ததை தெரிவித்துக்கொள்கிறேன்....
தன்னலம் இன்றி பொது நலம் பேணி எளியோர்க்கு இரங்கி மனிதனா வாழ்வோம் ஆனால் உங்கள் கேள்விக்கு விடையும் அறிந்து விரைவில் சொல்கிறேன்

Anonymous said...

suresh gunathamizh.blogspot ivar oru munaivar thamil veriuraiyaalar...ivaridam ungal kelviai solli pathil aliku maaru kettu ullen kandippa vedai kedaikum pathil nam anaivarukkum payan alikum ena yennugiren...illai endral nenga kooda avar valai poo sendru ariyalaam...

சுரேஷ் குமார் said...

//
உங்க மனசில் இருக்கும் எல்ல சந்தேகங்களையும் ஆதங்கங்களையும் கேட்டு விட்டு சொல்லியும் விட்டு கடைசியில் அடிச்சிங்க பார் பல்டி
இது ஜமால் அண்ணன் கேட்டதுக்காக போட்டது என்று...
காரணம் ஆட்டோ பயம்
இது ஒரு நகைசுவை
//

என்ன கொடும சார் இது..

//
ஆனால் உண்மையும் இது தான் நமக்கு என்ன நேருமோ என்ற அச்சம் பொதுஜனத்துக்கு
இதில் தவறு இல்லை...
//

ஓ.. இப்டி வேற இருக்கா..??
இது தோணாம போச்சே..??!?

சுரேஷ் குமார் said...

//
சாரி சுரேஷ் அண்ணா கேட்டது ஆட்டோனு தெரியாது அத அவர் சொன்ன பிறகு தெரிந்து கொண்டு என் வருத்ததை தெரிவித்துக்கொள்கிறேன்....
//
என்ன பண்ண..?? பதிவ கொஞ்சம் பொறுமையா படிச்சாதானே..?

சுரேஷ் குமார் said...

//
suresh gunathamizh.blogspot ivar oru munaivar thamil veriuraiyaalar...ivaridam ungal kelviai solli pathil aliku maaru kettu ullen kandippa vedai kedaikum pathil nam anaivarukkum payan alikum ena yennugiren...
//

முனைவர்னு சொல்றீக.. ஏதும் குண்டக்க மண்டக்க சொல்லிட போறாரு..
நாங்க எல்லாம் தமிழ்ல இன்னும் எத்தன எழுத்து இருக்குன்னுகூட முழுசா எண்ணி பாக்காதவிய..
பாத்து.. பதவீசா..

முனைவர்.இரா.குணசீலன் said...

யார் தமிழன் ?
இந்த வினாவுக்கு வரலாற்று அடிப்படையில் பல்வேறு விளக்கங்களை அளிக்கமுடியும்..

எனினும்........

கவிஞர்.தணிகாசலம் அவர்களின் “கவிதைகளில் அவன் மானிடன்“
என்னும் கவிதைத் தொகுதி தமிழன் குறித்து முன்வைக்கும் செய்தி தங்கள் வினாக்களுக்குப் போதுமான விளக்கங்களை அளிப்பதாக அமையும் எனக் கருதுகிறேன்..

இதோ......

அன்று நான்
சோழனாக இருந்தேன்
சேரனாக இருந்தேன்
பாண்டியனாக இருந்தேன்
தமிழனாக இல்லை!

அன்று நான்
சைவனாக இருந்தேன்
வைணவனாக இருந்தேன்
சமணனாக இருந்தேன்
பவுத்தனாக இருந்தேன்
தமிழனாக இல்லை!

நான்

பல்லவனாக இருந்தேன்
சுல்தானாக இருந்தேன்
பாளையக்காரனாக இருந்தேன்
தமிழனாக இல்லை!

பிரிட்டீஷ் இந்தியனாக இருந்தேன்
பிரெஞ்சு இந்தியனாக இருந்தேன்
போர்த்துகீஸ் இந்தியனாக இருந்தேன்
தமிழ் இந்தியனாக இருந்ததில்லை!

இன்று நான்

இந்துவாக இருக்கிறேன்
இஸ்லாமாக இருக்கிறேன்
ஏசுவாக இருக்கிறேன்
எங்கேயும் நான் தமிழனாக இல்லை!

நான்

சூத்திரனாக இருக்கிறேன்
பஞ்சமனாக இருக்கிறேன்
பழங்குடியாக இருக்கிறேன்
தமிழனாக இல்லை!

ஆயிரம் உண்டிங்கு சாதி
அத்தனைச் சாதியாகவும்
நான் இருக்கிறேன்
தமிழ்ச் சாதியாக மட்டும்
இருக்க மறுக்கிறேன்

அமெரிக்காவில் நான் கருப்பிந்தியன்
இலங்கையில் நான் கங்காணி கள்ளத்தோணி
டெல்லியில் நான் மதராஸி
அந்தமானில் நான் தோத்திவாலா
ஆந்திரத்தில் நான் அரவாடு
கேரளத்தில் நான் பாண்டிப்பறையா
கர்நாடகத்தில் நான் கொங்கா
ரிக் வேதத்தில் நான் தஸ்யூ
ராமாயணத்தில் நான் ராட்சசன்
சரித்திரத்தில் நான் திராவிடன்
எங்கேயும் தமிழனாக
ஏற்கப்படவில்லை நான்

அரசியல் சட்டத்தில்
என் பெயர் இந்தியன்
இந்தியத் தேர்தலில்
என் பெயர் வாக்காளன்
எங்கேயும் நான் தமிழனாக இருந்ததில்லை

தமிழ் நாட்டில் என் அடையாளம்
வன்னியன்,வேளாளன்,
கள்ளன்,கைக்கோளன்,
பள்ளன், பறையன்,
இத்தியாதி இத்தியாதி
என்று எத்தனையோ சாதி

செட்டியார் இனம்
ரெட்டியார் இனம்
என்பது போல்
சாதி தான் இனம் என்று எனக்குத்
தவறாகத் தரப்பட்ட அடையாளத்தால்
தமிழன் என்ற இன அடையாளம்
சந்திரகிரகணமாகிவிட்டது……


மேலும் விளக்கங்களைத் தரமுடியும் எனினும்

யார் தமிழன்? என்னும் வினா எழக்காரணத்தை இயம்புவதாக இக்கவிதை அமைகிறது.....

Anonymous said...

சுரேஷ் உங்களுக்கு தோன்றிய இந்த சந்தேகத்தால் எங்களுக்கும் நல்ல பதில் கிட்டியதில் மகிழ்ச்சி... நன்றி சுரேஷ் நன்றி குணா அவர்களே.....

சுரேஷ் குமார் said...

//
முனைவர்.இரா.குணசீலன் said...
:::::::::::
:::::::::::
செட்டியார் இனம்
ரெட்டியார் இனம்
என்பது போல்
சாதி தான் இனம் என்று எனக்குத்
தவறாகத் தரப்பட்ட அடையாளத்தால்
தமிழன் என்ற இன அடையாளம்
சந்திரகிரகணமாகிவிட்டது……
//
வாழைப்பழ காமெடி மாதிரி கேக்குரனேனு தப்பா நெனசுகாதிங்க..
(இவ்ளோ பெரிய விளக்கம் குடுத்தும் டவுட் கேக்குரனேனு)
இங்க சாதிய இன அடையாளம்னு தப்பா புரிஞ்சுட்டு இருக்கறதா சொல்லிருகிங்க..
அப்போ உண்மையான இன அடையாளம்..?

முனைவர்.இரா.குணசீலன் said...

'தமிழன் என்றோர் இனமுண்டு
தனியே அவர்க்கோர் குணமுண்டு"

என்பர் நாமக்கல் இராமலிங்கம்பிள்ளை .

அந்த தனி அடையாளம் மொழி

மொழி தான் தமிழனின் அடிப்படை அடையாளம்

தாய்மொழியைப் போற்றி வீழ்ந்த நாடும் இல்லை
தாய்மொழியைப் புறக்கணித்து வாழ்ந்த நாடும் இல்லை என்பதை உலகறியும்.........

தமிழனின் தனித்தன்மையுள்ள அடையாளங்களையும் அதை அவன் தொலைத்த வரலாற்றையும் சொல்லிக்கொண்டே இருக்கலாம்..
எனினும்
உங்களுக்காக....
இன்னொரு கருத்துரை தருகிறேன்....

முனைவர்.இரா.குணசீலன் said...

தமிழன் தன்மொழியைத் தொலைத்தான் தன் அடையாளம் தானாகவே காணாமல்ப் போனது.இப்போது யார்தமிழன்? அவன் அடையாளம் என்ன என்று தேடவேண்டிய் நிலை ஏற்பட்டுள்ளது.

மொழி என்பது ஒரு தகவல்த் தொடர்பு சாதனம் மற்றுமல்ல அது அவ்வினத்தின் பண்பாடு, மரபு ,தனித்தன்மை உள்ளிட்ட பல்வேறு கூறுகளை உள்ளடக்கியது

தமிழனின் அடிமைப்புத்தி காலந்தோறும் பிறமொழிகளின் மீத தமினுக்கு இருந்த பற்று தன் மொழி மீது இல்லாமல்ப் போனது..
கவிஞர் தணிகைச் செல்வன் அவர்களின் கவிதையையே தங்களுக்குக் கருத்துரையாகத்தருகிறேன்...

மொழியை விடவும்
மேலானது
மொழி உணர்வு

எனவே
தமிழை விடவும்
தலையாயது
தமிழுணர்வு

மொழி உணர்வு
இறந்த தேசத்தில்
மொழியும் இறந்துபடும்

தமிழுணர்வு
இழக்கும் நாட்டில்
மிஞ்சுவது
தமிழின் சவமே

மொழி உணர்வைக்
கழித்துவிட்டு
மிச்ச உணர்வுகளை
ஊட்டுவது
பிணத்துக்கு ஏற்றும்
ஊசி மருந்துகளே

மொழி உரிமை
மறுக்கப்பட்ட மக்கள்
இன அடிமைகளாவது
இயல்பு

தமிழுரிமை பறிகொடுத்த
மக்களைத்
தளைப்படுத்துவது
எளிது

மொழி உணர்வின்
மறுபக்கம்
இன உணர்வு

இன உணர்வின்
இடப்பாகம்
மொழி உணர்வ

இன உணர்வற்ற
மொழி உணர்வு
காய்க்காத பூ
மொழி உணர்வற்ற
இன உணர்வு
காம்பிழந்த பூ

இரு உணர்வமற்ற
தமிழன் காகிதப்பூ
............

எனவே தமிழனுக்கு மட்டுமல்ல ஒவ்வொரு மனிதனுக்குமே அடையாளம் என்றால் அது மொழிதான் மொழிக்குப்பின் தான் பிற அடையாளங்கள்............