Friday, April 17, 2009

எனது ஓவியத்திறமைக்கு காரணமான தேர்வுகள்..


இந்த பதிவும் என் மற்றைய பதிவுகளை போல் தேர்வுகளையே மையமாககொண்டு அமைவதின் மூலம் என் வாழ்வில் ஏற்பட்ட வெகுசில இன்னல்களில் இந்த தேர்வுகளின் பெரும் பங்கினை வெகுவாக உணரலாம்..

பொதுவா எல்லாத்துக்கும் இந்த தேர்வுங்கறது, அந்த வகுப்புல படிச்சு கிழிச்சுட்டு அடுத்த வகுப்புக்கு போறதுக்கான தகுதி இருக்கானு கண்டுக்கறதுகாக வெக்கிறது..


ஆனா நாம தான் அப்டி இல்லையே.. படிச்சு கிழிக்க நேரமாகும்னு, கிழிச்சு எடுத்துட்டு போயி எக்ஸாம் எழுதறவிய ஆச்சே.. நம்ம தகுதிய இந்த எக்ஸாம எல்லாம் வெச்சு நிர்ணயிக்க முடியுமா என்ன..?

செகண்ட் இயர் படிக்கும் போது நாலாவது வருஷ கேள்வித்தாள் கொடுத்தாலும் அசராம எழுதிட்டு வந்திடுவோம்ல.. அந்த அளவுக்கு பெர்பெக்ட்டா பிட்டடிபோம்..
ஆமா.. இந்த பிட்டடிக்கற எக்ஸாம்கும், படம் வரையறதுக்கும் இன்னா கனெக்சன்னு யோசிக்கிரியலா..

நாங்க எப்படி செகண்ட் இயர் படிக்கும் போது நாலாவது வருஷ கேள்வித்தாள் கொடுத்தாலும் அசராம பிட்டடிச்சு எழுதிட்டு வர்ரோமோ, அதே மாதிரி தான் எந்த பொருள பாத்தாலும் அசராம அப்டியே பாத்து வரைஞ்சிடுவோம்.. என்ன அங்க பாத்து எழுதுறோம்.. இங்க பாத்து வரையுறோம்.. அங்க பிட்டடிக்கறது எழுத்துக்களை.. இங்க பிட்டடிக்கறது எடாகுடமா, கண்ணாபின்னானு திறிஞ்சுட்டு இருக்கற பலவகைபட்ட கோடுகளை.. அம்முட்டுதான்..

எழுத்தோ.. கோடுகளோ.. பிட்டடிக்கறதுனு வந்துட்டா, எங்களுக்கு எல்லாமே ஒன்னுதான்.. எதா இருந்தாலும் அச்சு பிசகாம அப்டியே அடிசுடுவோம்ல..


கீழே இணைக்கப்பட்டுள்ள படத்த பாருங்க.. வெகுசில கோடுகள் தான் அதுல இருக்கு.. ஆனா அந்த கோடுகளை சரியான இடத்துல அமைக்கும்போது என்னமா இருக்குன்னு..!




















//
நான் முறையா ஓவிய பயிற்சி ஏதும் எடுக்காததாலயோ என்னவோ இதுகூட எனக்கு அழகா தெரியுது.. உங்களுக்கு எல்லாம் எப்டின்னு எனக்கு தெரியலை..
//

(பி.கு: இதுக்கு பிறகு உள்ளவை தலைப்புக்கு சம்மந்தப்படாதவை..)

ஆரம்ப காலங்களில் நான் வரைய பயன்படுத்தினது பென்சில்கள் தான்.. ஆனா அதுல வரையும்போது தப்பு எதாச்சும் ஆச்சுனா அழிச்சுட்டு வரைஞ்சிடலாம்.. இப்டி அழிச்சு அழிச்சு வரையறதுல கொஞ்சம் சலிப்பு ஏற்படவே, இப்படி அழிப்பதற்கான வாய்ப்பு இல்லாத வகையில வரைய பால்பாயிண்ட் பேனாவ பயன்படுத்த ஆரமிச்சேன்.. இதுல என்ன த்ரில்னா, படம் வரையும்போது எந்த எடத்துல தப்பா வரஞ்சிட்டாலும், அந்த படத்த திருப்பி மொதல்ல இருந்துதான் வரஞ்சு ஆகணும்..
வேணா நீங்களும் பென்சில்ல வரையரத விட்டுட்டு பேனால வரஞ்சு பாருங்க.. அந்த அனுபவமே அலாதியானது..

//
அப்படி நீங்க வரைய முயற்சி எடுக்கும் பட்சத்தில் சிறந்த பேனா ஓவியராக வாழ்த்துக்கள்.. (ஆனா.., நெறையபேரு ஏற்கனவே இந்த கலைல முனைவர்களா இருப்பாங்கனு நெனைக்கிறேன்.. அவர்களுக்கு இந்த பதிவு சம்மந்தம்அற்றது என்பதனை கூறிகொள்ள கடமைபடுகிறேன்..)
//




39 comments:

இராகவன் நைஜிரியா said...

ஹையா... மீ த பர்ஸ்டூ....

सुREஷ் कुMAர் said...

எடிட் பண்ணி முடிக்கும் முன்னே மீ த பர்ஸ்ட் போட்டாச்சா..!

இராகவன் நைஜிரியா said...

இன்னும் படிக்கவில்லை. படிச்சுட்டு வரேன்.

இராகவன் நைஜிரியா said...

// சுரேஷ் குமார் said...

எடிட் பண்ணி முடிக்கும் முன்னே மீ த பர்ஸ்ட் போட்டாச்சா..! //

ஹி...ஹி... அப்படித்தான்..

सुREஷ் कुMAர் said...

இன்னைக்கு சின்ன பதிவுதான்.. சீக்கிரம் முடிச்சிடலாம்..

இராகவன் நைஜிரியா said...

படிச்சுட்டேன்.

பின்னூட்டம் ஆரம்பிக்கலாமா?

(படிக்க லேட்டானதுக்கு காரணம் தங்ஸ் சாப்பிட கூப்பிட்டாங்க... உடனே போகவில்லை என்றால் வம்பு.. அதனாலத்தான்)

இராகவன் நைஜிரியா said...

// இந்த பதிவும் என் மற்றைய பதிவுகளை போல் தேர்வுகளையே மையமாககொண்டு அமைவதின் மூலம் என் வாழ்வில் ஏற்பட்ட வெகுசில இன்னல்களில் இந்த தேர்வுகளின் பெரும் பங்கினை வெகுவாக உணரலாம்.. //

ஆமாம் உணர்ந்திட்டோமில்ல..

ஆரம்பமே கதைப் படிக்கிறமாதிரி இருக்குங்க

இராகவன் நைஜிரியா said...

// பொதுவா எல்லாத்துக்கும் இந்த தேர்வுங்கறது, அந்த வகுப்புல படிச்சு கிழிச்சுட்டு அடுத்த வகுப்புக்கு போறதுக்கான தகுதி இருக்கானு கண்டுக்கறதுகாக வெக்கிறது..//

ஓ அப்படின்னு ஒன்னு இருக்கா... ஐ மீன் தகுதி...

இதெல்லாம் நமக்கு தேவையில்லாத விசயங்கள்.. அதனால கவலைப் படுவதில்லை

सुREஷ் कुMAர் said...

//
பின்னூட்டம் ஆரம்பிக்கலாமா?
//
இதெல்லாம் கேட்டு பண்ணவேண்டிய சமாச்சாரமா..?
வீட்ல கூப்ட்டா சாப்ட மட்டும் கேக்காம போறீங்க..
பின்னூட்டம் மட்டும் கேட்டுபோடுரிங்க..

இராகவன் நைஜிரியா said...

// ஆனா நாம தான் அப்டி இல்லையே.. படிச்சு கிழிக்க நேரமாகும்னு, கிழிச்சு எடுத்துட்டு போயி எக்ஸாம் எழுதறவிய ஆச்சே.. நம்ம தகுதிய இந்த எக்ஸாம எல்லாம் வெச்சு நிர்ணயிக்க முடியுமா என்ன..?//

அதானே.. கரக்டா சொன்னீங்கப்பு

सुREஷ் कुMAர் said...

//
இதெல்லாம் நமக்கு தேவையில்லாத விசயங்கள்.. அதனால கவலைப் படுவதில்லை
//

நம்ம கவலைப்படுவது இல்லை..
நம்ம ஆசான்மார்கள் தான் கவலைபடுறாங்க..

இராகவன் நைஜிரியா said...

// செகண்ட் இயர் படிக்கும் போது நாலாவது வருஷ கேள்வித்தாள் கொடுத்தாலும் அசராம எழுதிட்டு வந்திடுவோம்ல.. அந்த அளவுக்கு பெர்பெக்ட்டா பிட்டடிபோம்..
ஆமா.. இந்த பிட்டடிக்கற எக்ஸாம்கும், படம் வரையறதுக்கும் இன்னா கனெக்சன்னு யோசிக்கிரியலா.. //

அதானே... இரண்டாவது வருஷம் படிக்கும் போதே நாலாவது வருஷத்தை மாத்தி எழுதி பாசாயிட்டீங்களா?

இராகவன் நைஜிரியா said...

// சுரேஷ் குமார் said...

//
பின்னூட்டம் ஆரம்பிக்கலாமா?
//
இதெல்லாம் கேட்டு பண்ணவேண்டிய சமாச்சாரமா..?
வீட்ல கூப்ட்டா சாப்ட மட்டும் கேக்காம போறீங்க..
பின்னூட்டம் மட்டும் கேட்டுபோடுரிங்க..//

தம்பி சுரேஷ் இன்னும் கல்யாணம் ஆகவில்லை என்று நினைக்கின்றேன்.

சாப்பிட கூப்பிடும் போது போகவில்லை என்றால் என்ன நடக்கும் என்று உங்களுக்குத் தெரியாது...

உங்களுக்கு கல்யாணம் ஆகும் போது இந்த கஷ்டம் தெரியும்.

सुREஷ் कुMAர் said...

//
அதானே... இரண்டாவது வருஷம் படிக்கும் போதே நாலாவது வருஷத்தை மாத்தி எழுதி பாசாயிட்டீங்களா?
//
பக்கத்து அண்ணாக்கு குடுக்க வேண்டியத எனக்கு மாத்தி குடுத்தா அப்டித்தான்..

இராகவன் நைஜிரியா said...

// நான் முறையா ஓவிய பயிற்சி ஏதும் எடுக்காததாலயோ என்னவோ இதுகூட எனக்கு அழகா தெரியுது.. உங்களுக்கு எல்லாம் எப்டின்னு எனக்கு தெரியலை..//

ரொம்ப அழகா இருக்குங்க... சூப்பர் ஓவியம்..

இராகவன் நைஜிரியா said...

// (பி.கு: இதுக்கு பிறகு உள்ளவை தலைப்புக்கு சம்மந்தப்படாதவை..)//

ஓ இதுவரைக்கு எழுதியது எல்லாம் தலைப்புக்கு சம்பந்தமான விசயங்களா?

சரி ஒத்துகிட்டோம்..

सुREஷ் कुMAர் said...

//
ஓ இதுவரைக்கு எழுதியது எல்லாம் தலைப்புக்கு சம்பந்தமான விசயங்களா?
//
எதிர்பார்த்தேன்..அவ்வண்ணமே வந்து விழுந்துவிட்டது ஏவுகணை..

सुREஷ் कुMAர் said...

//
ரொம்ப அழகா இருக்குங்க... சூப்பர் ஓவியம்..
//
நான் பகிறங்கப்படுத்திய என் முதல் ஓவியத்தை பாராட்டியமைக்கு நன்றி தலைவா நன்றி..

இராகவன் நைஜிரியா said...

நெட்டு படுத்துகிச்சு... அதான் காணாமப் போயிட்டேன்

இராகவன் நைஜிரியா said...

// சுரேஷ் குமார் said...

//
ஓ இதுவரைக்கு எழுதியது எல்லாம் தலைப்புக்கு சம்பந்தமான விசயங்களா?
//
எதிர்பார்த்தேன்..அவ்வண்ணமே வந்து விழுந்துவிட்டது ஏவுகணை.. //

நீங்க எதிர்பார்த்து நாங்க செய்யாம இருப்போமா? (நாங்களும் யூத் தான்)

இராகவன் நைஜிரியா said...
This comment has been removed by the author.
இராகவன் நைஜிரியா said...

// எழுத்தோ.. கோடுகளோ.. பிட்டடிக்கறதுனு வந்துட்டா, எங்களுக்கு எல்லாமே ஒன்னுதான்.. //

எழுத்து என்னாடா, கோடு என்னடா, தேர்வுக்கான நேரத்திலே,

படித்து எழுதுவதும், பக்கத்து பையனை பார்த்து எழுதுவதும் பிட் அடிக்க தெரியாதவன் உலகத்திலே..

இராகவன் நைஜிரியா said...

// ஆரம்ப காலங்களில் நான் வரைய பயன்படுத்தினது பென்சில்கள் தான்.. //

ஓ நாங்க ஸ்லேட், பலப்பம் யூஸ் பண்ணியிருப்பீங்கன்னு நினைச்சேன்

இராகவன் நைஜிரியா said...

// ஆனா அதுல வரையும்போது தப்பு எதாச்சும் ஆச்சுனா அழிச்சுட்டு வரைஞ்சிடலாம்.. //

ஆமாம் தப்பு ஆச்சுன்னா ரப்பர் வச்சுட்டு அழிக்கலாம். அப்புறம் திரும்பவும் வரையலாம். திரும்பவும் தப்பு வந்துச்சுன்னா ரப்பர் வச்சு அழிக்கலாம். அப்புறம் திரும்பவும் வரையலாம். இதுக்கப்புறமும் தப்பு வந்தா அந்த பேப்பரை கிழிச்சுப் போட்டுட்டு, வேற பேப்பர் எடுத்து வரையலாம். அதுல தப்பு வந்துச்சுன்னா... முதலில் இருந்து படிக்கவும்...

இராகவன் நைஜிரியா said...

ஹையா.. மீ த 25..

(நாங்களும் அடிப்பொமில்ல ...)

இராகவன் நைஜிரியா said...

// அப்படி நீங்க வரைய முயற்சி எடுக்கும் பட்சத்தில் சிறந்த பேனா ஓவியராக வாழ்த்துக்கள்.. (ஆனா.., நெறையபேரு ஏற்கனவே இந்த கலைல முனைவர்களா இருப்பாங்கனு நெனைக்கிறேன்.. அவர்களுக்கு இந்த பதிவு சம்மந்தம்அற்றது என்பதனை கூறிகொள்ள கடமைபடுகிறேன்..)//

நாங்க எல்லாம் இந்த மாதிரி ரிஸ்க் எல்லாம் எடுப்பதில்லைங்க

வேத்தியன் said...

படிச்சுட்டு வரேன்

வேத்தியன் said...

ஆனா நாம தான் அப்டி இல்லையே.. படிச்சு கிழிக்க நேரமாகும்னு, கிழிச்சு எடுத்துட்டு போயி எக்ஸாம் எழுதறவிய ஆச்சே.. நம்ம தகுதிய இந்த எக்ஸாம எல்லாம் வெச்சு நிர்ணயிக்க முடியுமா என்ன..?
//

அதானே...
:-)

வேத்தியன் said...

செகண்ட் இயர் படிக்கும் போது நாலாவது வருஷ கேள்வித்தாள் கொடுத்தாலும் அசராம எழுதிட்டு வந்திடுவோம்ல.. அந்த அளவுக்கு பெர்பெக்ட்டா பிட்டடிபோம்..//

அருமை அருமை...

வேத்தியன் said...

படம் அநல்லா இருக்கே...
இவ்வளவு நாளா பரீட்சை நேரத்துல கதை மட்டுமே எழுதிட்டு இருந்தேன்...
இனி படமும் வரைஞ்சு பாக்கலாமேன்னு ஐடியா குடுத்திருக்கீங்களே...
:-)

நாமக்கல் சிபி said...

நல்ல திறமை இருக்கு உங்ககிட்டே! ஒரு நாளைக்கு பெரிய ஆளா வருவீங்க!

(வயசு ஆக ஆக எல்லாரும் பெரிய ஆள்தானே ஆவாங்கன்னு யாராச்சும் சொல்லுவாங்க, நெவர் மைண்ட்)

सुREஷ் कुMAர் said...

//
நாமக்கல் சிபி said...
நல்ல திறமை இருக்கு உங்ககிட்டே! ஒரு நாளைக்கு பெரிய ஆளா வருவீங்க!
//

பெரிய மனது வைத்து வாழ்த்தியமைக்கு நன்றி சிபி அண்ணா..

सुREஷ் कुMAர் said...

//
வேத்தியன் said...
படம் அநல்லா இருக்கே...
இவ்வளவு நாளா பரீட்சை நேரத்துல கதை மட்டுமே எழுதிட்டு இருந்தேன்...
இனி படமும் வரைஞ்சு பாக்கலாமேன்னு ஐடியா குடுத்திருக்கீங்களே...
:-)
//

புது இனம் அமைப்போம் வாருங்கள்..

RAMYA said...

//
செகண்ட் இயர் படிக்கும் போது நாலாவது வருஷ கேள்வித்தாள் கொடுத்தாலும் அசராம எழுதிட்டு வந்திடுவோம்ல.. அந்த அளவுக்கு பெர்பெக்ட்டா பிட்டடிபோம்..
//

ராசா அம்புட்டு அறிவாளியாப்பா
யாராச்சும் இங்கனே இருந்தா
கூட்டிகிட்டு போயி பிள்ளைக்கு சுத்திப் போடுங்கப்பா :-)

RAMYA said...

படம் நல்லா வரைஞ்சி இருக்கீங்க சுரேஷ்!

தினம் தினம் பயிற்ச்சி எடுத்தால்
எதிர் காலத்தில் நல்ல ஓவியர் ஆகும்
வாய்ப்பு உண்டு.

வாழ்த்துக்கள்!

सुREஷ் कुMAர் said...

//
தினம் தினம் பயிற்ச்சி எடுத்தால்
எதிர் காலத்தில் நல்ல ஓவியர் ஆகும்
வாய்ப்பு உண்டு.
//
எனக்கும் ஆசை தான்.. ஆனா என்னைக்கு இந்த பொட்டிய வெச்சுகிட்டு ஆணிபுடுங்க ஆரமிச்சனோ அன்னைக்கே ஓவியம் வரைவதற்கு ஆப்பு விழுந்துடுச்சு..

Anonymous said...

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்னு சொல்வாங்க நிங்க இரண்டும் பழகி இருக்கிங்க வாழ்த்துக்கள் சுரேஷ்....ஒவியம் இந்த கலை கூட ஒரு வரபிரசாதம் தான்..உண்மையாவெய் உங்க ஒவியம் உங்க கை வண்ணம் சொல்லுது மிக குறைந்த வரி கொண்டு ஆண் பெண் இருவரையும் நல்ல கோணத்தில் தீட்டியிருக்கிங்க...இன்னும் கை வசம் இருக்கும் உங்க ஒவியங்களை உங்கள் ஓவ்வொரு பதிவிலும் போட்டால் பதிவு மேலும் மெருகு கூடும்....ஒரு
modern art பார்த்த உணர்வு...சுரேஷ் யார் தமிழன் பதிவுக்கு குணா அவர்கள் பதில் படித்தீர்களா? உங்கள் சந்தேகம் என்னையும் பயனடைய செய்தது... நன்றி

सुREஷ் कुMAர் said...

//
தமிழரசி said...
சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்னு சொல்வாங்க நிங்க இரண்டும் பழகி இருக்கிங்க வாழ்த்துக்கள் சுரேஷ்....
::::::::::
::::::::::
//
நன்றி தமிழரசி..
கண்டிப்பா மற்றைய படங்களையும் போடுறேன்..
ஆலோசனைக்கு நன்றி..

सुREஷ் कुMAர் said...

//
சுரேஷ் யார் தமிழன் பதிவுக்கு குணா அவர்கள் பதில் படித்தீர்களா? உங்கள் சந்தேகம் என்னையும் பயனடைய செய்தது...
//
ஆம் படித்தேன்..
சரி, குணா அவர்களின் கருத்தின் மூலம் நீங்கள் தமிழனாய் அடையாளம் காண்பது யாரை..?