Tuesday, July 7, 2009

கோவையில் நைஜீரியப்புயல்..



நைஜீரியால இருந்துகெலம்பி சென்னை, மதுரைன்னு சுத்திட்டு 2/7/2009 வியாழக்கிழமை அன்னைக்கு நம்ம நைஜீரியப்புயல் கோவைல மையம் கொண்டது உலகறிந்த ரகசியம்..

ஆனால், இது வலையுலக, பதிவுலக நண்பர்களை சந்திப்பதின் முதல் அனுபவம்ன்றதால, எனக்கு கொஞ்சம் ஸ்பெசல் சந்திப்பு..

ஆறு மணிக்கு அண்ணன்மார்கள் எல்லாரும் வந்திடுவாங்கன்னு ராகவன் அண்ணா சொன்னத நம்ம்பி ஆறு மணிக்கு ஜீ'டாக்ள சாட்டி கேட்டா இன்னும் யாரும் வரலைனாறு..

சரின்னு அப்டியே மொள்ள கெளம்பி போயி 6.30'கு கதவ தட்டினா எல்லாரும் ஆஜராகி இருந்தாங்க.. வழக்கம்போல நம்மதான் லேட்..

முதல் சந்திப்புனாலும், பார்த்தவுடன் சஞ்சய் அண்ணா, அண்ணாச்சி, ராகவன் அண்ணா மூணு பேத்தையும் அடியாளம் கண்டுகிட்டேன்..

ஆனா செல்வேந்திரன் அண்ணாவமட்டும் ரெண்டுதபா பேற கேட்டுகிட்டும் மறந்துட்டேன்.. அப்பாலிக்கா நல்லா நியாபகம் வெச்சுகிட்டேன்..

போனவுடனே ஹாய் சொன்னதுசஞ்சய் அண்ணாக்கு தான்..
ஏனா.. அவரு தான் வாசல் பக்கத்துலையே மொதோ சேர்ல உக்காந்திருந்தார்..

அவருக்கும் சரி, அண்ணாச்சிக்கும் சரி, அறிமுகம் இல்லாத நான் சரியா அடையாலப்படுத்தி ஹாய் சொன்னது கொஞ்சம் ஆச்சரியமாத்தான் இருந்ததுன்னு நினைக்கிறேன்..

அண்ணாச்சி வெளிப்படுத்திக்கலைனாலும், இவ்ளோ கரீட்ட அடையாளம் கண்டுகினியே.. யாருப்பாநீ'னு சஞ்சய் அண்ணா வெளிப்படையாவே கேட்டாரு..

நம்ம யாருன்னு எவ்வளவோ பேருக்கு சொல்லிட்டோம்.. இவருக்கு சொள்ளமாட்டமானு நானும் சொல்ல ஆரமிக்கரதுக்குள்ள ராகவன் அண்ணாவே நம்ம புகழை பரப்பி அறிமுகப்படுத்தி வெச்சாரு..

ஆறுமணி நேரத்துக்கும்மேல நடந்த அந்த சந்திப்பபத்தி, அங்க சந்தித்தவர்களை பற்றி எழுதினா இன்னும் பலபாகங்கள் எழுதவேண்டி இருக்கும்..


அதனால சுருக்கமா கொஞ்சமா இங்க அவங்கள பத்தி அந்த கொஞ்சநேர சந்திப்பில் என்மனதில் தோன்றியவற்றை இங்கு பதிகிறேன்..

1. ராகவன் அண்ணா..




முதலிலேயே பலமுறை தொலைபேசியும், சாட்டியும், புகைப்படத்தை கண்டும்விட்டதால், பேச்சிலும், இயல்பிலும் எதிர்பார்க்காதமாதிரி இல்லாமல், எதிர்பார்த்தா மாதிரியே இருந்தார்..


ஆனால்.. நான்தான் அவர்கள் யாருமே எதிர்பார்த்திராத அளவுக்கு சிறுபிள்ளைதனமாக இருந்திருப்பேன் என்று நினைக்கிறேன்.. சாரி அண்ணாஸ்.. நான்எப்போமே அப்படித்தான்..


ஆனாலும் ராகவன் அண்ணா நல்ல உரிமையுடன், தோழமையுடன், இன்னபிற எல்லாமுடன் நல்லாவே பழகினார்..

(அந்த தம் அடிக்கறத மட்டும் கம்மிபண்ணிக்க சொல்லனும்னு நெனச்சுட்டு ஏனோ அத கடேசிவரைக்கும் சொல்லாமையே வந்துட்டேன்..
இங்கையாச்சும் சொல்லுறேன்..
அத தயவு செஞ்சு கம்மிபண்ணுங்க அண்ணா..)

2. சஞ்சய் அண்ணா..



இவர் ஒரு ரப்பர் மாதிரி.. (ஏதும் தப்பா நெனச்சுகாதிங்க..)

எல்லாத்துக்கும் வளைந்து கொடுக்கக்கூடியவர்னு சொன்னேன்..

அரவிந்த் குட்டிகிட்ட அவர் வயசுக்கு இறங்கிபேசும்போதும் சரி..
என்னைபோன்ற சின்னப்பையன் கிட்ட நம்மறேஞ்சுக்கு எறங்கி பேசும்போதும் சரி..
அண்ணாச்சி, செல்வேந்திரன் அண்ணா போன்றவர்கள் கிட்ட அவர்கள் ரேஞ்சுக்கு ஏரிப்பேசும்போதும் சரி.. அவங்கஅவங்க ரேஞ்சுக்கு வளைஞ்சு போய்டுறார்..

3. அண்ணாச்சி வடகரை வேலன் அவர்கள்..



இவரபத்தி கடேசிவரைக்கும் ஒருமுடிவுக்கே வரமுடியலை.. எல்லாருடனும் மையமா பதில்சொல்லி, பேசி, எல்லாரின் பேச்சையும் பொறுமையா உள்வாங்கிட்டே உக்காந்திருந்தார்..
நிறைய பேசவும் செய்தார்..


இவரபத்தி என்னதான் ஒரு தெளிவான முடிவுக்கு வர முடியலைனாலும்..
இவர ஒரு வடைச்சட்டினு சொல்லலாம்..

(அண்ணாச்சி இதுக்கும் என்னை கணக்கு வழக்கில்லாம மன்னிச்சுடுங்க..)

ஏன் இப்படி சொல்றேனா..

மேட்டர் அவருக்குள்ள போகாதவரைக்கும் அமைதியா இருக்கற அவரு, மேட்டர அவருக்குள்ள போட்டதும் சும்மா வடச்சட்டிகனக்கா பொரிஞ்சுதள்ளிடுராறு பா.. அதான் அப்டிசொன்னேன்..

(எனக்கு இவருடன் சுத்தமாக பழக்கம் இல்லாததால் கணிக்கமுடியவில்லையோ என்னவோ..)

4. செல்வேந்திரன் அண்ணா..

இவரின் வாய் ஒரு மம்மட்டி என்றால்.., இவரின் கண்கள் ஒரு கடப்பாரை.. (நீங்களும் மன்னிக்கவும் அண்ணா..)

ஏன் இப்படி சொன்னேன்னு முழுசா கேட்டுட்டு அப்புறமா அவர்கிட்ட போட்டுகொடுங்கப்பா..

அவர் அதிகம் இலக்கியம் படிப்பதாலோ என்னவோ, அவர் பேசும்போதுகூட இலக்கிய நடையிலேயே பேசிட்டு இருந்தார்..

எடுத்த எல்லா டாப்பிக்கையும் வெட்டி தூர்வாரி இலக்கிய நடையிலேயே கெழங்கெடுத்துட்டு இருந்ததாலதான் அவரின் வாயை மண்வெட்டினு சொன்னேன்..
(நமக்கு தெரிஞ்ச நல்ல வார்த்தை இதுதான்பா..)

அவரோட கண்களை கடப்பாரைன்னு சொல்லகாரணம்..

அவர் எப்படி வாயால, இலக்கிய நடையில் கிண்டி கெழங்கெடுக்கராரோ, அந்த அளவுக்கு பேசிட்டு இருக்கும்போதே எதிராளியின் கண்களை ஆழமா ஊடுருவி, குத்தி, கிழிச்சு, மனஓட்டத்தை ஆராஞ்சுடராமாதிரி தான் எனக்கு தோன்றியது..

அதனால் தான் அவரின் கண்களை கடப்பாரைன்னு சொன்னேன்..


5. அரவிந்த்..



தலை பயங்கர ஸ்மார்ட்..

அரசியல்.. வரலாறு.. புவியியல்.. கணிதம்.. விளையாட்டு.. சினிமா.. அது இது.. இது அது'னு எல்லாத்துலையும் பதினொன்னு போட்டு காட்டி லைசென்ஸ் வாங்கி வெச்சிருக்காரு..

உண்மையில் எனக்கு அவரின் அளவுக்குகூட மெச்சூரிட்டி இல்லைன்னு தான் சொல்லணும்.. (or) அவருக்கு என்னளவுக்கு / அதிக மெச்சூரிட்டி இருக்கு..

ஆனா என்ன.. ஒருநிமிஷம் தான் என்ன பாத்தாரு.. ஒடனே என்னைவிட அதிகமா தோசை சாப்டு காட்டுறேன்னு சவால் எல்லாம் விட்டுடாரு.. (எப்படி தான் கண்டுபுடிக்கராய்ங்களோ.. !)

சரி எதுக்கு வம்புனு தோசை ஆர்டர் பண்ணாம புல்சாவோ.. குல்சாவோ.. அத்த ஆர்டர் பண்ணி எவ்ளோ சாப்டேனே அவர்கிட்ட சொல்லாம எஸ்கேப் ஆகிட்டேன்..

முதல் நாள் சந்திப்பின் போது.., அரவிந்துக்கு மறுநாள் பிறந்தநாள் என்று சொன்னதால், மறுநாள் மாலை ஒரு கேக்குடன் சென்று அவரின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது..

6. அடுத்த நாள் வால்பையன் அண்ணா வந்திருந்தார்..



இவருடன் ஒரு 30 நிமிடங்கள் வரைக்கும் டைம்ஸ்பென்ட் பண்ணினேன்..

அதிலிருந்து, என்னைபொறுத்தவரை, அவரொரு கண்ணாடி'னு சொல்லலாம்..

சந்தித்தது வெறும் 30 க்கும் குறைவான நிமிடங்களே என்பதனாலாக இருக்கலாம்..

கேட்டதற்கு மட்டும் பளிச்சென்று விளக்கமளித்து விட்டு அமைதியாய் இருந்தார்..
நம்மின் வினாக்களுக்கு மட்டுமே (அளவாய்) பிரதிபளித்தமையாலே அவரை கண்ணாடி என்றேன்..

அந்த மிக சொற்பமான நிமிடங்களுக்குள் நிகழ்ந்த சந்திப்பில் அதற்குமேல் அவரை அறிந்துகொள்ள முடியவில்லை..


இதுவரைக்கும் அவர்களைப்பற்றி என் கருத்தோட்டத்தைதான் சொன்னேன்..
இனி அவர்களின் பேச்சைப்பற்றியும் சொல்லலாம் தான்..
அதை சொல்ல இன்னும் பல எபிசோடுகள் தேவைப்படும் என்பதால் இத்தோடு நிப்பாட்டிங்..


38 comments:

நட்புடன் ஜமால் said...

சந்திப்பு
சிந்திப்பு

நல்லாயிருக்கப்பூ

நட்புடன் ஜமால் said...

எல்லோரையும் அறிந்து கொண்டதில் மெத்த மகிழ்ச்சி

நன்றி சுரேஷ் ...

Kumky said...

சுரேஷ்,
ஒரு பார்வையில் அல்லது ஒரு சந்திப்பில் இவ்வளவு தூரம் நீங்கள் புரிந்து வைத்திருப்பதே அதிகம்தான்.
தொடருங்கள் நட்பூக்களை...அதிகம் காணக்கிடைப்பீர்கள் அனுபவங்களை.

Sanjai Gandhi said...

கொய்யால ஆளாளுக்கு பேர் வைக்கிறியாடா நீ?. ஒழுங்கா திங்கறதை கூட ஆர்டர் பண்ணத் தெரியலை.. இங்க மட்டும் வாய் கிழியுது பாரு. அண்ணாச்சி நாட்டமைடே.. அதான் பேச்சு கம்மியா இருக்கும். :)

என்னை ரப்பர்னு சொன்னதுக்கு வேற எதும் உள் குத்து இருக்காடா தம்பி? :(

அர்விந்த் ஒரு ஆச்சர்யம்.. செம டேலண்ட்.. இந்த வயசுல இப்படியான்னு பிரமிப்பா இருக்கு.

ஜோசப் பால்ராஜ் said...

எல்லாரையும் நல்லாச் சொல்லியிருக்கீங்க.

அண்ணாச்சி இருக்காரே அவரு வடச் சட்டி மட்டுமில்லீங், அவரு ஒரு கதம்பம். எல்லாம் இருக்கும் அவருகிட்ட.

சஞ்சூ மாப்பி இருக்காரே, அவரு ரப்பர் தான். மங்களூர் சிவா கல்யாணத்துல எல்லாரையும் ஓடி ஓடி கவனிச்ச விதம் இருக்கே, அதெல்லாம் சும்மா சாதாரண விசயமில்ல. நல்லப் பையன். ஆனாலும் நானும் மாப்பியும் நெம்ப நல்லா சண்டையப் போட்டுக்குவோம். இல்லைன்னா எங்களுக்கு தூக்கம் வராது.

ப்ரியமுடன் வசந்த் said...

சந்திப்பூ

வாழ்த்துக்கள்ப்பூ

ராகவன் சார் க்கு ரோஜாப்பூ

Suresh said...

ரொம்ப சந்தோசம்

தினேஷ் said...

நொறுக்கி விடு தல..

RAMYA said...

எல்லாரையும் பற்றி நல்லா உண்மையை சொல்லி இருக்கீங்க
அடி விழுமா இல்லே தப்பிச்சிட்டீங்களா :))

RAMYA said...

சிலரை இப்போதான் பார்த்தேன்
நன்றி தம்பி!

sakthi said...

அருமையான பதிவர் சந்திப்பு

ஜஸ்ட் மிஸ்டு

ஆனால் உங்க விளக்கவுரை நேர்ல பார்த்த மாதிரி இருந்தது...

வாழ்த்துக்கள்

வால்பையன் said...

//என்னைபொறுத்தவரை, அவரொரு கண்ணாடி'னு சொல்லலாம்..
சந்தித்தது வெறும் 30 க்கும் குறைவான நிமிடங்களே என்பதனாலாக இருக்கலாம்..//

தப்பு கணக்கு போட்டுடிங்க சுரேஷ்!

நீங்க எங்கிட்ட தனியா சிக்கியிருக்கனும்!

அப்துல்மாலிக் said...

நைஜீரியா புயல் அங்கேயும் மையம் கொண்டிடுச்சா

சந்திப்பை விளக்கிய விதம் அருமை

எல்லாத்தையும் கண்டுக்கொண்டதில் சந்தோஷம்

நன்றி சுரேஷ்

cheena (சீனா) said...

நல்லாருக்கு சந்திப்பு - பதிவு

எல்லாரஎயும் மொதத் தடவை பாக்கும் போதே பேரு வச்சி கலாச்சாச்சா - பலே பலே !

உனக்கு யாரும் பேரு வக்கலியா

ராகவன் - மற்றும் அனைத்துப் பதிவர்களுமே - நல்ல நண்பர்கள்

அரவிந்த் செல்லப் பையன் - பதிவில் கூறியது அனைத்தும் உண்மை.

வாலு அமைதியா இருந்தாரா - ஏன்பா - என்ன மந்திரம் போட்டே - உனக்கு அவரைப் பத்தித் தெரியாது - போய்ப் பழகிப் பாரு - பக்கத்துலே ஈரோடு தானே

மத்தபடி ரப்பர், வடைச்சட்டி, மம்முட்டி, கடப்பாரை, கண்ணாடி - எல்லாத்தேயும் கேட்டதாச் சொல்லு

மங்களூர் சிவா said...

ரப்பர், வடை சட்டி, மண்வெட்டி & கடப்பாறை, கண்ணாடி அனைவருக்கும் வாழ்த்துக்கள்
:))))

Anonymous said...

சுரேஷ் ஸ்டைலில் அறிமுகம் நல்லாயிருந்தது அங்க போயும் குழப்ப ஆரம்பிச்சிட்டியா?

ஆமா வால் பையன்
// கேட்டதற்கு மட்டும் பளிச்சென்று விளக்கமளித்து விட்டு அமைதியாய் இருந்தார்..//

உலக மகா ஆச்சிரியமாயிருக்கே... அவர் வாலை சுருட்டியது....

ஆமா முதல் படம் நீயே எடுத்துக்கிட்டதா?

எல்லாரையும் பார்த்த திருப்தி....

//உண்மையில் எனக்கு அவரின் அளவுக்குகூட மெச்சூரிட்டி இல்லைன்னு தான் சொல்லணும்..//

இது உண்மை

// (or) அவருக்கு என்னளவுக்கு / அதிக மெச்சூரிட்டி இருக்கு..//

இது பொய்....

கலையரசன் said...

பாஸ்! பிறந்தநாளுக்கு வெட்டின "கேக்"கை யாருயாரு சாப்டீங்கன்னு சொல்லவேயில்ல? வரலாறு முக்கியமில்லையா அமைச்சரே!!

सुREஷ் कुMAர் said...

//
நட்புடன் ஜமால் said...

சந்திப்பு
சிந்திப்பு

நல்லாயிருக்கப்பூ

எல்லோரையும் அறிந்து கொண்டதில் மெத்த மகிழ்ச்சி

நன்றி சுரேஷ் ...
//
நன்றி அண்ணா..

सुREஷ் कुMAர் said...

//
கும்க்கி said...

சுரேஷ்,
ஒரு பார்வையில் அல்லது ஒரு சந்திப்பில் இவ்வளவு தூரம் நீங்கள் புரிந்து வைத்திருப்பதே அதிகம்தான்.
தொடருங்கள் நட்பூக்களை...அதிகம் காணக்கிடைப்பீர்கள் அனுபவங்களை.
//
கண்டிப்பாக கும்க்கிஜீ..

सुREஷ் कुMAர் said...

//
$anjaiGandh! said...

கொய்யால ஆளாளுக்கு பேர் வைக்கிறியாடா நீ?. ஒழுங்கா திங்கறதை கூட ஆர்டர் பண்ணத் தெரியலை.. இங்க மட்டும் வாய் கிழியுது பாரு. அண்ணாச்சி நாட்டமைடே.. அதான் பேச்சு கம்மியா இருக்கும். :)
//
அண்ணா.. இதுக்கு பேரு பேருவெக்கிறது இல்லை..

சும்மா ஒரு ஒப்பீடு.. அம்முட்டுதான்..

सुREஷ் कुMAர் said...

//
ஜோசப் பால்ராஜ் said...

எல்லாரையும் நல்லாச் சொல்லியிருக்கீங்க.

அண்ணாச்சி இருக்காரே அவரு வடச் சட்டி மட்டுமில்லீங், அவரு ஒரு கதம்பம். எல்லாம் இருக்கும் அவருகிட்ட.
//
முதல் வருகைக்கும் ஒத்தகருத்துக்கும் நன்றி ஜோசப் பால்ராஜ் அண்ணா..

सुREஷ் कुMAர் said...

//
பிரியமுடன்.........வசந்த் said...

சந்திப்பூ

வாழ்த்துக்கள்ப்பூ

ராகவன் சார் க்கு ரோஜாப்பூ
//
நன்றியப்பூ..

सुREஷ் कुMAர் said...

//
Suresh said...

ரொம்ப சந்தோசம்
//
நாங்களும் அவ்வண்ணமே கோருகிறோம்..

सुREஷ் कुMAர் said...

//
சூரியன் said...

நொறுக்கி விடு தல..
//
அவங்க இருக்கற சைசுக்கு நம்மள நொறுக்காம இருந்தா சரிதான்..

सुREஷ் कुMAர் said...

//
RAMYA said...

எல்லாரையும் பற்றி நல்லா உண்மையை சொல்லி இருக்கீங்க
அடி விழுமா இல்லே தப்பிச்சிட்டீங்களா :))
//
விழும்ம்ம்ம்.. ஆனா விழாது..

सुREஷ் कुMAர் said...

//
RAMYA said...

சிலரை இப்போதான் பார்த்தேன்
நன்றி தம்பி!
//
இப்போ தான் பாத்திங்களா..
அதுக்குள்ளே அங்க இன்னொரு சந்திப்பு போட்டாச்சா..?

सुREஷ் कुMAர் said...

//
sakthi said...

அருமையான பதிவர் சந்திப்பு

ஜஸ்ட் மிஸ்டு

ஆனால் உங்க விளக்கவுரை நேர்ல பார்த்த மாதிரி இருந்தது...

வாழ்த்துக்கள்
//
நன்றி sakthi..

ஏன் மிஸ் பண்ணுனிங்க..
உள்ளூர்லயே இருந்துட்டு வராததற்கு கடும் கண்டனங்கள்..

இங்கன வந்ததற்கு நன்றிகள்..

सुREஷ் कुMAர் said...

//
வால்பையன் said...

//என்னைபொறுத்தவரை, அவரொரு கண்ணாடி'னு சொல்லலாம்..
சந்தித்தது வெறும் 30 க்கும் குறைவான நிமிடங்களே என்பதனாலாக இருக்கலாம்..//

தப்பு கணக்கு போட்டுடிங்க சுரேஷ்!

நீங்க எங்கிட்ட தனியா சிக்கியிருக்கனும்!
//
சரியா கணக்கு போடத்தான் இந்த மண்டைக்கு தெரிய மாட்டேங்குதே வாலு..
எல்லாம் மேனுபாக்ச்சரிங் டிபெக்ட்டு..

सुREஷ் कुMAர் said...

//
அபுஅஃப்ஸர் said...

நைஜீரியா புயல் அங்கேயும் மையம் கொண்டிடுச்சா

சந்திப்பை விளக்கிய விதம் அருமை

எல்லாத்தையும் கண்டுக்கொண்டதில் சந்தோஷம்

நன்றி சுரேஷ்
//
நன்றிக்கு நன்றி அபுஅஃப்ஸர்..

सुREஷ் कुMAர் said...

//
cheena (சீனா) said...

நல்லாருக்கு சந்திப்பு - பதிவு
//

முதல் வருகையோ..

கருத்துக்கு நன்றி சீனா..

//
மத்தபடி ரப்பர், வடைச்சட்டி, மம்முட்டி, கடப்பாரை, கண்ணாடி - எல்லாத்தேயும் கேட்டதாச் சொல்லு
//

நீங்கவேற தனியா சிக்கவெக்கிரின்களே.. ஏன்ம்பா..

இருந்தாலும் நீங்க சொன்னவங்ககிட்ட கேட்டதா சொல்லிப்புடுறேன்..

सुREஷ் कुMAர் said...

//
மங்களூர் சிவா said...

ரப்பர், வடை சட்டி, மண்வெட்டி & கடப்பாறை, கண்ணாடி அனைவருக்கும் வாழ்த்துக்கள்
:))))
//
மங்களூர் சிவா'க்கும் வாழ்த்துக்கள்..

सुREஷ் कुMAர் said...

//
தமிழரசி said...

உலக மகா ஆச்சிரியமாயிருக்கே... அவர் வாலை சுருட்டியது....
//
கொஞ்சம் அதிகநேரம் இருந்திருந்தால் தெரிந்து இருக்கும்..


//
ஆமா முதல் படம் நீயே எடுத்துக்கிட்டதா?
//
இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியலை..
எம்மா தூரத்துல இருந்து எடுத்திருக்காங்க..
நான் எப்படி இப்டி எடுக்கமுடியும்..
( ரெண்டு கையுமே போடோல தெரியுது பாருங்க..)

சஞ்சய் அண்ணா கிளிக்கியது..

//
//உண்மையில் எனக்கு அவரின் அளவுக்குகூட மெச்சூரிட்டி இல்லைன்னு தான் சொல்லணும்..//

இது உண்மை

// (or) அவருக்கு என்னளவுக்கு / அதிக மெச்சூரிட்டி இருக்கு..//

இது பொய்....
//
ரெண்டுமே உண்மைதான்.. உண்மைதான்..

SUFFIX said...

அனைவரையும் சந்தித்தில் மகிழ்ச்சி!! நல்லா இருந்ததது உங்க கமென்ட்ரி

सुREஷ் कुMAர் said...

//
கலையரசன் said...

பாஸ்! பிறந்தநாளுக்கு வெட்டின "கேக்"கை யாருயாரு சாப்டீங்கன்னு சொல்லவேயில்ல? வரலாறு முக்கியமில்லையா அமைச்சரே!!
//
கம்பேனி சீக்ரெட்ட வெளிய லீக்பண்ண கூடாதுல அதான்..
காத கொண்டாங்க.. உங்களுக்கு மட்டும் ரகசியமா சொல்றேன்..

सुREஷ் कुMAர் said...

//
ஷ‌ஃபிக்ஸ் said...

அனைவரையும் சந்தித்தில் மகிழ்ச்சி!! நல்லா இருந்ததது உங்க கமென்ட்ரி
//
நன்றி ஷ‌ஃபிக்ஸ்..

Anonymous said...

நான் சந்திப்பில் கலந்து கொண்டது போல உணர்வு... கலக்கல் மச்சி...

G.VINOTHENE said...

very nice web design..as ur career n interests...keep it up!

விக்னேஷ்வரி said...

சந்திப்பை நல்லா தொகுத்திருக்கீங்க.