வலைப்பதிவு உலகை சுவாரஸ்ய படுத்தவும், பதிவர்களை உட்சாகப்படுத்தவும், பல அறிமுகமில்லாத பதிவர்களை பலரும் அறிந்துகொள்ளவும் திரு. செந்தழல் ரவி அவர்கள் ''சுவாரஸ்ய வலைப்பதிவு விருதினை'' அறிமுகப்படுத்தி, சுவாரசிய வலைப்பதிவர்கள் ஆறு பேருக்கு அந்த விருதினை வழங்கியும் இருக்கிறார்.. அவருக்கு என் மகிழ்ச்சியையும், வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்..
"மனவிலாசம் நவாஸுதீனிடம்" விருது பெற்ற நண்பர் "பிரியமுடன்.........வசந்த்" அவர்கள் எனக்கு இந்த விருதினை வழங்கி இருக்கிறார்..
அவருக்கு என் நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவித்து கொள்கிறேன்.
விருதினை பெற்றவர்கள் ஒவ்வொருவரும் ஆறு பேருக்கு விருதினை வழங்க வேண்டும். மேலும், இந்த விருதினை தங்கள் வலைதளத்தில் போட்டுக்கொண்டு, தங்களுக்கு விருது வழங்கியவரின் இணைப்பையும் கொடுக்கவேண்டும் (என்பது விதி)..
இப்படி ஒரு விருதினை ஆறுபேருக்குமட்டும் கொடுப்பதென்பது மிகக்கடினமான ஒன்று..
இப்பதிவுலகில் ஒவ்வொருவருமே ஏதாவது ஒருவகையில் (அவர்களைப்பொறுத்து) தங்களது பிளாக்கை சுவாரசியத்துடனேயே நடத்திக்கொண்டிருப்பர்..
யாரும் யாரையும் குறைத்துமதிப்பிடமுடியாது..
எனக்கு தெரிந்த அனைத்து பதிவர்களுக்கும் இவ்விருதினை வழங்க ஆவலாய் இருப்பினும், அப்படி நான் ஒருவனே அனைவருக்கும் இவ்விருதினை வழங்கிவிட்டால், என்னிடமிருந்து விருதுபெற்றவர்களிடமிருந்து விருதுபெற மிகச்சிலரைத்தவிர யாரும் இருக்கமாட்டார்கள் என்ற பொது சிந்தனையோடும், வசந்தின் விதி எண் "05772982044752304698"ன்படி நான் இந்த விருதினை ஆறுபேருக்குமேல் கொடுக்கமுடியாது என்பதாலும், கீழே குறிப்பிட்டுள்ள நண்பர்கள் ஆறுபேருக்கு இவ்விருதினை வழங்குகிறேன்..
(அதற்குமுன்பு உங்களின் அனுமதியின்றி உங்கள் புரோபைல் படங்களை டேமேஜியமைக்கு மன்னிக்கவும் நண்பர்களே..)
விருதினை பெறுபவர்கள்..
1. Will To Live RAMYA
2. சூரியன் தினேஷ்
3. நான் நானாக...... விக்னேஷ்வரி
4. வால்பையன் அருண்
5. ரசனைக்காரி... Rajeswari
6. அப்பாவி முரு
இவர்கள் ஆறுபேருமே இவ்விருதுக்கு மிகப்பொருத்தமானவர்கள் என்பதில் எனக்கு எவ்வகையிலும் சந்தேகமில்லை....
இவர்களில் பலர் எனக்கு வலைப்பதிவுலக சீனியர்களும்கூட..
அதிலும் "Will To Live" RAMYA அவர்கள் எனக்கு ஆரம்பகாலம் முதல் ஊக்கப்படுத்திவருபவர்..
இவ்விடத்தில் உண்மையில் அவருக்கு ஒரு பெரிய நன்றி சொல்லி இவ்விருதினை வழங்குவதில் நிறைய நிறைய நிறைய்ய்ய்ய்ய்ய பெருமைப்படுகிறேன்..
நன்றி ரம்யா அக்கா..
மற்ற அனைவரின் இடுகைகளையுமே ஓரளவிற்கு தவறாமல் படித்துவருகிறேன்..
சிலசமயம் வேலைப்பளுவின் காரணமாக பின்னூட்ட இயலாமல்போனாலும் குறைந்தபட்சம் அவர்களின் இடுகைகள் படிக்கப்பட்டுவிடும்..
இவர்கள் அனைவருக்கும் இந்த சுவாரசிய வலைப்பதிவு விருதினை வழங்கி பெருமைப்படுத்துவதோடு மிக்க மகிழ்ச்சியும் அடைகிறேன்..
நன்றியுடன் விருதுக்கு வாழ்த்துக்களும் நண்பர்களே.. ஜமாய்ங்க..
26 comments:
ரொம்ப நன்றி தல .. என்னயும் மதிச்சு ஒரு அவார்டா ..
ஹே நானும் ரவுடி நானும் ரவுடி பாத்துக்கோங்க ..
//(என்பது விதி)..//
தல விதியா தல
உங்களுக்கும் விருது பெறும் நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்....
வாழ்த்துக்கள் விருது பெற்ற நண்பர்களுக்கு....
1. Will To Live RAMYA
2. சூரியன் தினேஷ்
3. நான் நானாக...... விக்னேஷ்வரி
4. வால்பையன் அருண்
5. ரசனைக்காரி... Rajeswari
6. அப்பாவி முரு
விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
சுவாரசிய வலைப்பதிவு விருதுக்கு மிக்க நன்றி சுரேஷ்
விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
விருது பெற்றமைக்கும், பெற்றவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள் :)
தங்களுக்கும் தங்களிடம் பெற்ற மற்றவர்களுக்கும் வாழ்த்துகள்.
எடுத்துக்கிட்டேன்...
குடுத்தற்கு நன்றி
ரொம்ப நன்றி சுரேஷ் தம்பி
எனக்கு விருது கொடுத்ததிற்கு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்!!
//
இவ்விடத்தில் உண்மையில் அவருக்கு ஒரு பெரிய நன்றி சொல்லி இவ்விருதினை வழங்குவதில் நிறைய நிறைய நிறைய்ய்ய்ய்ய்ய பெருமைப்படுகிறேன்..
நன்றி ரம்யா அக்கா..
//
ஹையோ தம்பி!! இதுக்கெல்லாம் நான் உங்களுக்கு என்ன செய்யபோறேன்னு தெரியலை.
சரி வாழ்த்துக்கள்.
நன்றிகள் பல உங்களுக்கு!
//
சூரியன் said...
ரொம்ப நன்றி தல .. என்னயும் மதிச்சு ஒரு அவார்டா ..
ஹே நானும் ரவுடி நானும் ரவுடி பாத்துக்கோங்க ..
//
விருதினை ஏற்றுக்கொண்டமைக்கு நன்றி சூரியன்..
//
சந்ரு said...
உங்களுக்கும் விருது பெறும் நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்....
//
வாழ்த்துக்களுக்கு நன்றி சந்ரு..
//
தமிழரசி said...
வாழ்த்துக்கள் விருது பெற்ற நண்பர்களுக்கு....
//
நன்றிக்கா..
//
R.Gopi said...
விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
//
வாழ்த்துக்களுக்கு நன்றி R.Gopi..
//
Rajeswari said...
சுவாரசிய வலைப்பதிவு விருதுக்கு மிக்க நன்றி சுரேஷ்
//
விருதினை ஏற்றுக்கொண்டமைக்கு நன்றி Rajeswari'கா..
//
கும்மாச்சி said...
விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
//
வாழ்த்துக்களுக்கு நன்றி கும்மாச்சி..
//
சென்ஷி said...
விருது பெற்றமைக்கும், பெற்றவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள் :)
//
வாழ்த்துக்களுக்கு நன்றி சென்ஷி அண்ணா..
//
நட்புடன் ஜமால் said...
தங்களுக்கும் தங்களிடம் பெற்ற மற்றவர்களுக்கும் வாழ்த்துகள்.
//
நன்றி அண்ணா..
//
அப்பாவி முரு said...
எடுத்துக்கிட்டேன்...
குடுத்தற்கு நன்றி
//
எடுத்துக்கொண்டமைக்கு நன்றி அப்பாவி முரு..
//
RAMYA said...
ரொம்ப நன்றி சுரேஷ் தம்பி
எனக்கு விருது கொடுத்ததிற்கு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்!!
//
நானும் ரொம்ப மகிழ்ச்சி அடைகிறேன்.. (திருநெல்வேலிக்கே அல்வா கொடுப்பதற்கு..)..
//
RAMYA said...
//
இவ்விடத்தில் உண்மையில் அவருக்கு ஒரு பெரிய நன்றி சொல்லி இவ்விருதினை வழங்குவதில் நிறைய நிறைய நிறைய்ய்ய்ய்ய்ய பெருமைப்படுகிறேன்..
நன்றி ரம்யா அக்கா..
//
ஹையோ தம்பி!! இதுக்கெல்லாம் நான் உங்களுக்கு என்ன செய்யபோறேன்னு தெரியலை.
சரி வாழ்த்துக்கள்.
நன்றிகள் பல உங்களுக்கு!
//
உங்களின் அன்பே போதுமானது..
மிக்க நன்றி நண்பரே!
//
வால்பையன் said...
மிக்க நன்றி நண்பரே!
//
எப்டியோ வழி கண்டுபுடிச்சு வந்துசேந்துட்டிங்க போல..
நன்றி சுரேஷ்.
Post a Comment