வரலாறு கொஞ்சம் பெருசுன்றதால மனசாட்சிக்கு விரோதமா தொடரிடுகையா போடலாம்னு ஒருமனதா தீர்மானம் நிறைவேற்றி இருக்கோம்.. பொறுமையா படிச்சு ஆதரவு தாங்கப்பூ..
மொதல்ல எடுத்தவொடனே தடாலடியா கெட்டதா பேசவேணாம்னு தோணுனதால எங்க மக்களுக்கு படியளக்கற தொழிலப்பத்தி ஆரமிக்கிறேன்..
1. தொழிலு..
எங்க ஊரின்.. அட ஊரின் என்னங்க ஊரின்.. எங்க சுத்துப்பட்டி 170 கிராமத்துக்குமே முக்கிய தொழில் (or) பரம்பரைதொழில் "நெசவு" தானுங்க..

உண்மையிலேயே எங்கயுமே பொழைக்கவழி இல்லைன்னு எங்க ஊருக்கு வந்தவங்க, செய்யஎந்த வேலையுமே இல்லைன்னு சொல்லி திரும்பிபோரதுக்கான வாய்ப்பே எங்க ஊரப்பொருத்தவரைக்கும் இல்லைங்க..
இங்க வந்துட்டு செய்யறதுக்கு வேலை இல்லைனுட்டு வெளியபோறவன் சத்தியமா எங்கயும்போயி பொழைக்கிறதும் நடக்காத காரியம்.. அவ்ளோ வேலைவாய்ப்பு கொட்டிகெடக்கு..பெரும்பாலும், அனைத்தும் நெசவு சார்ந்த தொழில்கள் தாம்..
எங்க ஊரை பொருத்தவரைக்கும் பிச்சைக்காரர்களுக்கு பிச்சைபோடுவதே பெரிய பாவம்னுதான் சொல்லணும்.. யாரும் உழைத்து வாழக்கூடிய அளவிற்கு அளவற்ற வேலைவாய்ப்பு நிறைந்த ஊர்.. (இப்படிப்பட்ட நிலையில் பிச்சையெடுக்க அவசியம் என்ன..?)
வேலைவாய்ப்பு உள்ள அளவிற்கு மனிதவளம் இல்லாததாலே பல நெசவுப்பட்டறைகள் விரிவுபடுத்தப்படாமல் நலிந்து வருகின்றன.. இப்படிப்பட்ட நிலையில் சாப்பாட்டுக்குவழி இல்லைன்னு ஒரு பிச்சைக்காரன் வந்தால் பார்ப்பவனுக்கு எப்படி இருக்கும்..
இங்கே மனிதவளமின்றி வேலைசெய்யவே ஆள் இல்லாமல் தட்டுப்பாட்டில் உள்ளோம்.. இப்படிப்பட்ட ஊரில், வேலையே செய்யாமல் பிச்சையெடுத்து வாழநினைப்பவனை கண்டால் எங்களுக்கு எப்படி இருக்கும்..
இப்படிஒருமுறை பிச்சைகேட்டு வந்தவனை எங்கள் பட்டறையில் வேலைசெய்து கிடைக்கும்சம்பளத்தில் வாழ்க்கையை நடத்துஎன்று கூறியதால் திரும்பிசென்ற அவன் அதன்பின்பு அந்த ஏரியாபக்கமே வந்ததில்லை.. இப்படியும் சில ஆசாமிகள்..
என்ன செய்ய..
(ஒடனே ஊருல இருக்கற பிச்சைக்காரர்களை எல்லாம் எங்க பட்டறைக்கு இழுத்துட்டு வந்துடாதிங்க..)
அவங்க இருக்கற அலைவரிசையில அவங்கள வேலைக்கு வெச்சா அவங்க எங்களை மாதிரியான உழைப்பாளிகள் வர்க்கத்துல சேருராங்களோ இல்லையோ, கண்டிப்பா நாங்க அவங்க வர்க்கத்துல சேர்ந்திடுவோம்.. அவங்களோடது அப்படி ஒரு அருமையான அலைவரிசை..
ஊரில் இருக்கும் மனித வளமும் பத்தாததற்கு முக்கிய காரணிகளில் ஒன்று,
ஊரைச்சுற்றி அதிகரித்து வரும் பனியன் தொழிற்சாலைகள்..
மற்றொன்று.. அருகில் அமைக்கப்பட்டுள்ள "சிப்காட்" என்று அழைக்கப்படும் தொழில்பேட்டை..
என்மக்கள் பரம்பரை பரம்பரையாக நெசவில் ஊறித்திளைத்தபடியால் மாற்றத்தை விரும்பி இந்த பனியன் நிறுவனங்களுக்கும், சிப்காட்'ன் பலதரப்பட்ட புதிய தொழிலுக்கும் செல்வதில் அதிக ஆர்வம்காட்ட தொடங்கிவிட்டனர்..
பழகப்பழக பாலும் புளிக்கும் பழமொழி எங்களின் வாழ்வாதாரத்தையே எடுத்துக்காட்டாய் எடுத்துக்கொண்டது..
நெசவுத்தொழில் காலம்பூராவும் பழகி ஒன்றி இருப்பதனால், இத்தொழிலே எம்மக்களுக்கு புளித்துவிட்டதுபோலும்..
எங்கள் ஊரில் கணக்கெடுப்பு நடத்தினால், மக்களைகாட்டிலும் இயந்திரங்களின் எண்ணிக்கை குறைந்தது ஏழு மடங்கு முதல் அதிகபட்சமாக பத்துமடங்குக்குமேலேயே இருக்கும்..
அந்த சிறிய கிராமங்களில் ஒவ்வொரு வீட்டிலும் அவ்வளவு இயந்திரங்கள்..
எங்கள்வீட்டில் இருப்பது நாங்கள் மூவர்.. எங்களின் வீட்டில் எங்களுடன் இயங்குவது 20 இயந்திரங்களுக்கும் மேல்..
இயந்திரங்கள் எனில் சாதாரணம் இல்லை.. அவற்றின் சத்தத்தில் நாம் பேசுவது நமக்கே முழுமையாய் கேட்காது.. அவ்வளவு சத்தம்..
சிறிய சத்தத்திற்கே தூங்கமுடியாமல் அவதியுறும் பலருக்கு மத்தியில் இந்த சத்தத்திலும் நாங்கள் சுகமாய் தூங்குவதுண்டு..
பூக்காரிக்கு பூக்களின் வாசமின்றி தூக்கம் வராதாம்..
கருவாட்டுக்காரிக்கு கருவாட்டின் வாசமின்றி தூக்கம் வராதாம்..
அதேபோல்தான் போலும்..
எம்மக்களுக்கு தறியின் சப்தமின்றி தூக்கவராதோ..
இங்கு ஒவ்வொருவரின் வீடும் வெறுமனே 75 to 125 ஆண்டுகளுக்கு முன்பு வேயப்பட்ட ஓடுகளைகொண்டு இங்கு என்ன இருக்கப்போகிறது என்று என்னும்வகையில் பார்ப்பதற்கு சப்பையாகத்தான் இருக்கும்..
ஆனால் இருப்பதிலேயே ஒரு சிறிய பட்டறையை சேதம் செய்தாலும் சேத மதிப்பு கண்டிப்பாக 7 to 10 லட்சத்திருக்கும் அதிகமாக இருக்கும்.. ஓசையின்றி ஒவ்வொரு பட்டறையும் சேர்த்து கிராமமே பலகோடி ரூபாய்களில் தினம்தோறும் புழங்கிக்கொண்டுள்ளது.. உண்மையில் கிராமத்திற்கு வரும், விஷயம் அறியாத யாரும், மேலோட்டமாய் காணும்போது இதனை நம்புவது கடினம்.. அவ்வளவு எளிமையாய் இருக்கும்..
இப்போதைய சூழ்நிலையில்.. வெளி ஊர்களில் இருந்து எங்கள் ஊருக்கு பிழைப்புதேடிவரும் மக்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகின்றது..
அதுவும்.. கடந்த பத்து பன்னிரண்டு வருடங்களில் வந்துசேர்ந்துள்ள மக்களின் எண்ணிக்கை எங்கள் ஊர்மக்களின் எண்ணிக்கயைவிடவும் மிக அதிகம்.
முன்பெல்லாம் ஒருவர் ஊருக்குள்சென்றாலே, முகஜாடையை வைத்து இவன் இன்னார் வீட்டுப்பிள்ளை என்று பெருசுகள் சொல்லிவிடும்..
ஆனால் இப்போது வெளிஊர்க்காரர்களின் அதிகபடியான வரவால் எவன் உள்ளூர்க்காரன் எவன் வெளியூர்க்காரன் என்று அறிவதிலேயே பெரும் குழப்பமாக உள்ளது..
அதிலும், இப்படி வந்த மக்களில் பெரும்பாலானோர் அந்தியூர் மலைப்பகுதியை சார்ந்தவர்கள்.. அவர்களின் வரலாறு பெரும் வரலாறு.. எல்லாத்தையும் பின்வரும் இடுகைகளில் காண்போம்..
என்ன.. எங்க ஊரின் முக்கிய தொழிலப்பத்தி தெரிஞ்சுகிட்டிங்களா..
சரி அடுத்த இடுகையில் "பெண்களுக்கு எதிரான எங்கள் கிராமத்தின் வினோத சட்டதிட்டங்கள்.." பற்றி காண்போம்..
38 comments:
நல்ல பதிவு! தொடர்ந்து படிக்க ஆவலா இருக்கோம்ல!
எந்தூரூங்க நமக்கு..
உண்மையிலே சிறப்பான ஊராத்தான் இருக்கும் போல ..
என்ற ஊரிலே அதுவும் எங்கட தெருவிலே இந்த தொழில் தான் முன்பெல்லாம் இருந்திச்சாம்
என்ற தெரு பேரே ‘நெசவு’த்தெரு தேன்
நல்லா எழுதியிருக்கீங்க சுரேஷ் ...
சுரேசு
நல்லா இருக்குப்பா
தொடர்ந்து எழுதுப்பா
காஞ்சிக்குப் போனா காலாட்டிகிட்டே சாப்பிடலாம்பாங்களே !
நல்வாழ்த்துகள் சுரேசு
திருப்பூர் ஆ இல்லை கோவையா
உண்மையிலேயே எங்கயுமே பொழைக்கவழி இல்லைன்னு எங்க ஊருக்கு வந்தவங்க, செய்யஎந்த வேலையுமே இல்லைன்னு சொல்லி திரும்பிபோரதுக்கான வாய்ப்பே எங்க ஊரப்பொருத்தவரைக்கும் இல்லைங்க..
நல்ல விஷயம் தானே
நல்லா எழுதி இருக்கீங்க சுரேஷ்.
இங்க வந்துட்டு செய்யறதுக்கு வேலை இல்லைனுட்டு வெளியபோறவன் சத்தியமா எங்கயும்போயி பொழைக்கிறதும் நடக்காத காரியம்.. அவ்ளோ வேலைவாய்ப்பு கொட்டிகெடக்கு../////////
இக்கரைக்கு அக்கரை பச்சை என்பார்கள்
அருமையாச் சொல்லியிருக்கீங்க தம்பி...
அடுத்த இடுகையை ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் கொண்டு இருக்கின்றேன்.
//இங்க வந்துட்டு செய்யறதுக்கு வேலை இல்லைனுட்டு வெளியபோறவன் சத்தியமா எங்கயும்போயி பொழைக்கிறதும் நடக்காத காரியம்.//
எல்லா ஊர்காரனும் இதைத்தான் சொல்றான்!
//வேலையே செய்யாமல் பிச்சையெடுத்து வாழநினைப்பவனை கண்டால் எங்களுக்கு எப்படி இருக்கும்..//
சுகபோகமாய் வாழ்பவர்களை பார்த்தால் சிலருக்கு இப்படி தான் எரிச்சல் வரும், ஐஸ் வாட்டர் குடிங்க!
எளிதல் கண்டுணரக்கூடிய சில எழுத்துப்பிழைகளை நீக்கினால் உங்கள் பதிவு உலகதரத்துக்கு!?(அப்படினா) பேசப்படும்!
பிறந்த மண்ணுக்கு பெருமை சேர்த்து இருக்கா வாழ்த்துக்கள்..
சொல்ல வந்ததை போரடிக்காமல் நகைச்சுவையாய் நல்லாச் சொல்லியிருக்க..உனக்கே உரிய பாணியில்...தொடருங்க நாங்களும் தொடர்வோம்...
நல்ல பதிவு....எந்தூரூங்க?
//
நாமக்கல் சிபி said...
நல்ல பதிவு! தொடர்ந்து படிக்க ஆவலா இருக்கோம்ல!
//
நன்றி சிபி அண்ணா..
ரொம்ப சந்தோசம்..
//
சூரியன் said...
எந்தூரூங்க நமக்கு..
உண்மையிலே சிறப்பான ஊராத்தான் இருக்கும் போல ..
//
ஈரோடு'க்கு அருகிலுங்கோவ்..
//
நட்புடன் ஜமால் said...
என்ற ஊரிலே அதுவும் எங்கட தெருவிலே இந்த தொழில் தான் முன்பெல்லாம் இருந்திச்சாம்
என்ற தெரு பேரே ‘நெசவு’த்தெரு தேன்
நல்லா எழுதியிருக்கீங்க சுரேஷ் ...
//
சூப்பரு..
பகிர்ந்தமைக்கு நன்றியண்ணா..
விரிவான திரு பூவூர் பற்றிய விளக்கங்கள்
//
cheena (சீனா) said...
சுரேசு
நல்லா இருக்குப்பா
தொடர்ந்து எழுதுப்பா
காஞ்சிக்குப் போனா காலாட்டிகிட்டே சாப்பிடலாம்பாங்களே !
நல்வாழ்த்துகள் சுரேசு
//
காஞ்சிக்குப் போனா காலாட்டிகிட்டே சாப்பிடறது புது மேட்டரா இருக்கே..
வாழ்த்துக்களுக்கு நன்றி cheena (சீனா)..
//
sakthi said...
திருப்பூர் ஆ இல்லை கோவையா
//
திருப்பூருக்கும் கோயமுத்தூருக்கும் ஈரோட்டுக்கும் நடுவில்..
//
sakthi said...
உண்மையிலேயே எங்கயுமே பொழைக்கவழி இல்லைன்னு எங்க ஊருக்கு வந்தவங்க, செய்யஎந்த வேலையுமே இல்லைன்னு சொல்லி திரும்பிபோரதுக்கான வாய்ப்பே எங்க ஊரப்பொருத்தவரைக்கும் இல்லைங்க..
நல்ல விஷயம் தானே
//
ஆம்.. கண்டிப்பாக..
//
ஷஃபிக்ஸ் said...
நல்லா எழுதி இருக்கீங்க சுரேஷ்.
//
நன்றி ஷஃபிக்ஸ்..
//
Suresh Kumar said...
இங்க வந்துட்டு செய்யறதுக்கு வேலை இல்லைனுட்டு வெளியபோறவன் சத்தியமா எங்கயும்போயி பொழைக்கிறதும் நடக்காத காரியம்.. அவ்ளோ வேலைவாய்ப்பு கொட்டிகெடக்கு../////////
இக்கரைக்கு அக்கரை பச்சை என்பார்கள்
//
அதுவேளை தேடிச்செல்வதர்க்காக இருக்கலாம்..
ஆனால் இப்படி எல்லாஊரிலும் அதிகப்படியான அளவிற்கு வேலைவாய்ப்பு கொட்டிக்கிடக்கும் என்று அறுதி இட்டுச்சொள்ளமுடியாது..
வருகைக்கு நன்றி Suresh Kumar..
//
இராகவன் நைஜிரியா said...
அருமையாச் சொல்லியிருக்கீங்க தம்பி...
அடுத்த இடுகையை ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் கொண்டு இருக்கின்றேன்.
//
அண்ணா வணக்கம்.. வணக்கம்.. வணக்கமுங்கோவ்..
இடைவிடாத பயணத்திற்கு இடையில் வாழ்த்தவந்துள்ளமைக்கு நன்றி அண்ணா..
உங்களின் ஆர்வத்தை பூர்த்திசெய்ய முனைப்புடன் இயங்கிக்கொண்டு உள்ளேன்.. விரைவில் பூர்த்திசெய்யப்படும்..
//
பூக்காரிக்கு பூக்களின் வாசமின்றி தூக்கம் வராதாம்..
கருவாட்டுக்காரிக்கு கருவாட்டின் வாசமின்றி தூக்கம் வராதாம்..
அதேபோல்தான் போலும்..
எம்மக்களுக்கு தறியின் சப்தமின்றி தூக்கவராதோ..
//
அருமையான உதாரணகள் கலந்த உண்மைகள்
நல்லா சொல்லி இருக்கீங்க.
இன்னும் நிறைய எழுதுங்க படிக்க கொஞ்சம் தாமதம் ஆனாலும் படிச்சிடுவோம்லே!
தெரு பேரே ‘நெசவு’த்தெரு தேன். தொழிலை வச்சி தெரு வைப்பதெல்லாம் இப்போ இலை சுரேஷ்.
அதெல்லாம் முடிஞ்சிபோச்சு. இப்போ எல்லாம் மனிதர்களின் பெயர்கள்தான் எங்கே பார்த்தாலும் தெருக்காளாக.
//
வால்பையன் said...
//இங்க வந்துட்டு செய்யறதுக்கு வேலை இல்லைனுட்டு வெளியபோறவன் சத்தியமா எங்கயும்போயி பொழைக்கிறதும் நடக்காத காரியம்.//
எல்லா ஊர்காரனும் இதைத்தான் சொல்றான்!
//
ஆச்சரியக்குறி..
//
வால்பையன் said...
//வேலையே செய்யாமல் பிச்சையெடுத்து வாழநினைப்பவனை கண்டால் எங்களுக்கு எப்படி இருக்கும்..//
சுகபோகமாய் வாழ்பவர்களை பார்த்தால் சிலருக்கு இப்படி தான் எரிச்சல் வரும், ஐஸ் வாட்டர் குடிங்க!
//
ஓஹோ இப்டிவேற ஒன்னுஇருக்கா.. அதுசரி..
(ஐஸ் வாடர் குடிச்சா எரிச்சல் அடங்குமா.. புதுசா இருக்கே..)
//
வால்பையன் said...
எளிதல் கண்டுணரக்கூடிய சில எழுத்துப்பிழைகளை நீக்கினால் உங்கள் பதிவு உலகதரத்துக்கு!?(அப்படினா) பேசப்படும்!
//
மனமுவந்து உதவியமைக்கு நன்றி..
சுட்டிக்காட்டிய பிழைகள் நீக்கப்பட்டுவிட்டன..
நீங்கள் சொன்ன அளவிற்கு பேசப்பட்டாமாதிரி தெரியலியே..
//
தமிழரசி said...
பிறந்த மண்ணுக்கு பெருமை சேர்த்து இருக்கா வாழ்த்துக்கள்..
சொல்ல வந்ததை போரடிக்காமல் நகைச்சுவையாய் நல்லாச் சொல்லியிருக்க..உனக்கே உரிய பாணியில்...தொடருங்க நாங்களும் தொடர்வோம்...
//
கருத்துக்கு நன்றி அக்கா..
உங்களின் ஆசியுடனும் தொடர்கிறேன்..
//
இயற்கை said...
நல்ல பதிவு....எந்தூரூங்க?
//
ஈரோட்டுக்கு மிகமிக அருகில்..
திருப்பூருக்கு கொஞ்சம் அருகில்..
கோயமுத்தூருக்கு கொஞ்சம் தள்ளி..
இந்த மூன்றுக்கும் நடுவில்..
பெருந்துறை வட்டம்..
//
பிரியமுடன்.........வசந்த் said...
விரிவான திரு பூவூர் பற்றிய விளக்கங்கள்
//
சாரி வசந்த்..
தவறாக புரிந்து கொண்டீர்களென நினைக்கிறேன்..
நான் கூறியது திருப்பூரை பற்றி அல்ல..
இது ஈரோடுமாவட்டம் பெருந்துறைக்கு அருகிலுள்ள சில கிராமங்களைப்பற்றியது..
திருப்பூரில் தறிகள் மிக மிக மிக குறைவு..
அங்கு பின்னலாடை சம்பந்தமான தொழில்கள்தான் அதிகம்..
நான்குரிப்பிடுவது பின்னலாடை பற்றின தொழில் இல்லை..
இது நெய்தல் / நெசவுத்தொழில்.. இதற்க்கு பயன்படும் இயந்திரத்தை "தறி" என்போம்..
இடுகையில் இணைத்துள்ள படத்தை பாருங்க.. இது கொஞ்சம் பழைய டைப் தறி..
// सुREஷ் कुMAர் said...
//
பிரியமுடன்.........வசந்த் said...
விரிவான திரு பூவூர் பற்றிய விளக்கங்கள்
//
சாரி வசந்த்..
தவறாக புரிந்து கொண்டீர்களென நினைக்கிறேன்..
நான் கூறியது திருப்பூரை பற்றி அல்ல..
இது ஈரோடுமாவட்டம் பெருந்துறைக்கு அருகிலுள்ள சில கிராமங்களைப்பற்றியது..//
நானும் திருப்பூரை கூறவில்லையே சுரேஷ்
திருப்பூர்க்கு மலர் மாலைகள் சூடும் இந்த நெசவு செய்யும் சிற்றூர்களை திரு பூவுர்கள் என்று சொன்னேன்
ஹைய்யோ அம்மா நான் சொல்றது எனக்கே புரியாது இதுல எங்க சுரேஷ்க்கு.....
//
RAMYA said...
//
பூக்காரிக்கு பூக்களின் வாசமின்றி தூக்கம் வராதாம்..
கருவாட்டுக்காரிக்கு கருவாட்டின் வாசமின்றி தூக்கம் வராதாம்..
அதேபோல்தான் போலும்..
எம்மக்களுக்கு தறியின் சப்தமின்றி தூக்கவராதோ..
//
அருமையான உதாரணகள் கலந்த உண்மைகள்
நல்லா சொல்லி இருக்கீங்க.
இன்னும் நிறைய எழுதுங்க படிக்க கொஞ்சம் தாமதம் ஆனாலும் படிச்சிடுவோம்லே!
//
நன்றி அக்கா..
தாமதம் ஆனாலும் பலஇடுகைகளை தவற விட்டுவிட்டு இங்கன வந்துசேர்ந்தமைக்கு நன்றி அக்கா..
//
RAMYA said...
தெரு பேரே ‘நெசவு’த்தெரு தேன். தொழிலை வச்சி தெரு வைப்பதெல்லாம் இப்போ இலை சுரேஷ்.
அதெல்லாம் முடிஞ்சிபோச்சு. இப்போ எல்லாம் மனிதர்களின் பெயர்கள்தான் எங்கே பார்த்தாலும் தெருக்காளாக.
//
அதென்னவோ வாஸ்த்தவம்தான்...
//
பிரியமுடன்.........வசந்த் said...
// सुREஷ் कुMAர் said...
//
பிரியமுடன்.........வசந்த் said...
விரிவான திரு பூவூர் பற்றிய விளக்கங்கள்
//
சாரி வசந்த்..
தவறாக புரிந்து கொண்டீர்களென நினைக்கிறேன்..
நான் கூறியது திருப்பூரை பற்றி அல்ல..
இது ஈரோடுமாவட்டம் பெருந்துறைக்கு அருகிலுள்ள சில கிராமங்களைப்பற்றியது..//
நானும் திருப்பூரை கூறவில்லையே சுரேஷ்
திருப்பூர்க்கு மலர் மாலைகள் சூடும் இந்த நெசவு செய்யும் சிற்றூர்களை திரு பூவுர்கள் என்று சொன்னேன்
ஹைய்யோ அம்மா நான் சொல்றது எனக்கே புரியாது இதுல எங்க சுரேஷ்க்கு.....
//
முயற்சி திருவினை ஆக்கும் வசந்த்..
முடிஞ்சவரைக்கும் ட்ரை பண்ணுறேன்..(புரிந்துகொள்ள..)
உங்களின் தேவபாஸை புரியுதான்னு பாப்போம்..
இங்கே வந்து பெற்று கொள்ளுங்கள்
http://priyamudanvasanth.blogspot.com/2009/07/blog-post_15.html
சொர்க்கமே என்றாலும் அது நம் ஊர போலவருமா.....
நல்லதொரு பதிவு.....
Post a Comment