Tuesday, April 7, 2009

எனது பாணியில் IOB தேர்வு..

( நா எக்ஸாம் எழுத போனா எப்படி இருக்கும்னு சின்னதா ஒரு டிரைலெர் பாக்கணும்னா.. கீழ குடுத்திருக்கற ரெண்டு பதிவுகள படிச்சா கொஞ்சம் புரிஞ்சுபிங்க..
http://wettipedia.blogspot.com/2009/03/blog-post_24.html
http://wettipedia.blogspot.com/2009/03/blog-post_25.html )

இந்த IOB மேட்டர் என்னனா.ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..

போன மாதம் 26'ம் தேதி காலை 10.10 மணிக்கு office'ku உள்ள நுழையும் போதே நண்பனிடம் இருந்து அழைப்பு வந்தது.. ஏதோ IOB bank'la Probationary officer போஸ்ட்டுக்கு அடுத்த மாசம் எக்ஸாம் வெக்கிறாங்க, அப்பளை பண்ணுடான்னு சொன்னான்.. சரி, அடுத்த மாசம் தானே, யோசிச்சு பண்ணலாம்னா, அதுக்கு அப்பளை பண்ண இன்னைக்கு தாண்டா கடேசி நாள்னு சொன்னான்..
// இன்னைக்கு தான் கடேசி நாள்னா.., இந்த பதிவ எழுதுற இன்னைக்கு இல்லை.. இது அவன் போன் பண்ணின அன்னைக்கு தான் கடேசி நாள்..
ஹி ஹி.. தெளிவா புரிஞ்சுதா..?
//
சரி'னு ஆபீஸ்'கு ரெண்டு மணிநேரம் OP அடிச்சுட்டு பேங்க்'கு போயி அப்ளை பண்ணிட்டு வந்து, அன்னைக்கு மாலை நேரத்துல அந்த தேர்வ யாரெல்லாம் எழுதலாம், அது எந்த வகையான தேர்வுன்னு net'la தேடிபாத்தா.. அந்த தேர்வுக்கு arts குரூப் மாணவர்கள் குறைந்தது 60% மதிப்பெண்ணும், BE முடித்தவர்கள் குறைந்தபட்சமாக 65% மதிப்பெண்ணும் பெற்றிருக்க வேண்டும்னு போட்டிருந்துச்சு..

நாங்க நடுத்தர வர்க்க குடும்பம்.. அதாவது வறுமை கோட்டுக்கு சற்று மேலே'னு சொல்லிகிடலாம்.. அதனால என்னோட மார்க்கும் என் குடும்ப பொருளாதாரம் மாதிரி வறுமை கோட்டுக்கு சற்று மேல தான் இருந்துச்சு.. அதாவது, BE'la எனது மதிப்பெண் சதவிகிதம் 60%..

சரி.., எப்டியோ 400 ரூபா கட்டி பதிவு பண்ணியாச்சு.. கட்டுன காசுக்கு தேர்வ எழுதலாம்னு முடிவுபண்ணிட்டு அன்னைக்கு புடுங்க வேண்டிய ஆணிய புடுங்க போய்ட்டேன்.. தேர்வுக்கு மூணு வாரம் முன்னாடி அம்மா போன் பண்ணி, எக்ஸாம்கு ஹால் டிக்கெட் வந்திருச்சு'னு சொன்னாங்க.. எழுதபோகத எக்ஸாம்கு இந்த ஹல்டிக்கெட் வந்தாஎன்ன வராட்டி என்னனு விட்டுட்டேன்..

அப்புறம், தேர்வுக்கு முந்தின வாரம் வீட்டுக்கு போனப்ப, அம்மா கட்டாயப்படுத்தி அத என் பேக்ல தினுச்சு அனுப்பிட்டாங்க.. சரினு நானும் அத கொண்டாந்து ரூம்ல போட்டு வெச்சுட்டேன்.. தேர்வுக்கு முந்தின நாள் இரவு அம்மா போன் பண்ணி தேர்வுக்கு prepare பண்ணிட்டியனு கேக்கவும் தான், அடுத்த நாள் இந்த எக்ஸாம் இருக்கறதே நெனப்பு வந்துச்சு.. சரி, அப்டி தேர்வு எழுத, அவனுக ஹால் டிக்கெட்ல என்னென்ன instructions போட்டிருகாங்கனு படிச்சு பாத்தா.. ஆ..ஆ..ஆ.. ஆ.. ஆ..

1st rule : ஹால் டிக்கெட்ல என்னோட பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஒட்டி இருக்கனுமாம்..
அடங்கொய்யால.. ஏன்டா.., இத இப்போ வந்து சொன்னா, இந்த ராத்திரி 9.30 மணிக்கு மேல எவண்டா போட்டோ எடுக்க ஒக்காந்துட்டு இருப்பான்.. நாளைக்கு காலைல எடுக்கலாம்னா, இவனுங்க 10 மணிக்கு மேல தான் கடைய தொறப்பனுங்க..
என்னடா இது சோதனைன்னு நெனச்சுட்டு இருக்கும்போது தான் திடீர்னு அது நியாபகம் வந்திச்சு..

என்னனா, நான் பெங்களூர்'ல இருந்தப்போ பேக்ல போட்டு வெச்சிருந்த ID Card ஒன்னு இன்னும் என் பேக்ல கடந்துச்சு.. அதுல இருந்த போட்டோவ கிழிச்சு ஒட்டலாம்னு எடுத்தப்ப அதனோட கவர்ல இருந்து ஒரு அழகான பைய்யனோட போட்டோ ஒன்னு கீழ விழுந்துச்சு.. யாருடா இது இவ்ளோ அழகா இருக்கானேனு எடுத்து பாத்தா.. அது வேறயாரும் இல்ல மகா ஜனங்களே.. அது நான் தான்.. சும்மா சொல்லக்கூடாது, (அப்டினா காசு குடுத்து சொல்லலாமான்னு எல்லாம் கேக்க கூடாது..) நெஜமாவே அப்டி ஒரு அழகு. சரி.., போட்டோ கெடச்சாச்சு.. ரெண்டாவது rule என்னாங்கடனு படிச்சு பாத்தா.. ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..

2nd rule.. தேர்வுக்கு பதிவு செய்ய கட்டணம் கட்டியதற்கான ரசீதை கொண்டுவரவேண்டும்.. டேய்.. ஏண்டா சாவடிக்கிரிங்க.. ஒன்ற மாசத்துக்கு முன்னாடி கட்டுன பணத்துக்கான தம்மா துண்டு ரசீத எங்கேனு போயி தேட..
சரி, அன்னைக்கு ஊர்ல இருந்து வரும்போதுதான் பணம் கட்டினது.. So, அப்போ கொண்டு வந்த பேக்ல தேடி பாக்கலாம்னு இருபது நிமிஷம் செலவழிச்சு தேடுனதுல அதுவும் கெடச்சிடுச்சு.. சரி. இப்போ 3rd rule என்னாங்கடானு படிச்சு பாத்தா..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..

இது தான் தேர்வுக்கான எனது கொள்கைக்கு விரோதம்னா விரோதம், அப்டியொரு விரோதமானது.. அப்டி என்ன rule'na.., தேர்வுக்கு வரும்போது கண்டிப்பா ரெண்டு HB பென்சில்கள், ஒரு இரப்பர், ஒரு பேனா இதையல்லாம் அவசியம் கொண்டுவரணும்னு போட்டிருந்துச்சு.. நீங்களே சொல்லுங்க.. இப்டி ஒரு மாணவன் கிட்ட தேர்வுக்கு பேனா எல்லாம் கொண்டு வர சொன்னா அவன் மனசு எவ்ளோ கஷ்ட்டப்படும்.. ஆனா என்ன பண்ண..? நம்ம விதி இப்டிதானு எழுதி இருந்தா யாரால மாத்த முடியும்..


சரினு ஒரு முடிவெடுத்தேன்.. இதுக்காக எல்லாம் மனச தளர விடாத.. அங்க எக்ஸாம் ஹால்'ல எவனாச்சும்கிட்ட இருந்து புடிங்கி எழுதிக்கலாம்னு முடிவு பண்ணிட்டு, நாளைக்கு காலை 9.30'ku எக்ஸாம் ஹால்ல இருக்கணும். So, 7.30'ku எழுந்து ரெடி ஆனா தான் கரெக்ட் டைம்'கு போக முடியும்னு நெனச்சு, 7.30 கு அலாரம் வெச்சுட்டு தூங்கிட்டேன்.. காலைல ரொம்ப நேரம் ஆகியும் அலாரம் அடிக்கவே இல்லையேனு மணிய பாத்தா..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..


மணி 8.30 ஆகிருந்துச்சு.. அட கொடுமையே.. நம்ம கொள்கைய மீறி இந்த ஒரு எக்ஸாம்காச்சும் கரெக்ட் டைம்'கு போலாம்னு பாத்தா.. கொள்கை நம்மள விடமாட்டின்குதெனு நொந்துட்டு, அவசர அவசரமா குளிச்சு ரெடி ஆகி மணிய பாத்தா, 8.50 ஆகிடுச்சு.. ஆனா, இந்த அவசரத்துலயும் ஒரு நல்லது நடந்துச்சு.. அதுவும் என் room mate மூலியமா.. ஏனா அவன் ஒரு mechanical Engg. மாணவன்.. So, தேர்வுக்கு வேண்டிய பென்சில், இரப்பர் எல்லாம் இவன்கிட்டயே கெடச்சிடுச்சு.. இப்டி தேவையானது எல்லாம் எதிர்பாக்காம கெடச்சப்போ.. என்கிட்ட இருந்த, கண்டிப்பா மறக்காம எடுத்துட்டு போகனும்னு நெனச்சுட்டு இருந்த ரெண்டு பொருள மறந்துட்டு போய்ட்டேன்.. அது என்னனா.. ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..


ஒன்னு, என்னோட பேனா.. நான் நண்பன் கிட்ட இருந்து பென்சில், இரப்பர் மட்டும் தானே வாங்கி இருந்தேன்.. என்னோட பேனாவ எடுத்துக்க மறந்துட்டேன்..

ரெண்டாவது, டவுன் பஸ்சில் பயணம் செய்வதற்கான கட்டணத்திற்கு தேவையான ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் நாணயங்கள்.. இது இல்லன அவ்ளோ தான்.. நடத்துனர் நம்மள நாறடிசுடுவான்..

என்கிட்ட இருந்தது 10 மற்றும் 100 ரூபாய் நோட்டுகள்.. ஆனா நான் எதிர்பாத்தா மாதிரி அப்டி ஒன்னும் அவர் நாறடிக்கவில்லை.. எனது பத்து ரூபாயை வாங்கிக்கொண்டு, இரண்டு ரூபாயை குடுத்துட்டு இத வாங்கிக்கோன்னு சொல்லிட்டு போய்ட்டாரு.. நானும், சரி யாராச்சம் ரெண்டு பேருகிட்ட சில்லறைய வாங்கிட்டு, நம்ம பத்துரூபாயில அவங்களுக்கு டிக்கெட் வாங்கி குடுத்துடலாம்னு ரெண்டு பேத்தபுடிச்சு, அவங்க கிட்ட இருந்து சில்லறையையும் வாங்கிட்டேன்.. ஆனா.. அதுல என்ன கொடுமைனா.. ஆ.. ஆ.. ஆ.. ஆ.. ஆ..
நான் சில்லற வாங்குனதுல ஒருத்தர் குடுத்த ரெண்டு ரூபாய் சில்லறை எதுக்குனா, நடத்துனர் அவருக்கு மூணு ரூபா தரணுமாம்.. அதுக்கு இவரு இன்னும் ரெண்டு ரூபாய குடுத்து மொத்தமா 5 ரூபாயா வாங்குறதுக்காக குடுத்தது.. நா, அவர் டிக்கெட் தான் வாங்குராருனு நெனச்சுட்டு, என்னோட பத்து ரூபால அவுருக்கு ஒரு ரெண்டு ரூபா டிக்கெட் கொடுத்துடுங்க.. நான் அவரு கிட்ட இருந்து காசு வாங்கிட்டேன்னு சொல்லி நல்ல பெருசா ஒரு பல்ப வாங்கிகிட்டேன்..
(எதாச்சும் புரிஞ்சுதா மக்களே.. ???? புரியாட்டியும் பரவால, தொடர்ந்து படிங்க..)
சரி, இவுரு தான் இப்டி பல்பு குடுத்துட்டாரு.. நம்ம இன்னொருத்தர் கிட்ட காசு வாங்குனமே, அவுரு என்ன பண்ணுராருனு பாத்தா, பரவால.. நாம நெனச்சா மாதிரி, ரெண்டு ரூபாய என்கிட்ட குடுத்துட்டு என்னோட பத்து ரூபால இருந்து அவுருக்கு தேவையான ரெண்டு ரூபாய்க்கு டிக்கெட் வாங்கிகிட்டாறு.. இப்போ, அவுருக்கும் எனக்கும் சேத்தி என் பத்து ரூபால நாலு ரூபாய்க்கு டிக்கெட் எடுத்தாச்சு.. இப்போ நடத்துனர் என்கிட்ட ஆறு ரூபா சில்லற குடுத்தாரு.. எப்டியோ நடத்துனர் கிட்ட இருந்து ஒரு ஆறு ரூபா, நம்மாளுகிட்ட இருந்து ரெண்டு ரூபா மொத்தம் என்னோட டிக்கெட் செலவு போக எட்டு ரூபா சில்லறை கெடச்சிடுச்சுனு பாக்கெட்ட பாத்தா..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..

நம்மாளு கிட்ட இருந்து வாங்கின ரெண்டு ரூபாய காணோம்.. என்னடான்னு யோசிச்சு பாத்தப்போதான் தெரிஞ்சுது.. மொதல்ல பல்பு வாங்குன குசியில இவரோட ரெண்டு ரூபாயையும் நடத்துனர் கிட்டயே குடுத்துட்டேனு.. அப்புறம் என்ன, ரெண்டு ரூபா டிக்கேட்க்கு நாலு ரூபாயா போனது தான் மிச்சம்.. சரி ரெண்டு ரூபா தானே, தொலஞ்சு போகட்டும்னு விட்டுட்டேன்.. எக்ஸாம்'கு இன்னும் 15 நிமிஷம் தான் இருக்கு என்ன பண்ணலாம்னு யோசிச்சுட்டே காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட்'ல இருந்து அண்ணா சிலை stop'ku பஸ் ஏறலாம்னு, ஒரு பஸ்ஸோட நடத்துனர் கிட்ட கேட்டதுக்கு, ஒரு மாதிரியா முழிச்சுட்டு, ஆமா இது அந்த வழியா தான் போகுது. ஏறுங்கன்னு ஏத்திக்கிட்டான்.. அவன் எறக்கி விட்ட stopla கேட்டப்போதான் தெரிஞ்சுது இது நான் போகவேண்டிய stop'ku பக்கத்து road'nu.. இதுவே வேற வேலையா, வெட்டியா சுத்திட்டு இருக்கறப்போனா, அப்டியே ஜாலியா நடந்து போலாம்.. ஆனா இன்னும் 5 நிமிசத்துல நான் எக்ஸாம் எழுதவேண்டிய காலேஜ்ச தேடிபுடிச்சு போயாகனும்.. சரி.. அங்க இருந்த ஆட்டோ driver'a விசாரிச்சப்போ, அந்த காலேஜ் போக இன்னும் ஒரு கிலோமீட்டர் தூரம் போகனும்னு சொன்னான்.. எப்டியோ தட்டு தடுமாறி போயி சேரும்போது மணி 9.43 ஆகிடுச்சு.. அங்கன போயி பாத்தா சின்ன ஆச்சர்யம்..

என்னனா.., எக்ஸாம்'கு வந்ததுல பசங்கள விட குஜால்ஸ் தான் அதிகம்.. இப்போதான் மனசுக்கு கொஞ்சம் நிம்மதி.. இவ்ளோ கஷ்ட்டப்பட்டு எக்ஸாம் எழுத வந்ததுக்கு இப்டி ஒரு குஜாலஸ் கூட்டத்தயாசும் பாக்க அனுப்புனியே ஆண்டவான்னு எக்ஸாம் ஹால தேடி போயி பாத்தா.. அங்கயும் இதே கதை தான்.. எங்க ஹால்ல பொண்ணுங்கள விட பசங்க ரொம்ப கம்மி.. இத இப்டியும் சொல்லலாம்... பசங்கள விட பொண்ணுங்க அதிகம்னு..

மனசுல பட்டாம்பூச்சி சிறகடிக்க.. என்னோட இறந்தகால கல்லூரி நியாபகத்தோட தேர்வு எழுத உக்கந்தபோது தான் நியாபகம் வந்துச்சு, இன்னும் யாரு கிட்ட இருந்தும் பேனா வாங்கவே இல்லன்னு..

நா அப்டி தேர்வு எழுத யாரு கிட்ட பேனா வாங்கி இருப்பேன்னு நெனைக்கிறிங்க.. ஹி..ஹி.. அதும் ஒரு குஜிலி தான்..

அப்டி பேனா வாங்கி தேர்வுல என்னத்தாதான் எழுதினேங்கர கதைய அடுத்த பதிவுல சொல்லறேன்..

40 comments:

நட்புடன் ஜமால் said...

நீஈஈஈஈண்ட பதிவு

ஆனாலும் சுவாரஸ்யமாய்


(அடுத்த முறை ஒரு ஆட்டோவும் அனுப்புங்க படிக்க - இல்லாங்காட்டி ஊட்டாண்டா ஆட்டோ வரும் - சொல்லிப்போட்டேன்)

நட்புடன் ஜமால் said...

\\ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் நாணயங்கள்.. இது இல்லன அவ்ளோ தான்.. நடத்துனர் நம்மள நாறடிசுடுவான்..\\

ஹா ஹா ஹா

பாசக்காரவோ

சுரேஷ் குமார் said...

பதிவு நீட்ட்ட்ட்டமா போனதால தான் இத்தோட கட் பண்ணிட்டு தொடரும் போட்டிருக்கேன்..
அடுத்த பதிவ பாருங்க..

நட்புடன் ஜமால் said...

அவசியம் படிப்போம்

எத்தனை தொடரும் போட்டாலும்

சுரேஷ் குமார் said...

ஆஹா.. இதுவல்லவா இரும்பு நெஞ்சம்..
இந்த உறுதி இருக்கும் வரை, எந்த பதிவும் உம்மை அசைத்து விடாது..

RAMYA said...

பதிவு நல்லா எழுதி இருக்கீங்க தம்பி
இரெண்டு பதிவா போடுங்க

எழுதி இருக்கும் அத்தனை வாக்கியங்களும்
எதார்த்தம் என்ற உண்மையை தன்னுடனேயே
எடுத்து வந்திருக்கு.

உங்க போட்டோ நானும் பார்த்தேன்
ரொம்ப அழகாதான் இருக்கீங்க தம்பி

நடத்துனர் நாரடிக்கிரதும் உண்மைதான்
அப்போது நமக்கு தெரிந்தவர் இருந்து
விட்டால்............... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

தொடருங்கள் எவ்வளவு போட்டாலும் நாங்கள் படிக்கறோம்.

சுரேஷ் குமார் said...

அப்போ இத ரெண்டா கட் பண்ணிடலாமா..?

சுரேஷ் குமார் said...

//
உங்க போட்டோ நானும் பார்த்தேன்
ரொம்ப அழகாதான் இருக்கீங்க தம்பி
//
ஒரேடியா புகழாதிங்க..
எனக்கு வெக்க வெக்கமா வருது..

இராகவன் நைஜிரியா said...

// சுரேஷ் குமார் said...

அப்போ இத ரெண்டா கட் பண்ணிடலாமா..? //

எத வேண்டுமானாலும் பண்ணலாம். யாரும் வேண்டாம் என்று சொல்ல முடியாது, ஏன் என்றால் பதிவு உங்களது, இடுகை உங்களுடையது.

இராகவன் நைஜிரியா said...

// "எனது பாணியில் IOB தேர்வு.." //

இதுக்கு பிட் ஓன்னும் தயார் பண்ணலயா?

இராகவன் நைஜிரியா said...

// போன மாதம் 26'ம் தேதி காலை 10.10 மணிக்கு office'ku உள்ள நுழையும் போதே //

ஓ.. 10.10 க்கு நீங்க ஆபிசுக்கு வந்துடுவீங்கன்னு புரிஞ்சுகிட்டேன்..

இராகவன் நைஜிரியா said...

// நண்பனிடம் இருந்து அழைப்பு வந்தது.. //

அப்படியா.. உடனே ஆபிசுக்கு அப்பீட்டு விட்டுடீங்களா?

சுரேஷ் குமார் said...

ஆனா படிக்க போறது நீங்கலாச்சே..
கட் பண்ணுனதுக்கு அப்புறம் பதிவு முழுசா புரியாம, எதாச்சும் தப்பா புரிஞ்சுகிட்டு தாறுமாறா என்ன போட்டு கும்மிட்டா..? அதான் ஒரு சேப்டிக்கு..

சுரேஷ் குமார் said...

//
அப்படியா.. உடனே ஆபிசுக்கு அப்பீட்டு விட்டுடீங்களா?
//
பின்ன.. நண்பன் அழைத்தால் அவ்வளவு தான்.., ஆபீஸ் எல்லாம் பீஸ் பீஸ் தான்..

சுரேஷ் குமார் said...

//
இதுக்கு பிட் ஓன்னும் தயார் பண்ணலயா?
//
அந்த ஊர் அறிஞ்ச ரகசியத்த நீங்களும் தெரிஞ்சுக்க அடுத்த பதிவ படிங்க..
(இப்போவே போயி அடுத்த பதிவ தேடாதிங்க.. இன்னும் எழுதலை.. சீக்கிரம் போடுறேன்..)

இராகவன் நைஜிரியா said...

\\ // இன்னைக்கு தான் கடேசி நாள்னா.., இந்த பதிவ எழுதுற இன்னைக்கு இல்லை.. இது அவன் போன் பண்ணின அன்னைக்கு தான் கடேசி நாள்..
ஹி ஹி.. தெளிவா புரிஞ்சுதா..?
// \\

இத விட தெளிவா எந்த பதிவரும் எழுதியதாக எனக்கு ஞாபகமில்லை.

இராகவன் நைஜிரியா said...

// அதாவது, BE'la எனது மதிப்பெண் சதவிகிதம் 60%..//

பெரிய விசயங்க...

60% வாங்கியது பெரிய விசயங்க

இராகவன் நைஜிரியா said...

// அந்த தேர்வுக்கு arts குரூப் மாணவர்கள் குறைந்தது 60% மதிப்பெண்ணும், BE முடித்தவர்கள் குறைந்தபட்சமாக 65% மதிப்பெண்ணும் பெற்றிருக்க வேண்டும்னு போட்டிருந்துச்சு.. //

இதெல்லாம் ரொம்ப கொடுமை... பாஸ் பண்ணா போதும் அப்படீன்னு சொல்லணும்.

அப்படி சொல்றவங்களுக்குத்தான் இந்த வருஷம் உங்க ஓட்டுன்னு சொல்லிடுங்க

இராகவன் நைஜிரியா said...

// 1st rule : ஹால் டிக்கெட்ல என்னோட பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஒட்டி இருக்கனுமாம்..
அடங்கொய்யால.. ஏன்டா.., இத இப்போ வந்து சொன்னா,//

அதானே.. இத மொதல்லேயே சொல்ல வேண்டாமா?

இராகவன் நைஜிரியா said...

// யாருடா இது இவ்ளோ அழகா இருக்கானேனு எடுத்து பாத்தா.. அது வேறயாரும் இல்ல மகா ஜனங்களே.. அது நான் தான்.. //

சுந்தர புருஷன் ?

சுரேஷ் குமார் said...

//
இராகவன் நைஜிரியா said...
இத விட தெளிவா எந்த பதிவரும் எழுதியதாக எனக்கு ஞாபகமில்லை.
//
இல்லனா.. கும்மியே என்ன குந்த வெச்சுடுவின்களே..
அதான்..
நெறைய பக்கம் பாத்த அனுபவம் வேற..
ஒரு சின்ன எழுத்து பிசகி எழுதிருந்தாலும், அத வெச்சே ஆட்டோ ஒட்டிடுறிங்க..
அதான் முடிஞ்ச வரைக்கும் தெளிவா வெளளளளளளளளளளக்கிட்டேன்..

இராகவன் நைஜிரியா said...

// 2nd rule.. தேர்வுக்கு பதிவு செய்ய கட்டணம் கட்டியதற்கான ரசீதை கொண்டுவரவேண்டும்..//

என்னாது இது சி.பி. தனமா இருக்கு...

பணம் கட்டாமயா, ஹால் டிக்கெட் அனுப்பினாங்க...

சுரேஷ் குமார் said...

//
இராகவன் நைஜிரியா said...
சுந்தர புருஷன் ?
//
வருங்கால..

இராகவன் நைஜிரியா said...

// சுரேஷ் குமார் said...

//
இராகவன் நைஜிரியா said...
இத விட தெளிவா எந்த பதிவரும் எழுதியதாக எனக்கு ஞாபகமில்லை.
//
இல்லனா.. கும்மியே என்ன குந்த வெச்சுடுவின்களே..
அதான்..
நெறைய பக்கம் பாத்த அனுபவம் வேற..
ஒரு சின்ன எழுத்து பிசகி எழுதிருந்தாலும், அத வெச்சே ஆட்டோ ஒட்டிடுறிங்க..
அதான் முடிஞ்ச வரைக்கும் தெளிவா வெளளளளளளளளளளக்கிட்டேன்..//

ஆமாம் தெளிவா வெளக்கிட்டீங்க... தாங்க முடியல சாமி..

சரிங்க இந்த ஆட்டோ ஓட்டறதுன்னா என்னங்க?

இராகவன் நைஜிரியா said...

25

இராகவன் நைஜிரியா said...

ஹா...ஹா... மீ த 25

சுரேஷ் குமார் said...

//
இராகவன் நைஜிரியா said...
என்னாது இது சி.பி. தனமா இருக்கு...

பணம் கட்டாமயா, ஹால் டிக்கெட் அனுப்பினாங்க...
//
எக்ஸாம் முடியும் போது, அவனுங்க கூரியர்ல அனுப்புன எல்லாத்தையும் திருப்பி வாங்கிடானுங்க.. ஹால் டிக்கெட்'அ கூட விட்டு வைக்கல..

இராகவன் நைஜிரியா said...

// சுரேஷ் குமார் said...

//
இராகவன் நைஜிரியா said...
சுந்தர புருஷன் ?
//
வருங்கால.. //

அப்படியில்லீங்க... முக்காலமும் சுந்தர புருஷம் அப்படீன்னு சொல்லுங்க

சுரேஷ் குமார் said...

//
சரிங்க இந்த ஆட்டோ ஓட்டறதுன்னா என்னங்க?
//
ஆட்டோ ஓட்ட தெரியாதவனுக்கு,
ஆட்டோ ஓட்ட தெரிஞ்சவன்
ஆட்டோ ஓட்ட சொல்லித்தரலாம்..

ஆனா..,

ஆட்டோ ஓட்ட தெரிஞ்சவனுக்கு
ஆட்டோ ஓட்ட தெரியாதவன்
ஆட்டோ ஓட்ட சொல்லிதர முடியுமா..?

இப்டியே ஆட்டோ ஓட்டிட்டு இருக்கறது தான்
ஆட்டோ ஓட்டுறது..

சுரேஷ் குமார் said...

//
இராகவன் நைஜிரியா said...

அப்படியில்லீங்க... முக்காலமும் சுந்தர புருஷம் அப்படீன்னு சொல்லுங்க
//
இப்டி சொன்னா, நிகழ் கால மற்றும் வருங்கால மிசஸ் சுந்தர புருஷன் கொவிசுபாங்கள்ள..? குடும்பத்துல கொழப்பம் வந்திடும்..

இராகவன் நைஜிரியா said...

// சுரேஷ் குமார் said...

//
சரிங்க இந்த ஆட்டோ ஓட்டறதுன்னா என்னங்க?
//
ஆட்டோ ஓட்ட தெரியாதவனுக்கு,
ஆட்டோ ஓட்ட தெரிஞ்சவன்
ஆட்டோ ஓட்ட சொல்லித்தரலாம்..

ஆனா..,

ஆட்டோ ஓட்ட தெரிஞ்சவனுக்கு
ஆட்டோ ஓட்ட தெரியாதவன்
ஆட்டோ ஓட்ட சொல்லிதர முடியுமா..?

இப்டியே ஆட்டோ ஓட்டிட்டு இருக்கறது தான்
ஆட்டோ ஓட்டுறது..//

தம்பி வேண்டாம். கடிக்கிறதா நினைக்காதே
மாட்டிக்குவே

சுரேஷ் குமார் said...

//
தம்பி வேண்டாம். கடிக்கிறதா நினைக்காதே
மாட்டிக்குவே
//
நா.. நீங்க தானே நா கேட்டிங்க..
வேணாம்னா சொல்லிடுங்க..
ஆட்டோவ ஆப் பண்ணிடலாம்..

இராகவன் நைஜிரியா said...

// //
ஆட்டோ ஓட்ட தெரியாதவனுக்கு,
ஆட்டோ ஓட்ட தெரிஞ்சவன்
ஆட்டோ ஓட்ட சொல்லித்தரலாம்..

ஆனா..,

ஆட்டோ ஓட்ட தெரிஞ்சவனுக்கு
ஆட்டோ ஓட்ட தெரியாதவன்
ஆட்டோ ஓட்ட சொல்லிதர முடியுமா..?

இப்டியே ஆட்டோ ஓட்டிட்டு இருக்கறது தான்
ஆட்டோ ஓட்டுறது..//

அதாவது

ஆட்டோ ஓட்ட தெரிஞ்சவன்,
ஆட்டோ ஓட்டத் தெரியாதவனுக்கு
ஆட்டோ ஓட்ட கத்துகுடுக்க முடியும்
அப்படின்னு சொல்லும் போது,

ஆட்டோ ஓட்டத் தெரிஞ்சவன், ஆட்டோ ஓட்டத் தெரிஞ்சவன்கிட்டதான் அவன்
ஆட்டோ ஓட்டத் தெரியாத போது கத்துக்கிட்டான்

அப்படின்னு சொல்லாம்,

அதாவது
ஆட்டோ ஓட்ட தெரியாதவன்,
ஆட்டோ ஓட்ட தெரிஞ்சவன் கிட்ட ஆட்டோ ஓட்ட கத்துகிட்டு,
ஆட்டோ ஓட்டத் தெரியாத ஒரு ஆட்டோ காரணுக்கு
ஆட்டோ ஓட்ட கத்துக் கொடுத்தால் அவன் ஆட்டோ ஓட்டத்தெரியாத இன்னொரு
ஆட்டோ காரணுக்கு
ஆட்டோ ஓட்ட கத்துக் கொடுப்பான்னு சொல்ல வர்றீங்க.

அதனால

ஆட்டோ ஓட்டத்தெரியாதவன்
ஆட்டோ ஓட்டத் தெரிஞ்சவனுக்கு
ஆட்டோ ஓட்ட கத்துக் கொடுக்க முடியாது
ஏன் என்றால் அவனுக்கு
ஆட்டோ ஓட்டவே தெரியாது என்பதால்
ஆட்டோ ஓட்டத் தெரிஞ்சவனுக்கு
ஆட்டோ ஓட்டத் தெரியும் என்பதால்
ஆட்டோ ஓட்டத் தெரியாதவன்
ஆட்டோ ஓட்டத் தெரிஞ்சவனுக்கு
ஆட்டோ ஓட்டக் கத்துக் கொடுக்க முடியாது.

என்ன நான் சொல்வது சரிதானே.

சுரேஷ் குமார் said...

//
இராகவன் நைஜிரியா said...
// //
ஆட்டோ ...................
// //
ரொம்ம்ம்ம்ம்ம்ப சரிங்ணா..
ஆனா இது என்னோட பதிவ விட ரொம்ப பெரிய பின்னூட்டமா இருக்கும் போல.. !?!?!?!
முடியலடா சாமிஈஈஈஈஈ..

கவிதா | Kavitha said...

முழுசா படிக்கல ..பதிவு ரொம்ப பெருசா இருக்கு...
முடிஞ்சா குறைவாக எழுதுங்க..:)

அப்பாவி முரு said...

அன்புள்ள சுரேஷ்.,

சில பதிவுகளிலேயே, எங்கள் மொத்த அணியையும் ( நட்புடன் ஜமால்., RAMYA., இராகவன் நைஜிரியா .,இப்ப முரு) உங்க பதிவுக்கு கொண்டு வந்திட்டீங்க்ளே.

பெரியாளுப்பா நீயி...

வாழ்த்துக்கள்!!!!

சுரேஷ் குமார் said...

//
அப்பாவி முரு said...
அன்புள்ள சுரேஷ்.,

சில பதிவுகளிலேயே, எங்கள் மொத்த அணியையும் ( நட்புடன் ஜமால்., RAMYA., இராகவன் நைஜிரியா .,இப்ப முரு) உங்க பதிவுக்கு கொண்டு வந்திட்டீங்க்ளே.

பெரியாளுப்பா நீயி...

வாழ்த்துக்கள்!!!!
//
நன்றி அப்பாவி முரு அண்ணாத்த..
ஏதோ வழிதவறி என்பக்கமா வந்துடிங்க..
இனி திரும்பி போற வழிய மறந்து இங்கயே உங்க எல்லாரையும் உக்காத்தி வெக்கறதுதான் என் அடுத்த வேல.. அப்போதான் உங்கள எல்லாம் காணோம்னு தேடிட்டு இனிமே வர்றவங்களையும் இங்க கொண்டாந்து கட்டிபோட முடியும்..
அதற்கான உங்களின் வாழ்த்துக்களுடன் வலையை தயார் செய்துகொண்டிருக்கும் சகா..,

சுரேஷ்.

Suresh said...

arumaiyana pathivu aaana romba romba perusa iruku, nerya peru pathioda escape ayuduvanga, inimae sirusa super a podunga

Suresh said...

நன்றி suresh..
ஆமாங்க.. பதிவு கொஞ்சம் பெருசாதான் போச்சு..
அடுத்த தடவை சுருக்கிடலாம்..
உங்கள் கருத்துக்கு நன்றி..
என் புதிய பதிவுகளுக்கும் வருதை தர அழைக்கும் சகா..

சுரேஷ்.

cheena (சீனா) said...

அன்பின் சுரேஷ்

எட்டாவது இடுகைலேயே இவ்வளவு மறுமொழிகளா - அதுவும் பெரிய ஆளுக எல்லாம் போட்டிருக்காங்க - எப்படியா இது - என்னாயா செஞ்சே

ஆமா IOB தேர்வு எழுதினியா நீ - உண்மையாகவா -- ம்ம் நல்ல வேளை நீ செலக்ட் ஆகல - பாங்கு பொளச்சிது - போ

நீ பொறியியல் பட்டதாரியா - நம்ப முடியவில்லை - அறுபது விழுக்காடா - நம்ப முடிய வில்லை

நல்லாருடே